Friday, July 2, 2021

FAITH

 



வைத்தீஸ்வரா..... - நங்கநல்லூர்  J.K. SIVAN

''சிலர் சிரிப்பார் சிலர் அழுவார், சிலர் சிரித்துக்கொண்டே அழுவார் என்று பாடிக் கொண்டேதேங்காய் மட்டை உறித்து கால் நகம் பெயர்ந்து போன கார்மேகத்துக்கு என்ன ஆயிற்று?


''ஹா என்று கத்திக்கொண்டே ரத்தம் சொட்ட வீட்டுக்குள் நொண்டிக்கொண்டே வந்ததும் வன் அத்தை ''சுண்ணாம்பை தேங்காய் எண்ணையில் குழைத்து தடவுடா முதலில்'' என்றாள்.

மனைவி வேதா ஒரு துணியை சுற்றி விட்டு, அவள் அண்ணன் சொன்ன குப்புரத்னம் டாக்டரைப் போய் உடனே பார்க்க சொன்னாள் . ஒரு களிம்பும் கலர் கலர் மாத்திரை ஆறும் கொடுத்து 200 ரூபாய் வாங்கிக் கொண்டார்.

ரெண்டு நாளில் கட்டை விரல் ஓரத்தில் சீழ் பிடித்து வலித்தது. ஆபீஸ் டாக்டர் மணிவண்ணன் பார்த்து விட்டு ''இந்த மருந்தெல்லாம் தப்பு. இந்தா இந்த லெட்டரை கொண்டுபோய் சைதாபேட்டை ஆஸ்பத்திரியில் டாக்டர் காத்தவராயனிடம் நான் கொடுத்தேன் என்று சொல்லி கொடு. உன்னை ஸ்பெஷலாக கவனிப்பார். எதற்கும் ஐந்நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு போ.''

மறுநாள் ஒன்பது மணியிலிருந்து காத்திருந்து 11 மணிக்கு காத்தவராயனை பிடித்து லெட்டரை நீட்டினான். 'யாருய்யா இந்த மணிவண்ணன்? ' என்று சள்ளென்று விழுந்த டாக்டர் அதை படிக்கவில்லை. டிங்க்சர் ஜிவ் வென்று எரிய அந்த புண்ணை கிளீன் செய்த காத்தவராயன். அதை கத்தியால் கிளறிவிட்டார். கத்தோ கத்து என்று கார்மேகம் கத்தினதை லட்சியம் செய்யவில்லை. நகம் துளியூண்டு விரலில் ஒட்டிக்கொண்டிருந்தது.

''ரெண்டு நாள் கழித்து வா'' என்று ஒரு பை நிறைய மருந்துகள் கொடுத்தார். 600 ரூபாய் அவனிடமிருந்து வெளியேறியது..

மறுநாளே வலி அதிகமாகி ஜுரம் வேறு வந்து விட்டது. பக்கத்து வீட்டுப்  பாண்டித்துரை  தனது ஸ்கூட்டரில் அவனை ஏற்றி மைலாப்பூர் அழைத்து சென்று  டெஸ்ட்கள் எடுத்து முடித்து  அங்கிருந்து எழும்பூர் போய்   ஒரு பெரிய தனியார் மருத்துவ மனையில்  வரிசையில் நின்றான். நிற்க முடியவில்லை. ஒரு ஓரமாக தரையில் அமர்ந்தான்.

''கருமேகம். கருமேகம்.'' ஒரு பெண் அழைத்தது தன்னைத்தான் என்று புரிந்து கொண்டான்
''கார்மேகம். உங்க கால் விரல் எக்ஸ்ரே  சரியாக எடுக்க வில்லை. இன்னொன்று இங்கே  எடுக்கணும். 47 வயசு. சக்கரை இருக்கா? ரத்த பரிக்ஷை வேறே பண்ணனும். வீட்டிலே அப்பா அம்மா யாருக்காவது சக்கரை?''
'அதெல்லாம் ஒன்னும் ஒருத்தருக்கும் இல்லேங்க''.

''சரி வாங்க என்கூட''. 
தர தர என்று ரெண்டு மாடி ஏற வைத்தாள் . எக்ஸ்ரே வை முறைத்து பார்த்த மீனாட்சி டாக்டர் வீட்டில் யாருடனோ வள்ளென்று போனில் விழுந்து விட்டு அவனை ஏற இறங்க பார்த்து. இதுக்கு முன்ன எப்பவாவது இது மாறி ஆயிருக்கா?

''எதுங்க? தேங்கா உரிக்கிறதா ? வாரத்துக்கு ஒரு தரவைங்க''.

''அப்போல்லாம் இது மாதிரி அடி பட்டு புண்ணாக இருக்கான்னு தானே கேட்டேன்?'' குரலை உயர்த்தினால் மீனாக்ஷி.

''இல்லே''. ஈனஸ்வரமாக தலை ஆட்டினான் கார்மேகம்.

''சரி கால் விரலை எடுக்கணும் போல இருக்கு. எதுக்கும் செகண்ட் ஒபினியன் கேட்க சர்ஜன் சண்முகம் கிட்டே போங்க''. ஒரு அட்ரஸ் எழுதிக் கொடுத்தாள் . 2800 ரூபாய் கழன்றது.

பாண்டியன் வீட்டுக்கு அவனை கூட்டிக் கொண்டு போனார். ''பார்த்தீங்களா நான் சொன்னா சரியா இருக்கும். நல்ல டாக்டருங்க இவங்கல்லாம். பட் பட்டுன்னு கண்டுபிடிச்சு ட்ரீட் பண்ணுவாங்க. என் மச்சினன் முதுகில ஒரு கட்டி. மூணே நாளுலே சரிப்படுத்தினாங்க. பெரிய ஆஸ்பத்திரிங்கறதாலே கொஞ்சம் பீஸ் ஜாஸ்தி. வேற என்ன பண்றது.?

மீனாக்ஷி அம்மாள்,   டாக்டர் திருமூர்த்திக்கு லெட்டர் கொடுத்ததை   நுங்கம்பாக்கத்தில் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் ரிப்போர்ட் கொடுத்து, அவர்  அதைப்  பார்த்தவுடன் அவர் ''மிஸ்டர் கார்மேகம். நீங்க ரொம்ப டிலே பண்ணிட்டீங்க. வேற வழியில்ல. கால் கட்டை விரலை எடுக்கணும். ஹார்ட்டுக்கு ரத்தத்திலே விஷம் மேலே ஏறாம பார்க்கணும். நாளைக்கு காலேலே 9 மணிக்கு அட்மிட் ஆனா செவ்வாய் கிழமை காலேலே ஆபரேஷன் பண்ணிடறேன். ஒரு கால் நகம் அடி பட்டு இவ்வளவு தூரம் முத்தி இருக்குன்னா வேறே ஏதோ ப்ராப்ளம் இருக்கு. எதுக்கும் ஒரு MRI எடுத்துடுங்க. வடபழனிலே ஒரு இடத்திலே போய் எடுங்க நல்லா எடுப்பாங்க.''

''ஐயோ ஸ்கேன் எடுக்க ரொம்ப ஆகும் என்பாங்களே''.
''பின்னே ஆகாதா?
''எவ்வளவோ டாக்டர் ஆகும்"
''ஐ சஸ்பெக்ட் போன் கான்செர்'' - ஆறு ஆயிரத்துக்குள்ளே ஆகும்.

அங்கேயே இடிந்து விழுந்தான் கார்மேகம். பிறகு நொண்டிக்கொண்டு எழுந்தான்.
ஆபரேஷன் பண்ணா சரியாயுடுங்களா? அதுக்கு எவ்வளவு டாக்டர்?
என்னய்யா பேசறே நீ? ஹார்ட்டை காப்பாத்த விலை பேசறியா?
''ரீஇம்பர்ஸ்மெண்ட் உண்டா. ஏதாவது மெடிகல் கவர் இருக்கா? அப்படின்னா அதுக்கேத்தமாதிரி ஆகும். இல்லேன்னா என் பீஸ் தான் குறைச்சுக்கணும். தர்மம் எல்லாருக்கும் பண்ணனும் னு எங்கப்பா சொல்வாரு. பண்றேன். ரொம்ப பண்ண முடியல்லே. இன்சூரன்ஸ் இல்லேன்னா 11500 ரூபா ஆகும்''

வேதா அழுதாள். 'வைதீஸ்வரா காப்பாத்து' . கல்யாண சங்கிலி கை மாறியது. மேலே ஆயிரம் ரூபாய் கடன் பாண்டித்துரை மனைவி கொடுத்தாள் . 

ரெண்டு நாளில் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த திருமூர்த்தி '' கை குடுய்யா. போன்லே ப்ராப்ளம் இல்லே. கங்க்ரீன் செட் ஆகி ஹார்ட் போறதுக்குள்ளே நாளைக்கு விரலை எடுத்துர்றேன் .

வியாழக்கிழமை சாயங்காலம் காலில் பெரிய கட்டுடன் கையில் ஒரு வாக்கரை வைத்துக்கொண்டு ஆட்டோவிலிருந்து கார்மேகம் வீட்டுக்குள் நுழைந்தான். மனதில் நிம்மதியும் வலது காலில் கட்டை விரலும் மட்டும் தான் இல்லை.

வேதாவின் மாமியார் ஊரிலிருந்து வந்தவள் அழுதாள். ''மாப்பிள்ளே ஆரம்பத்திலேயே மஞ்சத்துணியிலே வைதீஸ்வரனுக்கு அஞ்சு ரூபா முடிஞ்சு வைச்சிருக்க கூடாதா? குல தெய்வத்தை மறந்து யார் யாரோ சொல்றதை நம்பி காசையும் கட்டை விரலையும் இழந்துட்டிங்களே. உங்க மாமாவுக்கு குதிரை வண்டி தடம் புரண்டு விழுந்து ரெண்டு விரலே துண்டமா தொங்கி இருந்துது. ஒரே வாரத்திலே குணமாச்சு. வைத்தியம் வேணும்.  கோபால கிருஷ்ணன் நாட்டு வைத்தியர் பச்சிலை கட்டும்   வேணும்  வைத்தியநாதன் மேலே நம்பிக்கையும் வேணும் என்பார்.

 ஒண்ணு  தெரிஞ்சுக்குங்க. ஒரே வைத்தியர் கிட்டே போங்க. நம்புங்க. எது நடக்கணுமோ அது நடக்கும். எல்லோரும் சேர்ந்து விளை யாண்டிட்டாங்களே''    வைத்தீஸ்வரா  உன்னை மறந்துடறாங்களே.     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...