Friday, January 5, 2018

ANGKOR WAT













காம்போஜத்தில் நமது கோவில்கள்
J.K. SIVAN
பழைய சமஸ்க்ரித பாலி ஏடுகள் அவர்களை இந்தியாவின் இரும்பு காலத்து மனிதர்கள் என்கிறது. காம்போஜம் காந்தார தேசத்திற்கு அண்டைநாடு. 16 மகாஜனபத நாடுகளில் ஒன்று. இப்போது நமது தேசத்தின் வட மேற்கே, கிழக்கு ஆப்கானிஸ்தானத்தில் வாழும் காம்போஜ நாட்டினர் அஸ்வ (குதிரை) சாஸ்திரத்தில் நிபுணர்கள். அதனால் காம்போஜர்கள் அஸ்வகர்கள் என்றும் பெயருடையவர்கள். அக்கால யுத்தங்களில் குதிரைப்படை முக்கியமானது.

,ஆரம்ப நாளில் காம்போஜர்கள் இந்தோ-ஈரானிய இனம் என்றும் காலப்போக்கில் இந்தோ ஆரியர் எனப்பட்டனர். அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் காம்போஜம் ஒரு தனி நாடு என்கிறார். பாணினி ஒரு க்ஷத்ரிய ராஜ்ஜியம் என்கிறார்.

கிரேக்க நாட்டு அரசன் அலெக்சாண்டர் பாரசீகத்தை வென்ற பின், வட இந்தியாவின் பஞ்சாபை ஆண்டு வந்த மன்னனை ஜெயித்து ஆபிகானிஸ்தான் வழியாக காம்போஜர்களோடு மோதினான்.

கி மு இரண்டாம் மற்றும் முதல் நூற்றாண்டுகளில் காம்போஜர்கள், இந்தியாவின் சிந்து, சௌராஷ்டிரம், மால்வா, இராஜஸ்தான், பஞ்சாப், சூரசேனம் போன்ற பகுதிகளில் நிரந்தரமாக குடியேறி, தென்மேற்கு மற்றும் மேற்கு இந்தியாவை ஆண்டனர். இராசேந்திர சோழனிடம் 11-ஆம் நூற்றாண்டில் காம்போஜம் தோற்றது.

காம்போஜர்களை பௌத்தர்களாக்க அசோகர் பிக்ஷுக்களை அனுப்பியதை அசோக கல்வெட்டுகள் சொல்கிறது.

பழைய இந்தியாவின் வாசனையை கம்போடியா இன்றும் கொண்டுள்ளது. பல நூறு ஹிந்து சமய, பௌத்த கோவில்கள் முழுதும் அழியாமல் உள்ளன. சீயம் ரெப் என்ற நகரில் அற்புதமான் கிட்ட்டத்தட்ட ஆயிரம் வயதுள்ள அங்கோர் வாட் மஹா விஷ்ணு கோவில் உள்ளது. அருகே தான் டோநிஸாப் என்ற பெரிய ஏரி. ராமானுஜர் ஆயிரமாண்டு விழாவில் ஒரு நிகழ்ச்சியாக அங்கே சென்று விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்ததில் நங்கநல்லூருக்கும் பங்கு உண்டு என்று பெருமிதமாக கூறுவேன்.

சிதைந்த இந்த கோவில்கள் ராக்ஷச மரங்களால் சூழப்பட்டு காண்பதற்கே விகாரமாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. வெள்ளைக்காரர்களுக்கு வேடிக்கை ஸ்தலம். உல்லாச போக்கிடம். எண்ணற்ற கலைச்சிற்பங்கள் இன்னும் நாம் காண மீந்திருப்பது யார் செய்த புண்ணியமோ.? எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் குழுமி நிறைய விஷயங்களை சேகரித்திருக்கிறார்கள்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் கடல் வாணிபம் ரொம்ப ஜோராக நடந்திருக்கிறது சோழர்கள் காலத்தில். காம்போஜ அரசர்களின் பெயர்கள் '' வர்மன்'' என்று முடிவதில்லை இருந்து பல்லவர்கள் தொடர்பும் நிறைய இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மஹேந்த்ர வர்மன், நரசிம்ம வர்ம பல்லவன் காலத்தில் சீன, கிரேக்க, யவன வியாபாரிகள் வந்திருந்ததாக படிக்கிறோமே . யசோவர்மன், ஜெயவர்மன் போன்ற காம்போஜ அரசர்கள் தமிழ் வம்சம் என்று புரிகிறதே . சைவ வைணவ கோவில்கள் நிறைய இருந்திருக்கிறது.

இரண்டாம் உதயாதித்ய வர்மன் காலத்தில் சிவலிங்கங்கள் நிறைய செதுக்கி நாம்குலென் பகுதி (phnom kulen)
நதிக்கரையில் இன்னும் காண்கிறோம். இந்த வாயில்நுழையாத பேர் அந்தக்காலத்தில் மஹேந்த்ர பர்வதம் என்று அழைக்கப்பட்டது. ''ஆயிரம் லிங்க நதி ' இன்று இப்போது பெயர். அந்த சிவலிங்கங்கள் மீது படிந்து கீழே இறங்கும் நிதி எண்ணற்ற வயல்களில் வளமையும் செழுமையும் அளிக்கிறது என்று கம்பூசிய மக்கள் நம்புகிறார்கள்.

ஒரு விஷயம். முதலாம் சூர்யவர்மன் (1010-1050 கி.பி. ) எனும் காம்போஜ அரசன் காலத்தில் தெற்கு தாய்லந்தும் காம்போஜமும் இணைந்தது. ராஜ விஷ்ணு பக்தன். நிறைய கோவில்களை கட்டினான். அடுத்த 2ம் சூர்யவர்மன் (1113-1150கி.பி) அதே வகையில் ராஜ்யத்தை விஸ்தரித்தான். அவன் காலத்தில் ''நகர வாத"" என்ற அ ங்கோர்வாட் விஷ்ணு கோவில் உருவானது. ஒரு சதுர மைல் விஸ்தீரணம். நீண்ட சுவர்கள். ஹிந்து புராண சம்பவங்கள் சுதையாகி சித்திரிக்கப்பட்டவை காண்கிறது. பிரபஞ்ச மத்யமமாக இருக்கும் மேரு மலையை உருவகித்து கட்டப்பட்டது. சுற்றிலும் ஆழமான அகழி மேருமலை சுற்றி உள்ள சமுத்திரங்கள். இன்னும் அச் சிற்பங்களை பாதுகாத்து வருவது ஆச்சர்யம். ராமாயணம் குருக்ஷேத்திர சமாச்சாரங்கள் நிறைய.

அடுத்து ஆண்ட ஏழாம் ஜெயவர்மன் (1181-1220 கி.பி) காம்போஜத்தை பலப்படுத்தினான். தெற்கு மலாயா, வடக்கு லாவோஸ் இணைந்தது. புத்தமதம் தழுவிய இந்த அரசன் புத்தர் கோவில் கட்டுவதில் முனைந்தான்.
அவன் மறைவிற்கு பிறகு புத்த மதம் பெருகி இந்து கோவில் புத்த மடாலயங்களாக உருவானது.

சிதைந்து போய் உருமாறிய அவர்கள் இப்போது சொல்லும் ராமாயண கதையை நான் கொஞ்சம் விவரித்தாள் என் வீடு விசாரித்து நேரில் வந்து என்னை தீட்டுவீர்கள் என்பதால் கம்பூச்சிய ராமாயணம் நான் சொல்லப்போ வதில்லை. சொன்னால் உண்மை ராமாயணம் எனக்கும் மறந்து போகும். ஒரு ஆறுதல். இன்னும் சிவன் விஷ்ணுவை தெய்வங்களாக வணங்கும் மக்கள் அங்கே இருக்கிறார்கள்.

ஒன்பதாவது நூற்றாண்டில் தமிழ் மன்னன் ஜெயவர்மனுடன் துவங்கிய இந்த வம்சம் காம்போஜத்தை பலப்படுத்தியது. வலுவானதொரு ஆட்சியாகியது. இப்படியே சுமார் 500-600 ஆண்டுகளுக்கு, தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்த காம்போஜம், கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்த் தமிழ்நாட்டுத் தொடர்பை இழந்தது. படையெடுப்பின்போது போய்க் குடியேறிய தமிழர்களைத்தவிர பிற்காலங்களில் தமிழ் நாட்டிநர் அங்கே குடிபெயரவில்லை., அண்டை தேசங்களாகிய லாவோஸ், வியட்னாம், தாய்லாந்து ஆகியவற்றின் ன் ஆதிக்கத்தில் தமிழை மறந்தது. இந்து மதப் பழக்க வழக்கங்கள் மறைந்தது. பௌத்தம் தமிழை விழுங்கியது.

1993க்குப் பிறகு தான் காம்போஜம் கம்போடியாவாகி இன்று கம்பூச்சியா. பழந் தமிழர்கள் மாறிவிட்டார்கள். என்றாலும் பெருங்காய டப்பா வாசனை இன்னும் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம்,தமிழ்ப்
பெயர்கள் ஆகியவை இந்த மக்களின் ரத்தத்தில் கலந்துள்ளது.து. ‘ராமாயணம்’ உருமாற்றம் கொண்ட நடன நாடகமாக பார்க்கிறோம். ஒரு நாகரிகத்தை காலம் எப்படி மாற்றுகிறது என்பதற்கு கம்பூச்சியா நிதர்சனம்.

லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் தமிழ் ராஜா யசோவர்மன் கட்டிய 'அங்கோர் வாட்’கோயில்கள் தான் நமது அன்றைய வளமான வாழ்க்கைக்கும், கலைச்செல்வத்திற்கும் பன் பாட்டுக்கும் மௌனமான ஒரு சாட்சி.
யசோவர்மன் விவசாயம் செழிக்க அமைத்த கிழக்கு பராய் என்கிற மிகப்பெரிய நீர்த்தேக்கம் அருகே இருக்கிறது. ஆரம்பத்தில் விஷ்ணு, இந்திரன், சிவன் ஆகியோர் கோவில்களையும், பிற்காலத்தில் புத்தமதம் பின்பற்றப்பட்டு கடைசி தமிழ் ராஜா ஏழாம் ஜயவர்மன் காலத்தில் போதிசத்வரின் 216 முகங்கள் அடங்கிய
புத்தருக்கான திருக்கோயில் கட்டப்பட்டது.

ரிக் வேத கால ரிஷி உபமன்யுவின் சிஷ்யர் ‘காம்போஜ அவுபமன்யு’ .சாம வேதத்தின் வம்ச ப்ரஹ்மானத்தில் இவர் பெயர் வருகிறது. அவுபமன்யு, சமஸ்க்ரித இலக்கண சூக்தர், நிகண்டு எழுதியவர் என்பார்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...