Friday, March 15, 2019

GEETHANJALI

கீதாஞ்சலி
ரவீந்திரநாத் தாகூர் J K SIVAN

2. உனக்கு நான் என்றுமே பெரும் பாடகன்

தாகூரை மொழிபெயர்ப்பது எளிதல்ல. மனப்பக்குவம் வேண்டும். அவரது எண்ணங்கள் எழுத்தாக வரும்போது உருவம் சரியாக தெரியாது. உணர்ச்சி மட்டுமே கொப்புளிக்கும். அது தான் அவருக்கு உலகப்புகழ் தந்தது. நோபல் பரிசும் தந்தது. ஞானத்தின் எல்லை. மோனத்தின் எழுத்துருவம். இனி கீதாஞ்சலிக்கு செல்வோம்.
2.When thou commandest me to sing it seems that my heart would break with pride; and
I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony---and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing.
I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far-spreading wing of my song thy feet which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord

'' நீ பாடு என்று சொல்லி விட்டாய். என்னைப்பார்க்கும்போதெல்லாம் நீ பாடு.... என்கிறாய். அப்போதெல்லாம் என் இதயம் எப்படி மகிழ்ச்சியில் பெருத்து,பருத்து வெடிக்கும் போல் ஆகிவிடும் நான் உன்னையே பார்த்துக்கொண்டிருப்பேன். கண்கள் பனித்து திரை விழும். என்ன ஒரு பெருமிதம் எனக்கு. எனக்கு எங்கோ ஆகாசத்தில் சஞ்சரிப்பதை போல் இருக்கிறதே. கண்களில் ஆனந்த கண்ணீர். முகம் நூறு சூரியனாகி விட்டதே.எத்தனை சொல்லொணா கஷ்டங்கள் ஏமாற்றங்கள் பார்த்து விட்டேன். எல்லாம் உருகி ஒன்றாய் சேர்ந்து விட்டது. அது எப்படி ஒரு இனிய கொழுக்கட்டையாகி விட்டது. நான் சிறகடித்து ஒரு பெருங் கடலையை தாண்டி பறக்கும் பறவையா?இவ்வளவு பெரிய கடலை சுலபத்தில் சந்தோஷமாக ரெக்கை அடித்து தாண்டிவிடுவேனே. ஏன் தெரியுமா ரகசியத்தை சொல்கிறேன் கேள். உனக்கு என் பாட்டு பிடிக்கும். உனக்கு நான் என்றுமே ஒரு பிரபல பாடகன். நான் எப்போதும் உன் எதிரில் இருக்கும்போது ஒரு பாடகனாகவே தான் தெரிவேன். வருவேன். பெரிய இறகோ சிறகோ எதுவாயினும் என் பாடல்களெனும் அந்த விரிந்த சிறகு முனையால் உன் திருப்பாதங்களை வருடுவேன். ஆகா உன்னை, உன் திருப்பாதங்களை அவ்வளவு எளிதில் தொடமுடியுமா? நான் பாடகன் , பாடுகிறேன் என்ற பெருமை, ஆனந்தம் தலைக்கேறி என்னை மறந்து போகிறேன். அடே கிருஷ்ணா, என் ஆருயிர்த் தோழா என்று உரிமையோடு உன்னை அணுக மனம் நாடுகிறது...தேடுகிறது...


.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...