Sunday, July 4, 2021

SRIMAN NARAYANEEYAM

 

ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN
18வது தசகம்.


18. ஸர்வமும் நீயே ஸஹஸ்ரநாமா...


जातस्य ध्रुवकुल एव तुङ्गकीर्ते-
रङ्गस्य व्यजनि सुत: स वेननामा ।
यद्दोषव्यथितमति: स राजवर्य-
स्त्वत्पादे निहितमना वनं गतोऽभूत् ॥१॥

jaatasya dhruvakula eva tungakiirterangasya
vyajani sutaH sa venanaamaa |
taddOShavyathitamatiH sa raajavaryastvatpaade
nihitamanaa vanaM gatO(a)bhuut || 1

ஜாதஸ்ய த்⁴ருவகுல ஏவ துங்க³கீர்தே-
ரங்க³ஸ்ய வ்யஜனி ஸுத꞉ ஸ வேனநாமா |
தத்³தோ³ஷவ்யதி²தமதி꞉ ஸ ராஜவர்ய-
ஸ்த்வத்பாதே³ விஹிதமனா வனம் க³தோ(அ)பூ⁴த் || 18-1 ||

குருவாயூரப்பா, உன் எதிரில் உட்கார்ந்திருக்கும்போது ஆச்சர்யமாக எவ்வளவோ விஷயங்கள் உன்னைப் பற்றி என் நினைவுக்கு வருகிறது பார்த்தாயா? அங்க தேசத்து ராஜா ஒருவன், நான் சொன்னேனே துருவ சக்ரவர்த்தி பற்றி , அவன் வம்சத்தை சேர்ந்தவன். அந்த ராஜாவுக்கு ஒரு பிள்ளை.வீணாகபோனவனுக்கு வேணா என்று பெயர். அங்க தேசத்து ராஜாவுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்ததில் ரொம்ப வருத்தம். மனம் ஒடிந்து காட்டுக்கு சென்றான் தவமிருக்க. அவன் மனம் பூரா உன்மேல் இருந்தது.


पापोऽपि क्षितितलपालनाय वेन:
पौराद्यैरुपनिहित: कठोरवीर्य: ।
सर्वेभ्यो निजबलमेव सम्प्रशंसन्
भूचक्रे तव यजनान्ययं न्यरौत्सीत् ॥२॥

paapO(a)pi kshititalapaalanaaya venaH
pauraardyairupanihitaH kaThOraviiryaH |
sarvebhyO nijabalameva samprashamsan
bhuuchakre tava yajanaanyayaM nyarautsiit || 2

பாபோ(அ)பி க்ஷிதிதலபாலனாய வேன꞉
பௌராத்³யைருபனிஹித꞉ கடோ²ரவீர்ய꞉ |
ஸர்வேப்⁴யோ நிஜப³லமேவ ஸம்ப்ரஶம்ஸன்
பூ⁴சக்ரே தவ யஜனான்யயம் ந்யரௌத்ஸீத் || 18-2 ||

வேணா கெட்டவன் தான். இருந்தாலும் நல்ல பலசாலி. அடுத்த ராஜாவாக்கி விட்டார்கள் அவனை. அவனை பலசாலி என்று பலர் அவன் காது கேட்க புகழும்போது அவனுக்கு உச்சி குளிர்ந்து விடாதா? உனக்குப் பிடித்த யாக, ஹோமத் தீயை எங்கே ரிஷிகள் முனிவர்கள் வளர்த்தாலும் உடனே அதை அணைக்க கிளம்பி விடுவான் வேணா.

सम्प्राप्ते हितकथनाय तापसौघे
मत्तोऽन्यो भुवनपतिर्न कश्चनेति ।
त्वन्निन्दावचनपरो मुनीश्वरैस्तै:
शापाग्नौ शलभदशामनायि वेन: ॥३॥

sampraapte hitakathanaaya taapasaughe
mattO(a)nyO bhuvanapatirna kashchaneti |
tvannindaavachanaparO muniishvaraistaiH
shaapaagnau shalabhadashaamanaayi venaH || 3

ஸம்ப்ராப்தே ஹிதகத²னாய தாபஸௌகே⁴
மத்தோ(அ)ன்யோ பு⁴வனபதிர்ன கஶ்சனேதி |
த்வன்னிந்தா³வசனபரோ முனீஶ்வரைஸ்தை꞉
ஶாபாக்³னௌ ஶலப⁴த³ஶாமனாயி வேன꞉ || 18-3 ||

ரிஷிகள் முனிவர்கள் வேத பிராமணர்கள் எல்லோரும் மெதுவாக வேணாவிடம் போய் விஷ்ணுவை திருப்தி படுத்த யாக ஹோமம் செய்வதால் எவ்வளவு நன்மை என்று அவனுக்கு எடுத்துரைத்தும் ''அதெல்லாம் சரி, அந்த ஹோமம் யாகம் எல்லாம் எனக்கு என்று பண்ணாமல் என்னை விட்டு வேறு எவனுக்கோ அந்த நாராயணனுக்கு என்றால் நான் எப்படி அதை ஆதரிக்க முடியும். என்னைவிட பலசாலி இந்த உலகில் எவனும் இல்லையே? என்று பதில் சொல்வான் வேணா.

ரிஷிகளையும் உன்னையும் கடின வார்த்தைகளால் வேணா இகழ்ந்து பேசியதை ரிஷிகள் மனம் புண்பட்டார்கள். ரிஷிகள் இவனைத் திருத்த முடியாது அழிக்கப்பட வேண்டியவன் என்று சாபமிட்டார்கள் . சாபம் பலித்து வேணா விளக்கில் விட்டில் பூச்சியாக மாண்டானே, ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறார் நாராயண நம்பூதிரி.
ஆமாம் என்று தலையாட்டுகிறான் குருவாயூரப்பன்.
तन्नाशात् खलजनभीरुकैर्मुनीन्द्रै-
स्तन्मात्रा चिरपरिरक्षिते तदङ्गे ।
त्यक्ताघे परिमथितादथोरुदण्डा-
द्दोर्दण्डे परिमथिते त्वमाविरासी: ॥४॥

tannaashaat khalajanabhiirukairmuniindraiHstanmaatraa
chiraparirakshite tadange |
tyaktaaghe parimathitaadathOrudaNDaaddOrdaNDe
parimathite tvamaaviraasiiH || 4

தன்னாஶாத்க²லஜனபீ⁴ருகைர்முனீந்த்³ரை-
ஸ்தன்மாத்ரா சிரபரிரக்ஷிதே தத³ங்கே³ |
த்யக்தாகே⁴ பரிமதி²தாத³தோ²ருத³ண்டா³-
த்³தோ³ர்த³ண்டே³ பரிமதி²தே த்வமாவிராஸீ꞉ || 18-4 ||

நாராயணா, உனக்கு இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? அப்புறம் நடந்த விஷயத்தால். வேணா இறந்தபின் அவன் அம்மா என்ன செய்தாள்? அவனது உடலை பத்திரப்படுத்தி வைத்தாள் . வேணா இறந்தபின் அங்க தேசத்துக்கு பாதுகாப்பு இல்லையே. இன்னொரு பலமான நல்ல ராஜா வேண்டுமே? உத்திரம் போன்ற பெரிய கனமான பலமுள்ள வேணாவின் தொடைகள் , அவனது நீண்ட சக்தி வாய்ந்த கைகள் இவற்றிலிருந்து அவன் செய்த பாபங்களை எல்லாம் விலக்கிவிட்டு ரிஷிகள் ஒரு புது ஜீவனை உருவாக்கினார்கள். அது யார் தெரியுமா? நீதான் உண்ணி கிருஷ்ணா அது?

विख्यात: पृथुरिति तापसोपदिष्टै:
सूताद्यै: परिणुतभाविभूरिवीर्य: ।
वेनार्त्या कबलितसम्पदं धरित्री-
माक्रान्तां निजधनुषा समामकार्षी: ॥५॥

vikhyaataH pR^ithuriti taapasOpadiShTaiH
suutaadyaiH pariNutabhaavibhuuriviiryaH |
venaartyaa kabalitasampadaM dharitriimaakraantaaM
nijadhanuShaa samaamakaarShiiH || 5

விக்²யாத꞉ ப்ருது²ரிதி தாபஸோபதி³ஷ்டை꞉
ஸூதாத்³யை꞉ பரிணுதபா⁴விபூ⁴ரிவீர்ய꞉ |
வேனார்த்யா கப³லிதஸம்பத³ம் த⁴ரித்ரீ-
மாக்ராந்தாம் நிஜத⁴னுஷா ஸமாமகார்ஷீ꞉ || 18-5 ||

குருவாயூரப்பா, உனக்கு அப்போது என்ன பேர் தெரியுமா? ப்ருது. நீ மிகச் சிறந்தவனாக விளங்கப் போகிறாய் என்று எல்லோரும் முன்கூட்டியே ரிஷிகள் தவசக்தியால் உணர்ந்து பாடினார்கள், மகிழ்ந்தார்கள். பூமியில் வேணாவின் காலத்தில் அளவற்ற செல்வங்கள் மறைந்து போய்விட்டதை அறிந்து உன்னை வேண்டினார்கள். ப்ருதுவாக நீயும் அவற்றை மீட்டுக் கொடுத்தாய். பூமி விழுங்கிய செல்வத்தை உன் சக்தி வாய்ந்த தனுசுவை, வில்லை, பூமியில் ஊன்றி வெளிக் கொணர்ந்து பூமியைச் சீராக்கினாய்.

भूयस्तां निजकुलमुख्यवत्सयुक्त्यै-
र्देवाद्यै: समुचितचारुभाजनेषु ।
अन्नादीन्यभिलषितानि यानि तानि
स्वच्छन्दं सुरभितनूमदूदुहस्त्वम् ॥६॥

bhuuyastaaM nijakulamukhyavatsayuktairdevaadyaiH
samuchitachaarubhaajaneShu |
annaadiinyabhilaShitaani yaani taani
svachChandaM surabhitanuumaduuduhastvam || 6

பூ⁴யஸ்தாம் நிஜகுலமுக்²யவத்ஸயுக்தை-
ர்தே³வாத்³யை꞉ ஸமுசிதசாருபா⁴ஜனேஷு |
அன்னாதீ³ன்யபி⁴லஷிதானி யானி தானி
ஸ்வச்ச²ந்த³ம் ஸுரபி⁴தனூமதூ³து³ஹஸ்த்வம் || 18-6 ||

தேசம் அபிவிருத்தி அடைய, ப்ருது வாக நீ என்ன செய்தாய்? பல வம்ச தலைவர்களை, தேவர்கள் மூலம் கன்றுக்குட்டிகளாக்கினாய். பூமித்தாய் சுரபி எனும் பசுவானாள் . அந்த கன்றுகளுக்கு தக்க பாத்திரங்களில் பால் வழங்கப்பட்டு தர்மம் இவ்வாறு வளர்ந்தது..

आत्मानं यजति मखैस्त्वयि त्रिधाम-
न्नारब्धे शततमवाजिमेधयागे ।
स्पर्धालु: शतमख एत्य नीचवेषो
हृत्वाऽश्वं तव तनयात् पराजितोऽभूत् ॥७॥

aatmaanaM yajati makhaistvayi tridhaamannaarabdhe
shatatamavaajimedhayaage |
spardhaaluH shatamakha etya niichaveShO
hR^itvaa(a)shvaM tava tanayaat paraajitO(a)bhuut || 7

ஆத்மானம் யஜதி மகை²ஸ்த்வயி த்ரிதா⁴ம-
ந்னாரப்³தே⁴ ஶததமவாஜிமேத⁴யாகே³ |
ஸ்பர்தா⁴லு꞉ ஶதமக² ஏத்ய நீசவேஷோ
ஹ்ருத்வா(அ)ஶ்வம் தவ தனயாத் பராஜிதோ(அ)பூ⁴த் || 18-7 ||

நாராயணா, நீ மூவுலகிலும் எங்கும் எதிலும் காணப்படுபவன். ப்ருதுவாக நீ வளர்த்த யாகம் ஹோமங்கள் அனைத்திலும் உன்னை நீயே வணங்கினாய் என்று தான் பொருள். நூறாவது அஸ்வமேத யாகத்தை ப்ருது இவ்வாறு நடத்திய போது இந்திரன் பொறாமை கொண்டான். ஒரு கொடியவனாக வேடம் கொண்டு வந்து அஸ்வமேதத்துக்கு முக்கியமான குதிரையைக் கடத்தி சென்றுவிட்டான். ப்ருது ராஜாவின் ராஜகுமாரர்கள் பார்த்துக் கொண்டா இருப்பார்கள். திருடியவனைத் துரத்தி தோற்கடித்தார்கள்.

देवेन्द्रं मुहुरिति वाजिनं हरन्तं
वह्नौ तं मुनिवरमण्डले जुहूषौ ।
रुन्धाने कमलभवे क्रतो: समाप्तौ
साक्षात्त्वं मधुरिपुमैक्षथा: स्वयं स्वम् ॥८॥

devendraM muhuriti vaajinaM harantaM
vahnau taM munivaramaNDale juhuuShau |
rundhaane kamalabhave kratOH samaaptau
saakshaattvaM madhuripumaikshathaaH svayaM svam ||8

தே³வேந்த்³ரம் முஹுரிதி வாஜினம் ஹரந்தம்
வஹ்னௌ தம் முனிவரமண்ட³லே ஜுஹூஷௌ |
ருந்தா⁴னே கமலப⁴வே க்ரதோ꞉ ஸமாப்தௌ
ஸாக்ஷாத்த்வம் மது⁴ரிபுமைக்ஷதா²꞉ ஸ்வயம் ஸ்வம் || 18-8 ||

இந்த இந்திரனை சும்மா விடக்கூடாது என்று ரிஷிகள் கோபத்தோடு முடிவெடுத்தார்கள். அஸ்வமேத யாக குதிரையை திருடியவனை யாகத்தீயில் அர்ப்பணிக்க வேண்டும் என நினைத்தார்கள். பிரம்மா குறுக்கிட்டு அவர்களை சமாதானப்படுத்தி தடுத்தார். பிருதுவாகி நீ அஸ்வமேதயாகத்தை சிறப்பாக நடத்தி அந்த யாகத்தில் திருப்தி அடைந்த மஹாவிஷ்ணுவாகவும் நீயே காட்சி அளித்தாய்.


तद्दत्तं वरमुपलभ्य भक्तिमेकां
गङ्गान्ते विहितपद: कदापि देव ।
सत्रस्थं मुनिनिवहं हितानि शंस-
न्नैक्षिष्ठा: सनकमुखान् मुनीन् पुरस्तात् ॥९॥

taddattaM varamupalabhya bhaktimekaaM
gangaante vihitapadaH kadaapi deva |
satrasthaM muninivahaM hitaani shamsannaikshiShThaaH
sanakamukhaan muniin purastaat || 9

தத்³த³த்தம் வரமுபலப்⁴ய ப⁴க்திமேகாம்
க³ங்கா³ந்தே விஹிதபத³꞉ கதா³பி தே³வ |
ஸத்ரஸ்த²ம் முனினிவஹம் ஹிதானி ஶம்ஸ-
ந்னைக்ஷிஷ்டா²꞉ ஸனகமுகா²ன் முனீன் புரஸ்தாத் || 18-9 ||


''ஆஹா. குருவாயூரப்பா, மஹாவிஷ்ணு உனது சுத்த ஆத்ம பக்தியை மெச்சி வரமளித்த போது நீ கங்கைக்கரையில் மற்ற ரிஷிகளுக்கு, முனிவர்களுக்கு யாகத்தை அவிர்பாகத்தை தர்மத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாய். அப்போது உன் முன்னே தோன்றியவர் தான் ரிஷி சனகரும் மற்ற ரிஷிகளும்.
சரிதானே நான் சொல்வது? என்று கேட்ட நம்பூதிரிக்கு குருவாயூரப்பன் புன்னகையோடு ஆமாம் என்று தலை அசைத்தான்.

विज्ञानं सनकमुखोदितं दधान:
स्वात्मानं स्वयमगमो वनान्तसेवी ।
तत्तादृक्पृथुवपुरीश सत्वरं मे
रोगौघं प्रशमय वातगेहवासिन् ॥१०॥

vij~naanaM sanakamukhOditaM dadhaanaH
svaatmaanaM svayamagamO vanaantasevii |
tattaadR^ikpR^ithuvapuriisha satvaraM me
rOgaughaM prashamaya vaatagehavaasin ||10

விஜ்ஞானம் ஸனகமுகோ²தி³தம் த³தா⁴ன꞉
ஸ்வாத்மானம் ஸ்வயமக³மோ வனாந்தஸேவீ |
தத்தாத்³ருக்ப்ருது²வபுரீஶ ஸத்வரம் மே
ரோகௌ³க⁴ம் ப்ரஶமய வாதகே³ஹவாஸின் || 18-10 ||

சனகர் மற்ற ரிஷிகள் மிகவும் மகிழ்ந்து ப்ருதுவாகிய உனக்கு ஞானம் புகட்ட, நீ தவத்தில் ஈடுபட்டு நீயாகவே ஆகிவிட்டாய். மஹா விஷ்ணு, நாராயணன், ப்ருது எல்லாம் நீதானே குருவாயூரப்பா, அந்த ப்ருதுவுக்கு அருளியது போல் என் குறைகளையும் நீக்கி அருள் புரிவாய்.
இவ்வாறு ஸ்ரீமந் நாராயணீயம் 18வது தசகம் நிறைவு பெறுகிறது.

தொடரும்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...