Sunday, June 27, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --

தாகூர்

75. அந்தியில் நீயே ....

75. Thy gifts to us mortals fulfil all our needs and yet run back to thee undiminished.
The river has its everyday work to do and hastens through fields and hamlets;
yet its incessant stream winds towards the washing of thy feet.
The flower sweetens the air with its perfume; yet its last service is to offer itself to thee.
Thy worship does not impoverish the world.
From the words of the poet men take what meanings please them;
yet their last meaning points to thee.

கிருஷ்ணா, எல்லோருக்கும் தெரிந்த ரஹஸ்யம் என்று ஒன்று உண்டே தெரியுமா? எல்லோருக்கும் தெரிந்தால் அது எப்படி ரஹஸ்யமாகும் என்கிறாயா? அது தான் ரஹஸ்யம்/ எல்லோருக்கும் தெரியும் ஆனால் எல்லோரும் மறந்து போகிறார்களே. அடிக்கடி எடுத்துச் சொல்லவேண்டி இருக்கிறதே.

அள்ள அள்ளக் குறையாத எத்தனையோ பரிசுகளை இந்த பூமியில் மக்களுக்கு நீ வழங்கி இருக்கிறாய். எல்லோரும் சந்தோஷமாக திருப்தி அடைவதில்லை, இருந்தாலும் திருப்தி அடைகிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அப்படியும் நீ கொடுத்து எதுவும் தீர்ந்து போவதில்லையே. எல்லாமும் முழுமையாக உன்னிடம் வந்து சேர்கிறது. அது ரஹஸ்யம். திருப்தியைப் பூர்த்தி செய்து, சிறிதும் குறையாமல் மீண்டும் உன்னிடமே வந்து சேருகிறதல்லவா.

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पूर्णमुदच्यते ।पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥ Puurnnam-Adah Puurnnam-Idam Puurnnaat-Puurnnam-Udacyate | Puurnnasya Puurnnam-Aadaaya Puurnnam-Eva-Avashissyate || பூரணத்தை கொடுத்தாய், பூரணமாக எடுத்துக்கொண்டோம், அப்படி எடுத்துக்கொண்டது போக மீதியும் அப்படியே பூரணமாக இருக்கிறதே....

நதி ஓயாமல் ஒழியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் அன்றாடப் பணிகள் எத்தனையோ மைல் நீளம் ஓடும்போது செய்வதற்கு இருக்கிறது. வயல்களின் வழியாக, சிற்றூர்களின் வழியாக நகரங்களின் குறுக்காக, பாலத்தின் அடியில் எல்லாம் கூட விரைந்து ஓடுகின்றது. எனினும் நிறைந்தோடும் அதன் நீர், உன் கால்களைக் கழுவ, கடைசியில் உன்னிடமே வருகின்றதே அது தான் புண்ய சங்கமம். அங்கே தான் புனித ஸ்னானம்.

எண்ணற்ற மலர்கள் உலகத்தில் தங்கள் நறுமணத்தால் எங்கும் சுற்றிலும் இனிமை யைப் பரப்புகின்றன. எனினும் மலர்களின் இறுதிப் பணி, தங்களை உன்னிடம் அர்ப்ப ணிப்பதே. உனக்கு அர்ச்சனை செய்யப்பட்டு உன் காலடியில் விழுகிறதே. அந்த மலருக்கு தான் விலையில்லா மதிப்பு. உன் வழிபாட்டில் அதன் பங்கு பெரியது.

கவிஞனின் கவிதைகளிலிருந்து, தங்களுக்குப் பிடித்த்ததை வாசகர்கள் எடுத்து ரசிக்கிறார்கள். பலருக்கும் அனுப்புகிறார்கள். எனினும், அவற்றின் இறுதிப் பொருள்கள் யாவும் உன்னையே சுட்டிக் காட்டுகின்றன.அப்போது தான் அந்த எழுத்துக்கள், கவிதை, முழு அந்தஸ்தை பெறுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...