Monday, December 11, 2017

KRISHNAMMAA 2




என் அம்மா பேர் கிருஷ்ணம்மா - 2
J.K.SIVAN

சாவி கொடுத்தால் ஓடும் கார், பட பட வென்று அடித்துக்கொண்டு நகரும் டமாரம், மணியடிக்கும் குரங்கு பொம்மை, தலையாட்டும் கரடி பொம்மை அடடா எத்தனை பொம்மைகள் நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்கிறோம். இது இப்போது....

அப்போது......

நானும் மற்ற குழந்தைகளை போல சாப்பிட ரொம்ப படுத்துவேன். காக்கா, குருவி, கிளி, வாத்து என்று பல பறவைகளை காட்டியே கவளம் சாதம் உள்ளே போக வைப்பாள் க்ரிஷ்ணம்மா. என் போன்றோர் கண்டு மகிழ அவற்றை படைத்தவளே அவள் தான்.

இதெல்லாம் தரையில் தோன்றி மகிழ்விப்பது ஒரு புறம் இருக்கட்டும். தண்ணீரில் தான் எத்தனை வகை உயிர்கள் படைத்து என் பொம்மையாக என்னை மகிழ்விக்கிறாய் நீ க்ரிஷ்ணம்மா . எண்ணிச் சொல்ல முடியுமா, மீன் வகைகளை, சுராவை, ஆமைகள், திமிங்கிலங்கள், நீர் யானைகள், அம்மம்மா, போதுமடி தாயே என்னால் சொல்லி மாளவில்லை. க்ரிஷ்ணம்மா கடலில், ஆறுகளில் வாழும் மீன்கள் பேரை சொல்லும்போது ஆச்சர்யமாக இருக்கும். இவ்வளவா?? சுறா, திமிங்கலம், ரம்ப மூக்கு மீன். இல்லை போல பரந்த ரெக்கை உள்ள மீன்.முதலைகள் அடேயப்பா எனக்கு இத்தனை நண்பர்களா?

என் தாய் எல்லோருக்கும் தாய். க்ரிஷ்ணம்மா, எத்தனை கோடி இன்பம் வைத்தவள். எவ்வளவு உயர்ந்த சாஸ்திரங்களை, வைத்திருக்கிறாள் நமக்கெல்லாம். இதற்கெல்லாம் மிஞ்சிய ஞானம் என்று ஏதாவது தனியாக உண்டா? இன்னொரு வேடிக்கை, நான் படித்து கேலி செய்வதற்கென்றே சில பொய் வேதங்களும் கூத்துகளும் கூட படைத்தவள் அவள்.

நீ என்ன தான் கேளேன். அடுத்த கணமே அதை தருவாள். பெற்றிட வழி செய்வாள். அதி ஆச்சர்யம் இதில் என்ன வென்றால், நான் கேட்குமுன்பே நான் விரும்பியதை விட எனக்கு தேவையானது எது என்று அறிந்து நிறைய அதை அளிப்பவள் க்ரிஷ்ணம்மாள். சுருக்கமாக சொல்லட்டுமா, என் க்ரிஷ்ணம்மாளுக்கு நான் என் அண்ணன் அர்ஜுனன் போலவே இன்னொரு செல்லப்பிள்ளை. ஆமாம் என்னையும் அவன் போலவே ஆக்கிடுவாள்.

பொம்மை எல்லாம் எனக்கேவா ?'' என்று, அது போல் இது எல்லாம் உலகில் படைத்து எனக்கு விளையாட தந்திருக்கிறாயா, எனக்கென படைத்தவளா நீ என் தாயே க்ரிஷ்ணம்மா?

குழந்தைகளுக்கு பெரிய எழுத்தில் பொம்மை போட்ட கதைப் புத்தகங்கள். ஒவ்வொருபக்கமும் கனத்த அட்டையோடு மழ மழவென்று வண்ணத்தோடு இருக்குமே ஆசையாக சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் சென்றுதான் பார்த்திருக்கிறேன். என் வீட்டில் அதெல்லாம் ஏது? இவையெல்லாம் குழந்தைக்கு கல்வியறிவு ஞானம் ஊட்டத்தானே. எனக்கும் இந்த உலகில் ஜோக் புத்தகம் போல ''வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்

மூத்தவர் பொய்ந்நடை யும் - இள மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;''. நீ தராதது ஒன்றுமே இல்லையடி என் தாயே. கிருஷ்ணம்மா.

போதும் போதும் என்று நான் திணறும் அளவுக்கு எனக்கு தின்பண்டங்கள் தந்தவள் நீ. செவி குளிர நான் ரசிக்கும் பாடங்கள் எல்லாமே நீயேவா, நீ தந்தவையா? என் நண்பர்கள் எல்லாருமே நீ தந்தவர்கள் தான். நடுவில் ஒரு சந்தேகம்.

'' ஏண்டியம்மா என் க்ரிஷ்ணம்மா, இத்தனை அழகாக விளையாட்டு பொம்மைகள்படைத்து எனக்கு கொடுத்தவளே எனக்கு காதல் உணர்வைக் கொடுக்க என் புத்தியை மயக்க அழகழகாக எதற்கு இந்த பெண்களைப் படைத்தாய்? என்னை ஆட்டிவைத்து நீ பார்த்து மகிழவா?''

இவ்வளவும் நீ எனக்குத் தந்திருக்கிறாயே என் கிருஷ்ணம்மா, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன். ஒன்றுமே செய்யப்போவதில்லை, பேசாமல் இரு கை கூப்பி என்னை என் மனதில் நிறைத்து ''ஹரி ஹரி ஹரி என்று சுருக்கமாக உன் பெயரை நினைப்பேன், பாடுவேன், பேசுவேன், கேட்பேன். உன்னைப் பாடும் எனக்கு அழியா புகழை நீ ஒருவள் தானே தரமுடியும் க்ரிஷ்ணம்மா!

நண்பர்களே, அன்பர்களே, 136 வருஷங்களுக்கு முன்பு இன்றைய நாளில் ஒரு அக்னிக்குஞ்சு தமிழ்நாட்டில் ஒரு வயிற்றிலிருந்து வெளிவந்தது. அது நாற்பது ஆண்டுகள் கூட வாழவில்லை. ஆனால் அதற்குள் அமரத்துவம் பெற்றது. அந்த நெருப்பு தான் உண்மையில் ஒரு புரட்சிக் கனல், அறிவுக்கனல், தேசீய கனல், சுதந்திர தாக கனல், பராசக்தி மீது தணியா பக்தி கனல், கிருஷ்ணனின் அருள் பெற்ற கனல். அந்த '' சிசு'' , தான் சின்னசாமி சுப்ரமணியன்.சி. சுப்ரமணிய பாரதி. இன்று பிறந்தநாள் காணும் அமரர்.

ஐந்து வயதில் அம்மா லக்ஷ்மியை இழந்த சிசு கண்ணனை தாயாக கண்டது.அந்த தாய் தான் நான் மேலே சொன்ன க்ரிஷ்ணம்மா. மேலே நான் எழுதியவை எல்லாம் பாரதியின் ''கண்ணம்மா என் தாய் '' என்ற பாடலின் வர்ணனை.

பின்னர் ஒரு காலத்தில் அம்மா ஊட்ட தேவையில்லாதபோது சாப்பிடவே சாதம் சரியாக கிடைக்கவில்லை ..அப்போது ஒரு நண்பன் வந்தான் நீலகண்ட பிரம்மச்சாரி கலெக்டர் ஆஷ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியகாக பல வருஷங்கள் சிறை சென்றவர். சமீபத்தில் பிறந்தநாள் கண்டவர் ---

''ஒரு நாலணா கொடேன். ரொம்ப பசிக்கிறது'' என்றான் நீலகண்டன். அதை கொடுக்க நாலணா கையில் இல்லாத ஒரு உலக கவிஞன் பாரதி பாடினான் அப்போது ...''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம்'..


கண்ணன் - என் தாய்
(நொண்டிச் சிந்து)

உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை

உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.1

இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2

விந்தைவிந்தை யாக எனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 3

வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண்.. 4

நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 5

சோலைகள் காவினங் கள் - அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ... 6

தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். ... 7

இறகுடைப் பறவைக ளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ... 8

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; ... 9

வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். ... 10

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...