Tuesday, June 22, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி  -    நங்கநல்லூர்   J K  SIVAN
தாகூர்  


72   நீயின்றி நானில்லை  கண்ணா.

(72)   He it is, the innermost one, who awakens my being with his deep hidden touches.
He it is who puts his enchantment upon these eyes
and joyfully plays on the chords of my heart in varied cadence of pleasure and pain.
He it is who weaves the web of this maya in evanescent hues of gold and silver,
blue and green, and lets peep out through the folds his feet, at whose touch I forget myself.
Days come and ages pass, and it is ever he who moves my heart in many a name,
in many a guise, in many a rapture of joy and of sorrow.

கண்ணா  உன்னை நான்  நேரில்  இன்னும்  காணவில்லை.   உணர்ந்திருக்கிறேன். ஒரு முறை அல்ல பல முறை.  என் நெஞ்சின் அடித்தளத்தில் நீ இருப்பது தெரிந்தவன்.  என்னை தொட்டு  எழுப்புபவன்.  நான் விழித்திருக்கும் போது என்னை  இயக்குபவன்.


உன்னை  சிலையாய் கோவிலில் பார்க்கிறேன், படமாய் எங்கும் பார்க்கிறேன்,  உன்னை நீயாக  கற்பனையில் என் மனதில் பார்க்கிறேன்..  எப்போதெல்லாம்  எனக்கு  ஒரு போதை உண்டாகிறதே.. இந்த கண்களில்   ஆனந்தம்  படர்கிறதே. என் இதயத்தை ஒரு  வீணையாய் மீட்கிறாயே, ஆரோகணம் அவரோகணம் சஞ்சாரம் செய்யும் உன் இசை என்னை  என் இன்பத்திலும் துன்பத்திலும்  மறக்கச் செயகிறதே.   நீதான்  எனக்கு   ''துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து......  இன்பம்''    சேர்க்கிறவனா?  நான்  அனுபவிக்கும் இன்பத்துக்கு கலர்  உண்டா?   நீ  வலை பின்னி  அதில் பொன்னிறம், வெள்ளியின் ஒளி,  பச்சை, நீளம், சிகப்பு ஊதா என்று வானவில்லின்  வர்ணங்களை  தீட்டி  மயக்குபவனா..அவ்வண்ணங்கள் திரை இட்டபோது அதில்  இண்டு  இடுக்கில் நுழைந்து பார்த்தால் உன் தாமரைத் திருவடி தரிசனம் தருபவனா?

நின்னைத் தீண்டும் சுகத்தில்  எனக்கு  காலம் மறந்து போகிறதடா? இரவு பகல் நாள், மாதம், வருஷம். யுகம்..... 
எல்லாம்  மறந்து போகிறது கண்ணா. என் நினைவு ஒன்றே ஒன்று தான்.  பல்வேறு பெயர்களில்  உருவங்களில் என்னை நெருங்கியுள்ள  கண்ணன், கிருஷ்ணன், துக்கம் சுகமாக மாறுகிறது உன் நினைவில்.  நான் எங்கே இருக்கிறேன். இந்த பேரின்பம் உன் பெயர் தந்த சுகம்.  சஹஸ்ரநாமா, லக்ஷ நாமா, கோடி நாமா, என் ஒரே நாமா,கிருஷ்ணா..





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...