Wednesday, June 30, 2021

MAHABARATHAM WAR


 பாரதப்போர்  விஷயம்  --   நங்கநல்லூர் J K  SIVAN 



உலகப்பிரசித்தி   பெற்ற மஹா பாரத 18 நாள் யுத்தம் நடந்து எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டது தெரியுமா? கிட்டத்தட்ட  5200 வருஷங்கள் முன்பு.   இன்னும்  ஞாபகத்தில் இருக்கிறதே. கௌரவர்கள் அத்தனைபேரும் மாண்ட பின் பாண்டவரால் 36 வருஷம் 8 மாதம் ஹஸ்தினா புரத்தை ஆண்டார்கள்.  துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்தது.   ஆர்ய பட்டர் போன்ற  கணக்கு புலிகள்  நிறைய  யோசித்து கண்டுபிடித்த  உண்மை இது.  
கோசல நாட்டு  சூர்ய வம்சம் சுமித்ராவுடன் முடிந்தது .   ஹஸ்தினாபுரத்தில்  சந்திர வம்சம்  சேமக்  என்பவனுடன் முடிந்தது.  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக முளைத்தது தான்  மகத நாட்டு  குப்த வம்சம். 2100 வருஷங்களுக்கு முன்பு.  இப்போதுள்ள டில்லி, என்கிற இந்திரப்பிரஸ்தம் தான் ஹஸ்தினாபுரம்.  யுதிஷ்டிரன் என்கிற தர்ம ராஜா முதல்   விக்ரமாதித்யன்   வரை சந்திர வம்ச ராஜாக்களை  அவர்கள் காலத்தோடு  கண்டுபிடித்து  லிஸ்ட் போட்டிருக்கிறார்கள்.

இதை வெளியிட்டது  ராஜஸ்தானை சேர்ந்த  ஹரிச்சந்திர  சந்திரிகா,    மோஹன் சந்திரிகா பத்ரிகைகள். 1872ம் வருஷம்.  ஒவ்வொரு ராஜாவும் எத்தனை வருஷம், மாதம், நாள்  ஆண்டான் என்று தெரிந்ததால்  யுதிஷ்டிரன் முதல்  விக்ரமாதித்யன் வரை  நான்கு வம்சத்தை   70   ராஜாக்கள் ஆண்ட மொத்த  காலம் எவ்வளவு தெரியுமா  3148 வருஷம். 2011 வருஷங்கள் முன்பு வரை. 

விக்ரமாதித்யன்  93 வருஷங்கள் ராஜாவாக   ஹஸ்தினாபுரத்தை  ஆண்டான்.   பாவிஷ்ய புராணம், ராஜ தரங்கிணி போன்ற நூல்கள்  இந்த விஷயத்தை சொல்லும்போது  தோராயமாக இந்த கால அளவு சரி என்று தான் தெரிகிறது.

விஸ்வ பஞ்சாங்கம் , 1925ல் மூன்று  வித  வருஷங் களை,  கால  அளவுகளை  குறிப்பிடு கிறது. கலியுக வருஷம், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம்..T1999ம் வருஷம்   5100 வருஷம்  ஆகிவிட்டது கலி பிறந்து.  அதாவது விக்கிரம வருஷம் 2056ல் என்கிறது.

1500 வருஷங்களுக்கு முன்பே  ஆரியபட்டர்   “ இந்த மூன்று  யுகங்களும்   அதாவது, சத்யயுகம், திரேதாயுகம்,  த்வாபர யுகம் மூன்று முடிந்து  கலியுகம்  பிறந்து 3600 வருஷங்கள் ஆகியபோது எனக்கு 23 வயஸு  என்கிறார் ''


துவாபர யுக கடைசியில் கிருஷ்ணன்  வைகுண் டம் ஏகினார்.   கிருஷ்ணன் பூமியை விட்டு மறைந்த போது , பிரளயம் வந்திருக்கிறது.  7 நாட்கள்  அது தொடர்ந்தது.   துவாரகா முழுதும் கடலில் மூழ்கியது.    அப்போது தான்  பாபிலோனியாவில்  ஊர் என்கிற  நகரத்தில்   பிரளயத்தில் நோவாவின் படகு மட்டும் மிதந்தது என்று தெரிகிறது.   பழைய  மாயன்  MAYAN  கால  குறிப்புகளும்  இதை ஆமாம்  அப்படித்தான்   என்கிறது. 

இதெல்லாம் கணக்கில் வைத்து பார்த்து மஹா பாரதப் போர்  நடந்த விஷயங்களைப்  பற்றி ஆராய்ச்சியாளர்கள், சரித்திர நிபுணர்கள்,  என்ன தகவல் சொல்கிறார்கள் தெரியுமா?

 1.  மஹாபாரதம்  யுத்தம்  உத்தராயணம்  மக நக்ஷத்ரத்தில் சுக்ல பக்ஷத்தில்  பஞ்சமி  திதி  அன்று  தொடங்கியது.

2. பாரத  யுத்தத்தின்   10ம்  நாள்   பீஷ்மர்  தலைமையில்   கவுரவ  சேனையில்  யுத்தம்  நடந்தபோது  உத்தராயணம் துவங்க  58  நாள்  இருந்தது.

3. பீஷ்மர்  யுத்தத்தில் வீழ்ந்து  அம்புப் படுக்கையில்  இருந்து  கடைசியில்  உத்தராயணத்தில்  உயிர் விடும்போது  மக நக்ஷத்ரம்  சுக்ல பக்ஷம்  ஏகாதசி நாள்.  அதாவது  யுத்தம்  எல்லாம்  முடிந்த  56வது  நாள்.

4. யுத்த முடிவுக்கும்   உத்தராயண  புண்ய காலத்துக்கும்   இடையே  50  நாள்   இருந்தது.

5.  பாரத  யுத்தம்  18 நாள்  இடைவிடாது  நடந்தது.

6. பாரத யுத்தம்  ஆரம்பித்த  பிறகு   அமாவாசை  வந்தது.  அது  அது  ஜேஷ்ட (கேட்டை)  நக்ஷத்ரத் தில்  அமைந்தது.

7  பாண்டவ  சைன்யம்  உபப்லாய  வனத்திலி ருந்தும் , கவுரவ  சேனை  ஹஸ்தினாபுரத் திலி ருந்தும் குருக்ஷேத்ர  யுத்த களத்தை நோக்கி   பூச நக்ஷத்ரத்தன்று நடந்தது.

8. ஸ்ரீ  கிருஷ்ணன் அதற்கு  முன்பு  கார்த்திகை  மாதம்  ரேவதி நக்ஷத்ரத்தன்று ஹஸ்தினாபுரத் துக்கு  சமாதான  தூது  சென்றான்.

மேற்கூறி யதெல்லாம்  கூட்டிக்  கழித்துப் பார்த் தால்  மஹா பாரத  யுத்தம்  18 நாள்  நடந்து உத்தராயணம்  துவங்கிய  51ம்  நாள்  ராத்திரி முடிந்தது  என்று  வரும்.

நாம்  இப்போது பின்பற்றி வரும் கேலண்டர், நாள்கணக்கு (ரஷ்யா, கிரீஸ்,  துருக்கி  தவிர) மற்ற  நாடுகளில்  நடைமுறையில்  உள்ளதல்லவா.  அது  கடந்த  3524 வருஷங்களில் ஏறக்குறைய  ஒரு நாள் குறைவாக  கணக்கிடப்பட்டுள்ளதாம்.  

பாரத யுத்தம்  கி மு  1194ல் (அதாவது   3094  வரு ஷங்களுக்கு  முன்பு) அல்லது  நமது  நாள்காட்டி (கேலண்டர்) யை போப்பாண்டவர்  திருத்தம்  செய்ததற்கு  2776 வருஷங்களுக்குமுன்னால்  நடந்ததாக  தோன்றுகிறது.

மண்டையை  உடைத்துக்கொண்டு இத்தனை  கணக்கை  போட்டிருக்கிறார்கள். இதனால்  தெரிவது  என்னவென்றால் உத்தராயணம்  இதன்  பிரகாரம்  21 டிசம்பரில்  மகா பாரதம்  முடிந்த 51ம்  நாள்  வந்தது. எனவே   மஹா  பாரத  யுத்தம்  கி  மு   1194  அக்டோபர்  ஆரம்பித்து  31 அக்டோபர்  முடிந்தது.

இந்த  கணக்கை  போட்டவர்கள்  ஆதாரமாக  எடுத்துக்கொண்டது கம்புயூட்டர்,  கால்குலேட்டர் எதுவும் இல்லாமல், வெறும்  பஞ்சாங்கம்,  மகாபாரத ஸ்லோகங்களை படித்துக் கொண்டு சுற்றிலும் பழைய  ஓலைச்சுவடிகளைப்   பரப்பி வைத்துக்  கொண்டு  நடுவில் அமர்ந்து,  எண் ணெய்  தீப வெளிச்சத்தில்  படித்து  சொன்ன வை.  கண்டுபிடித்தவை.

நேரத்தை  நல்ல படியாக  செலவழிக்க நல்லவேளை அப்போது  டிவி, வாட்ஸாப்ப், FACEBOOK  மொபைல் போன் இல்லை. 

மகாபாரதத்தில்  வரும் ஸ்லோகங்களையே   என்று  தெரிந்து கொள்ளும்போது அவர்களது  முயற்சிக்கு  மனமார்ந்த நமஸ்காரம் ஒன்றே  நம்மால் செய்ய முடிந்தது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...