Tuesday, May 19, 2020

LIFE STYLE



          கடல் கடந்து  பரவிய  இந்து ஸநாதன தர்மம்   -  J.K SIVAN

வெங்கி, வெங்கிட்டு, வெங்கடா, குள்ள கத்திரிக்கா, குண்டப்பா,  என்று பலரால் பாசமாகவும் நட்பாகவும் அழைக்கப்பட்ட வெங்கட்ராம ராவ் பல வருஷ நண்பர். என்னுடைய  ஏழாண்டு   மின்சார வாரிய பழையகால சக ஊழியர்.  கடைசி வ ரை பீஷ்மர் போல் உறுதியாக   எந்த உத்யோக உயர்வும் வேண்டாமல் குமாஸ்தாவாகவே  ரிட்டையர் ஆனவர்.


யாரோடும் ஒத்துப்போகாத குணம். எப்படியோ பிள்ளை பெண்கள் படித்து உத்யோகம் பெற்று அமேரிக்கா
போய், ராவும் வருஷத்துக்கு  ஒரு  நாலாறு மாத  காலம் அமெரிக்க வாசம் புரிந்து வருவார். ஐந்து ரூபாய்
கை மாற்றாக வாங்கிய காலத்தில் கொடுக்கமுடியாத காரணத்தால் தலை மறைவானவர். அவர் இப்போது
எப்படி மாறிவிட்டார்.

''சிவன்! இந்த இந்தியாவே மோசம். சாக்கடை. ஏன் இவனுங்க இப்படி இருக்கானுங்க. ரோடு பொது இடம் கால் வைக்க முடியலே, குப்பை, கண்ட கண்ட இடத்திலே துப்பறது. நேரம் காலம்  எதிலேயும்  ஒழுங்கு இல்லை. பொழுது போகாம வெட்டியா சுத்தறது. ஓசியிலே   பினாயில் குடுத்தாகூட ரெண்டு டம்பளர் வாங்கி கேட்டு குடிக்கிறானுங்க.  சே!  இவங்களை திருத்தவே முடியாது. ட்ரெயின், பஸ் நேரத்திலே வரது இல்லே, மெயின்டெனன்ஸ் சுத்தமா  இல்லை.  பழகத் தெரியாத வக்கணையாக  பேச மட்டும் தெரிஞ்ச  ஜனங்க.

ஏதோ பல காலம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து சுத்தத்தில் குளித்தவன் மாதிரி பேசற ராவ் எனக்கு வேடிக்கையாக தெரிந்தார். ரெண்டு தடவை பஸ்லே டிக்கெட் எடுக்காமல் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனிலே உக்கார்ந்து கெஞ்சி மன்னிப்பு கேட்டவர்.

அப்போதெல்லாம்  தப்பு தப்பா  இங்கிலிஷ் பேசணுமே என்று  வெட்கத்தில் தமிழிலே பேசுவார். இப்போ  நான் தமிழிலே பேசினா அவர் இங்கிலீஷ்லே அதே தப்போடு  தான் பேசறார். பேசவில்லை ஸார்.  இந்தியாவை, இந்தியர்களை திட்டுகிறார்.   தன்னை அமெரிக்கனாகக் கருதுகிறார்.  பூணல் சந்தியாவந்தனம் காயத்ரி எல்லாம் வேஸ்ட். பழங்கால குப்பை என்று  பெர்முடா போட்டுக்கொண்டு  பால் சட்டியில் தலையிட்ட கருப்பு பூனையைப்போல ஒரு வெள்ளை நிற   குட்டி   மீசை, தாடி வாயை சுற்றி.   வெங்கட்ராவா இப்படி ??  இல்லை நிறைய ராவ்கள் இப்படி கிளம்பி விட்டார்கள்.  

சிறிது கால  வெளிநாடு, அமெரிக்கா மயக்கத்தில் தனது முன்னோர், குடும்பம், பக்தி, பண்பாடு, தார்மீகம், நம்பிக்கை, எல்லாமே பறிகொடுக்க காத்திருப்பவர்கள்.  அருவருப்பானவர்கள். இவர்களால் நமது புராதன பண்பாட்டை அழிக்க முடியாது. விட்டில்கள் நெருப்பில் வீழ்ந்து தானே பொசுங்குமே தவிர தீபம் அவைகளால்  அணையாது. ரெண்டு முறை ராவ்  என்னை சந்தித்துப் பேச முயன்றபோது நான் இப்போது நேரமில்லை என்று அவரை விரட்டிவிட்டேன்.

பெரியவர்கள் அடுத்த தலைமுறைக்கு உதாரணமாக இருக்கவேண்டும். பெண்கள் ஸ்த்ரீ தர்மத்தை விட்டு விடக்கூடாது. அமெரிக்கா பிரவேசம், அங்கே குடிபுகுவது வயிற்று பிழைப்புக்காக என்பது அடிக்கடி நினைவில் இருக்கவேண்டும் இன்றைய நிலை வேறு.  அமெரிக்காவில் இருப்பவர்களே  இந்தியும் வாரபா முயல்கிறார்கள். இனி அமெரிக்க வேலை கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். 



 வறுமை விலக வளமான வாழ்க்கை முறையை பலி கொடுக்க கூடாது.  வயதான பெண்டிரும் ஆண்களும்  பிள்ளை பெண் பேரன் பேத்திகளுக்கு மற்ற குழந்தைகளுக்கு எல்லாம்  வெளியூர் செல்லும்போது எல்லாம் தினமும் நல்ல விஷயங்களை போதிக்க வேண்டும். நிறைய நமது புத்தகங்களை எடுத்துச் சென்று விளக்கவேண்டும். பரிசளிக்க வேண்டும். பெரியவர்கள் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிக்ஷம் சேரும். ஒரு சில அமெரிக்கா வாழ் இந்திய நண்பர்களை பற்றி சொல்கிறேன். அசந்து போவீர்கள். இங்கே இருப்பதை விட அங்கே பக்தி மேலிட்டு, சம்பிரதாயங்களை வழுவ விடாமல் வாழ்பவர்கள். பெருமைப்பட வைக்கும் இந்தியர்கள். இங்கிருந்தே  வீட்டுக்குள்ளிருந்து வெளிய போக முடியாத நிலையிலும் அவர்களை வணங்க தயக்கமில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...