Saturday, May 22, 2021

pesum deivam

 

பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் J K SIVAN


2 மஹா பெரியவா ஜனனம்

கும்பகோணத்திலிருந்து செயல்பட்ட காஞ்சி காமகோடி மடத்தின் செலவினங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது கணபதி சாஸ்திரிகள் ஏற்பாடு செய்த கருப்பூர் விளைநிலம். 65வது பீடாதிபதி ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பட்டமேற்ற சில வருஷங்களிலேயே இந்த விளைநிலம் மடத்தின் பாத்யதைக்கு வந்துவிட்டது.

கணபதி சாஸ்திரிகளுக்கு மூன்று பிள்ளைகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், ராமநாத சாஸ்திரிகள், சுந்தரமூர்த்தி சாஸ்திரிகள் என்று அவர்கள் பெயர்கள்.

மூத்த மகன் சுப்ரமணிய சாஸ்திரிகள் தான் மஹா பெரியவாவின் தந்தையார். 1855ம் வருஷம் பிறந்தவர். உபநயனம் ஆகி வேத சாஸ்திரிகள் கற்றார். ஆங்கிலக்கல்வியும் போதிக்கப்பட்டது. 1872ல் சுப்ரமணிய சாஸ்திரிகள் கும்பகோணம் கவர்மெண்ட் கலாசாலையில் மெட்ரிகுலேஷன் படித்து தேறினார். ராவ் பகதூர் அப்பு சாஸ்திரிகள் நடத்திய பள்ளியில் ஆசிரியர் வேலை. அந்த பள்ளி கும்பேஸ்வர சுவாமி கோயில் தெற்கு தெருவில் இருந்தது. திருவாரூர் அருகே காவள ககுடி கிராம அதிகாரி தியாகராஜ முதலியார் வீட்டில் கல்வி கற்பிக்க உத்யோகம் கிடைத்தது. பின்னர் கவர்மெண்ட் டிபார்ட்மெண்டில் ஆசிரிய உத்யோகம் கிடைத்தது. விருத்தாசலத்தில் பள்ளி மேற்பார்வையாளராக உத்யோக உயர்வு கிடைத்தது. அடுத்த முப்பது வருஷங்கள் விரித்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம் விக்கிரவாண்டி, சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டிய தாயிற்று.

மஹா பெரியவாவின் தாய் வழியும் பெருமைக் குரியது. உபமன்யு கோத்ரத்தை சேர்ந்த ராஜா கோவிந்த தீக்ஷிதர் வம்சம். நாயக்க பரம்ப ரையில் முதலாவதாக தஞ்சையை ஆண்ட சேவப்ப நாயக்க ராஜாவின் மந்திரி இந்த தீக்ஷிதர். நன்றாக சாஸ்திரங்கள் அறிந்தவர். ஐயன் என்று எல்லோராலும் அழைக்கப்பட் டவர் சோழ நாட்டில் அய்யங்குளம்,அய்யன் வாய்க்கால், அய்யன் தெரு, ஐயன்கடை , எல்லாம் அவர் பெயரால் உண்டானவை. காவேரி படித்து றைகள், மண்டபங்கள் எல்லாம் முக்கால்வாசி அவர் கட்டியவை. அருணாச்சலேஸ்வரர் கோவில், மற்ற பல கோவில்கள் புனருத்தாரணம் அவரால் நடத்தப்பட்டவை. நிறைய கால்வாய் கள், குளங்கள் கட்டியவர். பட்டீஸ்வரத்தில் குடியேறினார். அங்கே சிவன் கோவிலில் இன்றும் அவர் தம்பதியாக சிலை வடிவில் அங்கே காணப்படுகிறார்.

இந்த தீக்ஷிதர் வம்சத்தில் ஈச்சங்குடி என்னும் அழகிய கிராமத்தில் வசித்த நாகேஸ்வர சாஸ்திரிகளுக்கும் மீனாக்ஷிக்கும் பிறந்தவர் மஹா பெரியவாவின் தாய் மஹாலக்ஷ்மி.

ஈச்சங்குடி காவேரி வடகரையில் திருவையா றிலிருந்து கிழக்கே 4 மைல் தூரத்தில் உள்ளது. நாகேஸ்வர சாஸ்திரி வேதாந்த உபநிஷத், கற்றவர் கும்பகோணத்தில் குடும்பங்களில் ஆசார்யன் என்று மதிக்கப்பட்டவர். அந்த குடும்பங்களில் ஒன்று கணபதி சாஸ்திரி குடும்பம்.

ஒரு குடும்ப நிகழ்வுக்கு நாகேஸ்வர சாஸ்திரி கணபதி சாஸ்திரி வீட்டுக்கு சென்றபோது தனது பெண் மஹாலக்ஷ்மியை கணபதி சாஸ்திரி மகன் சுப்ரமணிய சாஸ்திரிக்கு விவாகம் செயது கொள்ள விருப்பமா என்று கேட்டார்.

இப்படிப்பட்ட ஒரு திவ்ய சம்பந்தத்தை, வீடு தேடி வரும் மஹாலக்ஷ்மியை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? அதுவும் ஆசார்யன் தனது பெண்ணைத் தருகிறேன் எனும்போது மறுக்க முடியுமா?

17வயசு சுப்பிரமணியனுக்கு 7 வயது மஹா லக்ஷ்மி ஈச்சங்குடியில் மனைவியானாள். ஸ்தோத்திரங்கள், தமிழ் தெலுங்கு, சமஸ்க்ருத பிரார்த்தனை பாடல்கள் நன்றாக மகாலக்ஷ்மி க்கு தெரியும். பூஜைகள் விரதங்கள் எல்லாம் அத்துபடி .

ஐந்து குழந்தைகளுக்கு தாயானாள். நான்கு பிள்ளைகள். ஒரு பெண். பிள்ளைகள்,கணபதி, ஸ்வாமிநாதன், சாம்பமூர்த்தி, சதாசிவன். கிருஷ்ணமுர்த்தி. பெண் லலிதாம்பாள்.
மஹா லக்ஷ்மியின் இளைய சகோதரர் சுப்ரமணிய சாஸ்திரிகள் ரிக்வேதம், சாஸ்திர ங்கள், தென்னிந்திய மொழிகளில் வல்லுநர். 60 வருஷங்களுக்கு மேலாக காமகோடி மடத்தில் பணியாற்றியவர்.

சாலிவாஹன சகாப்தம் 1817, ஜய வருஷம் வைகாசி மாதம், அஷ்டமி, 20.5.1894ல் ரெண்டா வது மகனாக சுப்ரமணிய சாஸ்திரி மஹாலக்ஷ்மி தம்பதிக்கு மஹா பெரியவா பிறந்தார். குல தெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா. ஆகவே மஹா பெரியவாளுக்கு பிறந்தபோது இட்ட பெயர் ஸ்வாமிநாதன்.

அப்போது சுப்ரமணிய சாஸ்திரிகள் விழுப்புரத்தில் அரசாங்க பள்ளிகளில் மேற்பார்வையாளர்.



தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...