Friday, May 29, 2020

RASANISHYANDHINI

ரஸ நிஷ்யந்தினி J K SIVAN

நீ அறிவாயோ?

66 एनं बहवः क्षत्रिया वीर्यवन्तो विविदिपन्ति इति त्वम् 'तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसा' इत्यहम् ।
ஏனம் பஹவ : க்ஷத்ரிய வீர்யவன்தோ விவிதிபந்தி இதி த்வம் தமேதம் வேதனுவசனேன ப்ராம்ஹணா விவிதிஷந்தி யக்னேன தானேன தமஸா இத்யஹம் .
எத்தனையோ ராஜாக்கள், க்ஷத்ரிய வீரர்கள் ராமனின் நட்பை தேடுகிறார்கள் என்கிறாயே தசரதா . க்ஷத்ரியர்கள் மட்டுமா ? எனக்கு தெரிந்து சாதுக்கள், ஞானிகள், ரிஷிகள், அவனை வேதங்களில் மட்டுமா, , தான தர்ம காரியங்களிலும் தேடுகிறார்கள், அறிகிறார்கள், காண்கிறார்கள். வேதம் சொல்வதை அறிந்து செய்தாலே அவன் தெரிவானே. இதை நான் அறிவேன். நீ அறியமாட்டாய் தசரதா .''

67. अयमिन्दीवरश्यामल इति त्वम् अयं 'हिरण्य श्मश्रुः हिरण्यकेशः आप्रणखात् सर्व एव सुवर्ण' इत्यहम् ।

அயமிந்திவர ஸ்யாமள இதித்வம் அயம் ஹிரண்ய ஸ்மஸ்ரு; ஹிரண்யகேசா: ஆப்ரண சுவாத் சர்வ ஏவ சுவர்ண இத்யஹம்

அதோ சில சிறுவர்கள் நிற்கிறார்களே அதில் கருநீலமாக, நீலமாக தெரிகிறானே அவன் தான் என் மகன் ராமன்'' என்கிறாயே தசரதா, ராமன் பொன்னிறத்தவன், ஸ்வர்ண மயமானவன் என்று உனக்கு தெரியுமா? நான் அறிவேன்.

68. अयं साधारणः पुण्डरीकविशाललोचन इति त्वम् अयं यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी इत्युक्तः पुण्डरीकाक्षः इत्यहम् ।

அயம் சாதாரண: புண்டரீகாவிசால லோச்சனா இதித்வம் : அயம் யதா கப்யாசம் பண்டரீகமேவ மாக்ஷிணி இத்யுக்த: புண்டரீகாக்ஷ இத்யஹம்

''அறியாத சிறு குழந்தை, பாலகன், அகன்ற தாமரை விழிகள் கொண்டவன்'' என்று ராமனை கொஞ்சுகிறாயே தசரதா , உன் மகன் ராமனைப் பற்றி வேதங்கள் சொல்வதை ஞாபகப்படுத்தட்டுமா? அவன் கண்களின் அழகை, நிறத்தை, நீள அகலத்தை' எதனுடனும் ஒப்புமை சொல்ல முடியாது.''

69. अयं साधारण इति त्वम्; अयं 'दिव्यो ह्यमूर्तः पुरुषस्स बाह्याभ्यन्तरो ह्यजः । अप्राणो ह्यमनाश्शुभ्रो ह्यक्षरात् परतः परः' इत्यहम् ।
அயம் சாதாரண இதித்வம்; அயம் திவ்யோ ஹ்யமூர்த்த : புருஷஸ்ய பாஹ்யாப்யந்தரோ ஹ்ருஜ : அப்ராணோ ஹ்யமானஸ் சுப்ரோ ஹ் யக்ஷராத் பரத: பாரா: இத்யஹம் .
சாதாரணமானவன் உன் மகன் என்று நீ நினைக்கிறாய். நிச்சயமாக அது இல்லை தசரதா , அவன் தெய்வீகன், அருவமானவன், உள்ளும் புறமும் தோன்றுபவன், இறப்பற்றவன். மாயையோடு சம்பந்த மில்லாதவன். நம்மைப் போல் ப்ராணன் மூச்சு விட அவசியமில்லாதவன். நம் ஞானம் அறிவுக்கு எல்லையுண்டு. அதை கடந்தவன் ராமன். தூயவன் , புனிதன் .

70. अयमस्मत्तो जात इति त्वम्, 'एतस्माज्जायते प्राणो मनस्सर्वेन्द्रियाणि च, खं वायुयोतिः आपः पृथिवी विश्वस्य धारिणी' इत्यहम् ।
அயமஸ்மந்தோ ஜாத இதித்வம் ;ஏதஸ்சமாஜ்வாயதே ப்ராணோ மன்ஸவேந்தரியாணி ச; ஸ்வம் வாயுயோதி; ஆப ; ப்ரித்வி, விஸ்வஸ்ய தாரிணி இத்யஹம் ;

யார் ராமன் என்று யாரோ கேட்டதற்கு, ''ராமன் எனக்கு பிறந்த என் மகன்'' என்று பெருமையோடு மார் தட்டி சொல்கி றாயே. அவனிடமிருந்து தான் பிராணன், மனது, ஐம்புலன்கள், ஆகாசம், வாயு, ஒளிவகையறா, நீர், பிரபஞ்சத்தையே தாங்கி நிலை நிறுத்தும் சக்தி, பூமி, எல்லாமே பிறந்தவை.
புரிகிறதா? என்று சொல்லி பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி விஸ்வாமித்ரரைப் போல் கணீரென்ற குரலில் சொல்லி பிரசங்கம் செய்தபோது எத்தனை பேர் தசரதர்களாக அந்தக்காலத்தில், கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மற்றும் எங்கெல்லாமோ, ஆனந்தமாக கேட்டிருப்பார்கள் என்று கற்பனை மனதில் ஓடுகிறது எனக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...