Wednesday, July 5, 2017

Kutti kadhai 79 ஆண்டாளும் தோழியரும் (11)




Kutti kadhai 79    ஆண்டாளும்  தோழியரும் (11)

இறைவனுக்கே  உகந்த சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதம் இன்று 25ம்  நாளை தொட்டு விட்டது.  இன்னும் ஒரு கை விரல் விட்டு எண்ண இன்னும் 4 நாட்களே உள்ள  நிலையில் இன்று  நடந்த விஷயத்துக்கு வருவோம். சரணாகதி நீயே என்று கண்ணன் திருவடிகளில் மெய்மறந்து மனம் கனிந்து அவன் பேரருள் பெற வேண்டிய ஆண்டாளுக்கு திடீர் என்று பழைய ஞாபகங்கள் வந்து விட்டது. இந்த மாயாவி  யார்?? யாரோ ஒருத்திக்கு பிறந்தவன், பிறந்த கணத்திலேயே அவளை விட்டு  பிரிந்தவன், பிறந்ததையே ரகசியமாக்கி விட்டு வேறு எங்கோ ஒருத்தியிடம் ரகசியமாகவே வளர்ந்தவன்.- (இதனால் தான் பிற்காலத்தில் நமக்கெல்லாம் கீதா ரகசியம் கற்பித்தானோ!)  தன் உயிரைக் காத்து கொள்ள உன்னைத் தேடிக் கொல்ல அலைந்த கம்சன் தூக்கமின்றி  தவித்து  வயிறு பூரா நெருப்போடு கவலையில் துடிக்க வைத்தவனல்லவா நீ  என்று  ஒரு கணத்தில் ஆண்டாள் கிருஷ்ணனைபற்றி சிந்தித்து பெருமிதம் கொண்டாள்.  அப்படிப்பட்ட மகோன்னதமான  பெருமாளே!,  உன் பெருமையும், செழுமையும், வீரமும்  கருணையும்-- எதைப்பற்றி பாடினாலும்  சந்தோஷக்கடலில் மூழ்க வைக்கிறதே!!  எங்களுக்கு அருள்  செய்வாயாக”” என்று  இந்த  நன்னாளில்  ஆண்டாள்  அன்று  வேண்டுகிறபோது அதே மார்கழி 25ம் நாளான இன்று ஸ்ரீ வில்லி புத்தூரில் ஆண்டாள்- கண்ணன் திருக்கோலம்கொண்டு தந்தத்தில் செய்யப்பட்ட பல்லக்கில் ஊர்வலம் வரும்போது மனதிலேயே அந்த  ஊர்வலத்தில் கலந்துகொண்டு நம் வேண்டுதலையும் அவள் திருவடிகளில் வைத்து வழிபடுவோமாக.!! .   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...