Sunday, December 17, 2017

THIRUVEMBAVAI.2





மணிவாசகரின் மனம் இனிக்கும் திருவெம்பாவை. 2 - J.K. SIVAN


''பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.

''ஹே பெண்ணே, சிறந்த ஆபரணங்களை உடலில் அணிந்தவளே!
என்னடி எப்போதும் பேசுகிறாயே, யாரைப்பற்றி?'' என்று கேட்பேனே , அப்போது நீ சொல்வாய்?
இரவும் பகலும் நாம் பேசுவது ஒன்று தான். அது தான் எப்போதும் என் உள்ளே நிறைந்திருக்கும் அந்த தில்லை நாதனைப் பற்றி தான். என் அன்பு, ஒருவரிடத்தில் மட்டுமே,அது மேலான ஒளிப் பிழம்பானஅந்த தில்லை நாதனுக்கு மட்டும் தான் மட்டும் தான்'' என்று சொல்வாய்.

அப்படிப்பட்ட நீ ஏன் இப்போது இந்த பட்டு விரித்த படுக்கையிடம் அன்பு வைத்து அதை விட்டு எழுந்திருக்கவே இல்லை! என்கிறார்கள் அந்த தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் தோழிகள். அவளுக்காக காத்திருக்கிறார்கள் விடியற்காலை எழுந்து நீராட செல்வதற்கு.

அதற்கு அந்த தூங்கிய, அவள் தான் இப்போது விழித்துக் கொண்டு விட்டாளே! என்ன சொல்கிறாள்?

''பெண்களே! சீச்சி . போதும
டி ..... நீங்கள் பேசும் நகை மொழிகளில் இதுவும் ஒன்று , இதைப்போல் பல நான் உங்களிடம் கேட்டிருக்கிறேன். என்னோடு விளையாடி என்னை கேலி செய்ய இது சரியான ஒரு சமயம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

தேவர்களும் வழிபடுதற்கு கூச்சப்படும் அழகிய தாமரை மலர் போன்ற தனது திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவமானவன் என் தெய்வம். தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு,


ஒரு காலைத் தூக்கி நின்றாடும் கண்கண்ட தெய்வம் அந்த சபாபதி மீது அன்பு பொருந்திய நாம்-- அது தான் நானும் நீங்களும்... என்னைப்போய் நீங்கள்.....!! அந்த பெண் எழுந்து விரைந்து வாயிலில் காத்திருக்கும் பெண்களோடு சேர்ந்து கொள்கிறாள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...