Wednesday, October 13, 2021

pesum dheivam

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K SIVAN 


மங்கள குங்குமம்.

நவராத்ரி நேரம் இது.  சுமங்கலிகளுக்கு  தாம்பூலம்  குங்குமம் வழங்கும் பெறும்  நேரம். இதில் குங்குமம் பற்றி எழுத தோன்றியது.   காலம் மாறிப்போச்சு.  பழைய  நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் காற்றில் பறக்க விடப்படுகிறது. அதுவும் வெகு வேகமாக.  தெரிந்தே செய்யும்  பெரியவர்கள், பெற்றோர்கள்.  என்ன செய்வது. நவராத்திரியில் பெண்களுக்கும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது பற்றி சொல்வதும்  பொருத்தம் தானே.

வித விதமான கலர்களில்  அளவில், உருவத்தில் பளபளா  ஜிலுஜிலுவோடு   நாகரிக மோஸ்தரில்  ஸ்டிக்கர் பொட்டு   குங்குமத்தை விழுங்கிவிட்டது.

புருவமத்தி - ப்ரூமத்யமம் -  யில்  மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பியை பகவான் வைத்திருக்கிறான்.  யோக சாஸ்திரம்  இந்த இடத்தை  ஆக்ஞா சக்ர ஸ்தானம்  என்கிறது. 
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்,  மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் அதை சொல்வார்கள். 
திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சாஸ்த்ர சம்பிரதாய சடங்கு செய்கி றார்கள்.  இந்த  புருவமத்தியை போற்றி உணர்வதற்கு தான் அங்கே குங்குமம் வைத்துக் கொள்வது.   பெண்களுக்கு முக்கியமாக எயாராலும் ஆண்களும் குங்குமம் இட்டுக் கொள்வதுண்டு.  இதனால்  தேகம் பூரா  மின்காந்த சக்தி வெளிப்படும்.  புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில்  மின்காந்த சக்தி அதிகம். 

நமக்கு  மனக்கஷ்டம் வந்தாலோ, எதையாவது விடாமல்  யோசிக்கும்போதோ  அந்த இடம்  உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி  வரும்.  அதை குளிர்ச்சியாக வைத்திருக்க தான்  சந்தனம், குங்குமம் நெற்றியில் இடுகிறோம்.   அதனால்  உடல், மனோசக்தி வீணாகாது. முகமும் பிரகாசமாக களையாக  இருக்கும்.  பொட்டு அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காக மட்டுமல்ல. தேஹ ஆரோக்யத்துக்காகவும் கூட.

எங்கோ படித்த ஒரு  பழைய விஷயம் என்றாலும் ஒரு  ஆச்சர்யமான  குங்கும விஷயம், நடந்த ஒரு   ருசிகர  மயிர்கூச்செரியும்  சம்பவம் சொல்கிறேன்.  குங்குமத்தின் முக்கியம் பற்றி விளங்கும்.:

அன்று ள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜை.  மஹா பெரியவா  அமர்ந்திருக்கிறார். எதிரே  மண்டபத்தில்  எங்கிருந்தெல்லாமோ  பல ஊர்களிலிருந்து பஸ்  ட்ரெயினில்  வந்த  அநேக   ஸுமங்கலிகள் அமர்ந்திருக்கிறார்கள்.   அவர்களிடையே  ஒருவள் வித்யாசமாக  தென்பட்டாள் . நடுத்தர வயது  40-45 வயசிருக்கலாம்.   கணவனை இழந்தவளோ?  நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை.  தப்பாக இதில் கலந்துகொண்டவளா?   குங்குமம், பூ வைக்க மறந்தவளா?
சட்டென்று   யாரோ  ஒரு சுமங்கலி  இதை கவனித்துவிட்டு  அவளிடம் குங்கும சிமிழை நீட்ட  அந்த பெண்  விலகி ஓடினாள். மஹா பெரியவா கண்கள் இதை கண்டன. 

''இங்கே வா?''   ஜாடையில் அவளை கூப்பிட்டார்.  மெதுவாக அருகில் வந்தாள். கண்ணீர் பெருக்கோடு.
“அழாத!…. ஸுவாஸினி பூஜைக்கு   நெத்தில ஒண்ணுமில்லாம மூளியா வந்திருக்கியே.  இது பகவத் ஸன்னதி. எத்தன ஸுவாஸினிகல் வந்திருக்கா
 பாரு! மங்களகரமா இருக்கோல்லியோ?  ஏன் நீ மட்டும்  மூளியா  கண்ணீரும் கம்பலையுமா வந்து நிக்கறே.  மறந்து போச்சுன்னா, இப்போ  நெத்தில குங்குமம் வெச்சுக்கோ”
அவள் அழுகை இன்னும்  அதிகமானது.
“இல்ல பெரியவா, நா…  குங்குமம் வெச்சுக்க கூடாது”
பெரியவா பதிலே சொல்லவில்லை.  அவள் மேலே தொடர்ந்தாள் .
“எங்காத்துக்காரருக்கு மிலிட்டரிலே வேலை.  ஆறு மாஸம் முந்தி டெல்லிலேந்து எனக்கு ஒரு லெட்டர் வந்துது. அதுல…. அவர் சண்டைல செத்து போயிட்டார்னு  எழுதியிருந்தது.  ஆனாஅதிலே  எனக்கு நம்பிக்கையில்லை.  பெரியவா....   நா வேண்டாத தெய்வம் இல்லை.  டெல்லிக்கு  போன் பண்ணினா கிடைக்கலே. கடைசியில் விடாம போன் பண்ணி கெடைச்சா. பார்டெர்லே செக் பண்னினோம் .  
அவர் செத்துப் போய்ட்டார்னு confirm பண்ணிட்டா! பேப்பர்ல கூட ரெண்டு மூணு தடவை ந்யூஸ் வந்துடுத்து. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..! கார்யம்-லாம் அப்போவே பண்ணிட்டோம். இன்னிக்கு நா…மடத்துக்கு வந்ததே, அவரோட அகால மரணத்துக்கு அவருக்கான கர்மாவை இனிமே எப்படி பண்றது-ன்னு கேக்கத்தான் வந்தேன். 

இங்கே  இந்த மாதிரிஸுவாஸினி பூஜை நடக்கப்போறதுன்னு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன் ...  மன்னிச்சுடுங்கோ பெரியவா….”
பரப்ரஹ்மம் மௌனம் காத்தது. கண்கள் அரை மூடியிருந்தது. தியானம். 

“பெரியவா,  அவர்  ரொம்ப நல்லவர்...அவரோட ஆத்மா ஶாந்தி அடையணும். இதுதான் என் ப்ரார்த்தனை. நீங்கதான் எனக்கு உபாயம் சொல்லணும். பெரியவா… இப்போ போகச்சொன்னா போய்ட்டு, இன்னொருனாள் வா  ன்னு சொன்னா  ஓடி வரேன்...

பெரியவா மௌனம் கலையவில்லை.  ஸாக்ஷாத் காலஸம்ஹாரமூர்த்தியாக ஜ்வலித்தார். தன் முன்னால் இருந்த மரடப்பாக்குள் கையை விட்டு, கை நிறைய குங்குமத்தை அள்ளினார், அழகான புன்முறுவலுடன் அவளிடம் நீட்டினார்.
அவளோ முழித்தாள். அவளுடைய கை, குங்குமத்தை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை! அருகில் மடத்து உத்தியோகஸ்தர் குறுக்கிட்டு பேசினார்: 

” சட்டுன்னு வாங்கிக்கோங்கோ ! பெரியவா தன் கையாலேயே குங்குமம் தரார்னா, ஒங்களோட பாக்யம்ன்னா! நீங்க ஸுமங்கலிதான். உங்காத்துக்காரர் இருக்கார்னு அர்த்தம் ''  வேகமாக  அவசரமாக இரு கை  நீட்டி பெரியவா நீட்டிய  குங்குமத்தை  நடுங்கும் கைகளில்   ஒரு போடி பொடி கூட கீழே விஷயம்  தலைப்பால் மறைத்து வாங்கிக்கொண்டாள்.

“நெத்தில இட்டுக்கோ! ஓன்னோட மனக்லேஸம் அவஶ்யமில்லாதது. ஒம்புருஷன் உஸுரோட இருக்கான். ஸீக்ரமா ஒங்கிட்ட வரப்போறான்.”

“உயிரோடு இல்லை” என்று ஆறு மாஸமாக  மத்ய அரசாங்கம்  அதிகார பூர்வமாக  சொல்லி பேப்பரில் போடப்பட்டு கார்யங்களும் நடந்த பிறகா.....ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு விஷயம், ஒரே நொடியில் தெய்வத்தால், “பொய்” என்று சொல்லப்பட்டுவிட்டதே... என்ன ஆதாரம்??  பகவான் சங்கல்பத்துக்கு ஆதாரம் தேவையா?

அவள் ஸந்தோஷத்தில்,நெற்றி நிறைய   பெரிய பொட்டாக இட்டுக்கொண்டாள் . முக அழகே  பளிச்சென்று  பிரகாசித்தது.அங்கிருந்த   முக்கால்வாசி  ஸுவாஸினிகள் அவளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, திருமாங்கல்யம் என்று வாரி வழங்கினார்கள். க்ஷணத்தில், அந்த இடம் குதூகலமானது.  அன்று அவர்களோடு எதிர்பாராதவிதமாக  ஆச்சர்யமாக அவள்  முக்கிய  ஸுவாஸினியாக வரிக்கப்பட்டு பூஜையில் அமர்ந்தாள்.
ஒருவாரம் கழிந்தது.
விடிகாலை ஒருநாள்  அவள் கணவன்  துரும்பாக இளைத்து  மெலிந்து  வீட்டுக்குள் நுழைந்தான்..!
இறந்துபோனவன் என்று   அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, போட்டோ போடப்பட்டு,  கருமாதி கார்யங்கள் முடிக்கப்பட்டவன்.... நேரே வந்திருக்கிறானே .  கணவனைக் கண்டதும் அவளுக்கு  பேச முடியாமல்  நெஞ்சடைத்தது. கண்களில் நீர். ஆனந்தத்தில் ஏதேதோ உளறினாள்.
“எப்டி இருந்தேள்? எங்க இருந்தேள்?…. ஏன் ஒங்க head-quarters ஆபீஸ் காரா எல்லாரும்  அப்டி சொன்னா?….”
“நீ கேள்விப்பட்டதெல்லாம் நெஜந்தான். கிட்டத்தட்ட செத்து பிழைச்சவன் நான். மரணத்தை தொட்டுவிட்டவன். ! குண்டு பாய்ஞ்ச வலியில, மயக்கமாய்ட்டேன்..!
சலனமே இல்லே. ஸன்னமான மூச்சு கூட இல்லே.  என்னை, செத்த பொணம்-னு நெனச்சிண்டு எதிரிகள். எங்கியோ இழுத்துண்டு போய் அனாதரவா போட்டுட்டு போய்ட்டா…! யாரோ சில மலைவாஸிகள் என்னை எடுத்துண்டு போயி ஸொஸ்தமாக்கினா..! அவா புண்யத்ல, எனக்கு புனர்ஜன்மம் கெடச்சுது. அங்கேர்ந்து எந்தவிதத்திலேயும்  யாரையும் contact பண்ண
 முடியல….! உடைஞ்ச கால்  மறுபடியும்  கொஞ்சம் நடக்க முடிஞ்சதும்,   பணம்  பிச்சை வாங்கிண்டு ட்ரைன் பிடிச்சு ஒடனே கெளம்பிட்டேன்.  கையிலே ஒரு பேப்பர் கூட  நான் யாருன்னு நிரூபிக்க இல்லே. டெலிபோன் நம்பர் எதுவும் தெரியாது.  ஆனா  ஒன்னு நிச்சயம் டீ .  ஒன்னோட ப்ரார்த்தனை வீண் போகல..!”''என்  ப்ரார்த்தனையா? என்ன சொல்றேள்?'  போன  வெள்ளிக்கிழமை   அந்த மலைவாசிகள் கோயில்லே  எனக்காக  யாரோ  பிரார்த்தனை பண்றமாதிரி தெரிஞ்ஜூது.  போன உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா பிரார்த்தனை பண்ண? ன்னு  சொன்னேன்.'' 
பரமேஸ்வரன் கைலாச மலை வாசி. அவர் கிட்டே பிரார்த்தனை பண்ணவர்  இன்னொரு பரமேஸ்வரன். நமது தெய்வம்   காஞ்சி மஹா பெரியவா... போன  வெள்ளிக்கிழமை  பிரார்த்தனை பண்ணிட்டு எனக்கு  பெரியவா…. தெய்வமா  எனக்கு குங்குமத்தை அள்ளி குடுத்தா'' - அழுது கொண்டே  மடத்தில் நடந்ததை சொன்னாள் .
அவ்வளவு தான், அன்றே  ரெண்டு பேரும்  விழுந்தடித்துக் கொண்டு தெய்வத்தை தரிசித்து நமஸ்கரிக்க காஞ்சிபுரம் போனார்கள். 
“என்ன?….. ஆத்துக்காரர் வந்துட்டாரா?…ஒனக்கு இனிமே எந்த கொறையும் இருக்காது…”

குங்குமம் ஹிந்து ஸ்த்ரீகள்  விசேஷ  ஆபரணம்  அந்தஸ்தான விஷயம்.  விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி  தயாராகிறது.    இனிமேல்  ஸ்டிக்கர் போட்டு கொஞ்சம்  தவிர்ப்போமே.... 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...