Tuesday, October 26, 2021

SRI LALITHA SAHASRANAMAM



 ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN

 ஸ்லோகங்கள் 48-49.   நாமங்கள்   168-180


निष्क्रोधा, क्रोधशमनी, निर्लोभा, लोभनाशिनी ।
निःसंशया, संशयघ्नी, निर्भवा, भवनाशिनी ॥ 48 ॥

Nishkrodha krodhashamani nirlobha lobhanashini
Nisandhaya sanshayaghni nirbhava bhavanashini – 48

நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசிநீ |
நிஸ்ஸம்சயா ஸம்சயக்நீ நிர்ப்பவா பவநாசிநீ || 48

निर्विकल्पा, निराबाधा, निर्भेदा, भेदनाशिनी ।
निर्नाशा, मृत्युमथनी, निष्क्रिया, निष्परिग्रहा ॥ 49 ॥

Nirvikalpanirabadha nirbheda bhedanashini
Nirnasha mrutyumadhani nishkriya nishparigraha – 49

நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசிநீ |
நிர்நாசா ம்ருத்யுமதநீ நிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா || 49

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (168 -183) அர்த்தம்

168 * निष्क्रोधा -நிஷ்க்ரோதா - 
கோபமற்றவள். சாந்த ஸ்வரூபிணி. சர்வ நாசம் விளைந்த மஹா பிரளயத்தின் போதும் அம்பாள் சாந்தமாக இருப்பவள். ப்ரம்மத்திற்கு  ஏது உணர்ச்சி, பாதிப்பு ? அவள் நம்மைப்போல் இல்லையே.

* 169 * क्रोधशमनी -க்ரோத சமனி - கோபத்தை அழிப்பவள். மனிதனின் ஆறு முக்கிய எதிரிகள் ஆசை, கோபம், பொறாமை, கருமித்தனம், கர்வம், மயக்கம் . ( காமம், க்ரோதம், மோகம், மதம்,லோப, மாச்சர்யம்) இவற்றை அம்பாள் துணை கொண்டு அழிக்க முடியும்.  இவை அற்றவன் தான்  ஆத்ம ஞானி.
* 170 * निर्लोभा -நிர் லோபா - கருமித்தனம், கஞ்சத்தனம்,  கிட்டே  நெருங்காதவள். தாராளமாக சகல சௌபாக்கியங்களும், செல்வமும், அருளும் அன்பும் வாரி வழங்கும் அன்னையிடம் உலோப குணம் துளியும் நெருங்க முடியாதே.

* 171 *लोभनाशिनी -லோபநாசிநீ - அம்பாள் மனதில் எள்ளளவும் கருமித்தனம் இல்லாமல் நீக்குபவள் . தரும  சிந்தனையை  வளரவிடாமல், குறுகிய மனத்தை வளர்ப்பது பேராசையும் கஞ்சத்தனமும். ஆகவே தான் இவை இல்லாமல்   அம்பாள் தாராள, பரந்த மனதை, விரிந்த எண்ணத்தை அருளுபவள்.

* 172 *निःसंशया - நிஸ்ஸம்சயா - துளியும் சந்தேக என்பதே இல்லாத மனம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. முழுமை, முதிர்ச்சி பெறாத மனம் தான் சந்தேகப்படும். ஞானம் நிறைந்த ப்ரம்மத்திற்கு எது சந்தேகம்? எதில் சந்தேகம்?

* 173 * संशयघ्नी -ஸம்சயக்நீ - அம்பாள் ஸ்ரீ லலிதை சந்தேக நிவாரணி. பக்தர்கள் மனதில் எந்த கிலேசமும் சந்தேகமும், தாக்கமும் இன்றி பரிபூர்ண பக்தியை நிறைப்பவள். பக்தியாக நிறைபவள். குருவாக நின்று சாதகர், பக்தர் மனதில் ஞானத்தை சந்தேகமற போதிப்பவள். ப்ரம்மமாய் இருப்பவள் தானே குண்டலினியை போதிக்கமுடியும்.

* 174 * निर्भवा -நிர்ப்பவா --Nirbhava - ஜனனமரணம் நமக்கு தான். அதையெல்லாம் கடந்த அம்பாளுக்கில்லை. நம்மை பிறவித் துன்பத்திலிருந்து மீட்பவள் லலிதாம்பிகை.

* 175 * भवनाशिनी -பவநாசிநீ -- பிறப்பறுப்பவள் தாய் லலிதை. ஜனன மரணம் தான் சம்சாரம். இந்த சாகரத்தில் மூழ்கியவன் தப்பி கரைசேர்வது மிக கடினமான காரியம் . அவளை சரணடைந்து மட்டுமே தப்ப முடியும். நவமி சண்டிஹோமம் பண்ணுபவர்கள் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.

* 176 * निर्विकल्पा - நிர்விகல்பா -- எந்த விருப்பமும் தன்னை கட்டுப்படுத்தாதவள் ஸ்ரீ அம்பாள். அவளது செயல்கள் பக்த  பரிபாலனம் பண்ணுவது மட்டுமே. நாம ரூப பேதம் இனம் இடம், எதுவுமறியாத தியானத்தில் இருப்பது தான்  நிர்விகல்ப சமாதி.

* 177 * निराबाधा -நிராபாதா -- எந்த பாதிப்பும் அற்ற ப்ரம்மஸ்வரூபிணி அம்பாள். எல்லா பாதிப்பும் மாயையினால் தானே. மாயையை அடக்கி ஆள்பவள் அம்பாள். பிரம்மத்தின் பக்கமே அவித்யா, மாயை நெருங்கவே முடியாதே .

* 178 * निर्भेदा -நிர்ப்பேதா -- எந்த வித்தியாசமும் லலிதாம்பிகைக்கு கிடையாது. சர்வமும் ப்ரம்மமயத்தில் இருக்கும்போது  எப்படி பேதம் உண்டாகும். எல்லாம் ஒன்றாக காணும்போது எங்கே  பேதத்தைக் காணமுடியும்?

* 179 *भेदनाशिनी -பேதநாசிநீ -- ஏகமயமாக எல்லாவற்றையும் பரிபாலிக்கும் அம்பாள் எந்த பேதத்தையும் அழிப்பவள். ''ஏகம் சத்'' என்பது அவள் அல்லவா? முதலாவதாக அம்பாளுக்கும் அவள் பக்தர்களுக்கும் இடையே கூட எந்த பேதமும் இல்லையே. ''தத் த்வம் அசி'' அது நீயாகவே இருக்கிறாய். இது தான் ப்ரம்ம தத்வம். 

* 180 * निर्नाशा - நிர்நாசா -- முடிவற்றவள் அம்பாள் என்கிறது  இந்த நாமம். ஆரம்பமே தெரியாதபோது முடிவு எது, எங்கே, எப்போது?? ஹயக்ரீவர் யோசிக்கிறார்? ''சத்யம் ஞானம், அனந்தம் ப்ரம்மம் '' இதெல்லாம்  அம்பாள் ஒன்றே என்கிறார். 

* 181 * मृत्युमथनी - ம்ருத்யுமதநீ - காமேஸ்வரன் கால சம்ஹாரன் அவனே காமேஸ்வரியும் ஆனபோது காலனை பற்றி என்ன     கவலை ? அம்பாளை சரணடைந்த நமக்கும் தான் என்ன கவலை?

* 182 * निष्क्रिया - நிஷ்க்ரியா -- தனக்கென்று எந்த ஒரு காரியமும் செய்யவேண்டிய நிலையில் இல்லாதிருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி.  அவளது சங்கல்பமே, எண்ணமே, உலகை, பிரபஞ்சத்தை பரிபாலனம் செய்யும். ரட்சிக்கும். உலகத்தில் நமக்கு தெரிந்த தெரியாத எல்லா காரியங்களும் அவளே தான் என்ற போது அவளுக்கு என்று தனியாக எந்த காரியம் இருக்கப்போகிறது?

* 183 *  निष्परिग्रहा -நிஷ்பரிக்ரஹா -- யாருடைய உதவியும், எந்த விதமான உதவியும் தேவையற்றவள் லலிதாம்பிகை. பக்தர்கள் இதைச்  செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு இல்லாதவள் என்கிறார் ஹயக்ரீவர்.

சக்தி ஆலயம்  -   ஸ்ரீ  தேவி கருமாரி, திருவேற்காடு -

ஒரு நாள், அம்பிகை குறி சொல்லும்  குறத்தியாக  சூரியனிடம் சென்று, ''சாமி, உன் எதிர்காலம் சொல்லட்டுமா?;; என்கிறாள். தேவி கருமாரி அவள் என்று உணராத சூரியன்,  அவளை  உதாசீனப்படுத்தி விரட்டுகிறான்.  அம்மன் சபிக்க,  சூரியன்  பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து  அவன்  பெருமையும் குன்றியது.  அப்போது தான்   தவறை உணர்ந்து திருந்துகிறான்  சூரியன்.  அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்து, அவளும் மன்னித்தருளி ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உகந்த நாளாகிறது.  கருமாரி அம்மன்   தனது  சிரத்தின் மேல்   புரட்டாசி, பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொற்  கிரணங்கள்  நேரடியாகப்  படவும் வரமளித்தாள்.
 வைகுண்டவாசன்  மஹா விஷ்ணு  திருவேற்காட்டில் உள்ள  தனது சகோதரி தேவி கருமாரியைக்  காண  வந்தபோது மனமகிழ்ந்த அம்பிகை, அவரைத் தனது அருகிலேயே, தெற்குத் திசை நோக்கி நின்றபடியே
, திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோலத்தில், நவக்கிரகங்களை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள வேண்டும் என வேண்டிக் கொண்டாள் . திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு  இன்றும்  அருள் வழங்குகிறார்
திருவேற்காட்டிற்கு வந்து அம்பிகையையும், ஸ்ரீநிவாசப் பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்த வேத வியாச முனிவர்  அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். 
சென்னையிலிருந்து 20 கி.மீ., தூரத்தில்   திருவேற்காடு உள்ளது.  அமைதியான கிராமம். தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பதாள்  திருவேற்காடு என்று பெயர்.  அம்பாள்   தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகத்தின்  புற்றில்  உருவானவள்.  ”மரச்சிலை அம்மன்” என்ற ஒரு  சன்னதியும்  இருக்கிறது.     சர்வ தோஷஙளையும் தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள்   அம்பாள் பிரசாதமாக  பெறுகிறார்கள்.    வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப் பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப் பெறுகிறார்கள். பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை  நடைபெறுகிறது.  அம்பாள் சந்நிதியைச் சுற்றி  அநேகர்  இன்றும்  அங்கப்ரதக்ஷணம் செய்வதைக் காணலாம்.  சக்தி வாய்ந்த அம்மன் திருவேற்காடு கருமாரி.  எண்ணற்றோர்  நெஞ்சில் குடியிருக்கும் தெய்வம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...