Monday, May 4, 2020

THINK



யோசிக்கலாமா  J K SIVAN

குப்புஸ்வாமி ஏதோ ஒரு நிறத்தில் சட்டை வேட்டி கட்டிக்கொண்டு   வாய் மூக்கு எல்லாம் மூடியவாறு எதிரே நின்றான்.  நல்ல நண்பன். அவனுக்கு என்ன ஆச்சு? வேலை  போச்சுன்னு  இப்படியா?  எல்லோருக்கும் தான் கஷ்டம். சிலருக்கு சம்பளமே இல்லை, வேலையே இல்லை. எங்கிருந்து பணம் கொட்டும்?  இப்போதைக்கு வியாதியால் சாகாமே, உயிரோடு இருக்க சோறு கிடைச்சா போதும். மீதி அப்புறம். அது தான்  சரியான யோசனை. சுவற்றை வச்சுத்தானே சித்திரம் எழுதணும். 
''குப்புசாமி என்னப்பா இது வேஷம்''  வழக்கமான வெள்ளை சட்டை  வேட்டி  என்னா ஆச்சு?''.

''இல்லீங்க. இது மாதிரி இருந்தா  தான் சரியான வழி ன்னு சொன்னாங்க.

அப்படின்னா? புரியும்படியா சொல்லுப்பா.

''ஐயா  எனக்கு சாமி இருக்கிறாரா இல்லையான்னு தெரியாது.  கண்ணுலே படலே . அம்புட்டு தான். இருந்தா ஒத்துக்கறேன், இல்லேன்னா இப்படி''

''இந்த டிரஸ் போட்டுக்குனு மலைக்கு கூட  விரதமிருந்து நடந்து போறவங்க  கடவுள் இல்லேன்னு காட்றதுக்கா அப்படி டிரஸ் பண்ராங்கன்னு நினைக்கிறே ?''

''எனக்கு சொல்லத் தெரியலே''

''நீ யோசிக்கலே.   உனக்காக எவனையோ யோசிக்க விட்டுடறே . அவன் தனக்கு தோணினதை உன்னுடைய தாக எடுத்துக்க சொல்லி  நீ   சரின்னுட்டே. அப்படி தானே?  . அது போகட்டும்  நான் உன்னை கேக்கற ஒரு கேள்விக்கு பதில் சொல்லு.''

''கேளுங்கய்யா''. 

''கடவுளை   விடுப்பா.  இருக்கிறாரா இல்லையானு  அப்பறமா பாக்கலாம்.   இப்போ நீ  இருக்கியா  இல்லியா?'' 

''இதோ கல்லு குண்டுமாதிரி எதிரே இருக்கிறேனே''

''நீ இல்லேன்னு வச்சுக்கோ.  நான் நாலு அரை கொடுத்தா, நீ இருக்கியா இல்லையான்னு உனக்கே தெரியும் இல்லையா?   நாம  இருக்கிறோம் என்றாலே  கடவுள் இருக்கிறாருன்னு  அர்த்தம். 
 சரி உனக்கு  எது வேண்டும் சொல்?  
மரணமா இல்லேன்னா  என்னிக்கும் சாஸ்வதமா இருக்கிற நிலையா?''

''எனக்கு  சாவும்  வேண்டாம், சாஸ்வதமும் வேண்டாம். அய்யய்யோ, இப்போ இருக்கிற நிலையிலே  நான் சாகாமே வேறே இருந்தேன்னா  ரொம்ப இந்த உலகத்திலே இருக்கிற கஷ்டத்தில், துன்பத்தில் மாட்டிக்கிட்டு   ரொம்ப எல்லையில்லாமல்  கஷ்டப்படவேணும் படாத பாடு படணும் .  எனக்கு   சாஸ்வதம் வேண்டாம். ஆனா  அதுக்காக சாகவும் வேண்டாம். யாராவது  சாவு வேணும்னு கேப்பாங்களா?

''இதோ பார்  குப்புசாமி, புரிஞ்சிக்காம  ரொம்ப படுத்தறே  நீ.   சாவு வேண்டாம்னா சாஸ்வதமா இருக்கணும்னு தானேயா  அர்த்தம்?  சாகாம  சாஸ்வதமா இருக்கிறது தான் கடவுள் என்கிறோம்.    இன்னா சொல்றே யோசித்து  சரியா சொல்லு. கஷ்டம் வேணுமா  ஆனந்தம் வேணுமா''

''ஐயா ஆளை விடுங்க.  எனக்கு  துன்பமும் வேண்டாம்  இன்பமும் வேண்டாம்''

''அப்போ உனக்கு என்ன வேண்டும்னு சொல்லேன்'?'

''இந்த ரெண்டுக்கும் மேலே  துன்பம்  இன்பம், அதாங்க   ஆனந்தத்துக்கு  இன்பத்துக்கும் மேலே ஏதாவது??

''அதுக்கு மேலே  எதுவுமே இல்லியேப்பா.  பரமானந்தம் தான் பா  டாப்''.

''ஆசை இல்லாம  இருக்கிறது ஆனந்தம்''  என்கிறார்களே  அது எப்படி ?

''அட வாய்யா வழிக்கு.  ஆசையே இல்லாம  இருக்கிறது தான்  பரமானந்தம்.அது தான் கடவுள்.  மனம் அமைதியா இருக்கிறது. ''அதுவா வேணும்?

''ஆமாங்க''

''அமைதி தான்  கடவுள்.  அது வேண்டும்னு தான்யா  ''ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி''  ன்னு கேட்கிறது.
அப்படின்னா கடவுள் இருக்கிறார்னு  புரியுதா? கண்லே பட்டாதான் நம்பறதுன்னா  கோரோனோ  எப்படி  பார்ப்பே சொல்லு.  விஞ்ஞானிங்க சொல்றாங்க, இப்படி நடன்னு வழி சொல்றாங்க. நம்பமாட்டேன்னு ரோட்டிலே ஓடுவியா. புடிச்சுண்டு வருவியா? அப்புறம் மருந்து இல்லாமே  எப்படி  என்னிக்கு வருவே  என்னை கேள்வி கேட்பே ?  
சில விஷயங்கள் கண்ணு, காது, கை ,மூக்குக்கு அப்பாலே கூட இருக்குதுன்னு மனசுலே பதியணும் . அதுக்கு தான் யோசிக்கறது. இப்போ நிறைய டைம்  இருக்குதே  யோசியேன் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...