Friday, May 21, 2021

suri nagamma


 

'சூரி நாகம்மா :    நங்கநல்லூர்  J K  SIVAN

''5 .  குறை தீர்ப்ப்பாய்  அப்பனே'' 


சிலருக்கு  ''நீ இந்த காரியம் செய், அதை செய்யாதே, இதைப் பார்க்காதே, அப்படி பேசாதே,  அமைதியாக இரு''   என்று  ஏதோ ஒரு மெல்லிய  குரல்  கட்டளைகளை எல்லோருக்கும் இடுகிறது.   பெரும்பாலோர்  அதைப் புறக்கணித் து விடுகிறோம். அதற்கு எதிர்மாறாக  ஒவ்வொன் றையும் செய்கிறோம். அவஸ்தைக்குள்ளாகி றோம்.   அந்த குரல் பெயர்  தான் அந்தராத்மா.  அது தான் நம்முள்ளே உறையும் இறைவனின் குரல்.அப்படி அது இட்ட கட்டளை தான் ஒரு தெலுங்கு பெண்மணி, சூரி நாகம்மாவுக்கு  ''நீ ரமணர் முன் சென்று உட்கார. எதையெல்லாம் கவனித்தாயா, கேட்டாயோ, அதையெல்லாம் எழுதி வை ''. 

சூரி நாகம்மா அந்த குரலின் அறிவுரையைத் தட்டவில்லை.  நமக்கு அற்புதமாக அவள் எழுதி வைத்த நூல் கிறைத்திருக்கிறது. சூரி நாகம்மா வின் ரமணாஸ்ரம அனுபவத்தை மேலே  அறிவோம்:

''ஒருதடவை அதே போல் தான்   டாக்டர் ஸ்ரீனிவாச ராவ்  பகவானிடம்  ''  சுவாமி,   நீங்கள் இங்கிலிஷ் மருந்துகள் சாப்பிட்டால்  ரொம்ப  தெம்பாக இருக்கும்'' என்கிறார்.

''நீங்கள் வசதிக்காரர்.  உங்களால் அந்த மருந் துகள் அடைய முடியும். எனக்கு  விலை உயர்ந்த மருந்துகள் எப்படி கிடைக்கும்.  நான் ஒரு கோவணாண்டி  சந்நியாசி யாயிற்றே''  என்கிறார் பகவான்.'

'' பகவான் எதையுமே  வேண்டாமென்று நிராகரித்துவிடுகிறீர்கள்.  வேண்டும் என்று சுவாமி நினைத்தால் அதெல்லாம் வந்து சேராதா? மருந்து வேண்டாம் என்றால்  பால், பாதம், பழ வகைகள்....இவை ஏதாவது...""

''நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நான் தரித்திர நாராயணன். என்னால் அவைகளை பெற இயலாது. நான் ஒற்றைக்கட்டையா, பெரிய குடும்பஸ்தன். இங்கு எல்லோருக்கும் எப்படி  நீ சொல்வதெல்லாம் கிடைக்கும்?'' என்கிறார் பகவான்.

ஆஸ்ரமத்தில்  யார் எதை கொண்டு வந்து கொடுத்தாலும் மகரிஷி அதைத்  தொடக்கூட மாட்டார். அவைகளை எல்லோருக்கும்  விநியோகம் செய்யச் சொல்வார். தனக்கு கிடைக்காவிட்டாலும் கவலைப் படமாட்டார். தனக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு இல்லையென்றால்  ரொம்ப வருத்தம் அடைவார்''

நடக்கும்போது யாராவது எதிரே வந்தால் அவர்களுக்கு முதலில் வழிவிட்டு  தான் ஓரமாக நின்று அவர்கள் கடந்த பின் தான் மேலே நகர்வார்.

ஆயிரத்தில் ஒரு பங்காவது பகவானின் அன்பு, சமரசம், தியாகம் நமக்கு இருக்குமானால் நமது வாழ்வு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.  அது ஓடுவதே தெரியவில்லையே.  அதற்குள் ரெண்டு வருஷமா? நேற்று நடந்தது போல் இருக்கிறதே.  
குண்டூரிலிருந்து  ஒரு   ஆந்திர  தம்பதிகள் வந்து  ஆஸ்ரமத்தில்  தங்கினார்கள் . அவர்கள் அடிக்கடி வருபவர்கள். இந்த தடவை  அவர்கள்  கிட்டத் தட்ட ரெண்டு மாத  காலம்  தங்கி இருந்தார்கள்.  குழந்தைகளை குடும்பத்தை விட்டு  ரெண்டு மாதத்திற்கு மேல் தங்க முடியவில்லை அந்த கணவனுக்கு.   ஒருநாள்  பகவானை சந்தித்து  கேட்டான்:

 '' சுவாமி  என்னால் குடும்ப தொல்லைகள் தாங்கமுடியவில்லை.  என் மனைவியை எல்லாம்   நீ வரவேண்டாம் குண்டூரிலேயே  இரு  என்று சொன்னேன். கேட்கவில்லை. இப்போது   வீட்டில் ஊரில் எல்லாம்  நமக்கு  நிறைய வேலை இருக்கிறதே  வா திரும்ப போகலாம் என்கிறாள்'' என்று மனைவி மேல் பழி சுமத்தினான். நீங்கள் தான் அவளைப்  போக வைக்கவேண்டும். நான் இங்கேயே  தங்கி உங்களோடு இருக்கிறேன். இங்கேயே சாப்பிட்டு தூங்குகிறேன்.'' என்றான்.

பகவான் அவனு்க்கு என்ன சொன்னார் ?

''நீ குடும்பத்தை விட்டு எங்கே போய்விடுவாய்? வானத்தில் பறந்து செல்வாயா? பூமியில் தானே இருக்க வேண்டும்.  நீ எங்கிருக்கிறாயோ அங்கு தான் உன் குடும்பமம்  உன்னோடு இருக்கும்.  இதோ   என்னைப்பார்.  ஒன்றுமே வேண்டாம்  என்று தான் வீட்டை விட்டு வந்தேன். இங்கே பார்த்தாயா  எவ்வளவு பெரிய குடும்பஸ்தன் நான்  என்று ஆஸ்ரமத்தை சுற்றி கையைக்  காட்டி னார் சிரித்துக்கொண்டே.  என் குடும்பம் உன்னுடையதை  விட பலமடங்கு பெரியது.   உன் மனைவியை கூப்பிட்டு நீ போ என்று என்னை சொல்லச் சொல்கிறாயே, உன் மனைவி  திருப்பி என்னிடம் ''நான் எங்கே போவேன் சுவாமி, இங்கே யே உங்களோடு இருந்துவிடுகிறேன்  என்று சொன்னால் நான் என்ன செய்வது?'' என்கிறார் பகவான்.

இதெல்லாம் கேட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு   அருகே  இருந்த எல்லோரும் அமைதியாக வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கி றார்கள்.

அந்த தெலுங்குக்காரர் விடுவதாக இல்லை.  தரையில் உட்கார்ந்துகொண்டார்.  '

'நீங்கள் பகவான் சுவாமி, நீங்கள் எங்களைப் போல் இல்லையே. பந்தம் பற்று இல்லாத ஞானி. எங்களைப் போல எத்தனையோ குடும்பங்களை ரக்ஷிக்க வல்லமை படைத்தவர். குடும்ப பாரம்  இத்தனையும் தாங்க கூடியவர்''  என்கிறார்.

நிறைய பக்தர்கள்  பகவானிடம் வந்து அவரிடம் தங்கள் உடல் வலி பற்றி சொல்கிறார்கள்.  குறை பட்டுக் கொள்கிறார்கள்.  

ஒரு வயதானவர்  பகவானிடம் வந்து. ''சுவாமி எனக்கு கண் பார்வை  கிட்டத்தட்ட முழுது மாகவே  போய்விட்டது.  நீங்கள் தான் அதை எனக்கு பெற்றுத்  தரவேண்டும்'' என்கிறார். சுவாமி அவரைப் பார்த்து  தலை அசைத்தார்.  பாவம் அவருக்கு  சரியாக கண்  பார்வை இல்லை என்கிறார்.  என்னை சரியாக்கு  என்கிறார்.  என் முட்டிக்கால் வலியை  நான் யாரிடம் போய் சொல்வேன்'' என்று சிரித்தார் எந்த உடல் பாதையும் லக்ஷியம் செய்யாத மஹான்.


சூரி நாகம்மாள் தெலுங்கில் எழுதியது இது.  ஆங்கிலத்தில் யாரோ மொழிபெயர்த்து படித்தேன்.  இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...