Monday, July 24, 2017

நாலு நாளில் நான் பெற்ற இன்பம்.​

​​
​ நாலு நாளில் நான் பெற்ற இன்பம்.​
J.K. SIVAN


தமிழ் நாடு இறைவன் அருளால் மிக அற்புதமான சில க்ஷேத்ரங்களை தன்னுள் கொண்டு அமைதியாக காட்சியளிக்கிறது. அதிக விளம்பரமற்ற, எத்தனையோ பக்தர்கள் கண்டும் கேட்டும் அறியாத சிறியதும் பெரியதுமான கோவில்கள் பல உள்ளன. சில கேட்பாரற்ற கவனிப்பில்லாத, கவனிப்பு போதாத நிலையில் இருப்பதும் காணும்போது மனதில் முள் தைக்கிறது.

​என்றோ ஒரு நாள் என் நண்பர் ஸ்ரீனிவாசன் ''சப்த விடங்க க்ஷேத்ரம் போயிருக்கிறீர்களா? ''என்றபோது ''இல்லையே. கேள்விப்பட்டதோடு சரி. பார்க்கும் பாக்கியம் இதுவரை கிட்ட வில்லை ''என்றேன்.

திடீரென்று ஆறு ஏழு நாட்கள் முன்பு, ''இந்தவாரம் ஒரு நாலு நாள் சப்தவிடங்க க்ஷேத்ரம் செல்வோமா?''. எனக்கும் முக்கியமான வேலைகள் எதுவும் குறுக்கிடாத நேரமாக ''21ம் தேதி உங்களுக்கு முடிந்தால் செல்லலாமே'' என்றேன். ​

21.7.17 முதல் 24.7.17 வரை நான்குநாட்கள் முடிந்தவரை​ சப்த விடங்க க்ஷேத்ரம் மட்டுமில்லாமல் மற்றும் சில கோவில்கள் சென்று தரிசித்தபோது தான் ​நமது புராதன கோவில்களின் ​மேற்கண்ட உண்மை மீண்டும் என் நெஞ்சை அடைத்து கண்களில் நீரை வரவழைத்தது.​ தமிழறிந்த நாம் அனைவருமே மிகவும் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட பொக்கிஷத்தை வாரி அளித்த நம் மூதாதையர்களுக்கும் நம்மை ஆண்ட சிறந்த மன்னர்கள் குடும்பங்களுக்கும் எத்தனையோ ஜென்மங்கள் நாம் கடனாளிகள்.

நாம் என்ன செய்யவேண்டும்?

முடிந்தவரை இந்த கோவில்களை கண்டு தரிசனமாவது செய்ய வேண்டும். அந்தந்த கோவில்களுக்கு அருகாமையில் இருப்பவர்கள், செல்ல முடிந்தவர்கள் அடிக்கடி சென்று அந்த கோவில்களின் அன்றாட பராமரிப்புக்கு முடிந்த உதவியை செய்யலாம்.

முக்கியமாக நமது அடுத்த தலைமுறை, அதாவது குழந்தைகளை நிறைய கோவில்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு கோவில் செல்லும் பழக்கம், அங்குள்ள சிற்பக்கலை, ஓவியக்கலை, அவற்றில் நிரம்பியுள்ள இதிகாச, புராண, நிகழ்ச்சிகளை கதைகளாக சொல்லி அவர்கள் கவனைத்தை துளியூண்டு ஆன்மீகத்தில் செல்ல வழிவகுக்க வேண்டும் என்பது என் ஆசை.

என்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் வருகிறேன். ​

இனி வரும் நாளில் நான் சென்ற திருநள்ளார், , அம்ப ஹரத்தூர், கந்தன்குடி, திருநாகைக்
காரோணம், வேதாரண்யம், ஆதி ரங்கம், திருத்துறை பூண்டி, திருக் கொள்ளிக்காடு, எட்டுக்குடி, திருவாய்மூர், திருக்குவளை, திருக்காரவாசல், திருவாரூர், திருவீழிமிழலை, திரு வாஞ்சியம், அச்சுதமங்கலம்,
அம்பர், இவைகளில் முக்கியமாக இடம் பெறும் . முடிந்த போதெல்லாம் இவை பற்றி எழுத விருப்பம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...