Tuesday, August 29, 2017

திருக்காராயில் எனும் திருக்காரவாசல் விடங்கர்



யாத்ரா விபரம்: - J.K. SIVAN

திருக்காராயில் எனும் திருக்காரவாசல் விடங்கர்

பேர் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது. திருக்கார வாசல், திருக்காராயில் என்று. அர்த்தம் யோசிக்கவேண்டும்.

பெயர் இவ்வாறு வர ஒரு காரணம் கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில். அப்போது திருக்கார வாசல்?

திருக்காராயில் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் 14 கி.மீ. தூரத்தில் இருந்தாலும் திருக்குவளை திரு





வாய்மூருக்கு அருகிலேயே உள்ள ஒரு விடங்க தியாகராஜ க்ஷேத்ரம். இது எங்களது விடங்க க்ஷேத்ர யாத்திரையில் ஆறாவது ஸ்தலம். 275 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஸ்தலங்களில் 119வது. மூன்று நிலை ராஜகோபுரம். த்வஜஸ்தம்பம் விநாயகரோடு வரவேற்கிறது.

இங்கு மூலவர் கண்ணாயிர நாதர் ஸ்வயம்பு. கும்பாபிஷேகம் போது பார்வை இழந்த பெண் ஒருத்திக்கு அருள் பிரிந்த அவள் கண் பார்வை பெற்றாள் என்பதால் நேத்ரபுரீஸ்வரர், கண்ணாயிர நாதர். அம்பாள் கைலாச நாயகி. நின்றகோலம். வில்வமும் பலாவும் ஸ்தல விருக்ஷம். ஒரு விசேஷம் என்னவென்றால் வில்வம் இங்கே ஐந்து இலைகள் கொண்டது. மேலே கிளைகளில் 7 அல்லது 9 இலைகள் கொண்ட வில்வ கொத்தும் உள்ளது.

இங்கே மூன்று பைரவர்கள் தரிசனம் பெறலாம். கால பைரவர், உச்சிகால பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர். எதிரே லட்சுமி தேவி நிற்கும்போது ஸ்வர்ணாகர்ஷணத்துக்கு என்ன குறைச்சல். இது ரெண்டாயிரம் வருஷ கோவில் என்று சொல்லலாம். அப்பர் சம்பந்தர் விஜயம் செய்து தரிசித்து தேவாரம் பாடிய 7ம் நூற்றாண்டு கோவில்.

கடுக்காய்ப் பிள்ளையார் சந்நிதி புஷ்கரணி அருகே இருக்கிறது. ஏன் கடுக்காய் என்று தெரியவேண்டுமானால் ஒரு வரி கதை நான் சொல்ல வேண்டியிருக்குமே!

ஜாதிக்காய் வியாபாரி ஒருவன் தனது வண்டி நிறைய ஜாதிக்காய் ஏற்றிக்கொண்டு இந்தப்பக்கமாய் வந்தவன் பிள்ளையார் சந்நிதிக்கருகே வரும்போது இரவு தங்கின சமயம் ''என் சாமான்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று பிள்ளையாரை வேண்ட'' இதை கவனித்த ஒரு சின்ன பையன் 'ஐயா உங்கள் வண்டியில் என்ன சாமான் அப்படி இருக்கிறது?''என கேட்க, ''ஒண்ணுமில்லேப்பா, வெறும் கடுக்காய் தான்'' என்று அவன் விலை உயர்ந்த ஜாதிக்காய் இருப்பதை சொல்லாமல் மறைக்க, மறுநாள் பொழுது விடிந்து வியாபாரி ஸ்நானம் செய்து வண்டியை கிளம்பும்போது அத்தனை மூட்டைகள் ஜாதிக்காயும் வெறும் கடுக்காயாக மாறி இருக்க'' ஐயோ என்று அந்த வியாபாரி பிள்ளையாரிடம் அழ, கடுக்காய் மீண்டும் ஜாதிக்காயானபோது தான் அவன் தன்னை சந்தித்த சிறுவன் பிள்ளையார் என்று தெரிந்து மன்னிப்பு கேட்டான்'' . எனவே அவர் பெயர் கடுக்காய் பிள்ளையாராக மாறியது.

இந்த விடங்க ஸ்தலத்தில் தியாகேசர் பெயர் ஆதி விடங்கர், மரகத லிங்கம். அர்ச்சகர் அபிஷேகம் செய்தார் பார்த்தேன். மிக விலையுயரனது. திருட்டும் போயிருக்கிறது. மீண்டும் கிடைத்திருக்கிறது என்று செயதியே பத்திரிகையில் வந்துள்ளது. அர்ச்சகர் ஒரு துப்பறியும் கதைபோல் யாரோ சிலர் சாமர்த்தியமாக திருடி எங்கெங்கோ சுற்றி வெளியூர்கள் எல்லாம் சென்ற மரகத லிங்கம் சம்பந்தப்பட்ட பலரில் பெரும்பாலோர் அகால மரணம் அடைந்து பயத்தினால் மரகத லிங்கம் யதா ஸ்தானத்துக்கே வந்துவிட்டது என்கிறார். உண்மையா என்று அனுமானம் செய்ய நமக்கு அருகதை இல்லை. சின்ன கைக்கடக்க மரகத லிங்கம் பச்சை பசேலென கண்ணை பறித்தது. அவ்வளவு தான்.
ஆதி விடங்க தியாகேசர் முன் நந்தி இங்கும் நான்கு கால்களில் நிற்கிறது அழகாக இருக்கிறது.

இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் தக்ஷிணாமூர்த்தி பகவான் இங்கே தலையில் குண்டலினி சக்தி கொண்டவர். ஞான மஹா குரு. எதிரே அகஸ்தியர் நாடி ஓலைச் சுவடி படிக்கிறார்.

`பிறையானே பேணிய பாடலொடின்னிசை
மறையானே மாலொடு நான் முகன் காணாத
இறையானே யெழில் திகழும் திருக்காராயில்
உறைவானே யென்பவர் மேல் வினையோடுமே' -- திருஞான சம்பந்தர் காலத்தில் இந்த ஊர் திருக்காராயில் என்று புரிகிறதா?

இணைதளம் வலையில் பிடித்த ஒரு செய்தி:

திருக்காரவாசல் மரகதலிங்கம் கோர்ட் மூலம் ஒப்படைப்பு

டிசம்பர் 15,2009,00:00 IST dinamalar news 4713

விழுப்புரம் : திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கோவில் மரகதலிங்கம் விழுப்புரம் கோர்ட் மூலம் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தியாகராய சுவாமி கோவிலில் கடந்த 1992ம் ஆண்டு திருட்டு போன ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கத்தை, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் மீட்டனர்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரன் தலைமையில், டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் காதர் பாட்ஷா தலைமையிலான தனிப் படையினர், விழுப்புரம் அடுத்துள்ள திருவெண்ணை நல்லூரைச் சேர்ந்த தேவசேனாதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, திருக்காரவாசல் கோவிலுக்குச் சொந்தமான மரகத லிங்கத்தை மீட்டு, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் மரகத லிங்கத்தை ஒப்படைத்தனர். நீதிபதி உத்தரவின் பேரில், மரகத லிங்கம் திருக்காரவாசல் தியாகராய சுவாமி கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரகத லிங்கத்தை பெற்ற கவியரசு தலைமையிலான கோவில் நிர்வாக குழுவினர், ஓரிரு நாட்களில் விழா ஏற்பாடு செய்து மீட்கப்பட்ட மரகத லிங்கத்தை கோவிலில் மீண்டும் வைக்கப்படும் என தெரிவித்தனர்''



The temple is open from 7.00 a.m. to 11.00 a.m. and from 5.00 p.m. to 8.00 p.m Phone: +91- 4366-247 824, +91- 94424 03391.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...