Sunday, August 20, 2017

அமுதன் ஈந்த ஆழ்வார்கள் 3



அமுதன் ஈந்த ஆழ்வார்கள் 3 - J.K. SIVAN

சில ருசிகர விவரங்கள் .

அநேகர் தந்துள்ள பல சுவாரஸ்ய குறிப்புகளோடு இந்த கட்டுரை ஆரம்பமானால் நன்றாக இருக்குமே என தோன்றியது. .

ஆழ்வார்கள் பிறந்த காலத்தை பற்றிய சர்ச்சை நமக்கு வேண்டாம். எப்போது பிறந்தால் என்ன? பிறந்ததால் அவர்கள் பெற்ற பயனை விட, பக்தர்களாகிய நாம் பெற்ற பயன் அளப்பரியது. சூரியன் தோன்றியது எப்போது என்பதை விட சூரியனின் ஒளி நம்மை எந்நேரமும் இன்றுவரை உயிர்ச்சத்து, உயிர் சக்தி கொடுத்து வளர்ப்பது அல்லவோ முக்கியம். அதே போல் ஆழ்வார்களின் பாசுரங்கள் நமது மனதை தூய்மைப் படுத்தி நம்மை எந்நேரமும் இறைவனை எக்காலமும் உணரச் செய்கிறதே அது போதும், அதுவே போதும்.

அமுதன் ஈந்த ஆழவார்கள் என்று ஏன் பெயர் வைத்தேன்? அந்த ஆராவமுதனின் பல ஆயுதங்கள், வாகனம், அணிந்த மலர்மாலைகள், மற்ற பல அம்சங்கள் பூமியில் ஆழ்வார்களாக அவதரித்து தமிழையும் விஷ்ணு பக்தியும் வளர்க்க அவனே அருளித்தந்ததால் அல்லவோ, ஈந்ததால் தானே! அவை யாவை? யாராக அவதாரம் செய்தது என்பதே இந்த குறிப்பு.

1. பொய்கை ஆழ்வார் - 713 கி.பி. 4203 கி.மு. ?? - எது சரி? பிறப்பு: காஞ்சிபுரத்தில். ஜனன மாதம் ஐப்பசி திருவோண நக்ஷத்ரம். இயற்றியவை: முதல் திருவந்தாதி, (100) . பாஞ்ச ஜன்யத்தின் அம்சம் .

2. பூதத்தாழ்வார் -- 713 கி.பி, - 4203 கி.மு?? எது சரி? பிறப்பு: மகாபலிபுரம் எழுதியது : 2ம் திருவந்தாதி (100) பிறந்த ;மாதம் ஐப்பசி அவிட்டம் நக்ஷத்ரம். விஷ்ணுவின் கதாயுதம் கௌமோதகி அம்சம்

3.பேயாழ்வார்- 713 கி.பி. - 4203 கி.மு. எது சரி? பிறந்தது: மயிலை. இயற்றியது :3ம் திருவந்தாதி (100) ஜனனம்: ஐப்பசி மாதம் சதயம் நக்ஷத்ரம். ஆழ்வார் விஷ்ணுவின் வாள் நந்தகம் அம்சம்.

4. திருமழிசை ஆழ்வார்- 720 கி.பி. - 4203 கி.மு? : பிறந்தது: திரு மழிசை . இயற்றியது: நான்முகன் திருவந்தாதி (96)திருச்சந்த விருத்தம் (120). ஜனனம் தை மாதம் மகம் நக்ஷத்ரம். அவதாரம்: சுதர்சன சக்ரம்.

5, நம்மாழ்வார் 3102/3059 பிறந்தது: ஆழ்வார் திருநகரி . இயற்றியது: ) திருவாய் மொழி (1102), திருவாசிரியம் ( 7) திருவிருத்தம் (100), பெரிய திருவந்தாதி ( 87), பிறந்தது: வைகாசி மாதம், விசாகம் நக்ஷத்ரம், அவதாரம்: விஸ்வக்சேனர்.

6.மதுரகவி ஆழ்வார்.800 CE 3102 BC, பிறந்தது: திருக்கோளூர். இயற்றியது: கண்ணினுட்சிறு தாம்பு (11). ஜனன மாதம்: சித்திரை நக்ஷத்ரம் சித்திரை அவதாரம்:கருடர் அம்சம்.

7. குலசேகராழ்வார் 767 CE3075 BC, திருவஞ்சிக்களம் இயற்றியது: பெருமாள் திருமொழி (105); ஜனனம் மாசி. புனர்பூசம் நக்ஷத்ரம். கௌஸ்துபம் அம்சம்.

8. பெரியாழ்வார் 785 CE 3056 BC, ஸ்ரீ வில்லிபுத்தூர். இயற்றியவை: திருப்பல்லாண்டு (12) பெரியாழ்வார் திருமொழி (469) ஜனனம்: ஆனி மாதம்: சுவாதி நக்ஷத்ரம். ஆழ்வார் கருடன் அம்சம்:

9. ஆண்டாள் 767 CE 3005 BC, பிறந்தது: ஸ்ரீ வில்லிபுத்தூர் இயற்றியது: நாச்சியார் திருமொழி (143), , திருப்பாவை (30) ஜனனம்: ஆடி மாதம். பூரம் நக்ஷத்ரம் அவதாரம்: பூதேவி

10.தொண்டரடிப் பொடி ஆழ்வார் 726 CE 2814 BCE, பிறந்தது : திருமண்டங்குடி. இயற்றியது: திருமாலை ( 45 ) திருப்பள்ளிஎழுச்சி :(10) ஜனனம்: மார்கழி நக்ஷத்ரம்: கேட்டை. ஆழ்வாரை வன மாலை அம்சம் என்பார்கள்.

11 திருப்பாணாழ்வார் 781 CE2760 BCE, பிறந்தது: உறையூர் இயற்றியது: அமலனாதிபிரான் (10) ஜனனம் கார்த்திகை மாதம். நக்ஷத்ரம் ரோஹிணி. .இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றாலும் பெருமாளின் ஸ்ரீ வத்சம் அவதாரம்.

12.திருமங்கை ஆழ்வார் 776 CE 2706 BCE; பிறந்தது: திருக்குறையலூர்; இயற்றியவை: ; பெரிய திருமொழி ( 1084) திருவேழுக்கூற்று இருக்கை (1) திருக்குறுந்தாண்டகம் ( 20) திரு நெடு ந்தாண்டகம் ( 30) சிறிய திருமடல் (4) பெரிய திருமடல் (78); ஜனனம்:கார்த்திகை மாதம்: நக்ஷத்ரம் கிருத்திகை ஆழ்வார் பெருமாளின் சார்ங்கம் அவதாரம். அதானால் தான் சரமழைபோல் பாசுர மழை.

முதல் மூன்றாழ்வார்கள் எந்த மானிடப் பிறவியின் வயிற்றிலும் ஜனிக்கவில்லை. அயோநி ஜர்கள். இவர்கள் த்வாபர யுகத்தில் கிருஷ்ணன் காலத்தைச் சேர்ந்தவர்கள். கி.மு 4200க்கு முன்பு.

காஞ்சிபுரம் போயிருக்கிறீர்களா? அங்கே பல திவ்ய தேசங்கள் இருக்கின்றனவே. ஒரு ஆலயம் திருவெட்கா என்பது. அங்கே யதோத்காரி என்ற சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை பிறகு சொல்கிறேன். அந்த ஆலயத்தில் ஒரு புனிதமான திருக்குளம் இருக்கிறது. குளத்தை தூய தமிழில் பொய்கை என்று சொல்வது. அந்தக் குளத்தில் ஒருநாள் தாமரை மலரின் மேல் தோன்றியவர் தான் பொய்கை ஆழ்வார். இதிலிருந்து அவருக்கு இயற்பெயர் இல்லை. பெற்றோர் இனிஷியல் எல்லாம் கிடையாது. விஷ்ணுவின் அருளால் பிறந்தவர் என புரியவில்லையா?. பொய்கையில் தோன்றியதால் அவர் பொய்கை ஆழ்வார் என அழைக்கப்பட்டார்.

இன்னும் நிறைய வரபோகிறார்கள் . அருளப் போகிறார்கள்.. மகிழ்ச்சியுறப் போகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...