Friday, September 17, 2021

DR VASANTHI MEYYAPPAN



 ஒரு ஈர்ப்பு எழுத்தாளர் பற்றி . - நங்கநல்லூர் J K SIVAN


''முனைவர் திருமதி வசந்தி மெய்யப்பன்''.

நமது முகநூல் அன்பர், முனைவர், திருமதி வசந்தி மெய்யப்பன், மெய்யாலுமே, ஒரு அற்புத கவிஞர் தான். எனக்கு ரெண்டு புஸ்தகங்கள் அனுப்பி இருந்தார். ரெண்டும் ரெண்டு கண்கள் தான் . ஹிந்துக்களுக்கு சைவமும் வைணவமும் இரு கண்களல்லவா?
ஒரு கண்ணில் நான் கண்ணப்பனை பற்றி எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். அதில் கொஞ்சம் கீழே கொடுக்கிறேன் நீங்களும் ருசியுங்கள்:

பொன்முகலி நீரதனை பொன்வாயில் முகந்துபொன்மலர் பறித்ததனை தன்குடுமியில் செருகி பக்குவமாய் இறைச்சிதனை தேக்கிலையில் ஏந்தி பக்தியுடன் அணுகிட்டான் பரமனருள் பெறவே.

இதற்கு அர்த்தமே சொல்லவேண்டாம். என்னைப்போல் தமிழே சரியாக தெரியாத ஆசாமிகளுக்கும் இது ஒரு விருந்து. கண்ணப்ப நாயனார் காளஹஸ்தி மலைமேல் தனியாக பசியோடு இருக்கும் சிவனுக்கு எப்படி அர்ச்சனை, அபிஷேகம், நைவேத்தியம் எல்லாம் எப்படி கொண்டுவந்து கொடுக்கிறார் பாருங்கள்.

''பூசித்த மலர்களை செருப்புக்காலால் தள்ளி மூடிய வாய்நீரால் அபிஷேகம் செய்துசூட்டிய பூக்களால் அலங்காரம் பண்ணி படைத்த இறைச்சியை வேண்டினான் உண்ண ''

உச்ச கட்ட பக்தியில் கண்ணப்பநாயனார் உபச்சாரம் செய்து நைவேத்தியம் படைக்கும் காட்சி கண் முன்னே கொண்டுவந்துவிடுகிறார் வசந்தி.

மறுநாள் வழக்கம்போல் பூஜை செய்யவந்த சிவகோசரியார் எனும் அர்ச்சகர் அதிர்ச்சியில் நடுங்குகிறார். யார் சிவனருகே இங்கே பன்றி இறைச்சியை கொண்டு போட்ட மஹா பாவி என்று சாபமிடுகிறார்'' .
காளத்தீசன் ''சிவகோசரி, நாளைக்கு இங்கே வந்து நின்று மறைந்து என்ன நடக்கிறது என்று நீயே பார். இது எனக்கு செய்த அவமதிப்பு அல்ல. அற்புத மனத்தோடு அன்பன் தந்த உண்மையான பக்தி சமர்ப்பணம்'' என்று சொன்னதால் மறுநாள் காலையிலேயே வந்து சிவன் பின்னால் ஒளிந்து நின்று கண்ணப்பன் வருவதை கவனிக்கிறார். ஈசனின் திருவிளையாடல் தொடர்கிறது. கண்ணப்பனின் பக்தி வெளிப்படுகிறது.
மறுநாள் மறைந்திருந்து மறையவன் பார்த்திருக்க மகேசன் திருவிளையாடல் மகிழ்வுடன் தொடங்கினார்

''தம் வலக்கண்ணில் குருதி வர வழியும் செய்த்திட்டார் துடிதுடித்த திண்ணன் பல பச்சிலையால் பிழிந்திட்டார்.
பின்னும் குருதி பொங்க திகைத்தட்ட வேடன் அழ ''ஊனுக்கு ஊன் இடல் '' முறைதனை எண்ணிட்டான் தயங்காது தன்கண்ணை அம்பாலே தோண்டிட்டான் தீராத பேரன்பால் ஈசனுக்கு அப்பிட்டான் ''


புரிகிறது அல்லவா அர்த்தம்? எவ்வளவு எளிமையான எழுத்து. நறுக்கு தெறித்தாற்போல் காட்சி வெளிப்பாடு.

இது போல் வலது கண்ணிலும் ரத்தம் போங்க, தனது இன்னொரு கண்ணையும் நோண்டி இறைவனுக்கு அப்ப துவங்கும்போது நிறுத்து என்று காளத்தீசன் தடுத்து கண்ணப்பனை ஆட்கொள்கிறான்.
மேலே சொன்னது 16வது கவிதை.

இது போல் 63 நாயன்மார்கள் சரித்திரமும் எளிமையாக சுகமாக படிக்கும்படி எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பெயர் ''சிவநேச செல்வர்கள் '' நிறைய படித்தவர்கள் பண்டிதர்கள் எல்லாம் வாழ்த்துரை, அணிந்துரைகள் எழுதியுள்ளார்கள். நான் ஒரு வாசகன் என்ற முறையில் அற்புதமான இந்தப்புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 80 தலைப்புகள் 160 பக்கங்களில், இரத்தின சுருக்கம் என்பார்களே அது இது தான். எல்லா நாயன்மார்களும் சைவ சமய குறவர்கள் நால்வரும் கவிதையில் சுருங்கி பரிமளிக் கிறார்கள். எல்லார் பற்றியும் எழுத ஆசை, நேரம் போதவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு எனக்கு அனுப்பிய இந்த புத்தகத்தை சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. இன்னொரு அற்புத நூல், மற்றொரு கண் என்றேன் அது ஸ்ரீவைஷ்ணவ பன்னிரு ஆழ்வார்கள் பற்றி. அதை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டுரை எழுத ஆசை. அடுத்த பதிவில்.
இந்த ராசியான எழுத்தாளர் , கவிஞர், முனைவர் திருமதி வசந்தி மெய்யப்பனை ராசிபுரத்தில் வாட்ஸாப்ப் நம்பர் 9486121029ல் தொடர்பு கொள்ளலாம். புத்தகங்கள் பெறலாம். அவர் நூல்கள்(மேலே சொன்னவை உட்பட) வாசகன் பதிப்பக வெளியீடுகள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...