கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN -- தாகூர்
76. உன்னெதிரே நிற்கட்டுமா?
(76) Day after day, O lord of my life, shall I stand before thee face to face?
With folded hands, O lord of all worlds, shall I stand before thee face to face?
Under thy great sky in solitude and silence,
with humble heart shall I stand before thee face to face?
In this laborious world of thine, tumultuous with toil and with struggle,
among hurrying crowds shall I stand before thee face to face?
And when my work shall be done in this world,
O King of kings, alone and speechless shall I stand before thee face to face?
கிருஷ்ணா, என் உயிரே, நான் நாள்தோறும் உன்னைப் பார்த்துக் கொண்டே உன் எதிரில் கைகட்டி நிற்கட்டுமா? அப்படி ஒரு ஆசை உள்ளே வேகம் எடுக்கிறதே.

உன்னைப்பற்றி நினைத்தாலே என் கைகள் தானாகவே கூப்பி உன்னை வணங்குகிறது.
நீ ஆகாசம் பூமி எல்லாம் கடந்தவன். உன் கீழே காலடியில் தான் வானமே எல்லையாக நிற்கிறது.
உன் காலடியில் , அமைதியாக, பணிவான ஹ்ருதயத்தோடு உன் முன்னால் நான் நிற்கட்டுமா ?
இந்த உலகம் என்று அமைதியாகி இருந்தது? எப்போதும் ஓயாத ஒழியாத எதையோ தேடிக்கொண்டே இருக்க வைக்கும் இந்த மாய பிரபஞ்சத்தில், ஆர்ப்பாட்ட அல்லல் துயரங்களின் சப்தத்தில், உன்னை மட்டும் நினைவில் கொண்டவனாக, அமைதியாக உன் முன் நிற்கட்டுமா?
நான் செய்யவேண்டியன என்று எனக்கு சில நிபந்தனைகள், அந்த வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு, உன் முகத்தைப் பார்த்த்துக் கொண்டே நிற்கட்டுமா கிருஷ்ணா.
தேவாதி தேவா, பிரபஞ்ச நாயகா, எனக்கு பேச்சும் வரவில்லை, எவரையும் தேடவுமில்லை. தனியனாக ஆனந்தமாக உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கட்டுமா?
தொடரும்
No comments:
Post a Comment