Saturday, June 26, 2021

VARAHA MIHIRAR

 

வராஹமிஹிரர்  - நங்கநல்லூர்    J K  SIVAN  --

ஒரு  நம்பகமான ஜோசியர்  
நாம் மறந்து போன ஒரு  உன்னதமான மனிதனின் பெயர்  வராஹமிஹிரன் . 2600 வருஷங்களுக்கு முன்பு இருந்த ஒரு மிகப் பெரிய  பல்கலை அறிஞன். ஜோதிடக்கலையில்  இணையற்றவன்.   வான சாஸ்திர  வல்லுனன்.    சாஸ்திரங்களில் நிபுணன்.  யினில் அவந்தியில்  பிறந்தவன். இப்போது மால்வா.  அப்பா பெயர்  ஆதித்ய தாசன்.     அவர் வைத்த  பெயர்  மிஹிரன்.  அப்பா  சூர்ய  வழிபாட்டில் சிறந்த பக்தன்.  அவர் தான்   மிஹ்ரனின்  ஜோசிய குரு.  விக்ரமாதித்யன்  அரசவையில் ஒன்பது அற்புத  கலைஞர்களை  நியமித்து  நவரத்னங்களாக அறிவித்து  போற்றி  மகிழ்ந்தான்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் தலை சிறந்த நிபுணர்கள்.  வராஹமிஹிரன்  அதில் ஒருவன்.

வராஹ மித்ரன் எழுதியது தான்  பிருஹத் ஸம்ஹிதை , கோவிலாக,  கட்டிட கலை , சில்ப சாஸ்திரம் , கோள்களின் அசைவு,  நக்ஷத்ர மண்டலம்,  கிரஹணங்கள், நேரம் பார்ப்பது,  வானசாஸ்திரம், ஜோசியம்,  பருவ காலங்கள்,  மேக  கூட்டம், மழை,  விவசாயம், கணக்கு,  வாசனை திரவியங்கள் செய்வது போன்ற பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பவன். பாரசீக  யாத்ரீகன்  சமஸ்க்ரிதம் அறிந்த பண்டிதன்,  அல்  பிரூனிக்கு  வராஹ மிஹிரானின் பிருஹத் சம்ஹிதை தெரிந்திருக்கிறது. புகழ்ந்து அதைப் பற்றி  சொல்கிறான். வரஹானுக்கு  கிரேக்க பாஷை கூட தெரியும்.  மிஹிரனின்  இன்னொரு பிரபல நூல்   பஞ்சசித்தாந்திகா , இந்திய  சிறந்த நூல்களை பற்றி அதில் சொல்கிறான். கணக்கில் புலி. அவனது  பிருஹத்ஜாதகா  வேத கால  ஜோஸ்ய புத்தகம். ஹோரைகளை பற்றிய விவரங்கள் ஜாஸ்தி. கேரளா ஜோசியர்கள்  இதை பின்பற்றுகிறவர்கள். லீலாவதி எனும் கணிதநிபுணி   மிஹிரனின்   மருமகள் என்று சொல்கிறார்கள்.

வராஹமிஹிரர் என்ற பெயர்  எப்படி வந்தது தெரியுமா? 
உஜ்ஜயினி ராஜாவுக்கு  ஆண் குழந்தை  பிறந்து ராஜா   மிஹிரரை  அழைத்து ஜாதகம் கணிக்க சொன்னான்.  எப்படி இருக்கிறது என் மகன் ஜாதகம். பலன் சொல்லுங்கள் என்று ராஜா அனைவர் முன்னிலையில் அரசவையில்   மிஹிரரை கேட்கிறான். 
“மஹாராஜா  என்னை தப்பாக நினைக்கக்கூடாது.  என்மேல் கோபம் வேண்டாம். நான் உண்மையாக  ஜாதகத்தில் அறிந்ததை  சொல்லட்டுமா? 
''பயம் வேண்டாம்  சொல்லுங்கள்''
''அரசே, இந்த ஜாதகனுக்கு  அல்பாயுசு தான். 18ம் வயதில்  இவனுக்கு  ஒரு  பன்றியால் மரணம் என்று ஜாதகம் துல்லியமாக சொல்கிறது.  ''மாற்றுங்கள்  அதை''
''இல்லை மஹாராஜா,  அதை யாராலும் தடுக்க முடியாது.  ராஜகுமாரன்  என்று எத்தனை மணிக்கு  பன்றியால் மரணம் அடையப்போகும் விவரங்களை புட்டு புட்டு வைத்தான் மிஹிரன் ''
அதிர்ச்சி அடைந்த ராஜா  80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டி ,   ஆயிரக்கணக் கான காவல் வீரர்களை  நியமித்தான்.  கண்ணில் பட்ட பன்றிகளை கொல்லச்  செய்தான்.
ராஜகுமாரனுக்கு 18 வயது.  அந்த குறிப்பிட்ட  நாள்  வந்தது.  ராஜா மிஹிரனை அழைத்தான்.  '
“பார்த்தீர்களா  நான் செய்த பலத்த பாதுகாப்பை,  என் மகன் இன்று சாகப்போவதில்லை, உங்கள் ஜோசியம் பொய்க்கப்போகிறது. என் மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது இல்லையா?''
“அரசே! மறுபடியும்  அவன் ஜாதகத்தை பார்த்து விட்டு சொல்கிறேன்.  விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “  என்றான் மிஹிரன்.
பலத்த காவல்.   மாலை வந்தது.  ராஜகுமாரன் தனது அறையில்  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக் கிறான் என்ற சேதி வந்தது.   
''மிஹிரரே   உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான்  ராஜா.''மிஹிரரோ துக்கத்துடன்   அவன் ஜாதகப்படி  ராஜகுமாரன் இறந்து போய் சில மணிநேரங்கள் ஆகிவிட்டது '' என்கிறார் . 


அனைவரும் பரபரப்புடன் அரண்மனைக்கு ஓடினார்கள். அரண்மனையின் ஏழாவது மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்தான்.  அந்த சமயத்தில்  ராஜகுமாரன்  மேல் மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில்    ராஜாங்க  இலச்சினையான,   ராஜ்ய சின்னம்,  முத்திரை, logo , அடையாளமான     கனமான  தாமிரத்தில் செய்த   பெரிய  பன்றி  பொம்மை ஒன்று  கொடிக்கம்பத்தில்  உச்சியில்  இருந்தது பலத்த  காற்று வீசவே அது ஆடி  கீழே விழ  அந்த நேரம்  ராஜகுமாரன்  கீழே நிற்க  அவன் மார்பில் அந்த பன்றி பொம்மை விழுந்து அதன் கூரிய  கோரைப்பல்  அவன் மார்பைக் குத்தி பிள ந்திருக்கிறது.  வராஹத்தின் மூலம் மரணம் வருவதை 18 வருஷங்கள் முன்பே கணித்ததால்  அன்றுமுதல் மிஹிரர்  வராஹ மிஹிரர்  என்று பெயர் படைத்தார் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...