Friday, July 2, 2021

TEMPLE VISIT




 கீழச்  சூர்ய மூலை  சிவாலயம்.  -  நங்கநல்லூர்  J K  சிவன் 


தமிழகத்தில் எண்ணற்ற  சிவ  விஷ்ணு கோவில்கள்  காலம்  காலமாக இருந்தவை  சில  காலத்தால் மறைந்தவை போக  மீதி   வெள்ளைக் காரர் கொள்ளைக்காரர்களால்  வெளியிலிரு ந்தும் உள்ளேயிருந்தும் அழிந்து கொண்டே  வந்துள்ளன.   அதுவும் தஞ்சாவூர்  தஞ்சாவூர் மாவட்டம்  காவிரிக்கரையில் இரு மருங்கிலும் உள்ள ஊர்களில் கணக்கற்ற  கோவில்கள் இருந்தவை போக இருக்கின்றவை  உரு மாறிக்கொண்டு வருகிறது.

 திருவிடைமருதூர் வட்டம் கீழசூரியமூலையில் அமைந்துள்ள  ஆயிரக்கணக்கான வருஷங்கள் தொன்மை வாய்ந்த  அருள்மிகு சூரிய கோடீஸ் வரர் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியா தென்றால் இப்போது தெரிந்து கொள்ளலாம். 

இந்த  ஆலயம்   யாக்ஞவல்கியரால்  வழிபடப் பட்ட   சிவஸ்தலம்.உலகுக்கெல்லாம் ஒளி தருபவன்  கதிரவன்.  சூரிய  பகவான்,. அவருக்கு ஒரு  வருத்தம்.  ஆஹா  இந்த மாலை நேரங்களில் வரும்  பிரதோஷ வழிப்பாட்டைத் தரிசிக்க முடியாமல்  நாளெல்லாம் மேலே இருந்தும்  மறைந்து போகிறோமே .  பிரதோஷ  வழிபாட்டை எப்போது எப்படி பார்த்து மகிழ்வது? என்னுடைய நித்ய  கர்மாவில்  இது எப்படி சாத்தியம்?
ஒருநாள்  நீண்ட பெருமூச்சு  விட்டுக் கொண் டிருந்த தனது குருவிடம் அவர் சிஷ்யர்  ரிஷி யாக்ஞவல்கியர் கேட்டார்: 

''குருநாதா,  சூர்யா பகவானே, உங்களை ஏதோ ஒரு எண்ணம்  வாட்டுபவது  போல் இருக்கிறதே, என்ன வருத்தம் உங்களுக்கு என்று இந்த அடிமை யிடம் சொல்லலாமா?''

''சொல்கிறேன்  கேள்''   என்று  சிஷ்யனிடம் சூரியன்  தனது  நிறைவேறாத விருப்பத்தை தெரிவித்தான்  சூரியன்..

 சூரியனிடமிருந்து வேதங்களைக் கற்ற அந்த சிஷ்யர் யாக்ஞவல்கியர்  தான் அனுதினமும் வழிபடும் இந்த    ஸ்தலத்தின்  மூலவரான ஸ்ரீ  சூரிய கோடீஸ்வர சிவனிடம்  சூரியனின் ஏக்கத்தைக் கூறி,   எப்படியாவது தன் குருவுக்கு   மாலைவேளை நடக்கும்  பிரதோஷ பூஜையில் பங்கேற்க வழி செய்யவேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்.   அப்போதெல்லாம்  குரு பக்தி எப்படி இருந்தது பாருங்கள்.

சூர்ய கோடீஸ்வரா, உனது இந்த  அனுகிரஹத் துக்கு காணிக்கையாக  நான் இது வரை  சூரியனிடம் கற்ற சகல  வேதங்கள் அனைத் தையும்  உங்களுக்கு   தக்ஷணையாக்குகிறேன் என்று  வேதாக்னி யோகப் பாஸ்கர சக்கர வடிவமாகச் செய்து, அதன் பலன்களைப் பொறித்து, அதை சூரிய கோடிப் பிரகாசரின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வேண்டினார். அப்படி அவர் சமர்ப்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாகத் தோன்றி வளர்ந்தது. தொடர்ந்து அந்த இடமே இலுப்பைக் காடாக மாறியது (கோயிலின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம்). 

இலுப்பை மர விதைகளைச் சேகரித்து  உலர்த்தி பொடித்து அரைத்து   இலுப்பை எண்ணெய்  எடுத்து  அதனால்  தினமும்  அஸ்தமன வேளை யில்  தீபங்கள் ஏற்றி  சிவனை  வழிபட்டார்  யாக்ஞ வல்கியர் ம் முதல் நாள்  பிரதோஷ காலத்தில், ஏற்றி வைத்த தீபங்கள்   மறுநாள் காலை வரை  அப்படியே சுடர் விட்டுக்கொண் டிருந்ததால், காலையில் உதித்தெழுந்த சூரியன்  இந்த ஆலயத்தில்   கோடி தீபங்களைக் கண்டு வணங்கி, பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் அனைத்தையும் பெற்றான்.   இது என் கதை அல்ல.  இந்த ஸ்தல வரலாறு சொல்வது. 
சூரியன் குறித்து வேறொரு புராணத் தகவலு ம் அறிந்தேன் 

தக்ஷ  யாகத்தில் கலந்துகொண்டதால் சிவனா ரின் கோபத்துக்கு ஆளான சூரியன் ஒளி யிழந்தான். பின்னர் தன் குருநாதரின் ஆலோச னைப் படி இலுப்பை வனமாகத் திகழ்ந்த இத்தலத்தை அடைந்தான். அங்கே வந்ததும் பேரொளி படர்வதைக் கண்டான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனைத் தினமும் பூஜித்து இழந்த ஒளியையும் சக்தியையும் பெற்றான். இதையொட்டி யுகம் யுகமாக சூரியன் தனது முதல் கதிரொளியை  இந்தத் தலத்து இறைவனின் மீது பாய்ச்சி வணங்கியபிறகே, பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களைப் பாய்ச்சு வதாக  புராணம் சொல்கிறது  சூரியனுக்கு   மூலாதார ஒளி சக்தியைக்  கொடுத்ததால்  இந்த ஊருக்கு சூர்ய மூலை என்று பெயர். இந்த  ஆலயத்தில்  இன்றும் அனுதினமும் சூரிய பூஜை  நடைபெறுகிறது. 

இந்த ஊரை அடையவேண்டுமானால்   கும்பகோணத்திலிருந்து  15 கி.மீ. தூரம்   கிழக்காக  செல்லவேண்டும்.   கீழச் சூரிய மூலை  பேர்  பெத்த பேர் என்றாலும் குட்டியூண்டு  ஊர்.    கடைகள்  ரொம்ப கிடையாது.  பூஜைப் பொருள் களை நாமே  கொண்டு செல்வது நல்லது..
‘‘சூரியனார்கோயிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில்தான் முழுச்ச க்தியையும் பெற்றான். நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோயில் தலத்தின் ஈசான்ய பாகத்தில், அதாவது கீழ் மூலையில் இருப்பதால்தான், இந்த ஊருக்கு கீழச் சூரிய மூலை என்றே பெயர் வந்தது. இங்கே சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சூட்சும வடிவில் இறைவனை வழிபடுவதாக நம்பிக்கை. அதை உறுதிப்படுத்துவது போல, கர்ப்ப கிரகத்தின் உள்ளும் வெளியே சந்நிதியிலும் எல்லா கோயில்களிலும் இருப்பதுபோல இருட்டாக இல்லாமல் வெளிச்சமாக இருக்கும். உள்ளே ஒரு கண்ணாடியைக் கொண்டு போனால், அதன் பிரதிபலிப்பு சுவரில் தெரியும்’’

இக்கோயிலில், கிழக்கு பார்த்த சுவாமி சந்நிதி.  உதிக்கின்ற சூரியனை மறைக்கும் என்பதால் ராஜகோபுரம் இல்லை. கோயிலுக்குள் நுழைந் தால், நந்தியும் பலிபீடமும், அதைத் தாண்டி சுவாமி, அம்பாள் சந்நிதி.

பித்ருக்கள் சாப நிவர்த்திக்கும்  பைரவர்  ஸ்தலம்.   சூரியன் மகிமையால் இங்கே  கண் நோய்கள், கண் பார்வை குறை பாடுகள்  நீங்கும். கிழக்குப் பார்த்த சந்நிதியில்  சூரிய கோடீஸ்வரர். தெற்கு நோக்கிய சந்நிதியில் பவளக்கொடி அம்பாள். இந்தச் சந்நிதிகள் அமைந்த மண்டபத்திலேயே பைரவரும், சூரியனும் எழுந்தருளி இருக்கி றார்கள்.

மகா மண்டபத்தைத் தாண்டி  வெளியே, பிராகாரத்தில்   புன்னகையோடு  ஆனந்த நிலையில் தக்ஷி ணாமூர்த்தி.  கன்னி மூலை கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, துர்கை ஆகிய தெய்வங்கள்  கோஷ்டத்தில்  அருள் பாலிக்கிறார்கள்.   இங்கே  சுக்கிர னையும் வணங்கலாம்.

‘‘கோயிலின் குபேர மூலையில், பத்மாசன கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் வலக்காலில் ஆறுவிரல்கள்.  ‘ஆறு’ என்பது சுக்கிரனுக்குரிய எண். எனவே சுக்கிரனின் ஆதிக்கம் அவளிடம் நிறைந்திருக்கிறது. மகாலட்சுமி எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை வணங்குவோருக்குச் செல்வத்தை அருளுவாள். சூரியனை நிமிர்ந்து பார்த்து வணங்கும் நாம், சுக்கிரனைக் குனிந்து வணங்குமாறு அவளுடைய வலக்காலில் ஆறு விரல்கள் அமைந்திருப்பது சிறப்பு. 

துர்கை  நம்மை நோக்கி எழுந்து ஓடிவருவது போல, வலக்காலை ஓரடி முன்வைத்து நிற்கிறாள். காலில் மெட்டி அணிந்து   அற்புதமாக  காட்சி தருகிறாள். ‘‘துர்கை ராகுவால் ஏற்படும் சோதனைகளி லிருந்து நம்மைக் காப்பவள். இங்கே ராகு காலத்தில் தீபம் ஏற்றி வணங்கு வோருக்கு, ஓடி வந்து அருள்செய்கிறாள் துர்கை.நவகிரக சந்நிதியில் எல்லா கிரகங்க ளுமே வாகனங்களுடன் இருப்பதும்  எல்லாரும்  சூரியனைப் பார்த்தபடி இருப்பதும்  ஆச்சர்யம்.

அகஸ்திய ரிஷி  ராமபிரானுக்கு  ஆதித்ய  ஹ்ருதய மந்த்ரங்கள் உபதேசித்தார் அல்லவா.   ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங் களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர உபதேசங்களை ராமனுக்கு வழங்கிய ஒரு ஸ்தலம் கீழச் சூரியமூலை.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...