Wednesday, September 8, 2021

PESUM DEIVAM



 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K  SIVAN  ----


74.   நமது மதம்.


நண்பர்களே   நான் இன்றைய  இந்த பதிவில்  ஒரு  புத்தகத்தையே  சுருக்கி கொடுத்திருக்கிறேன்.  மஹா பெரியவா  1932ல் அக்டோபர் மதம் 12ம் நாள் ஒரு அற்புத பிரசங்கத்தை  மைலாப்பூரில் நிகழ்த்தினார்கள், அதை நேரில் கேட்டவர்கள் புண்யம் செய்த பாக்கியசாலிகள்.   அப்போது பிறக்காத மற்றவர்கள் நாம் அதை முழுதும் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் சுருக்க மாகவாவது அறிந்து கொள்வோம். அவரது சிந்தனைகளை அறிந்து வியந்து நமஸ்கரிப்போம்.
''நாமறிந்த  மற்ற மதங்கள் எல்லாமே  யாரோ ஒருவரால் உண்டாக்கப்பட்டவை. கிறிஸ்து, முஹம்மது நபி, ஸோராஸ்டர், மஹாவீர ஜைனர்,புத்தர், கன்பூஷியஸ்  போன்றோர்  சிருஷ்டித்தவை.அவரவர் பெயரால்  அடையாளம் காணப்பட்டவை.  நமது மதமோ பெயரில்லாதது.  ஹிந்து சனாதன தர்மம் என்ற  அதை  ஹிந்து மதம் என்று யாரோ பெயரிட்டார்கள்.   சிந்து நதிக்கரையில் இருந்த பிரதேசம் என்பதால்  அங்கு வாழ்ந்தவர்கள் சிந்துக்கள்,  நாளடைவில் அது  ஹிந்துக்கள் என்று வெள்ளைக் காரன்  நாக்கில் மாறிவிட்டது.   சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்களை  இந்த தேசம்  முழுதும் வாழ்ந்தவர்களாக ஹிந்துக்கள்  என்ற பெயர்  நமக்கு வந்துவிட்டது.  ஹிந்துக்களுக்கு தனி அடையாளம் கிடையாது. நாமம் ரூபம்  இல்லை. இதன் உட்பிரிவுகளில்  சைவ, வைணவ, மத்வ  அடையாளங்கள் சேர்ந்துவிட்டது.  அவரவர் அடையாளம் அவரவர் விருப்பத்திற்கேற்ப  அமைந்தது. .  விபூதி, நாமம், சாந்து, சின்னங்களும்,   வேஷ்டி  புடவை அணிவது, விக்ரஹ  வழிபாடு,  சாப்பாடு, நம்பிக்கை  எல்லாம்  வேறு வேர்காக  மாறி இருந்தாலும்    அடிப்படையில் நாம் எல்லோரும் ஒரே  சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள்.  ஹிந்துக்கள் என்ற போர்வைக்குள் வாழ்பவர்கள்.     

நான் ஒரு ஸம்ஸ்க்ரித புஸ்தகம் வாசிக்கும்போது அதில் ஒரு ராஜா அரண்மனையில் சில  துருக்கியர்கள் பணியாளர்களாக இருந்தார்கள் அவர்களை  அக்ஷதஸ்ரோத்ரயுக்மா -  காது குத்திக் கொள்ளாதவர்கள் என்று அடையாளம் சொல்லப்பட்டிருந்தது.  ஓஹோ  ஹிந்துக்கள்  காது குத்திக் கொள்பவர்கள் என்று ஒரு அடையாளம் இருந்திருக்கிறதா?   நமது மதத்திற்கு ஏன் தனிப்பெயர் இல்லை என்று யோசித்தால், பேர் இருக்கிற மற்ற மதத்தில் பிறக்காமல் போனது  கௌரவம், பெருமை  என்று மனதில் பட்டது. விவரமாக சொல்கிறேன்.
மதம் என்றால் என்ன? ஜென்மம் எடுத்ததன் பயனைச் சொல்லிக் கொடுக்கும்  சாதனம், வழி.  ஸ்ரேயஸ் அடையும்  சாதனம், அதைச் செய்யும் வழியைத் தான் தர்மம் என்கிறோம். ஜென்மம் கடைத்தேறுவதற்கு வழி தான் தர்மம். அதற்கு எதற்கு பெயர்? 
எங்கள் ஊரில் ராமு என்று பெயரைக் கொண்ட  பல பேர் இருந்தார்கள். அவர்களை அடையாளம்காட்டுவதற்கு   குட்டை ராமு ,  நெட்டை ராமு, கருப்பு ராமு, வழுக்கை ராமு, குண்டுராமு என்று சொல்வதுண்டு.  இன்னொரு ஊருக்கு போனபோது அங்கே ராமு என்று ஒருவன் தான்  இருந்தான்.   ''ராமுவை கூட்டிக்கொண்டு வா'' என்று என்னிடம் ஒருவர் அங்கே சொன்னார்.  எங்க ஊர் ஞாபகத்தில்  நான் ''எந்த ராமுவை?''  என்று கேட்டேன்.  அதற்கு அவர்  இது என்ன கேள்வி. இருப்பதே இந்தஊரில் ஒரு ராமு தானே. என்கிறார்.  அது போல்  நமக்கு  இருப்பதே  ஒரே ஒரு பெரிய புராதன மதம் என்றபோது அதற்கு எதற்கு பெயர், தனியாக  அடையாளம் எல்லாம்?    
மற்ற மதங்கள் கிறிஸ்து, முஹம்மது, புத்தர்,  ஜைனர் பிறப்பதற்கு முன்னால்  இல்லை. அவர்கள் பிறந்து தோற்றுவித்தவை அவர்கள் பெயரால் அடையாளம் கொண்டவை. நமது மதம் அவர்களுக்கு எல்லாம் பல யுகங்கள் முன்பே இருந்து வருவதால் அதற்கு எவர் பெயரும் கிடையாது. யாரோ ஒருவர்  சிருஷ்டித்த மதம் இல்லை நமது,   அதனால் தான் இந்த மதத்தில் பிறந்தது ஒரு தனி கௌரவம், பெருமை என்றேன். பேர் இல்லாமல் இருப்பது தான் பெருமை,  தொன்மை.  அதன் வேதங்கள் சொல்வது தான் நமக்கு பொது அடையாளம்.   அதன் படி நடப்பது  தான்  ''வேத வாக்கிய மாக  ஏற்றுக்கொண்டு நடப்பது''  என்கிற  சொல் .   நமது மாதத்தில் எல்லா குலத்தினருக்கும்  வேத மந்திரங்கள் பொதுவானவை. அதன்படி நடக்கவேண்டியது நமக்கு அவசியம். கடமை.  மேலே சொன்ன  மதங்கள்  சில  நூற்றாண்டுகள் முன்பு தான் தோன்றியவை.  அதற்கு முன்பு ?  பொதுவாக மக்கள்  எந்த மதத்தை  பின் பற்றினார்கள் என்றால்  அது நமது தொன்மையான மதம். அது தான்  மற்றவைக்கும்  தாய் மதம். வேதத்தை நம்பி பின்பற்றும் வைதிக மதம்.   
புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள்,தொல்பொருள்  ஆராய்ச்சியாளர்கள்,  கிருஸ்துவ மதம் தோன்றும் முன்பே  எகிப்தில்  தோண்டி எடுத்த   சில  சாசனங்களில்  ''மித்ரா வருண'' சாட்சியாக என்று  காண்பதால்   அக்காலத்தவர்கள் நமது  ஹிந்து கடவுள்கள்  சூரியன், மித்ரன், வருணனை  வழிபட்டவர்கள்  எனும்   தடயம் கிடைத்தது.   எகிப்திய பாரவோக்கள்(pharaoh) பெயர்கள்  ராமன் சம்பந்தப்பட்டவையாக இருப்பதும் ஒரு  ஆதாரம்.  ஆப்பிரிக்காவுக்கு பக்கத்தில் உள்ள  மடகாஸ்கர் தீவில் ஸம்ஸ்க்ரித பெயர்கள் பழக்கத்தில் உள்ளது அங்கும் ஹிந்து மதம் பரவி இருந்ததை காட்டுகிறது.  ஆப்பிரிக்காவில் ஸஹாரா பாலைவனம் இருக்கிறது. நமது புராணத்தில்  ஸஹரர்கள் சாபத்தால் அழிந்து அங்கு நதி வற்றி பாலைவனமாக இருந்ததை, பகீரதன் தவமிருந்து ஆகாச கங்கையை க் கொண்டுவந்து  ஸஹரர்களை கரையேற்றியதாகவும் கதை உண்டு.
அதே போல் மெக்சிகோவிலும்  சில  இடங்களைத் தோண்டும் போது  எல்லாம் பிள்ளையார் சிலைகள்  கிடைக்கிறதாம்.  நவராத்ரி சமயம்  ராம சீதா என்ற பண்டிகை நடக்கிறது.  ஆஸ்திகர்கள் தான்  AZTEKஸ்  பெயரில் மாறிவிட்டார்கள் என்று நம்ப முடிகிறது.   பெரு  எனும் தேசத்தில்  சூர்ய  வழிபாட்டு ஆலயங்கள் உள்ளன.   அங்குள்ள பழங்குடி மக்கள் INCAS என்பவர்கள்.   இனன் என்று சூரியனுக்கு பெயர். சூரியநை வழிபட்டவர்கள் இனக்காஸ் என்பது பொருத்தமாக தானே இருக்கிறது.  
அமெரிக்காவில் ''கலிபோர்னியா'' தான்  ஒரு காலத்தில்  ''கபிலாரண்யம்'' . குதிரை, குருதை , ஆன  மாதிரி, மதுரை மருதை ஆன மாதிரி இந்த பாதாள லோகம்   கபிளாரண்யம் கலிபோர்னியா என பேர் மாறிவிட்டது    அதற்கு பக்கத்தில் ஹார்ஸ் ஐலண்ட்  HORSE ISLAND, ASH  ISLAND  பகுதிகள்,  சஹரர்களின் அஸ்வமேத குதிரை,  சஹரர்கள் கபிலரால்  சாம்பலானதை    குறிக்கும் இடங்களாக  எடுத்துக் கொள்ளலாம். காலப்போக்கில் எவ்வளவு மாறுதல்கள்!  
ஆஸ்திரலிய  பழங்குடிகள் ஆடும் ஒரு நாடகம்   சிவா டான்ஸ்.   நிர்வாணமாக   வேஷம் போட்டு ஆடும் அவர்கள் நெற்றியில் மூன்றாவது கண் மாதிரி ஒன்று  இருந்ததைப்  பார்த்தேன். அவர்களுக்கு  ஹிந்து மத சம்பந்தம் இருந்ததை இது  ஞாபகப்படுத்தியது.    போர்னியோ அருகே  எவரும் பிரவேசிக்காத  VIRGIN FOREST உள்ளே சென்று  ஆராய்ந்ததில் சில சாசன ங்களில் ஹிந்து ராஜா ஒருவன் ஆண்டது பற்றி, யூபஸ்தம்பம் கட்டியது. யஞம் வளர்த்தது, வேத பிராமணர்களுக்கு  கற்பக விருக்ஷ தானம் செய்தது பற்றி கிரந்தம் மாதிரி எழுத்தில்  இருப்பதை கண்டார்கள். 
இதிலிருந்து நம்மவர்கள் அங்கெல்லாம் போய் இருந்தார்கள் என்று சொல்வதை விட, எல்லா இடத்திலும் நமது  மதம் பரவி இருந்தது தெரியும்போது எதற்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்? 
நமது சாஸ்திரங்கள், தர்மம் அவ்வளவு பழமை வாய்ந்தது என்றால் அவற்றில் சொல்லப் பட்டிருப்ப தும் நிஜம், உண்மை, சத்தியம் தானே.   வேத சாஸ்திரத்தில் ஏழு சமுத்ரங்கள் பற்றி சொல்லி இருக்கிறது, பால், தயிர், நெய்,கரும்பு சாறு, கள் கடல்கள் என்று  ஆனால்  இப்போது இருப்பது உப்பு நிறைந்த சமுத்திரம் தான்.  மற்றவை எங்கே என்று யாராவது ஆராய்ச்சியாளர்கள் தேடட்டும்.  

ஈஸ்வரன்  இந்த சகல லோகத்துக்கும் ஒரே தர்மத்தை தான் ஆரம்பத்தில் வைத்திருந்தாலும் இப்போது  கலியுகத்தில் நமக்கு மட்டும் தான் இந்த தர்மம் உள்ளது.   இந்த உலகமே  ஏழு திவீபங்கள் கொண்டது.  ரெண்டு திவீபங்களுக்கு இடையே ஒரு சமுத்திரம்.  அதில் ஜம்புத்வீபத்தில்   நாம் உள்ளோம்.  ஒவ்வொரு வர்ஷத்திலும் பல கண்டங்கள் உண்டு. பாரத வர்ஷத்தில்  பரத கண்டம்  நாம்  வாழும் உலகம். எல்லாவற்றுக்கும் வடக்கே மேரு.  அதன் சிகரத்தில் ஸ்வர்கம்.   மேருவுக்கு  அப்புறம் ஒன்றும் இல்லை. 
 வெள்ளைக்காரன் தான்  பூமி உருண்டை என்று கண்டுபிடித்ததாக  நாமே  பறை சாற்றுவது அறியாமை.  தப்பாகவே  நான் எல்லாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.  பூகோளம்  என்று நாம் பல யுகங்களுக்கு முன்பே சொல்லி இருக்கிறதை மறந்து விட்டார்கள்.  அண்டம் பகிரண்டம் என்ற வார்த்தை யுகங்களாக இருக்கிறது.  அண்டம் என்றால் முட்டை . முட்டை, கோளம்  என்றால் உருண்டை.  விஞ்ஞானம் பூகோள சாஸ்திரம்  எல்லாம் தெரிந்த வார்த்தைகள். ஆனால் வெள்ளைக்காரனுக்கு கண்டுபிடித்தான் என்ற பெருமை. 
மேருவை சூரியன் சுற்றி வருகிறான்.  சூரியன் இல்லாவிட்டால் இருட்டு. அங்கு  சூரியன் ஆறுமாசம் இருட்டு  ஆறுமாசம். ஆறுமாசம் பகல், ஆறுமாதம்  இரவு.  அதனால் தான் தேவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு வருஷம் என்கிற காரணம்.   மேருவின் வடக்கு பாகம்  சுமேரு. தெற்கு பாகம் மேரு.   அதற்கு கீழே நரகம்.   பூமியின்  அதிர்வில்  ஆட்டத்தில்   பூமி   நேராக சுற்றுவது சாய்ந்து போய் விட்டது.  சப்த திவீபங்களும்  சுழற்சியில் இடம்  மாறிவிட்டன. ஏழு சமுத்ரங்களும் ஒன்றாக கலந்து உப்புக்   கடலாகி விட்டன என்று எடுத்துக் கொள்வோம். உலகம் என்பது மாறிக்கொண்டே இருப்பது. 
பரார்த்தம் என்கிறோமே, பரம்  என்பது தான் ப்ரம்மாவின்  ஆயுள்.  பரம் என்பது ஆயிரம் சதுர்யுகம்.  பிரம்மனுக்கு  ஒருநாள்.  நூறு வருஷம் கொண்டது ஒரு பரம்.  நமது கலியுகத்திலேயே  நாலு லக்ஷம் வருஷங்களுக்கு மேல் இது வரை ஆகிவிட்டது.  பரம் முடிவில் தான்  பிரம்மாவுக்கு மோக்ஷம்.  
அப்பைய தீக்ஷிதர் தம்பி பேரன் நீலகண்ட தீக்ஷிதர்  சிவோத்கர்ஷ மஞ்சரி என்ற புஸ்தகத்தில்  பூமி சுற்றுவதை சொல்லி இருக்கிறார். அதுவும் வெள்ளைக்காரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே .    ஆரியபட்டா , வராஹமிஹிரர் ஆகியோர் தமது ஸ்லோகங்களில் பூமி சுழல்வதை குறிப்பிட்டிருக் கிறார்கள்.  நமது முன்னோர்கள்  பல  நூற்றாண்டுகளுக்கு  முன்பே  பூமிக்கு ஆகர்ஷண சக்தி உண்டென்பதை அறிந்திருக்கிறார்கள். இத்தனை  சாஸ்திரங்களையும் உடைய நமது மதம் மிகப் புராதனமானது.  நமது மதம் உலகெங்கும் பரவி இருந்து பல புதிய  மதங்கள் அதிலிருந்து பிரிந்து  ஆங்காங்கே  முளைத்தவை மட்டும் தான்  நம் கண்ணில் படுகிறது.  
ஒரு விளக்கை சுற்றி  திரை போட்டு மறைத்து,   திரையில் ஒரு இடத்தில் சின்னதாக  ஒரு  தாமரைப் பூ மாதிரி கத்தரித்து விட்டால், வெளிச்சம் தாமரைப்பூ மாதிரி வெளியே  விழும். அது போல் பிற மதங்கள் முழுசாக  நமது மதத்திலிருந்து தமக்கென்ற ஒரு  அடையாளத்தோடு  தனிப்பெயரோடு  பிறந்தவை.  தோன்றுபவை.   நமக்கு அடையாளமே  இல்லை. பெயரும் இல்லை. எவராலும் வைக்கவும் முடியாதது.
ஸமஸ்க்ரிதம்  என்பது நமது மதத்தைப்  போல் ஒரு பொது பாஷை. அதிலிருந்து  கொஞ்சம் கொஞ்சமாக உருவானவை மற்ற மொழிகள். இந்தி, இந்துஸ்தானி, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம்  தமிழ்   ஆகியவற்றுக்கு தேசம் உண்டு, ஆதாரமான பழைய  சமஸ்க்ரிதத்துக்கு தேசம் இல்லை. ஏனென்றால் எல்லா தேசத்திலும் அது இருந்ததால்   அதற்கென்று  தனி தேசம்  எதுவும் இல்லை. மற்றவற்றுக்கு இடமளித்த அதை செத்துப்போன பாஷை என்பது தவறு. 
எனக்கு முன் பிறந்த அண்ணா செத்துப்  போனபோது   என் அம்மா அழவில்லை. '' ஏன் அம்மா  அண்ணா செத்துப்போனதற்கு நீ  அழவில்லை. நான் செத்துப்  போனால் அழுவாயா, மாட்டாயா?'' என்று கேட்டேன்.   ''நீயும் அவனைப்போல் எனக்கு பிள்ளை. அவன் உடம்பால் செத்து போனான், நீ மனசிலே  செத்துப்போ''  என்றாள் .   அப்படி மனசிலே செத்துப்போன  மொழி தான் ஸமஸ்க்ரிதம் .  ஸமஸ்க்ரிதம்  எல்லா பாஷைகளிலும் கலந்துள்ளது. அதை பிரிக்க முடியாது. அது சாகவில்லை, சாகாது.   உடம்பில் உயிர் இருக்கிறது. உடம்பு செத்துப்  போகிறது. உயிர் சாவதில்லை. உயிருக்கு தனி உயிர் இல்லை. அதுவே சாஸ்வதம். ஸமஸ்க்ரிதம்  எல்லா பாஷைகளுக்கும் உயிர்ச்சக்தியாக இருக்கிறது. 
இப்படி  உலகமுழுதும் பரவி இருந்தது நமது மதமும் ஸமஸ்க்ரிதமாகிய நமது மொழியும். அவற்றிற்கு பிரமாணம்  வேதம். ஆகவே  ஒருவிதத்தில் எல்லா மதங்களும் நமது மதமே.  எல்லாமும் ஒன்றாக சேரும் நாள் மீண்டும் வரலாம். அகம்பாவம் இல்லாத அன்போடு  சம்பாஷித்தால்எல்லோரும் ஒன்று  சேரலாம்.  நமது வார்த்தையை பிரியமாக கேட்பார்கள்.  மனசுகள்   அனைத்தும் ஒன்றாகும். மீண்டும்  அகண்டமாக நமது மதம் விளங்கும்.''
மஹா வாயால் பேசும்போது இது எவ்வளவு அருமையான  பிரசங்கமாக இது இருந்திருக்கும். கேட்ட மைலாப்பூர்  வாசிகள் இன்னும் யாரவது இருக்கலாம் என்று தோன்றுகிறது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...