Monday, June 7, 2021

SURDAS


 


ஸுர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

 48.  கூந்தல் ரஹஸ்யம் !

எனக்கு தெரிந்து கூந்தல் வளர  அந்த காலத்தில் கேசவர்தினி என்று ஒரு கண்ணாடி சீசாவில் வரும் தைலத்தை தலையில் தேய்த்துக் கொள்வார்கள். எங்கம்மா காலத்தில் அதெல்லாம் கிடையாது, வெறும் தேங்காய் எண்ணெய்  தான். புசுபுசுவென்று முழங்கால் வரை கூந்தல், எடுத்து பிரித்து,  காற்றில் வீசி,  அலசி, வீசி, முடிந்து கொள்வாள். பின்னல் போட்டுக்கொள்ள ரொம்ப நேரமாகுமே .

கிருஷ்ணனுக்கு கவலை. எனக்கு மட்டும் ஏன் அண்ணா பலராமன் போல்  கூந்தல் நீளமாக வளரவில்லை, அவன் தலையைப் பார்த்தால், கருகருவென்று, முடி, கனமாக, நீளமாக, சுருண்டு, தரையில் பிரளும்  போல் நிறைய  இருக்கிறது. எனக்கு  மட்டும்  பின் கழுத்தை தாண்டவே யில்லையே.  இது என் தவறல்ல, அம்மாவுடையது? எங்கே அவள்? விடக்கூடாது அவளை.

அம்மா?  எப்போ அம்மா எனக்கும் அண்ணாவைப் போல் நீளமாக கூந்தல் வளரும்?  சொல். ஓடாதே உன்னை விடமாட்டேன். சொல்லிவிட்டு நகரு. நீ தானே  நான் பாலை குடித்தால் தலைமுடி வளரும் என்று சொன்னாய்.  நீ சொன்னபடி நானும்  பால் வெண்ணை, எல்லாம் வீணாக்காமல் குடிக்கி றேன். ஏன் இன்னும் வளரவில்லை? 

அடேய்,  கிருஷ்ணா, நீ குழந்தையடா, அவன் பெரியவன், என்று சொன்னால் கிருஷ்ணனுக்கு புரியுமா? எப்படி சொன்னால் அவனுக்கு புரியும் என்று யசோதை கொஞ்சம் யோசிக்கிறாள்? 
கீதை சொன்ன கிருஷ்ணனுக்கு புரிய வைப்பது எப்படி?  யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ளேன்?   

ஸூர்தாஸ்  அந்த அபூர்வ சகோதரர்கள் இருவரையும், ஹரியையும் , ஹலதாரியையும், வாழ்த்தி வணங்குகிறார்  இந்த சிறிய  பாடலில். 

Krishna Questions His Hair Braid Not Growing

Mother, when will my hair-braid grow? milk you said will make it grow, butstill it remains so short. Mother when will my hair-braid grow you said likeBal it would be strong, his braid has grown fat and long, combing , braiding,bathing, drying, to the ground like a serpent writhing. for me you say milk isbetter. never delicious bread and butter, Sur, long live the two brothers, thetwosome of hari and haldhar.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...