Wednesday, May 5, 2021

surdas

 ஸுர்தாஸ்  -    நங்கநல்லூர்  J K  SIVAN   


  41  என் பக்தன் ஒருவனே எனக்கு முக்கியம் 


மஹா பாரத யுத்தத்தை    நேரில் பார்த்தவர்கள்,  பார்த்தனும் பார்த்தசாரதியும்  மட்டுமல்ல.  சஞ்சயன்,  எழுதிய வேத வியாசர், மற்றும் பாரதப்  போரில்  கலந்துகொண்டவர்கள்,மாண்டவர்கள்  என்று   சொன்னால் ஒருவரை விட்டு  விட்ட
தாகும்.  அவர் தான்  கண்ணற்ற ஸூர் தாஸ் . 

அவர் மனதில் தோன்றிய ஒரு  காட்சியைப்  பாடுகிறார் ஸூர்தாஸ் .

மஹா  பாரத யுத்தம்  நடக்கிறது.   ஒன்றா இரண்டா அடேயப்பா,  18  நாட்கள். விடாமல்  தொடர்ந்து  கடுமையான   போர்.  குருக்ஷேத்ரம்,  எங்கும் ரத்தத்தில் மிதக்கும்  தீவு  போல் காட்சி  அளிக்கிறது. 

ஒருநாள்  யுத்தகளத்தில்  அர்ஜுனன்  கிருஷ்ண னிடம் சொல்கிறான்.

''கிருஷ்ணா,  என் நண்பா,  எனக்கு தான்  இந்த  கஷ்டம், அவஸ்தை எல்லாம்  வேறே வழியில் லாமல் போய்விட்டது.  பாவம்.  உன்னை எதற்கு  நான்  இதில் இழுத்து உன்னையும் என் துன்பங் களில் பங்கேற்க வைத்துவிட்டேன் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.  என்னை மன்னிப்பாயா?

''அர்ஜுனா,  உனக்கு பதில் சொல்லும் முன்பு நீ என் மேல் நம்பிக்கை வைத்த ஒரு உண்மையான தோழன், பக்தன் தானே.   ஆமாவா , இல்லையா?  அதைச் சொல் முதலில்  ''

''ஆமாம்,  ஆமாம்,  ஆமாம்,  கிருஷ்ணா, நீ தான் என் மனதில் என்றுமே  குருவாக, நண்பனாக, தெய்வமாக இருப்பவன்.''

''அப்படியென்றால்  உன் கேள்விக்கு  பதில் சொல் கிறேன் கேள்: 

எப்போதும்   பேசிக்கொண்டே  தான்  அர்ஜுன னும்  கிருஷ்ணனும்  இருப்பார்கள். அவன்  தேரை  ஓட்டிக்  கொண்டே  பேசுவான், இவன்  காண்டீபத் தால்  எதிரிகளைக் கொன்று  கொண்டே  பேசு வான்.   குதிரைகள் கேட்டுக் கொண்டே  ஓடும். மேலே  கொடியில்  ஆஞ்சநேயன்  காதில் விழு வதை ரசித்துக் கொண்டே  காற்றில்  பறப்பான் .    

''அர்ஜுனா, ஏற்கனவே உனக்கு சொல்லி இருக் கிறேன். என்னுடைய  தீர்மானத்தை எதுவும்  மாற்றவே முடியாது.  என் பக்தர்களைக்  காக்க  நான் வெறும் காலோடு கூட ஓடுவேன். 

அவர்களை ரக்ஷிப்பது காப்பது ஒன்றே என் லக்ஷியம்.  என்னை நம்பினவனுக்கு, என் பக்த னுக்கு,  ஏதேனும் துன்பம் என்றால் உதவ உடனே  ஓடியாக வேண்டும் எனக்கு.  அவன் எதிரி என் எதிரி. அந்த மனநிலையில் தான்   உனக்கும் நான் தேரோட்டுகிறேன்.  நீ  ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி. உன் தோல்வி  தானடா  அர்ஜுனா, என் தோல்வி.  அதை  நடக்கவே  விட மாட்டேன்.   நன்றாகக் கேட்டுக்  கொள் . 

என் பக்தனின் எதிரியைக்  கொல்ல  எந்நேரமும் என் சுதர்சன சக்ரம் தயார் நிலையில் இருக் கும். இதை  சாஸ்த்ரங்களால்,  புத்தகங்களால், புராணங்களால்  விளக்கமுடியாது.''

இப்படி ஒரு கற்பனையை  எவராலும் பண்ண முடியாது  ஸூர்தாஸைத் தவிர.  இதெல்லாம் நாம் படித்து தெரிந்து கொள்ளவேண்டா

மா?   ஹிந்தி யோ   வ்ரஜ்பாஷா பாடலோ  கிடைக்கவில்லை,  கிடைத்தாலும்  படித்து நாம்மால்  தெரிந்து கொள்ள முடியாது. யாரோ  ஆங்கிலத்தில் எங்கோ எழுதி யதை  சூர்தாஸ் எழுதியதாக மனதில் கொண்டு  ஒரு சம்பவத்தை மேலே விவரித்தி ருக்கிறேன்.  

0 Arjuna, this is my vow,
and this cannot be changed.
To help my devotees
1 rush barefoot
for their honour is my honour.
Whenever my devotee is in trouble
I go help.
His enemy becomes
my enemy.
It is with this thought
and consideration,
that I drive your chariot.
It you win, I win,
your defeat is my defeat
Listen, I
burn my bhakta’s foe
with my Sudarshan discus. Unfathomable, indescribable
even by the holy books,

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...