Wednesday, June 30, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

16வது தசகம் 

16. நர நாராயணா , நீலகண்டா .....

दक्षो विरिञ्चतनयोऽथ मनोस्तनूजां
लब्ध्वा प्रसूतिमिह षोडश चाप कन्या: ।
धर्मे त्रयोदश ददौ पितृषु स्वधां च
स्वाहां हविर्भुजि सतीं गिरिशे त्वदंशे ॥१॥

dakṣō viriñcatanayō:’tha manōstanūjāṁ
labdhvā prasūtimiha ṣōḍaśa cāpa kanyāḥ |
dharmē trayōdaśa dadau pitr̥ṣu svadhāṁ ca
svāhāṁ havirbhuji satīṁ giriśē tvadaṁśē || 16-1 ||

த³க்ஷோ விரிஞ்சதனயோ(அ)த² மனோஸ்தனூஜாம்
லப்³த்⁴வா ப்ரஸூதிமிஹ ஷோட³ஶ சாப கன்யா꞉ |
த⁴ர்மே த்ரயோத³ஶ த³தௌ³ பித்ருஷு ஸ்வதா⁴ம் ச
ஸ்வாஹாம் ஹவிர்பு⁴ஜி ஸதீம் கி³ரிஶே த்வத³ம்ஶே || 16-1 ||

 ப்ரம்மா   ஜீவன்களை   ப்ரபஞ்சத்தில்  சிருஷ்டி  பண்ணும்போது ஆரம்ப காலத்தில்  உதித்த ஒரு புத்ரன்  தான்  தக்ஷன். .  ஸ்வயம்பு மனுவின் பெண் ப்ரஸூதியை மணந்தவன்.  அவர்களுக்கு 16 பெண்  குழந்தைகள்.    அவர்களில்  13 பேர்  தர்ம தேவதைக்கு மனைவியானார்கள்.  பித்ரு தேவதைக்கு  ஸ்வாதா வை மணம் செய்து  கொடுத்தான்.  ஸ்வாஹா  என்பவள் அக்னிக்கு மனைவியானாள்.  ஹோமத்தில்  பொருள்களை அர்ப்பணிக்கும்போது அதனால் தான் ''ஸ்வாஹா'' என்று அக்னிக்கு திருப்தியாக கொடுக்கிறோம்.   ஸதி  என்கிற பெண்  சிவ பெருமானுக்கு மனைவியானாள்.  குருவாயூரப்பா,  நீயும்  சிவனும் ஒன்று தானே!

मूर्तिर्हि धर्मगृहिणी सुषुवे भवन्तं
नारायणं नरसखं महितानुभावम् ।
यज्जन्मनि प्रमुदिता: कृततूर्यघोषा:
पुष्पोत्करान् प्रववृषुर्नुनुवु: सुरौघा: ॥२॥

mūrtirhi dharmagr̥hiṇī suṣuvē bhavantaṁ
nārāyaṇaṁ narasakhaṁ mahitānubhāvam |
yajjanmani pramuditāḥ kr̥tatūryaghōṣāḥ
puṣpōtkarānpravavr̥ṣurnunuvuḥ suraughāḥ || 16-2 ||

மூர்திர்ஹி த⁴ர்மக்³ருஹிணீ ஸுஷுவே ப⁴வந்தம்
நாராயணம் நரஸக²ம் மஹிதானுபா⁴வம் |
யஜ்ஜன்மனி ப்ரமுதி³தா꞉ க்ருததூர்யகோ⁴ஷா꞉
புஷ்போத்கரான்ப்ரவவ்ருஷுர்னுனுவு꞉ ஸுரௌகா⁴꞉ || 16-2 ||

நாராயணா,  மூர்த்தி என்கிற  தர்ம தேவன் மனைவிக்கு நீ  நர நாராயணனாக பிறந்த போது  சகல தேவர்களும் ரிஷிகளும் மகிழ்ந்தார்கள்.  உன் மேல் அனைவருமே புகழ்ந்து பாடினார்கள்,   புஷ்பங்களால் அர்ச்சித்தார்கள்.  வாத்ய கோஷம் எழுப்பினார்கள்.

दैत्यं सहस्रकवचं कवचै: परीतं
साहस्रवत्सरतपस्समराभिलव्यै: ।
पर्यायनिर्मिततपस्समरौ भवन्तौ
शिष्टैककङ्कटममुं न्यहतां सलीलम् ॥३॥

daityaṁ sahasrakavacaṁ kavacaiḥ parītaṁ
sāhasravatsaratapassamarābhilavyaiḥ |
paryāyanirmitatapassamarau bhavantau
śiṣṭaikakaṅkaṭamamuṁ nyahatāṁ salīlam || 16-3 ||

தை³த்யம் ஸஹஸ்ரகவசம் கவசை꞉ பரீதம்
ஸாஹஸ்ரவத்ஸரதபஸ்ஸமராபி⁴லவ்யை꞉ |
பர்யாயனிர்மிததபஸ்ஸமரௌ ப⁴வந்தௌ
ஶிஷ்டைககங்கடமமும் ந்யஹதாம் ஸலீலம் || 16-3 ||

Nara and Narayana who were you yourself,
Took turns and destroyed the asura called Sahasra Kavacha,
Who wore one thousand armours,

குருவாயூரப்பா,  நீ  நர நாராயணனாக அவதரித்த  போது தான்  சஹஸ்ர கவசன்  எனும் ராக்ஷஸனை வதம் செய்தாய். அடேயப்பா,  ஒரு  இரும்பு கவசம் அணிந்தாலே எவ்வளவு கனம்? , அந்த ராக்ஷஸன் எப்படித்தான்  ஆயிரம் கவசங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து நடந்தானோ?   அவன் சாதாரண ராக்ஷஸன் இல்லை,   மஹா கனம் பொருந்திய  ராக்ஷஸன். ஒரு கவசத்தை அறுக்க, ஆயிரம் வருஷங்கள் தவம் இருக்கவேண்டும்,   ஆயிரம் வருஷங்கள் யுத்தம் புரிய வேண்டும். அப்படியும்   கடைசியில்  ஒரு கவசம் மட்டும் அவன் மேல் இருக்கும்  அவனைக் கொல்லும்போது,   என்கிறார்  மேல்பத்தூர் நம்பூதிரி.  இப்படி ஒரு ராக்ஷஸனை இப்போது தான் அறிகிறேன்.

अन्वाचरन्नुपदिशन्नपि मोक्षधर्मं
त्वं भ्रातृमान् बदरिकाश्रममध्यवात्सी: ।
शक्रोऽथ ते शमतपोबलनिस्सहात्मा
दिव्याङ्गनापरिवृतं प्रजिघाय मारम् ॥४॥

anvācarannupadiśannapi mōkṣadharmaṁ
tvaṁ bhrātr̥mān badarikāśramamadhyavātsīḥ |
śakrō:’tha tē śamatapōbalanissahātmā
divyāṅganāparivr̥taṁ prajighāya māram || 16-4 ||

அன்வாசரன்னுபதி³ஶன்னபி மோக்ஷத⁴ர்மம்
த்வம் ப்⁴ராத்ருமான் ப³த³ரிகாஶ்ரமமத்⁴யவாத்ஸீ꞉ |
ஶக்ரோ(அ)த² தே ஶமதபோப³லனிஸ்ஸஹாத்மா
தி³வ்யாங்க³னாபரிவ்ருதம் ப்ரஜிகா⁴ய மாரம் || 16-4 |

பத்திரிகாஸ்ரமத்தில்  நர நாராயணர்களை இன்றும் தரிசிக்கிறோம்.  மோக்ஷ மார்க்கம் கற்பித்து பக்தர்களை ரட்சிக்கும் நரநாராயணன் சஹஸ்ர கவசனை சுலபமாக  கொல்ல முடிந்த காரணம்   அவனுடைய  அசுர பலத்தை விட அவரது தபோபலம்  ஆயிரம் கவசத்துக்கும்  மேலான வலுப் பெற்றதாக இருப்பதால் தான்.  இல்லையா  குருவாயூரப்பா?  என்று நம்பூதிரி கேட்கிறார்.  சிரித்துக்கொண்டே  ''ஆமாம்''  என்று தலையாட்டுகிறான்  உண்ணி  கிருஷ்ணன். 

இந்திரன் எப்போதும் சும்மாவே இருக்கமாட்டான்.  உன் மேல் பொறாமை கொண்டு  மன்மதனை அனுப்பினான் உன் தவ  வலிமையைக்  குலைப்பதற்கு . மன்மதன் போதாதென்று  தேவலோக அரம்பையர்களை வேறு அனுப்பினான் மன்மதனோடு.    
कामो वसन्तमलयानिलबन्धुशाली
कान्ताकटाक्षविशिखैर्विकसद्विलासै: ।
विध्यन्मुहुर्मुहुरकम्पमुदीक्ष्य च त्वां
भीरुस्त्वयाऽथ जगदे मृदुहासभाजा ॥५॥

kāmō vasantamalayānilabandhuśālī
kāntākaṭākṣaviśikhairvikasadvilāsaiḥ |
vidhyanmuhurmuhurakampamudīkṣya ca tvāṁ
bhītastvayātha jagadē mr̥duhāsabhājā || 16-5 ||

காமோ வஸந்தமலயானிலப³ந்து⁴ஶாலீ
காந்தாகடாக்ஷவிஶிகை²ர்விகஸத்³விலாஸை꞉ |
வித்⁴யன்முஹுர்முஹுரகம்பமுதீ³க்ஷ்ய ச த்வாம்
பீ⁴தஸ்த்வயாத² ஜக³தே³ ம்ருது³ஹாஸபா⁴ஜா || 16-5 ||

தவத்தை கெடுக்க வந்த  மன்மதன் சும்மாவா வருவான்?  இனிய  தென்றல்,  வசந்த கால  நறுமலர்களின் மணங்கள்  மனதை கிறுகிறுக்க, கிறங்க வைக்க சந்தர்ப்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு வந்து   உன் மீது  காமன் மலர் அம்புகளை வழக்கம் போல்  தொடுத்தான்.  நரநாராயணனான  உன்னை மயக்கி தவத்தை   தடை  செய்ய  முயன்றான்.  பாவம் இந்திரன்.   அவன் அனுப்பிய  மன்மதனும்  அவன்  அரம்பையரும் போட்ட  ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண்.   நீ  கருங்கல் சிலையாக அமர்ந்து    இடையூறில்லாத தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பார்த்து  இந்திரனே  அசந்து போனான்.   அவன் அனுப்பிய  மன்மதனுக்கு  பயம் வந்துவிட்டது. கை கூப்பி நின்றான்.  கண்ணைத் திறந்து  ஒரு சிறு புன்னகையை அவன் மீது வீசினாய். பேசினாய்.

भीत्याऽलमङ्गज वसन्त सुराङ्गना वो
मन्मानसं त्विह जुषध्वमिति ब्रुवाण: ।
त्वं विस्मयेन परित: स्तुवतामथैषां
प्रादर्शय: स्वपरिचारककातराक्षी: ॥६॥

bhītyālamaṅgaja vasanta surāṅganā vō
manmānasantviha juṣudhvamiti bruvāṇaḥ |
tvaṁ vismayēna paritaḥ stuvatāmathaiṣāṁ
prādarśayaḥ svaparicārakakātarākṣīḥ || 16-6 ||

பீ⁴த்யாலமங்க³ஜ வஸந்த ஸுராங்க³னா வோ
மன்மானஸந்த்விஹ ஜுஷுத்⁴வமிதி ப்³ருவாண꞉ |
த்வம் விஸ்மயேன பரித꞉ ஸ்துவதாமதை²ஷாம்
ப்ராத³ர்ஶய꞉ ஸ்வபரிசாரககாதராக்ஷீ꞉ || 16-6 ||

' ஹே , மன்மதா, வசந்தமே , தேவலோக  அழகிகளே ,  துளியும்  என்னைப் பார்த்து  நீங்கள்  யாரும்  பயம் கொள்ள வேண்டாம்.  நான் சிவன் போல் உங்களை  எரிக்கப்  போவதில்லை.   இங்க்கே என்னைத்  தேடி இந்த ஆஸ்ரமத்துக்கு  வந்த உங்களுக்  கெல்லாம்  பரிசு தந்து அனுப்பப் போகிறேன் ''என்றாய் . 

குருவாயூரப்பா, உனது சங்கல்பத்தால்  உன்னைத் சுற்றி   அந்த  அரம்பையர்களை விட  அதி ரூப  அழகிகளை  திவ்ய சுந்தர ரூபவதிக;ளை  வரவழைத்து  உனக்குப்  பணிவிடை செய்யும் அதிசயத் தோற்றத்தை அவர்களுக்கு காட்டினாய்.  உன்னைப் போற்றிப்  பாடி அவர்கள் வணங்குவதை எல்லோரும் பார்த்தார்கள். 

सम्मोहनाय मिलिता मदनादयस्ते
त्वद्दासिकापरिमलै: किल मोहमापु: ।
दत्तां त्वया च जगृहुस्त्रपयैव सर्व-
स्वर्वासिगर्वशमनीं पुनरुर्वशीं ताम् ॥७॥

sammōhanāya militā madanādayastē
tvaddāsikāparimalaiḥ kila mōhamāpuḥ |
dattāṁ tvayā ca jagr̥hustrapayaiva sarva-
svarvāsigarvaśamanīṁ punarurvaśīṁ tām || 16-7 ||

ஸம்மோஹனாய மிலிதா மத³னாத³யஸ்தே
த்வத்³தா³ஸிகாபரிமலை꞉ கில மோஹமாபு꞉ |
த³த்தாம் த்வயா ச ஜக்³ருஹுஸ்த்ரபயைவ ஸர்வ-
ஸ்வர்வாஸிக³ர்வஶமனீம் புனருர்வஶீம் தாம் || 16-7 ||

உன்னை மயக்க வந்த மன்மதன்,ரதி, மற்றும் அநேக தேவலோக அரம்பையர்கள் அந்த ரூபவதிகளின் அழகில்  அதிசயித்து,  பத்திரிகாஸ்ரம ரம்யத்தில்,  அங்கு வீசிய இனிய  ஹிமயமலைத் தென்றலில் கலந்த சுகந்த மணத்தில் தங்களை  இழந்து மதி மயங்கி தவித்தார்கள்.  உனக்குச் சேவை செய்த  அந்த அழகிய  நாரீமணிகளில் மிகவும் அழகானவளான  ஊர்வசி என்பவளை நரநாராயணனான   நீ  இந்திரனுக்கு பரிசாக அளித்து அவனை திருப்பி அனுப்பினாய்.  ஏமாற்றத்தாலும் வெட்கத்தாலும் தலை குனிந்த  மன்மதன்   தனது தவறுக்கு வருந்தினான்.  அவ்வாறே  இந்திரனும்.

दृष्ट्वोर्वशीं तव कथां च निशम्य शक्र:
पर्याकुलोऽजनि भवन्महिमावमर्शात् ।
एवं प्रशान्तरमणीयतरावतारा-
त्त्वत्तोऽधिको वरद कृष्णतनुस्त्वमेव ॥८॥

dr̥ṣṭvōrvaśīṁ tava kathāṁ ca niśamya śakraḥ
paryākulō:’jani bhavanmahimāvamarśāt |
ēvaṁ praśāntaramaṇīyatarāvatārā-
ttvattō:’dhikō varada kr̥ṣṇatanustvamēva || 16-8 ||

த்³ருஷ்ட்வோர்வஶீம் தவ கதா²ம் ச நிஶம்ய ஶக்ர꞉
பர்யாகுலோ(அ)ஜனி ப⁴வன்மஹிமாவமர்ஶாத் |
ஏவம் ப்ரஶாந்தரமணீயதராவதாரா-
த்த்வத்தோ(அ)தி⁴கோ வரத³ க்ருஷ்ணதனுஸ்த்வமேவ || 16-8 ||

உண்ணி  கிருஷ்ணா,  இந்திரன்  ஊர்வசியின் அழகில் திகைத்தான்.  உனது  தவவலிமை, மஹிமை புரிந்தது.  உள்ளூர ஒரு பயமும் வந்துவிட்டது.  தனது உத்யோகம் பறிபோய்விடுமோ வென்று  நடுங்கினான்.  

வரம் தரும் வள்ளலே,  உன்னுடைய  இந்த நர நாராயணன் அவதாரம்  மிகவும் அமைதியாகவும்  அழகாகவும்  இருந்தாலும், எல்லாவற்றிலும் மனதை கொள்ளை கொள்வது  உன் கிருஷ்ண  அவதாரம் தான் அப்பா.  என்ன கருணை என்ன அழகு,என்ன இனிமை, சௌலப்யம். அன்பு.  நிச்சயம்  இது பூர்ணாவதாரம் தான். 

दक्षस्तु धातुरतिलालनया रजोऽन्धो
नात्यादृतस्त्वयि च कष्टमशान्तिरासीत् ।
येन व्यरुन्ध स भवत्तनुमेव शर्वं
यज्ञे च वैरपिशुने स्वसुतां व्यमानीत् ॥९॥

dakṣastu dhāturatilālanayā rajō:’ndhō
nātyādr̥tastvayi ca kaṣṭamaśāntirāsīt |
yēna vyarundha sa bhavattanumēva śarvaṁ
yajñē ca vairapiśunē svasutāṁ vyamānīt || 16-9 ||

த³க்ஷஸ்து தா⁴துரதிலாலனயா ரஜோ(அ)ந்தோ⁴
நாத்யாத்³ருதஸ்த்வயி ச கஷ்டமஶாந்திராஸீத் |
யேன வ்யருந்த⁴ ஸ ப⁴வத்தனுமேவ ஶர்வம்
யஜ்ஞே ச வைரபிஶுனே ஸ்வஸுதாம் வ்யமானீத் || 16-9 ||

தக்ஷன்  தனது தந்தை ப்ரம்மா  தனக்கு கொடுத்த  அந்தஸ்து,  பெருமையில் தலை கொழுத்துப் போனான்.  அவனுக்கு ஆணவம் கண்ணை மறைத்தது. காரணம் அவனுள்ளே இருந்த  ரஜோகுணத்தின் ஈர்ப்பு .  அகங்காரத்தின் உச்ச நிலை.  நாராயணா, நீ யார் என்று அறியும் சக்தியைக்கூட  அவன் அறியா வண்ணம் அவன் ஆணவம்  அவனை ஆக்கிரமித்தது.  உன் மேல் மரியாதை  குறைந்தது , மறைந்தது.  தனது  மருமகனான  பரமேஸ்வரனைக் கூட  துச்சமாக  எண்ண  ஆரம்பித்து விட்டான்.  இழிவு படுத்தினான்.  சிவன் யார், நீ தானே.!   ஹரிஹரன் அல்லவா நீ?  தக்ஷன்  அதிக சக்தி பெற யாகம் வளர்த்தான். அதில் பங்கேற்க அனைத்து தேவர்களையும் தேவதைகளையும்  அழைத்தான். தனது மகள்  ஸதியின் கணவன்  பரமேஸ்வரனை அழைக்கவில்லை.  அவன்  பெற்ற மகளையே அவமானப் படுத்தினான்.   சிவனை உதாசீனப் படுத்தினான்.

क्रुद्धेशमर्दितमख: स तु कृत्तशीर्षो
देवप्रसादितहरादथ लब्धजीव: ।
त्वत्पूरितक्रतुवर: पुनराप शान्तिं
स त्वं प्रशान्तिकर पाहि मरुत्पुरेश ॥१०॥

kruddhē śamarditamakhaḥ sa tu kr̥ttaśīrṣō
dēvaprasāditaharādatha labdhajīvaḥ |
tvatpūritakratuvaraḥ punarāpa śāntiṁ
sa tvaṁ praśāntikara pāhi marutpurēśa || 16-10 ||

க்ருத்³தே⁴ ஶமர்தி³தமக²꞉ ஸ து க்ருத்தஶீர்ஷோ
தே³வப்ரஸாதி³தஹராத³த² லப்³த⁴ஜீவ꞉ |
த்வத்பூரிதக்ரதுவர꞉ புனராப ஶாந்திம்
ஸ த்வம் ப்ரஶாந்திகர பாஹி மருத்புரேஶ || 16-10 ||

ஸதியின்  நிலைமையை உணர்ந்த  பரம சிவன்  தக்ஷனின் யாகத்திற்கு சென்று  அதை அழித்து, அவன் சிரத்தையும் கொய்தார்.  தேவர்கள்  வேண்டியதால் , அவனை மன்னித்து   மீண்டும்  உயிர்ப்பிச்சை அளித்தார். யாகத்தை முடிக்க அருளினார்.  தக்ஷன் திருந்தினான் , அவன் ஆணவம் அவனை விட்டு  அகன்றது. தான்  சிவன்  சொல்லியும் கேளாமல் தந்தை அழைக்காமலேயே  தக்ஷன் யாகத்துக்கு சென்று அவமதிக்கப்பட்ட  ஸதி, அந்த   யாகத்திலேயே உயிர் நீத்தாள்.  கொடுங்கோபத்தோடு ஸதியின்  உயிரற்ற கருகிய உடலை தூக்கிக்கொண்டு  சிவன்  ஆடிய  ருத்ர தாண்டவத்தை போது  அவள் உடல்  51 துண்டுகளாக  பூமியில் விழுந்த இடங்கள் தான் 51 சக்தி பீடங்கள். (இதைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்)

 எண்டே குருவாயூரப்பா, எல்லோருக்கும்  அமைதியும் ஆனந்தமும் தரும்  தெய்வமே,  உன் கருணையை என் மீதும் காட்டப்பா. என் நோய்களை நீக்கி என்னை ரக்ஷித்தருளவேண்டுமப்பா.

இவ்வாறு  ஸ்ரீமந்  நாராயணீயம்  16வது தசகம் நிறைவு பெறுகிறது. 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...