Thursday, December 28, 2017

KRISHNAKARNAMRUTHAM.1




கிருஷ்ண கர்ணாம்ருதம் .1 - J.K. SIVAN

பில்வமங்கள் என்கிற லீலா சுகரின் பரிசு .

ஒரு அபூர்வ பக்தி ரசம் சொட்டும் காவியம் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். யாருடைய கர்ணத்தில் (செவியில்) இது அம்ருதமாக பாய்கிறது? ''தேன் வந்து பாயுதே'' என்று பக்தன் காதிலா, அல்லது பக்தனின் பரிசுத்த பக்தி பாடல் -தேனாக பகவான் காதிலா? எப்படி எடுத்துக்கொண்டாலும் சரியாகவே உள்ளது. என்னை மிகவும் ஈர்த்தது இந்த ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். இன்று ஸ்ரீ எம். கே. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய இந்த ஸ்லோகங்கள் அர்த்தங்கள் படித்தேன். ரொம்ப ரசித்தேன்.

உங்களுக்கு மீண்டும் ஞாபக படுத்த --- லீலா சுகர் இதை எழுதுமுன் ஒரு சைவர். பில்வமங்கள் என்று பெயர். சமாதி வடக்கே மதுராவில் இருந்த போதிலும் அவர் கேரளக் காரர் தான். எப்படியாம்? அவர் வர்ணிக்கும் குழந்தை கிருஷ்ணன் புலி நகம் தரித்திருக்கிறான். இது மலையாள தேச வழக்கம். பால முகுந்தாஷ்டகம் எழுதியிருக்கிறார். ஏதோ ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ தான் சைதன்யர் கையில் எங்கோ ஆந்திராவில் கிடைத்தது.

சில சமயம் வேற் கடலை மடித்து வரும் காகிதத்தை விரும்பி படிப்போம். காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தில் இல்லாத அலாதி விஷயங்கள் கிழிந்த அந்த அரைபக்கத்தில் இருப்பதாக சந்தோஷம் பொங்கும். சைதன்யர் இந்த துண்டு காகிதத்தை படித்து ''அடடா, இது அதி அற்புதமாக அல்லவோ இருக்கிறது. இதை யார் எழுதியது?. முழுபுத்தகமும் எனக்கு வேண்டுமே'' என்று சொல்ல சிஷ்யர்கள் எங்கெங்கோ ஓடி கேரளாவில் முழு ஓலைச் சுவடியும் கிடைத்தது. இந்த புத்தகம் சைதன்ய மகா பிரபு கையில் கிடைத்ததால் நம் அதிர்ஷ்டம் இன்று இதை புத்தகமாக படிக்கிறோம்.

பில்வமங்கள் நிறையவே எழுதியிருக்கிறார். குருவாயூரப்பன் மீது அலாதி பிரேமை.'' உன்னி கிருஷ்ணா நீ வாடா'' என்றால் அவர் முன் வந்து நிற்பான்.

चिन्तामणिर्जयतु सोमगिरिर्गुरुर्मे
शिक्षागुरुश्च भगवान् शिखिपिञ्छमौलिः।
यत्पादकल्पतरुपल्लवशेखरेषु
लीलास्वयंवररसम् लभते जयश्रीः॥ १-१

cintāmaṇirjayatu somagirirgururme
śikṣāguruśca bhagavān śikhipiñchamauliḥ |
yatpādakalpatarupallavaśekhareṣu
līlāsvayaṁvararasam labhate jayaśrīḥ ||

சிந்தாமணிர்ஜயதி ஸோமகி³ரிர்கு³ருர்மே
ஶிக்ஷாகு³ருஶ்ச ப⁴க³வாந் ஶிகி²பிஞ்ச²மௌலி: ।
யத்பாத³கல்பதருபல்லவஶேக²ரேஷு
லீலாஸ்வயம்வரரஸம் லப⁴தே ஜயஶ்ரீ: ॥ 1.1॥

ஏற்கனவே ஹரிதாஸ் படம் (MKT பாகவதர் நடித்தது) பற்றி சொல்லியிருக்கிறேன்.'' கிருஷ்ணா முகுந்தா'' பாடல் நாலரை -ஐந்து கட்டையில் இன்றும் எங்கும் 70 வருஷத்துக்கு அப்புறமும் எதிரொலிக்கிறது. அவர் பில்வமங்களாக நடித்த படம். ஹரிதாஸ் கதையில் பில்வ மங்கள் வேசி லோலன். அவனை கிருஷ்ணன் பக்கம் சேர்த்தவள் வேசி சிந்தாமணி. அவளைப் பற்றியே முதல் ஸ்லோகம் அமைந்ததை யாராவது எதிர்த்தாலும், யார் ஒருவனை கிருஷ்ணனை மனதால் நாட உபதேசித்தாலும் அவர் உயர்ந்தவர் என்ற தகுதியில் முதல் ஸ்லோகத்தில் அவரை வணங்குவது மிகவும் சரி.

''இந்த சுட்டிப் பயல் கிருஷ்ணன் ஒரு அவதாரம் என்றே வைத்துக்கொண்டாலும் மற்ற பகவானின் அவதாரங்களை விட சிறந்தவன்.எப்படி?

மற்ற அவதாரங்களில் அவர் கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும், நிறைய ஆபரணங்கள், கிரீடம், எல்லாம் இருக்கும். பெரிய ராஜ, பிராமண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குதிரை யானை, அரண்மனை .... இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் இந்த கிருஷ்ணன் பயலைப் பாருங்கள். ஏதோ ஒரு மயில் இறகை தலையில் செருகி, அதுவே அவன் கிரீடம். சாதாரண மக்கள் வீட்டில் வளர்ந்து, பழகி, மண்ணில் விளையாடி, நீரில் குதித்து, வெண்ணை திருடி....... சாதாரணமானவனாகவே இருக்கிறான். பாமரர்க்குள் பரமன்.

பில்வமங்கள் ஆசார்யன் சோமகிரி தனக்கு கோபால மந்த்ரம் உபதேசித்ததால் கிருஷ்ணன் பிரத்யக்ஷமாக தோன்றினான் என்கிறார்.

अस्ति स्वस्तरुणीकराग्रविगलत्कल्पप्रसूनाप्लुतम्
वस्तु प्रस्तुतवेणुनादलहरीनिर्वाणनिर्व्याकुलम्।
स्रस्त स्रस्त निरुद्धनीवीविलसद्गोपीसहस्रावृतम्
हस्तन्यस्तनतापवर्गमखिलोदारम् किशोराकृति॥ १-२

asti svaḥ taruṇī kara agra vigalat kalpa prasūna āplutam
vastu prastuta veṇu nāda laharī nirvāṇa nirvyākulam
srasta srasta niruddha nīvī vilasat gopī sahasra āvṛtam
hasta nyasta nata apavargam akhila udāraṁ kiśora ākṛti

அஸ்தி ஸ்வஸ்தருணீகராக்³ரவிக³லத்கல்பப்ரஸூநாப்லுதம்
வஸ்துப்ரஸ்துதவேணுநாத³லஹரீநிர்வாணநிர்வ்யாகுலம் ।
ஸ்ரஸ்தஸ்ரஸ்தநிருத்³த⁴நீவிவிலஸத்³கோ³பீஸஹஸ்ராவ்ருʼதம்
ஹஸ்தந்யஸ்தநதாபவர்க³மகி²லோதா³ரம் கிஶோராக்ருʼதி ॥ 1.2॥


இந்த காட்சியை ரசியுங்கள்.
ஒரு சிங்கக் குட்டி அழகாக தனது புல்லாங்குழலை தாமரை இதழ்களில் வைத்து ப்ரணவத்தையே ஜீவனாக கொண்ட மனதை வருடும் மெல்லிய இனிய கீதம் பாடுகிறது. அசையும் எதுவும் அசையாமல் அதில் கட்டுண்டு மயங்கி நிற்கிறது. இடுப்பு துணி அவிழ்ந்தது கூட சரி செய்ய நேரமில்லாமல் எண்ணற்ற கோபியர் நறுமண மலர்களை கைநிறைய ஏந்தி வந்து அவன் மீது விரல் நுனியால் மலர் மாரி பொழிகிறார்கள். அவன் தேவாதி தேவனல்லவா. அவனிடம் முக்தி பெறப்போகிறவர்களாயிற்றே!

चातुर्यैकनिधानसीमचपलापाङ्गच्छटामन्थरम्
लावण्यामृतवीचिलालितदृशं लक्ष्मीकटाक्षादृतम्।
कालिन्दीपुलिनाङ्गणप्रणयिनङ्कामावताराङ्कुरम्
बालम् नीलममी वयम् मधुरिमस्वाराज्यमाराध्नुमः॥ १-३

cāturyaikanidhānasīmacapalāpāṅgacchaṭāmantharam
lāvaṇyāmṛtavīcilālitadṛśaṁ lakṣmīkaṭākṣādṛtam |
kālindīpulināṅgaṇapraṇayinaṅkāmāvatārāṅkuram
bālam nīlamamī vayam madhurimasvārājyamārādhnumaḥ || 1-3

சாதுர்யைகநிதா⁴நஸீமசபலாঽபாங்க³ச்ச²டாமந்த³ரம்
லாவண்யாம்ருʼதவீசிலாலிதத்³ருʼஶம் லக்ஷ்மீகடக்ஷாத்³ருʼதம் ।
காலிந்தீ³புலிநாங்க³ணப்ரணயிநம் காமாவதாராங்குரம்
பா³லம் நீலமமீ வயம் மது⁴ரிமஸ்வாராஜ்யமாராத்⁴நும: ॥ 1.3॥

எப்படி இவ்வளவு கொள்ளை அழகு அவனிடம்? தன்னைப் போல் மற்றொருருவர் இல்லாதவன். பக்தர்களுக்கு சாயுஜ்யம் அளிப்பவன். குழல் ஊதிக்கொண்டே அப்படி ஒரு தினுசாக திரும்பி ஒரு கோணல் பார்வை பார்த்தாலே போதும். அமிர்த மழையில் நனைந்து அந்த கோபியர்கள் அனைவருமே அவன் கண் வீச்சில் மயங்கி திக்கு முக்காடுவார்களே. எங்கெல்லாம் அவன் பார்வை படுகிறதோ அங்கெல்லாம் சுபிக்ஷம், யாரெல்லாம் அவன் கடை விழிப் பார்வையில் பட்டார்களோ அவர்கள் எப்போவோ முக்தி அடைந்தாகி விட்டது. சாதாரண சிறுவனாக அந்த சர்வஞன் யமுனை நதிக் கரையில் மற்ற சிறுவர்களோடு மணலில் நீரில் விளையாடினான். கோபியர் வீட்டில் வெண்ணையும் ஏன் அவர்கள் மனதையும் திருடியவன் அல்லவா அவன்.

barhottamsa-vilasa-kuntala-bharam madhurya-magnananam
pronmilan-nava-yauvanam pravilasad venu-pranadamritam
apina-stana-kudmalabhir abhito gopibhir aradhitam
jyotish cetasi nash cakastu jagatam ekabhiramadbhutam

ப³ர்ஹோத்தம்ஸவிலாஸிகுந்தலப⁴ரம் மாது⁴ர்யமக்³நாநநம்
ப்ரோந்மீலந்நவயௌவநம் ப்ரவிலஸத்³வேணுப்ரணாதா³ம்ருʼதம் ।
ஆபீநஸ்தநகுட்³மலாபி⁴ரபி⁴தோ கோ³பீபி⁴ராராதி⁴தம்
ஜ்யோதிஶ்சேதஸி நஶ்சகாஸ்தி ஜக³தாமேகாபி⁴ராமாத்³பு⁴தம் ॥ 1.4॥

ஒரு நிமிஷம் என்னைப்பற்றி சிந்திக்கிறேன். இதுவரை உலக விஷயங்கள் மட்டும் தானே என்னை ஈர்த்தன. இது தானே எனக்கு சுகம் அளித்தது. பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும் தின்பண்டம் உண்மையில் விஷம் கலந்த ஒரு பக்ஷணம். என்னைக் கொல்லக்கூடியது. இதோ அதற்கு மாற்று கிடைத்து விட்டது.



இதுவரை நினைக்காத அவனை நினைத்துவிட்டேன்? கண்ணுக்கு விருந்தானவன். எந்த விஷயமும் (விஷமும்) என்னை அணுகாது. என்னுடைய ஒரே ஈர்ப்பு இப்போது அந்த குட்டி பால கிருஷ்ணன் என்ற அந்த துக்குணியூண்டு அழகன். என் மனதை முழுதும் வியாபித்தவன் . காந்தம் போல் கவரும் தாமரை முகம், சிறிய அவன் சிரத்தில் அழகழகான மயில் இறகுகள். அசைந்தாடும் குண்டலங்கள். கருணையால் கட்டிப்போடும் காந்த பார்வை. சுண்டியிழுக்கும் அமிர்த சக்தி வாய்ந்த புன்னகை. என்னைப்போல் கோடானுகோடியரை தன் வசப் படுத்தும் அழகு திருமேனி. அம்ரிதத்தை இழை இழையாக இசையாக வெளிப்படுத்தும் புல்லாங்குழல் கானம். அன்பினால் ஆளவந்த அழகு பூபதி... பாலக்ருஷ்ணன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...