Sunday, July 30, 2017

யாத்ரா விபரம்: அம்பரனை கொன்றவள் வரும் வழியிலேயே கையோடு கொண்டுவந்திருந்த ஆகாராதிகளை மரத்தடி ஒன்றில் முடித்துக்கொண்டு திருநள்ளார் சென்றபோது மதியம் ரெண்டு மணி ஆகிவிட்டதால் அருகே இருந்த யாத்ரி நிவாஸில் தங்கி இளைப்பாறி மாலை நான்குமணிக்கு கிளம்பியபோது அருகில் உள்ள சில கோவில்களை முதலில் பார்த்துவிட்டு திருநள்ளார் திரும்பினால் சனீஸ்வரன் தரிசனத்தோடும்,அனுகிரஹத்தோடும் தோஷம் எதுவும் இன்றி வெறும் சந்தோஷத்தோடு இரவு அங்கே தங்கலாமே என்று ஒரு முடிவு எடுத்தோம். திருநள்ளாரிலிருந்து 8.3 கிமீ மேற்கே சென்றால் பத்திரமாக அம்பகரத்தூர் சென்று பத்ரகாளி தரிசனம் பெறலாம். மிக தாராளமாக இடம் கொண்ட ஆலயம். வடக்கு பார்த்த கோவில். பெரிய கண் கவரும் ராஜகோபுரம். அடுத்து பெரிய மண்டபம். பெரிய பத்ர காளி. அஷ்ட புஜங்கள். ஆயுதங்கள். அம்பாளுக்கு எப்போதும் வெள்ளை ஆடை. 20 மீட்டர் நீளம் கொண்ட சேலை. அம்பன் அம்பரன் என்று ராக்ஷஸ சகோதரர்கள். தேவ மாதர்களையும் மற்ற பெண்களையும் பழித்து அழித்தது சுகம் கண்டவர்கள். அவர்கள் அக்கிரமம் அதிகரிக்க ப்ரம்மா இந்திரன் முதலானோர் சிவனிடம் முறையிட ''பத்ரகாளி நீ தான் சரியானவள். உடனே போ. அவர்களை தீர்த்துக் கட்டு '' என்கிறார் சிவன். பராசக்தி அழகிய பெண்ணாக உருவெடுத்து உலவ, அம்பன் அம்பரன் இருவருக்குள்ளும் யார் இந்த அழகியை அடைவது என்று சண்டை நடந்து அம்பனை அம்பரன் கொன்றான். பிறகு அவன் பராசக்தியை நெருங்க இதுவே தக்க தருணம் என காத்திருந்த பத்ரகாளி அம்பரனை எதிர்த்து தாக்குகிறாள் .அம்பரன் மஹிஷ உருவெடுத்து காளியோடு மோதி தலையை மட்டுமல்ல உயிரையும் இழந்தான். வட பத்ரகாளி அங்கேயே தங்கி எல்லோரையும் ரக்ஷித்தாள். அம்பரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் ஊர் அம்பர ஹரத்தூர் என பெயர் பெற்றாலும் நாளடைவில் அந்த பெயரும் சம்ஹாரம் ஆகி அம்பகரத்தூர் இப்போது. எண்ணற்ற பக்தர்கள் காளியை வேண்டி பலன் பெறுகிறார்கள். நேர்த்தி கடனாக எடைக்கு எடை துலாபார காணிக்கை செலுத்துகிறார்கள். ஆலய நேரம் 7 AM - 1 PM and 4 PM - 9 PM. பத்ரகாளியை தரிசனம் செய்தபின் அங்கிருந்து கந்தன் குடி சென்றோம்.

யாத்ரா விபரம்:


                                  அம்பரனை கொன்றவள்  

வரும் வழியிலேயே  கையோடு கொண்டுவந்திருந்த  ஆகாராதிகளை மரத்தடி ஒன்றில் முடித்துக்கொண்டு  திருநள்ளார்  சென்றபோது மதியம் ரெண்டு மணி ஆகிவிட்டதால் அருகே இருந்த யாத்ரி நிவாஸில்  தங்கி இளைப்பாறி  மாலை நான்குமணிக்கு கிளம்பியபோது அருகில் உள்ள சில கோவில்களை முதலில் பார்த்துவிட்டு திருநள்ளார்  திரும்பினால் சனீஸ்வரன் தரிசனத்தோடும்,அனுகிரஹத்தோடும்  தோஷம் எதுவும் இன்றி வெறும் சந்தோஷத்தோடு  இரவு  அங்கே தங்கலாமே என்று ஒரு முடிவு எடுத்தோம்.

திருநள்ளாரிலிருந்து   8.3 கிமீ மேற்கே



  சென்றால் பத்திரமாக  அம்பகரத்தூர் சென்று பத்ரகாளி தரிசனம் பெறலாம்.  மிக தாராளமாக  இடம் கொண்ட ஆலயம்.  வடக்கு பார்த்த கோவில். பெரிய  கண் கவரும் ராஜகோபுரம். அடுத்து பெரிய மண்டபம்.   பெரிய பத்ர காளி.   அஷ்ட  புஜங்கள். ஆயுதங்கள். அம்பாளுக்கு எப்போதும் வெள்ளை ஆடை. 20 மீட்டர் நீளம் கொண்ட சேலை. 

அம்பன் அம்பரன்  என்று ராக்ஷஸ சகோதரர்கள். தேவ மாதர்களையும் மற்ற பெண்களையும்  பழித்து அழித்தது சுகம் கண்டவர்கள். அவர்கள் அக்கிரமம் அதிகரிக்க  ப்ரம்மா இந்திரன் முதலானோர்  சிவனிடம் முறையிட ''பத்ரகாளி  நீ தான் சரியானவள். உடனே போ. அவர்களை தீர்த்துக் கட்டு '' என்கிறார் சிவன்.  பராசக்தி அழகிய பெண்ணாக உருவெடுத்து உலவ, அம்பன் அம்பரன்  இருவருக்குள்ளும்   யார்  இந்த அழகியை அடைவது என்று சண்டை நடந்து அம்பனை அம்பரன் கொன்றான்.  பிறகு அவன் பராசக்தியை நெருங்க இதுவே தக்க தருணம் என காத்திருந்த  பத்ரகாளி அம்பரனை எதிர்த்து தாக்குகிறாள் .அம்பரன்  மஹிஷ  உருவெடுத்து காளியோடு மோதி தலையை மட்டுமல்ல உயிரையும் இழந்தான்.   வட பத்ரகாளி  அங்கேயே தங்கி எல்லோரையும் ரக்ஷித்தாள்.  அம்பரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் ஊர்  அம்பர  ஹரத்தூர்  என பெயர் பெற்றாலும்  நாளடைவில் அந்த  பெயரும் சம்ஹாரம் ஆகி  அம்பகரத்தூர் இப்போது. 

எண்ணற்ற பக்தர்கள்  காளியை வேண்டி பலன் பெறுகிறார்கள். நேர்த்தி கடனாக எடைக்கு எடை துலாபார காணிக்கை  செலுத்துகிறார்கள்.   ஆலய  நேரம்  7 AM - 1 PM and 4 PM - 9 PM.

பத்ரகாளியை  தரிசனம்  செய்தபின்  அங்கிருந்து கந்தன் குடி சென்றோம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...