Wednesday, May 13, 2020

MIRACLE



        ஜடாமுடி யோகியின் வருகை   J K  SIVAN 

எவனாக இருந்தாலும்  அவன் உள்ளே  கடவுள்  என்ற ஒரு எண்ணம்  முழுமையாகவோ, துளியாவதோ இருக்கும். அதை நம்புவதும்  நம்பாததும்  அவனவன்  அனுபவத்தை  பொறுத்தது.  உள்ளிருப்பதை உணர்வது அவன் ஞானத்தை சார்ந்தது.  சரித்திர பக்கங்கள் எத்தனையோ  வெள்ளைக்காரர்கள், ஹிந்து மதத்தை சாராதவர்கள் சிலரை பற்றி சொல்லும்போது அவர்கள்  உணர்ந்த ஒரு அதீத சக்தி, மானுடத்துக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தை  எப்படியோ உணரவைத்ததை பற்றி கூறுகிறது.    மதுராந்தகம் கலெக்டர்  ப்ளேஸ் ஏரிகாத்த  ராமலக்ஷ்மணர்களை பார்த்தது,  மதுரை கலெக்டர்  பீட்டர்  மதுரை மீனாட்சி சிறுமியாக வந்து அவனை காத்தது,   மெட்ராஸ்  கவர்னர்  மன்ரோ  ராகவேந்திரரை பார்த்து பேசியது, கோல்கொண்டா சுல்தான்  தானா ஷா,  ராமலக்ஷ்மணர்களை பார்த்து  காசு வாங்கிக்கொண்டு பத்ரசாலம் ராமதாசரை விடுவித்தது,   பால் ப்ரண்டன் விடிகாலை   காஞ்சி மஹாபெரியவாளை பார்த்தது,  இப்படியெல்லாம்  நிறைய  கதைகள் இருக்கிறது.  சிலது சொல்லி இருக்கிறேன். மீதியையும் அப்பப்போ சொல்வேன்.  


வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க வந்தவன்  அடேடே  அசடுகள் இவ்வளவு இருக்கும்போது விடலாமா என்று கொஞ்சம் கொஞ்சமாக  வளர்ந்து நம்மையே  ஆளும் அரசனாகி விட்டான். முன்னூறு ஆண்டுகளுக்கு மேல்  ஆகியும் போகாதவனை  73 வருஷங்கள் முன்பு  கழுத்தை பிடித்து தள்ளியும்,  நம்மில் அனேகருக்கு க்கு இன்னும் அடிமையின் மோகம் போகவில்லை என்பது தான் ஆச்சர்யம்.

ஆசை பேராசையாவது வழக்கம்.  இந்தியாவை ஒட்டிய  நாடுகள் மேல் படையெடுத்து தனது ஆதிக்கம் செலுத்தினான். ஆப்கானிஸ்தானுடன்  போர். 

அதில் ஒரு வெள்ளைக்கார தளபதி,  மார்ட்டின்.   மத்திய பிரதேச அகர் மால்வாவில் வசித்தவன்.  இந்த ஊர்  உஜ்ஜையினியிலிருந்து  66 கி.மீ. தூரத்தில் இன்னும் உள்ளது.  1879ல் மத்திய  இந்திய குதிரைப்படை தலைவன்  
''உடனே போ''   என்று மேலிடத்து உத்தரவு.  

''அன்பே,    நீ ஜாக்கிரதையாக இரு, சீக்கிரம் வந்துவிடுகிறேன்'' என்று மார்ட்டின்  சென்றான்.  போருக்கு சென்றபோதெல்லாம் யாரிடமாவது   சேதி  சொல்லி அனுப்புவான்.   முடிந்தபோது தந்தி அனுப்புவான்.   இந்தியாவுக்குள்  அந்நியர்கள் நுழையும் ஒரு வழி கைபர் கணவாய். அதை பாதுகாத்து எதிரிகள் உள்ளே வராமல் தடுத்து கொல்லும்  பொறுப்பு  மார்டினுக்கு.  

இந்த தடவை மாதக்கணக்கில்  ஒரு சேதியும்  மார்டினிடமிருந்து அவன் மனைவிக்கு வரவில்லை.  அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்தா?  போரில்  இருபக்கமும்  நிறைய  உயிர்ச்சேதம் என்று கேள்விப்பட்டாள் . செய்வதறியாமல் மனைவி கலங்கினாள். 

அவள் வசித்த  அகர் மால்வா வீட்டருகே   பைங்கங்கா  நதி கரையில் ஒரு பழைய  சிதிலமடைந்த சிவன் கோவில். சிவனுக்கு  பைஜூநாத்  மஹாதேவன் என்று பெயர். கோவிலைத் தாண்டி தான்  குதிரை மேல் அமர்ந்து அவள்  வீட்டுக்கு தேவையான பொருள்களை கடைத்தெருவில் வாங்குவாள்.   எதிரே நின்று ஒரு கணம் வணங்கிவிட்டு  செல்வது வழக்கம்.   கோவிலில்  சொல்லும் ருத்ர மந்திரம் காதில் இனிமையான  சப்தமாக அவளுக்கு ரொம்ப பிடிக்கும். கேட்டு கேட்டு  அவளுக்கு  கொஞ்சம் கொஞ்சம்  ருத்ரம் மனப் பாடமாகிவிட்டது. 

கோவிலில் அன்று கூட்டம். என்ன விசேஷம் என்று கேட்டாள் .  

''கோவிலில் அதிருத்ரம் நடத்துகிறோம் அம்மா.  11 நாள்  100 பேருக்கு  மேல் சேர்ந்து  ஒவ்வொருவரும்  நூற்றுக்கணக்கான  ருத்ரம் ஜபம்  அனுவாகங்கள்  பாராயணம்  செய்வோம். அபிஷேகம் செய்வோம்.''  

''எதற்கு?''

'' லோக க்ஷேமார்த்தத்துக்கு.  நினைத்ததை மஹாதேவன் நிறைவேற்றி தருவான். சந்தேகமே இல்லை. ''
மார்ட்டின் மனைவிக்கு  தனது கணவன் உயிரோடு ஜாக்கிரதையாக  போரிலிருந்து திரும்பி வரவேண்டும் என்ற  விருப்பம்.
''நான் வேண்டிக்கொண்டால் அது நடக்குமா?''
''நிச்சயமாக'
அவள் முகம்  சோகமாக  கண்களில் நீரைக் கண்ட வேத பாராயண  தலைவர் ஒரு பிராமணர் ''உனக்கு என்னம்மா  வருத்தம்?''  என கேட்க  அவள் தனது மனக் கவலையை சொன்னாள்.   

''என் கணவன் ஆபத்து ஒன்றும் இல்லாமல் திரும்பி வரவேண்டும்.   இந்த சிதைந்த கோவிலை   என் செலவில் நான்  புனருத்தாரணம் பண்ணி கட்டித்தர அருள் வேண்டும்'' ன்று  கரங்கூப்பி  கண்மூடி மனதில் வேண்டினாள்.

'' கவலையே வேண்டாம் அம்மா.  ''மகாதேவா என்று மனம் உருகி   ''ஓம்  நமசிவாய  என்று  11 நாள் சொல்லு இன்றிலிருந்து. அதற்குள்  உனக்கு நல்ல சேதி வரும். அவன் எல்லோருடைய  துயரும் தீர்ப்பவன். ''  
அவள் விடாமல் 11 நாள் ஓம் நமசிவாய  என்று நம்பிக்கையோடு சொன்னாள் . 

12வது நாள் காலை ஒரு ஆள் மார்டின்  எழுதிக்கொடுத்த  லெட்டரோடு   வந்தான்.

' என் அன்பே,   சுருக்கமாக எழுதுகிறேன். 'பட்டாணியர்கள்   ஆயுதங்களோடு நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டார்கள்  கடிதப்போக்குவரத்துக்கு வழியில்லை.  சரி இனி நாம்  உயிர்  தப்ப முடியாது என்று கைபர் கணவாய் பிரதேசம் வாழ்வில் நான் காணும் கடைசி இடம் என்று முடிவு செய்தபோது  தான்   அங்கே ஒரு அதிசயம் நடந்தது.  வாட்டசாட்டமான  ஒரு ஜடாமுடி யோகி, கையில் மும்முனை கொண்ட  ஈட்டி போன்ற (திரி சூலம்)  ஒன்றை ஏந்தியவாறு அங்கே வந்தார்.  ஆப்கானிய படைக்குள் சென்ற அவரை அவருடைய  சிங்கமோ, புலியோ  அதன் தோலை அணிந்தவராக  மட்டுமே அடையாளம் கண்டேன்.  அங்கும் இங்கும் மின்னலாக  சுற்றி  அவர் ஆயுதம்  மின்னியது. பல  ஆப்கானியர் பட்டாணியர் தலைகள் தரையில் உருண்டது. குதிரைகள்  தறிகெட்டு ஓடின. அந்த குறுகிய நேரத்தில் அத்தனை பெரும் கதி கலங்கி பின் வாங்கினார்கள்.   உயிர் தப்ப ஓடிவிட்டார்கள்.  எங்கள்  படைவீரர்கள்  புத்துணர்ச்சி  தைரியத்தோடு  முன்னேறி எங்கள்  மற்ற வீரர்களோடு சேர்ந்து கொண்டோம்.    நானும் என்னோடு இருந்த கூட்டமும் இன்று உயிரோடு இருந்து இதை எழுதுவதற்கு  காரணம்  எங்களுக்கு உயிர் பிச்சை போட்ட அந்த யோகி தான்.  என்னிடம் அந்த யோகி சொன்ன ஒரு வார்த்தை காதில் ஒலிக்கிறது.  ''உன் மனைவியின் பிரார்த்தனை என்னை மகிழ்வித்தது. உனக்கு ஒன்றும் நேராது போ''.   நீ  யாரிடம் என்ன பிரார்த்தனை செய் தாய்???''சீக்கிரம் வருவேன்''


மார்ட்டின் மனைவியால் மேலே பிடிக்கமுடியவில்லை. கண்களில் ஆனந்த கண்ணீர். ''மகாதேவா.....'' என்றாள் பைஜ்நாத் சிவலிங்கம் நோக்கி  கீழே விழுந்தாள் வணங்கினாள் .
1883ல்    மார்ட்டின் திரும்பினான்.  மனைவி எல்லா விவரங்களும் சொனனால் . ரொம்ப மகிழ்ச்சியோடு அவனும் வணங்கினான். 1883ல்   Rs. 15,000 என்பது இப்போது கோடிக்கணக்கான ரூபாய்.  தானமாக கொடுத்து அந்த ஆலயத்தை  புதுப்பித்தார்கள்.  உலக சரித்திரத்தில்  வெள்ளைக்காரன் கட்டிய ஒரே ஹிந்து கோவில் இதுவாக தான் இருக்கும். இன்றும் இருக்கிறது. 

கோவிலில் கல்வெட்டில் இந்த சம்பவம்  நினைவுச்சின்னமாக இன்றும்  பொறிக்கப்பட்டு இது  உண்மை என்று  தெரிவிக்கிறது. கோவில் அதிகாரபூர்வ  ஏட்டில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளதாம்.

பக்திக்கு நிறம், குலம்  ஆண் பெண், மதம் என்ற பாகுபாடு, வேறுபாடு எல்லாம் கிடையாது. மனம் இறைவனோடு ஒன்றுபட்டால் போதும். அருளை வாரி வழங்குபவன் இறைவன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...