Thursday, January 11, 2018

NITHI CHAALA SUKAMA?




​ நாம் இப்படி செய்வோமா? ​- J.K. SIVAN

​காவேரி சலசல வென்று குளிர்ந்த காற்றை வீசியவாறு ஓடிக்கொண்டிருந்தது.
கரையில் ஒரு சிறிய ஆஸ்ரமம் போன்ற பழைய ஒட்டு வீடு. வாசலில் கூரை தட்டி கட்டி முன்வாசல்.
இருபக்கம் திண்ணை. வாசலில் மாமரத்தின் அடியில் ஒரு பசுவும் கன்றுக்குட்டியும்.

​​'தியாகய்யா உன்னாரா?''
'எவரண்டி ?''
உள்ளே இருந்து குரல் வந்தது. காலை இளம் வெயில் சுள்ளென்று வாசல் கூரை வழியாக நுழைந்து அதன் பொத்தல்களை ஊடுருவி சாணி மெழுகிய தரையில் வட்டம் வட்டம் வட்டமாக வெளிச்சப் பொட்டுகளை இட்டது.

தம்புராவை மீட்டுக்கொண்டு குரலை அதற்கேற்ப சன்னமாக இழைத்துக்கொண்டு தியாகராஜர் ஒரு மரப்பலகையில் அமர்ந்தவாறு கண்களை மூடிக்கொண்டு எதிரே ராமன் சந்தோஷமாக கேட்க தனது கீர்த்தனைகளை பாடிக்கொண்டிருந்தார்.

​சரபோஜி மஹாராஜா ஆட்கள் வாசலில் வந்திருக்கிறார்கள். ஒரே கூட்டம். ஊரே திரண்டுவந்து நிற்கிறது.

சிஷ்யன் குருவை பார்த்தான். அவர் இந்த உலகிலேயே இல்லை. தியான- கானத்தில் ஆழ்ந்து ராமனோடு ஐக்கியமாக இருந்தார். வாசலுக்கு சென்றான். ஒரு பல்லக்கு, குதிரைகள், காலாட்கள், கொடி வாத்தியங்கள் முழங்க ஒரு சிறு கூட்டம். ஒரு அதிகாரி உள்ளே வந்தான்.

​''என்ன விஷயம்?'' என்று தடுமாறி கேட்டான் சிஷ்யன்.
''ராஜா தியாகய்யாவை உடனே அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்''.
''குரு சாது. எந்தவழிக்கும் போகமாட்டாரே . எதற்கு இந்த கட்டளை?'' என்றான் சிஷ்யன்.
''அதெல்லாம் ஒன்றும் இல்லையப்பா. மஹாராஜா விருந்தினர்கள் வந்திருக்கி றார்கள். மகாராஜாவுக்கு தியாகையா கீர்த்த னைகள் ரொம்ப பிடிக்கும். ராஜசபையில் அவர் விருப்பப்படி சில பாடல்களை அவர் மேல் பாட வேண்டுமாம். நிறைய தங்க நாணயங்கள், வஸ்திரங்கள், பரிசுகள், எல்லாம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

''கீர்த்தனைகள் சுவாமி மேல் பாடவேண்டுமா?

''அப்படி இருக்காது. ராஜா புகழ் பாட''

​தெரியவில்லை.​ குருவைக் கேட்போம்''

தியாகய்யர் கீர்த்தனை பாடி முடித்தவர் என்ன சப்தம் என்று வெளியே வந்தார். அவரிடம் விஷயத்தை பவ்யமாக ராஜ தூதர் சொன்னார்.

''அபச்சாரம் என்று இரு காதுகளையும் பொத்திக்கொண்டார் தியாகராஜர்.

'' என் ஸ்ரீராமருக்கு முன்னே, பொன்னாவது பொருளாவது? அவரைத் தவிர மனிதர்களைப் பாடமாட்டேன் (நரஸ்துதி ). இந்த நிதி எல்லாம் வேண்டாம் எடுத்துச் சென்று விடுங்கள், ராம ஸ்மரணை ஒன்றே பெரு நிதி எனக்கு. மன்னிக்கவேண்டும்.''

தியாகையர் அவர்களை அனுப்பி விட்டார். மனம் உடைந்து உள்ளே சென்றார். ராமனின் எதிரே கண்ணீர் மல்க அமர்ந்து பாடினார்.

ராஜா கல்விமான், ஞானஸ்தன். தெய்வ பக்தி உள்ளவன். அவரைப் புரிந்து கொண்டான். கோபிக்கவில்லை. அவனே அவர் பஜனைகளில் கீர்த்தனை பாடும்போது கலந்து அனுபவித்தான்.

வேறு விதமாகவும் சில செயதிகள். ராஜா கோபித்து அவரை சிறை பிடிக்க, கொடுமையான வயிற்று வலி வாட்ட, அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் ராமன் மேல் பாடி அவன் குணமானான் என்று.

எது நிஜம் என்பது இப்போது முக்கியமில்லை. அப்போது தியாகய்யர் என்ன செய்தார் என்பது தான்.

அப்படி என்ன பாடினார் தியாகராஜ ஸ்வாமிகள் அப்போது?
கண் முன்னே ராமன் கல்யாண கோலமாக சீதையோடு லக்ஷ்மண சமேதனாக புன்னகைத்து நிற்கிறான்.
என்ன தியாகராஜா உன் முடிவு ? என்று கேட்பதைப் போல் தோன்றியது.

''கல்யாண ராமா, கல்யாணியிலேயே என் பதில் சொல்கிறேன். கேள்.

நிதி சால சுகமா… ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு மனஸா

அனுபல்லவியில்
ததி நவநீத க்ஷீரமுலு ருசோ?
தாஸரதி த்யான பஜன சுதா ரசமு ருசோ ?

சரணத்தில்
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு சுகமா?
கர்த்தம துர்விஷய கூபஸ்நாநமு சுகமா?
மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா?
ஸுமதி த்யாகராஜநுதுநி கீர்த்தந சுகமா?''

''ராமா, வறுமையும் செல்வமும் அவரவர் மனதிலே தான் இருக்கிறது. ராஜா மேளதாள சன்னதுகளோடு, பணத்தை மூட்டை யாக கொட்டி கொடுத்தால் நான் மகிழ்வேனா?, நீயல்லவோ எனக்கு சங்கநிதி பதுமநிதி. எனக்கு அமைதியாக இதோ ;உன்முன்னே அமர்ந்து உன் சந்நிதியில் உன்னை போற்றி பாடுபவதில் உள்ள சுகம் அந்த பண மூட்டை , பொன்னும் பொருளும் தருமா? ஏ மனமே நீயே உண்மையை சொல்.

ராஜா குடம் குடமாக கொண்டுவந்து தரும் தயிர் பால் வெண்ணை ருசியா? தசரத புத்ரா, உன்னை நாமணக்க பஜனை செயது பாடுவது ருசிக்குமா எனக்கு. நீயே சொல்?

புனித கங்கை காவிரியில் ஸ்நானம் செய்வது சுகமா, ஒரு சந்தில் இருக்கும் அழுக்கு கிணற்று நீரில் குளிப்பது சுகமா? உலக வாழ்க்கையின் வஸ்துக்கள் எனக்கு அந்த அழுக்கு கிணற்று நீருக்கு அல்லவோ சமம்?

அகந்தை, மமதை, கர்வத்தில் திளைக்கும் அற்ப ஐந்துவான மனிதனைப் புகழ்ந்து பாடுவது சுகமா, ஹே ராமா , நல்ல புத்தியோடு நல்லவேளை இந்த தியாகராஜன் உன்னை புகழ்ந்து ராம கீர்த்தனை பாடுவது சுகமா ? நிச்சயம் ராம கானமே பெரும் சுகம் எனக்கு. என்கிறார்.

நாம் தியாக பிரம்மமாக முடியவே முடியாது. தேவைக்கான பணம் நேர்வழியில் தேடி எளியவாழ்வு இன்பமாக இறைவன் அருளால் அவனுக்கு நன்றி சொல்லி வாழ்வோமே. இதை த்வனிக்கும் அளவுக்கு இதை பாடும் வித்துவான்கள் அர்த்தம் புரிந்து கொண்டு அந்த உணர்வை பாட்டில் கொண்டு வந்தால் பயனுண்டு. சங்கீத வித்தைகள் காட்டி என்ன பிரயோஜனம்?. பாடும்போது பக்தி ரசம் பொங்கி ரசிக பக்தர்களை இறை உணர்வில் மூழ்கடிக்கவேண்டாமா?
Smt. M.S. Subbulakshmi திருவையாறில் தியாகராஜர் ஆராதனையில் ஒரு சமயம் இந்த கீர்த்தனையை பாடியது கேளுங்கள் கிளிக் செய்யுங்கள் ;இந்த லிங்கை: https://youtu.be/GL8dRsV4o1shttps://youtu.be/GL8dRsV4o1s

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...