Tuesday, December 12, 2017

NEETHI SATHAKAM

ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:    


சுபாஷிதம்  - 11


परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये
स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् ।
अतश्चानैकान्त्याद्गुरुलघुतया‌உर्थेषु धनिनाम्
अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.45 ॥

parikṣīṇaḥ kaścitspṛhayati yavānāṃ prasṛtaye
sa paścātsampūrṇaḥ kalayati dharitrīṃ tṛṇasamām |
ataścānaikāntyādgurulaghutayā‌உrtheṣu dhaninām
avasthā vastūni prathayati ca saṅkocayati ca || 1.45 ||
பரிக்ஷீணஃ கஶ்சித்ஸ்ப்றுஹயதி யவானாம் ப்ரஸ்றுதயே
ஸ பஶ்சாத்ஸம்பூர்ணஃ கலயதி தரித்ரீம் த்றுணஸமாம் |
அதஶ்சானைகான்த்யாத்குருலகுதயா‌உர்தேஷு தனினாம்
அவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச || 1.45 ||


அவனுக்கு நல்ல பசி, காதை அடைத்து, கண் பஞ்சடைத்து, உடம்பு நொந்து போய் விழுந்து கிடைக்கும்போது ஒரு கவளம் சாதம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் அந்த ஒரு கவளம் சோறு  உலகை விட பெரிதாக அவனுக்கு தோன்றுகிறது.உயிர் வருகிறது. பஞ்ச காலத்தில்  ஒரு கைப்பிடி தானியம் கிடைக்காதா என்று ஏங்குகிறான்.  வறட்சி தீர்ந்து மீண்டும் சுபிக்ஷமாக செல்வந்தனாக வாழும் காலத்தில் இந்த உலகையே ஒரு கையளவு புல்லாக நினைக்க தோன்றுகிறதே!  ஏன்?  பெரியதோ சிறியதோ, ஒரு பொருளை அடைந்தவனின்
மனோபாவம் தான்.  அவனவன் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவனிடம் சேரும் செல்வ நிலை அவனை உலகத்தில் அவன் காணும் பொருள்களை பெரிதாகவோ சிறிதாகவோ, வேண்டியதாகவோ, வேண்டாததாகவோ நினைக்க செய்கிறது. 

 सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.47 ॥

satyānṛtā ca paruṣā priyavādinī ca
hiṃsrā dayālurapi cārthaparā vadānyā |
nityavyayā pracuranityadhanāgamā ca
vārāṅganeva nṛpanītiranekarūpā || 1.47 |


ஸத்யான்றுதா ச பருஷா ப்ரியவாதினீ ச
ஹிம்ஸ்ரா தயாலுரபி சார்தபரா வதான்யா |
னித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச
வாராங்கனேவ ன்றுபனீதிரனேகரூபா || 1.47 ||

ஒரு அரசவையில்  நாட்டியமாடும் பெண் அதிகாரம் கொண்டவள். மேலிடத்து ஆதரவு. அவளால் நினைத்ததை சாதிக்க முடியும்.  அந்தவூர்  ராஜாவைப் போல அவள். எப்போது என்ன செய்வாள் என்று அனுமானிக்க முடியாது.  ராஜாவைப்போல் சில சமயம் இது தவறு, பொய் ,இது நிஜம், இது கொடுமை, இது ஏற்புடையது, இது கொடூரம், இது தயாளமான செயல், இது தர்மம், இது அவசியம் தேவையானது, என்று  எல்லாம் மனதில் தோன்றி செயலாகும், பணத்தை  வாரி இறைக்க செய்யும்.  பணத்தை அள்ளி  குவித்து வைக்கவும் செய்யும். எல்லாம் மனம் போன போக்கு.

यद्धात्रा निजभालपट्टलिखितं स्तोकं महद्वा धनं
तत्प्राप्नोति मरुस्थले‌உपि नितरां मेरौ ततो नाधिकम् ।
तद्धीरो भव वित्तवत्सु कृपणां वृत्तिं वृथा सा कृथाः
कूपे पश्य पयोनिधावपि घटो गृह्णाति तुल्यं जलम् ॥ 1.49 ॥

 

yaddhātrā nijabhālapaṭṭalikhitaṃ stokaṃ mahadvā dhanaṃ
tatprāpnoti marusthale‌உpi nitarāṃ merau tato nādhikam |
taddhīro bhava vittavatsu kṛpaṇāṃ vṛttiṃ vṛthā sā kṛthāḥ
kūpe paśya payonidhāvapi ghaṭo gṛhṇāti tulyaṃ jalam || 1.49 ||

யத்தாத்ரா னிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்வா தனம்
தத்ப்ராப்னோதி மருஸ்தலே‌உபி னிதராம் மேரௌ ததோ னாதிகம் |
தத்தீரோ பவ வித்தவத்ஸு க்றுபணாம் வ்றுத்திம் வ்றுதா ஸா க்றுதாஃ
கூபே பஶ்ய பயோனிதாவபி கடோ க்றுஹ்ணாதி துல்யம் ஜலம் || 1.49 ||

எவன் நெற்றியிலே என்ன எழுதி வைத்திருக்கிறானோ அந்த பகவான் அது தான் நடக்கும். அவனுக்கு என்ன என்று விதித்திருக்கிறதோ அது தான் கிடைக்கும். அவன் ஏழையோ, பணக்காரனோ, அப்படித்தான் ஆகிவிடுவான். அவன் நீரற்ற பாலைவனத்தில் வாடவேண்டும் என்றிருந்தால், அவனை மஹா மேருவின் மேல் உச்சியில் அமர வைத்தாலும் அங்கும் வாடியே தீரவேண்டும். மனசை தளரவிடாமல் கெட்டியாக பிடித்துக்  கொள்.   பணக்காரனைப் பார்த்து பெருமூச்சு விடாதே. பொறாமை கொள்ளாதே.  உன் கையில் வைத்திருக்கும் குடம், அது உப்புத்தண்ணீர் நிறைந்த  கடல் நீர் என்றாலும்,  சுமாரான சுவை யுள்ள கிணற்று ஜலம் என்றாலும்,  இனிக்கும் சுவையான  கங்கை நீர் என்றாலும் அதே அளவு தான் கொள்ளும். இதை மறக்காதே. 

 
त्वम् एव चातकाधारो‌உ
सीति केषां न गोचरः ।
किम् अम्भोदवरास्माकं
कार्पण्योक्तं प्रतीक्षसे ॥ 1.50 ॥

tvam eva cātakādhāro‌உ
sīti keṣāṃ na gocaraḥ |
kim ambhodavarāsmākaṃ
kārpaṇyoktaṃ pratīkṣase || 1.5

த்வம் ஏவ சாதகாதாரோ‌உ
ஸீதி கேஷாம் ன கோசரஃ |
கிம் அம்போதவராஸ்மாகம்
கார்பண்யோக்தம் ப்ரதீக்ஷஸே || 1.50 ||

''ஹே  மேகமே, சூல் கொண்ட கருமேகமே , உன் மழைக்காக  ஒரு சொட்டு  நீருக்காக சாதக பக்ஷி எப்போதும் காத்திருப்பது யாருக்கு தான்  தெரியாது? நீ உதவுவாய் என்று அதற்கு தெரியும். காத்திருக்கும்.  எப்போது வரவேண்டுமோ அப்போது நீ வருவாய் மழையை அமோகமாக தருவாய் என்று  அறிவோம்.  எதற்கு எங்கள் வேண்டுதலுக்காக, அழுகை, கூக்குரலுக்காக  காத்திருக்கிறாய் மழை மேகமே ? ''  என்று  ராஜா பர்த்ருஹரி நீதி சதகத்தில் சொல்லியிருப்பதுடன் இன்று நிறுத்திக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...