Saturday, July 8, 2017

அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம்
J.K. SIV AN
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசில் மிக முக்கியமான பாகம் கண். தமிழில் ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் உண்டு. அது தான் பார் என்பது. பூமி என்பதையும் கண்ணால் காண்பதையும் குறிக்கும் வார்த்தை. இருந்தாலும் இந்த பார் எனும் வார்த்தையை வெறும் கண் செய்யும் காரியத்தை மட்டும் குறிப்பிட நாம் உபயோகிப்பதில்லை. அனைத்துக்குமே அது முக்கியமாக பயன்படுகிறது.
''இந்த காபியை குடித்துப் பார். அதன் ருசி தெரியும். டிவியில் எவ்வளவு அழகாக மகாராஜபுரம் கச்சேரி ஒளி பரப்புகிறார்களே. கேட்டுப்பார். காம்போதியின் இனிமை நெஞ்சுக்குள் புகும். அந்த மலரை தொட்டுப்பார் எவ்வளவு மிருது மென்மை. மல்லிகை மலர் எவ்வளவு கம்மென்று மணக்கிறது முகர்ந்து பார். சாம்பார் கொஞ்சம் சாப்பிட்டு பார் விடவே மாட்டாய்.'' இப்படி மற்ற இந்திரியங்களின் செயலையும் பார் சேர்த்து தானே சொல்கிறோம். கண் அவ்வளவு முக்கியமானது. இதனால் சிலர் அல்ல பலர் குணங்களையும் அறிய முடிகிறது.
கண் என்றால் விழியின் கோளங்கள் மேலும் கீழும் பக்கங்களில் நகர்ந்தும் விஷயத்தை க்ரஹிக்கிறது. சில விழிகள் அழகாக இருக்கிறதே. பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறதே. ஒளி வீசும் கண்களை உடையவர்கள் எல்லோராலும் விரும்ப படுகிறார்கள். அகால மரணமடைந்த டயானா என்ற ஆங்கில பெண்ணுக்கு அழகு விழிகள். எத்தனையோ அடிமைகள் அதனால். அவள் அழகே அவளை தின்றுவிட்டது.
சிலர் கீழே வெண்மையிருக்க மேலாகவும், மேலே வெண்மை தெரிய கீழாகவும் பார்ப்பார்கள். அவர்களை விட்டு ஓடிவிட வேண்டும். ஆபத்தானவர்கள். நம்ப முடியாதவர்கள். ஹிட்லர் ஒரு உதாரணம். கருப்பு விழி வெண்மையை தொட்டுக்கொண்டிருந்தால் ஆயுசு கம்மியாம். நிறைய கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்குமாம்.
கண்ணின் அகலத்தை விட நீளம் பெரிதாக இருப்பவர்கள் தப்பு தப்பாக காரியங்கள் செயது திட்டு வாங்குபவர்கள். சந்தேகப் பிராணிகள். நீள் விழிக்காரர்கள் கெட்டிக்காரர்கள். தொழில் துறையில் பிரபலமாவார்கள்.
சின்னக்கண்ணன் உணர்ச்சிகளை மென்று விழுங்குபவன். வெளியே காட்டிக்கொள்ளாமல் புழுங்குபவன். விஞ்ஞானிகள் பெரும்பாலும் இந்த ரகம்.
ஆண்களில் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான்.கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.
உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான். அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.
உருண்ட விழி அதிர்ஷ்டம். மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும். பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.
விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.
மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
ரொம்ப பெரிய கண்ணை கொண்டவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.
உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
பெண்ணுக்கு கண் கருப்பா, நீலமோ , பச்சையோ, பிரௌனோ, சாம்பல் காலரா, கண்ணின் மணி பழுப்போ அதை சுற்றி வெண்திரை பசும்பால் நிறத்தில் இருந்தால் அவள் அதிக உணர்ச்சி வசப்படுபவள். பிடித்தவர்களை வேண்டியவர்களை விட்டுக்கொடுக்க மாட்டாளாம் .
கண் இமைகள் கரு கருவென இருப்பவள் அதிர்ஷ்டக்காரியாம். தேன் கலரில் இருக்கும் விழிகள் சந்தோஷம் அதிர்ஷ்டம் ரெண்டையும் வாரிக் கொடுக்குமாம்.
புறாவின் கண்கள் போல் உள்ளவள் நல்லவள் அல்ல.
மீனாக்ஷிகள் , ஐயோ நான் பேரைச் சொல்லவில்லை. மீன் போன்ற கண்ணை உடையவர்கள் சுதந்திரமான எண்ணப்போக்கு உடையவர்கள். கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கஷ்டம்.
இதற்கு மேல் என்னை கேட்க வேண்டாம். ஏனென்றால் நான் மூக்கை பற்றி ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...