Tuesday, October 12, 2021

SRI LALITHA SAHASRANAMAM


 


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்    -  நங்கநல்லூர்  J.K. SIVAN

நாமங்கள்  1- 10

ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी ।  चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥ १॥उद्यद्भानु-सहस्राभा चतुर्बाहु-समन्विता । रागस्वरूप-पाशाढ्या क्रोधाकाराङ्कुशोज्ज्वला ॥ २॥

Srimatha Sri Maharajni Sri Math Simasaneshwari Chidagni Kunda Sambootha Deva Karya Samudhyatha
Udyath Bhanu Sahasrabha Chadur Bahu Samanvidha  Ragha Swaroopa Pasadya Krodhakarankusojwala  1

ஓம் ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி | சிதக்நிகுண்ட ஸம்பூதா
 தேவகார்யஸமுத்யதா ||
உத்யத்பாநு ஸஹஸ்ராபா சதுர்பாஹு ஸமந்விதா | ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா
காராங்குசோஜ்ஜ்வலா ||

* 1 *श्रीमाता -  ஸ்ரீமாதா -- நமக்கு அளவற்ற செல்வங்களை அளித்து, துன்பங்களிலிருந்து மீட்டு, சதா ஆனந்தத்தை வாரி வழங்கும் தாய்.

2 * श्रीमहाराज्ञी -ஸ்ரீ மஹாராஞி - அகில புவன சக்ரவர்த்தினியாக ரக்ஷிப்பவள்.

* 3 * श्रीमत्सिंहासनेश्वरी -  ஸ்ரீ மத் ஸிம்ஹாஸனேஸ்வரி - சக்ரவர்த்தி, மகாராஜாக்கள் போல் சிம்ஹா சனத்தில்  மஹா ராணியாக  வீற்றிருப்பவள்.

* 4 *  चिदग्निकुण्डसम्भूता - சிதாக்னி குண்ட ஸம்பூதா - சாதாரண  நெருப்பல்ல .  சித்தத்தில் ஸ்புடம் போட்ட   பிரம்ம ஞான அக்னியிலிருந்து அவதரித்த மஹா சத்ய ஸ்வரூபி.

* 5 * देवकार्यसमुद्यता - தேவ கார்ய சமுத்தியதா - தேவர்களின் சகல காரியங்களிலும் உதவுபவள்.  தேவர்களால் முடியாததை எல்லாம் முடிக்கும் சக்தியுள்ள தேவி அல்லவா இவள்?

* 6 *  उद्यद्भानुसहस्राभा - உத்யத்பாநு ஸஹஸ்ராபா - ஆயிரம் உதய சூரியன்களைப் போல் சொக்கத் தங்கமாக ஜொலிப்பவள். ஒரு நிமிஷம் கண்ணை மூடி  யோசித்தால்  அவளது ஸ்வரூபம் எவ்வளவு ஒளிமயமானது  என்று அறிய முடியும்.

* 7 *  चतुर्बाहुसमन्विता -  சதுர் பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டருள்பவள். அருள் தரும் அணைக்கும் கரங்கள் அடக்கவும் அடிக்கவும்,  அழிக்கவும் கூட செய்யும். பக்தர்களுக்கும் பாதகர்களுக்கும் தக்கவாறு  தீர்ப்பளிப்பவள் அல்லவா அம்பாள்.

* 8 * रागस्वरूपपाशाढ्या - ராகஸ்வரூப பாசாட்யா - பாசம் என்றால் கயிறு. கயிறு என்ன செய்யும்? பிணைக்கும்.  இணைக்கும், இறுக்கி அணைக்கும். நம்மை ஒருவர் விடாமல் உன்னிடம்  எனக்கு  பாசம் உண்டு, அன்பு உண்டு, அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த ' இடது'' கையில் ஒரு ''பாசம்''  எனும் கயிறு  வைத்திருப்பவள் .

* 9 * क्रोधाकाराङ्कुशोज्ज्वला - க்ரோதாகாராங்குசோஜ்வலா - தவறு செய்தால் தொலைத்து விடுவேன், என்று தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்ட நிற்பதாக்ஷண்ய கோபமுடையவள். இதைத் தான் துஷ்ட நிக்ரஹம்  ஸிஷ்ட பரிபாலனம் என்பது.

ரெண்டு ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு  நாமங்களை பிரித்ததில் ஒன்பது நாமங்கள்  எனக்கு கிடைத்தது  ஆச்சர்யம்.  ஓஹோ அம்பாள்  சக்தி ரஹஸ்யமானது. ஒன்பது என்பது ஒரு அதிசய, அதிக சக்தி வாய்ந்த எண்  என்பது தெரியுமா? கொஞ்சம் சொல்கிறேன்.  நான் சொல்வது எல்லாமே  எப்போதும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சமாச்சாரம் தான்.

108 உபநிஷத் களின்  கூட்டு எண்: 1+0+8=9
பகவத் கீதையின்  அத்தியாயங்கள் 18. கூட்டு எண் : 1+8=9
மகாபாரதத்தின் யுத்தம் நடந்தது  18 நாட்கள். பாரதத்தின் பர்வாக்கள்  18. கூட்டு எண்: 1+8=9  வியாஸர் 18 :  கூட்டு எண்  :9
கலியுகம் வருஷங்கள் 4,32,000:  கூட்டு எண்  4+3+2=9
துவாபர யுகம் வருஷங்கள் அதே மாதிரி தான்: 864,000 வருஷங்கள்:  கூட்டு எண் : 8+6+4=18:1+8: 9
த்ரேதா யுகமும் கூட  எப்படி ஸார்  அதே 9 .  மொத்த வருஷங்கள் 1,296,000 = 1+2+9+6=18 : 1+8:9
அதற்கும் முந்தி இருந்த  சத்ய யுகத்திலும் வருஷங்களின்  கூட்டு எண் 9:   1,728,000: 1+7+2+8=18 
ஒரு கல்ப யுகத்திற்கு  432,000,000 வருஷங்களாம். அதன் கூட்டு எண்  கூட  :9   :   4+3+2=9
பக்தி 9 வகைப்படும்   நவவித பக்தி என்பது.
கிரஹங்களும் 9 தான்.
நமது தேஹமே கூட  9 வாசல்  மாளிகை தான்.
இப்போது நாம் கொண்டாடும் துர்காபூஜைக்கும்   நவராத்ரி என்று தான் பெயர்  9  இரவுகள்.
ஜபமாலையில்  இருக்கும் மணிகள் 108.   அஷ்டோத்ரம் 108.  எல்லாமே  ஆச்சர்யமாக  9 .[1+0+8=9]
இப்படியே  சொல்லிக்கொண்டே போனால் 108 பக்கங்கள் ஓடிவிடுமோ, 108 நாள்  ஆகுமோ தெரியவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...