Tuesday, May 11, 2021

SURI NAGAMMA 3

 

'சூரி நாகம்மா :     நங்கநல்லூர்  J K  SIVAN

இன்றைக்கு ஆஸ்ரமத்தில் ஒரு   பேச்சு அடிபட்டது.  நாளைக்கு காலை பகவான் ரமணர் ஸ்கந்தாஸ்ரமம் செல்வதற்காக கரடுமுரடு பாறைகளை தாவி மலை ஏறுவார். நல்ல நாள். பக்தர்களும் கூட செல்வார்கள். எல்லோருக்கும் அங்கே தான் போஜனம். அவரவர் எங்கோ தொலை தூரம் செல்வதுபோல் மூட்டை முடிச்சு எல்லாம் தயார் பண்ணிக்   கொண்டிருந்தார்கள். பகவான் எதையும் நினைவில் கொண்டவராக தோன்றவில்லை. வழக்கம்போல் அமைதியாக கம்பீரமாக உட்கார்ந் திருந்தார்

''சுவாமி வாருங்கள் ஸ்கந்தாஸ்ரமம் செல்லலாம்''    என்றால் அப்படியே எழுந்து கிளம்பிவிடுவார். எங்கும் போக  வேண்டாம் என்றால் அப்படியே அமர்ந்துவிடுவார். அவருக்கு எதற்கு முன் ஏற்பாடு? கையில் ஒரு கமண்டலம். கைத்தடி, அரையில் கோவணம். மேலே ஒரு துண்டு. இது தான் அவர் ஆஸ்தி. சொத்து எல்லாமே.

மறுநாள் காலை. வேத பாராயணங்கள் வழக்கம்போல் முடிந்தது. பகவான் ஸ்னானம் பண்ணியாகி விட்டது. காலை உணவும் அருந்தினார். மலை ஏற கிளம்பிவிட்டார். சிவபெருமானுக்கு நந்தி போல் உறுதுணையாக கூட இருந்து பகவான் ரமணருக்கு உதவுவது எப்போதும் ரங்கசாமி தான்.  பூர்வ  ஜென்ம 
புண்யசாலி.  மலையில் சௌகரியமாக பகவான் ஏற குறுக்கு வழியில் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு  போகும்  பாதை  அவனுக்கு தெரியும். ஏதோ ஆர்வமாக தனது வீட்டுக்கு ஒருவர் போவது போல் பகவான் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு கிளம்பினார். பக்தர்கள் பலர் முன்னரே நடந்து வழியை சரிப் படுத்திக்கொண்டு சென்றனர்.

என்னோடு பகவானின் சதோதரி அலமேலு.  மீதி சிலர் பின்னால் அவர்  பின்னால் சென்றோம். ஸ்கந்தாஸ் ரமம் கட்டிடம் எதிரே மரங்களின் நிழலில் பகவான் அமர்ந்தார். ஸ்கந்தாஸ்ரமம் அப்போது எப்படி இருந்தது என்றால் நைமிசா ரண்ய ரிஷிகள் சொல்வார்களே பத்திரிகாஸ்ரமம் புராணங்களில் எப்படி இருந்தது என்று அப்ப டியே  தான் காட்சி    அளித்தது.    சுற்றிலும் வனம் .   எண்ணற்ற பறவைகள், எங்கோ மலைமீதிருந்து சிலுசிலு வென்று ஒரு அருவி. விலங்குகள். ரம்யமான சூழ்நிலை. ரிஷி  குமாரர்கள் சாமவேதம் பாராயணம் பண்ணுவது போல் பக்ஷிகள் குரல் செவிக்கு இனிமையாக இருந்தது. பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் இன்று இருப்பார் என்று தெரிந்து எண்ணற்ற பக்தர்கள் குழுமி இருந்தார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வண்டிகளில் வந்து மலை ஏறி டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், புலவர்கள், கலை நிபுணர்கள், பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாக, ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அங்கு எல்லோரும்  காணப்பட்டனர். பகவானை சுற்றி எல்லோரும் தரையில் அமர்ந்தார்கள். அவர் மீதே  அனைவ ரின்   பார்வையும் .  மேலே மர நிழல்களுக்கும் அப்பால் மேகங்கள் குடை பிடித் தது போல் இருந்தது. தென்றல் காற்று வெண்சாமரம்; வீசியது.

பக்தர்கள் சிலர் அனைவருக்கும்  கொண்டு வந்திருந்த  சிற்றுண்டி,இனிப்புகள் வழங்கி னார்கள். நிறைய பூரி கூட்டு ஆகாரமாக உள்ளே சென்றது. மாலை நெருங்கும் வேளை பகவான் திரும்ப ஆஸ்ரமம் நடந்தார். அனைவரும் பின்னால் தொடர்ந்தார்கள். சந்தியா கால வேத பாராயணங்கள் ஆஸ்ரமத்தில் ஆரம்பித்தன. பகவான் அமைதியாக அசையாமல் உட்கார்ந்தி ருந்தார். எங்கோ சிந்தனை. முகத்தில் அரும்பு புன்னகை. யார் யாரோ போட்டோக்கள் எடுத்தார்கள். சிலருக்கு பதில் சொன்னார். ஓரிரு வார்த்தைகளில். 

ஒரு மஹாராஜா தர்பாரில் இருப்பது போல் இருந்தது. காற்று பலமாக வீசவே, ஒரு சில பக்தர்கள் ஒரு துப்பட்டாவை முகம் மட்டும் தெரியும்படியாக அவர் மேல் போர்த்தினார்கள். '' மௌன வியாக்கியானம் '' மெளனமாக  உபதே சம்  தொடர்ந்தது. எண்ணற்றவர் மனதில் எழுந்த வினாக்கள் விடை பெற்றன. சாப்பாடு நேரம். எல்லோருக்கும் புளியோதரை தயிர் சாதம் வழங்கப்பட்டது. எல்லோர் மத்தியிலும் தரையில் அமர்ந்து பகவானும் உண்டார். 

வழக்கமாக  அவர்  உட்காரும் சோபாவை   வெராண்டாவில் கொண்டு வைத்தார்கள். வெராண்டாவில் க்ராதிக் கம்பிகள் போட்டு மடக்கி வைத்திருந்ததால்  அருகே யாரும் போகமுடியாது. எல்லோரும் நகர்ந்து நகர்ந்து அருகே வந்து அமர்ந்தார்கள். பக்கத்தில் ஒரு சிறு அறை . அதில் நானும் அலமேலுவும் . அதன் ஜன்னல் வழியாக பகவான் தெரிவார். பகவான் குட்டி குட்டி கதைகள் சொல்வார். சில சமயம் அருணாச்சல மலையில் தனது அனுபவங்களை ஞாபகப்படுத்தி சொல்வார். நிறைய சிறுத் தைகள், குரங்குகள் சர்ப்பங்கள்மயில் கூட்டங்கள் அணில் குடும்பங்கள், கீரிப்பிள்ளை, தன்னோடு நெருங்கி பழகியதை சொல்வார். அவரது அம்மா வந்ததை .பற்றி சொல்வார். ஸ்கந்தாஸ்ரமம் கட்டுமானம் வேலைகள் நடந்தது பற்றி செயதி வரும்.


தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...