Tuesday, May 25, 2021

pesum deivam






 

பேசும் தெய்வம் --    நங்கநல்லூர்  J  K  SIVAN   
9.   மஹாபெரியவா ஒரு சர்வஞர்.  

மஹேந்திர மங்கலத்தில்  வாசம் செய்தபோது  மஹா பெரியவா   வெகு தூரம்  காவேரி ஆற்றில் மணல் திட்டுகள் மேல்  ஆனந்தமாக தனிமையாக சிந்தித்துக் கொண்டே  நடந்து போவார்.  இயற்கையை ரசிக்க ரொம்ப பிடிக்கும்.. சில  காட்சிகளை  போட்டோ பிடிக்க ஆசைப்படுவார். ஒரு போட்டோக்ராபர்  அடிக்கடி  அவர் பின்னாலேயே  போவது வழக்கம்.  சில காட்சிகளை  காட்டி படம் பிடிக்க சொல்வார்.

போட்டோ எடுப்பதிலும்  நுணுக்கங்கள், திறமைக்குரிய  அனுபவங்கள் உண்டு.  அவருக்கு எப்படித்தான் அதெல்லாம் தெரிந்ததோ அப்போதே? .  அவற்றை எடுத்துரைத்து அந்த போட்டோக்ராபர் இப்படி எடு, அப்படி எடு என்று அறிவுரை தருவார். அப்போதெல்லாம்  பிலிம் சுருளை இருட்டறையில்  டெவெலப் பண்ணி போட்டோக்கள் ஈரமாக  கொடிக்கம்பியில் ஈரத்தோடு தொங்கும்.
ஸ்வாமிகளுக்கு கணக்கு, வானசாஸ்திரம், ஜோசியம் எல்லாம் கூட தெரியும்.  இந்த சாஸ்திரங்களை மேலும் தீவிரமாக கற்க  திருவையாறு சுந்தரேச  ஸ்ரௌதிகள்  சிஷ்யன்  மரூர்  ராமஸ்வாமி சாஸ்திரிகளை  மடத்திலேயே  சில வருஷங்கள் தங்கி இருக்க செய்தார். அவரது குடும்பத்துக்கு  உதவி செய்தார். தேவாரப்பாடல்களை இசையோடு பாடினால்   கேட்பதற்கு ரொம்ப பிரியப்படுவார். இசைக்கருவிகளோடு மடத்துக்கு  அநேக  கலைஞர்கள் வந்து பாடுவார்கள், அவர்களோடு  தானும்  தேவார பாடல்களை பாடுவார்.
வைணவ பிரபந்தங்கள் பாசுரங்கள் எல்லாம் ஆர்வத்தோடு கேட்பார்.  திருவாய்மொழி ரொம்ப பிடிக்கும்.

மஹா  பெரியவா மஹேந்திர  மங்கலத்தில் இருந்த காலம்  1911-1914.    கல்விகள் கற்று  கும்பகோணம் திரும்பியபோது  மஹா பெரியவா வயது 20.  மஹா  பெரியவா மகேந்திர மங்கலத்தில்  வித்யாப்யாஸம் பெற்ற  இடம்  தற்போது  சங்கராலயமாக  காட்சியளிக்கிறது.    

மஹா பெரியவாளுடைய  அபாரமான  கிரஹிக்கும்  சக்தி பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
அதில் ஒரு  சின்ன பகுதி:
மஹா பெரியவா பால்ய வயதிலேயே பட்டமேற்று, கும்பகோணம் சங்கர மடத்தில் இருந்து பாடங்களை கற்று வந்தபொழுது, அவருக்கு பாடம் சொல்லிக்  கொடுத்தவர்களில்,   பைங்காநாடு  கணபதி சாஸ்திரிகளும் ஒருவர்.  கணபதி சாஸ்திரிகள், கும்பகோணம் சங்கர மடத்துக்கு எதிரில் குடியிருந்தார். காலையில், சங்கர மடத்துக்கு சென்று, பாலகனான ஆச்சர்ய ஸ்வாமிகளுக்கு ஒரு மணி நேரம் பாடம் சொல்லுவார். மாலையில், சாஸ்திரம், சமஸ்க்ருதம், காவியம்/அலங்காரம் போன்ற பாடங்கள் நடக்கும். வசந்த காலத்தில், மடத்துக்கு அருகிலேயே ஓடும் காவேரி நதியின் மணல் பரப்புக்கு ஆசிரியரும், மாணவரும் செல்வார்கள். பாடங்கள் நடக்கும்.
காலம் இவ்வாறு ஓடியது.
ஒருநாள் மாலை   பால்ய மஹா பெரியவாளுக்கு  கணபதி சாஸ்திரிகள் பாடம்  நடத்திக் கொண்டிருந்தார். இளம் வயது ஜகதகுரு  மாணவரோ, தன் இடது கை விரல்களால் ஆற்று மணலைத் தோண்டிக்கொண்டு விளையாட்டாக இருந்தார். கணபதி சாஸ்திரிகள் இதைப் பார்த்தார். மறுநாள் நாள் காலை, எப்பொழுதும் போல் அவர், மடத்துக்குச் சென்றார். ஆச்சார்யாளைப் பார்த்து நமஸ்கரித்தார். அப்போது நடந்த சம்பாஷணை:
கணபதி சாஸ்திரிகள்: ஆச்சார்யாள் என்னை சொந்த ஊருக்குப் போக அனுமதிக்க வேண்டும்.!
ஆச்சார்யாள்: (சற்று வியப்பாக) பாடங்கள் நடக்கின்றனவே. இன்னும் முடியவில்லையே. திடீரென்று எதுக்கு பாதியிலே விட்டுட்டு  ஊருக்கு போகணும்?  என்ன காரணம்?

கணபதி சாஸ்திரிகள்: (சற்று கடுமையாக):   ''ஒரு மாணவன், வித்யையில் நாட்டம் கொண்டு நல்லறிவு பெற படிக்கணும் னா    வாத்யார்  பாடம்  நடத்தும்போது  நல்ல கவனம் வைக்கணும்.   அது அவசியம்.  புத்தி சிதறாமல் பாடத்தில் கவனம் வேண்டும். எவன் ஒருவன் ஆற்று மணலில் அமர்ந்துகொண்டு, அதைத் தொடாமல் இருப்பானோ, கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு, அதை வைத்து வேறு ஒன்றும் துருபயோகம் செய்யாமல் இருப்பானோ, மனசை உயர்ந்த வஸ்துவிடம் நிலைத்து வைத்திருப்பானோ – அவனே ‘ஸ்திதப்ரஞ்ஜன்’ என்று எனது குருநா தாள் சிஷ்யர்களுக்கு போதிப்பார்கள். நேற்றைய தினம், பாடம் நடக்கும் போது ஆச்சார்யாள்   ஏனோ சற்று  கவனக்குறைவாக இருந்தார்கள்"
மஹா பெரியவா:    ''நான் மணலில் விளையாடியது வாஸ்தவம்தான், ஆனால்  நீங்கள் நடத்திய   பாடத்தில் தான்  என் முழு  கவனமும் இருந்தது. நேற்று நடந்த பாடத்தை  இப்போ  அப்படியே  சொல்கிறேன்  கேளுங்கோ''.
 மஹா பெரியவா  முதல்நாள்  கணபதி சாஸ்திரி நடத்திய பாடத்தின் விவரங்களை நுணுக்கமாக சொன்னார்.
இதைக் கேட்ட கணபதி சாஸ்திரிகள் ஆச்சார்யாளின்  புத்தி  கூர்மையையும்,    ஞாபக சக்தியையும்  கண்டு ம் வியந்து, மறுபடியும் நமஸ்கரித்து விட்டு  பேசினார்.
"ஜகதகுரு,  நீங்க இப்போ  சொன்னதைக்  கேட்ட பிறகு, இனிமேலும்  உங்களுக்கு   பாடம் சொல்லிக் கொடுக்க நான் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆச்சார்யாள் ஆசிரியர் இல்லாமலேயே அனைத்தையும் அறிந்து  கொள்ளும் புத்தி கூர்மை,  ஞானம்  உள்ளவர்.  ஆச்சார்யாள் எனக்கு  உத்தரவு கொடுக்க வேணும்" என்றார்.  ஆனால்  ஜகதகுரு கணபதி சாஸ்திரிகளை  ஊருக்குப்  போக அனுமதிக்க வில்லை.  

இதற்குப்பிறகு 10 மாதங்களுக்கு மேல் ஆசார்யாளுக்குப் பாடம் எடுத்தார் கணபதி சாஸ்திரிகள்.
பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள்   40 வயதாகுமுன்பே நூறு  புத்தகங்களுக்கு மேல்  எழுதி இருக்கிறார்.   டில்லி  வெள்ளைக்கார அரசாங்கத்தாரால்  தேர்ந்தெடுக்கப்பட்டு  மகா மஹோபாத்யாய  பட்டம்  அவர்  காலஞ்சென்ற  10 நாட்களுக்குப் பிறகு   இளம் வயதிலேயே  பெற்றவர்.    நாற்பத்தொன்று  வயதை  தாண்டவில்லை என்று தெரிகிறது.
 பைங்காநாடு கணபதிசாஸ்திரிகளுடைய  ஆச்சர்யத்தை அதில் விளக்கி இருக்கிறேன். புராணங்கள், சாஸ்திரங்கள் ஸ்தோத்திரங்கள் எல்லாம் மனப்படமாகி விட்டது.  ஒவ்வொரு ஸ்தலத்தின் மஹிமை அற்புதமாக  அவரது  நினைவில் இருந்தது.  எண்ணற்ற  மஹான்கள், ஆச்சார்யர்கள், சிறந்த பண்டிதர்கள், ஆசிரியர்களுடன்  சம்பாஷித்து  நிறைய  விஷயங்களை தனக்குள்  ஆராய்ச்சி செயது  வலுப்பெற்றவர்  மஹா பெரியவா.

எல்லோருடனும் பழகுவதில் அவருக்கு இணை அவரே தான்.
கும்ப கோணத்தில் இருந்தபோது  30 மைல்  தூரத்தில் இருந்த  கங்கை கொண்ட சோழபுரம் அடிக்கடி சென்று அங்கிருந்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தரிசித்துவிட்டு  அந்த ஆலயத்தின் நேர்த்தியான   சிற்பக்கலை விநோதங்களை ஆராய்வார்.

ஒவ்வொன்றையும் ஆழ்ந்து ஆராய்ந்து பொருள் தேடுவார். இதில் அவருக்கு பெரிதும் உதவியவர்  புதைபொருள் , அகழ்வாராய்ச்சி நிலத்தில் இன்ஜினியராக பனி புரிந்த  P V  ஜெகதீசய்யர், இன்ஜினீயர்  அனந்தாழ்வார் என்ற இருவர்.
ஆக இருபது வயது வரை  மஹேந்திரமங்க லத்தில் கல்வி கற்ற மஹா  தன்னுடைய விடா முயற்சியால், ஆர்வத்தால் சகல கலைகளிலும் வல்லுனராக ஒரு பெரிய  பீடாதிபதிக்கு   ஏற்ற,  தகுந்த ஞானம் பெற்றவராக விளங்கினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...