Friday, October 22, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் - நங்கநல்லூர் J K SIVAN -சுலோகங்கள் 39-40 நாமங்கள் 103-111


आज्ञा चक्रान्तरालस्था, रुद्रग्रन्थि विभेदिनी ।
सहस्राराम्बुजा रूढा, सुधासाराभि वर्षिणी ॥ 39 ॥

Aagyna-chakrantaralasdha rudra-grandhi vibhedini
Sahasraranbujaruda sudhasarabhivarshinee – 39

ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதிநீ |
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39

तटिल्लता समरुचिः, षट्-चक्रोपरि संस्थिता ।
महाशक्तिः, कुण्डलिनी, बिसतन्तु तनीयसी ॥ 40 ॥

Tatillata samaruchi shatchakropari sansdhita
Mahashakti-kundalini bisatantu taniyasi – 40

தடில்லதா ஸமருசி : ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாசக்தி : குண்டலிநீ பிஸதந்து தநீயஸீ || 40

ஸ்ரீ லலிதா நாமங்கள் 103-111 அர்த்தம் :

* 103 * आज्ञाचक्रान्तरालस्था -ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா -
இரு கண்ணிமைகளுக்கிடையில் இருப்பவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். அங்குள்ள சக்ரம் தாம் ஆக்ஞா சக்ரம். மூன்றாவது கண்ணுக்கான சக்ரம்.
*104* रुद्रग्रन्थिविभेदिनी -ருத்ரக்ரந்தி விபேதிநீ -
ஸஹஸ்ராரத்தை அடையும் முன் குண்டலினியின் பாதையில் எதிர்ப்படுவது ருத்ர க்ரந்தி - ருத்ர முடிச்சு. அம்பாள் இதையும் தகர்க்கிறாள். இது தான் மூன்றாவது கடைசி முடிச்சு. ஒரு விஷயம். பஞ்சதசி மந்திரத்தில் மூன்று ''ஹ்ரீம்'' உண்டு. மூன்றும் ஒவ்வொரு க்ரந்தி யை குறிக்கும். இந்த முடிச்சை தாண்டியது குண்டலினி ஸஹஸ்ராரத்தை அடைந்து சக்தி சிவனை இணைகிறாள். இந்த நிலையில் பழைய வாசனைகள் பக்தனை விட்டு அகல்கிறது. ப்ரம்ம ஞானம் ஒன்றே அவனை நிரப்புகிறது. சதானந்த நிலையில் திளைக்கிறான்.
* 105 * सहस्राराम्बुजारूढा - ஸஹஸ்ராராம்புஜாரூடா-
ஸஹஸ்ராரத்தில் காத்திருக்கும் சிவனை சக்தி அடைகிறாள். பிறந்த குழந்தையின் தலையில் உச்சி மண்டையில் ஒரு குழி தெரியும் பார்த்திருக்கிறீர்களா. அதை ப்ரம்மரந்திரம் என்று சொல்வார்கள். அதற்கு கீழே தான் ஸஹஸ்ராரம். ப்ரம்மரந்திரம் வழியாகத்தான் கபாலமோக்ஷம்.
இந்த நிலையில் தான் சக்தி உபாசகன் சிவனையும் போற்றி வணங்குகிறான். சமஸ்க்ரிதத்தில் 50 அக்ஷரம். அதை 20ஆல் பெருக்கினால் கிடைப்பது ஆயிரம். இருபது என்ன? ஐந்து கர்மேந்திரியம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள். இவை தான் அந்த இருபது.
* 106 * सुधासाराभिवर्षिणी -ஸுதாஸாராபி வர்ஷிணீ -
ஸஹஸ்ரார அம்ருதத்தை உடலின் எல்லா நரம்புகளிலும் பரவச் செய்பவள்.
ஸஹஸ்ராரத்தில் நடுவே ஒரு சக்ரம். அதற்கு சோம சக்ரம் என்று பெயர். அம்பாளின் உஷ்ணம் தாங்காமல் சோமச்சக்ரத்தில் தேங்கி நிற்கும் அம்ருதம் இளக ஆரம்பித்து தொண்டை வழியாக இறங்கி சொட்டும். நரம்பு மண்டலம் பூரா பரவும்.
* 107 * तडिल्लतासमरुचिः - தடில்லதா ஸமருசி :
ஸ்ரீ லலிதாம்பாள் மின்னல் போல் ஜொலிப்பவள். குண்டலினி பழகும் யோகிகள், பக்தர்கள், சித்தர்கள், அதனால் தான் முதுகுத்தண்டு முழுதும் ஒளிவிடுவதை உணர்வார்கள். குண்டலினியை சிவனோடு சிவை இணைவதை ப்ரம்மம் மின்னலாக ஒளிர்வதாக உணர்வார்கள். கேநோபநிஷத் ப்ரம்மம் மின்னலாக ஒளிவிட்டது என்று இதைத்தான் சொல்கிறது. மஹா நாராயண உபநிஷத் வித்யாலோக ஒளி என்கிறது. நிர்குண ப்ரம்மனான சிவனை சகுண ப்ரம்மமான சக்தி சேர்வதால் மிளிரும் ஞானஒளி.
* 108 * षट्चक्रोपरिसंस्थिता - ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா |
ஸ்ரீ அம்பாள் ஆறு சக்ரங்களையும் கடந்தவள். பரப்பிரம்மம்.
* 109 * महासक्तिः - மஹாசக்தி : ||
அம்பாளுக்கு விசேஷங்கள் விமரிசைகள் பிடிக்கும். இங்கே விசேஷம் விமரிசையே காத்திருந்த காமேஸ்வரனோடு காமேஸ்வரி அம்பாள் ஐக்யமாவது தான். நம்மைப்போல் வெளியுறவு இல்லை. குண்டலினியை வெளியே அறியமுடியாத உள்ளுறவு தானே. சிவை சர்வசக்தியும் பெறுவது.
* 110 * कुण्डलिनी - குண்டலிநீ --
அம்பாளை குண்டலிநீ என்று மூன்றரை சுற்று நாகமாக கருதுவது. அவளது நுண்ணிய தோற்றம்.
பிராணனின் முக்கிய சக்தி குண்டலினி. மூலாதார சக்ரத்தில் அக்னிக்கு நடுவே இருப்பது குண்டலினி. நம்முடைய ழுடலை 98.4 டிக்ரீ F சூட்டில் வைத்திருப்பது. இந்த சூட்டின் அளவு மாறும்போது நாம் வியாதியில் சிக்குகிறோம். அமைதியாக காதை மூடிக்கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி கவனமாக கேட்டால் குண்டலினி வெளிப்படுத்தும் ''உஸ் '' சப்தம் கேட்கும். குண்டலி சுழுமுனைப்பாதையில் மேலே ஒவ்வொரு சக்கரமாக தாண்டி எழும்போது யோகிகளை போல் மூச்சு கட்டுப்பாட்டில் வரும். ப்ராணனை இதயத்தில் நிறுத்தத்தினால் ஒரு நோயும் வராது என்பார்கள். நரம்புகள் மேலே ஸஹஸ்ராரத்தை நோக்கி படரும். அங்கிருந்து தொண்டை வழியாக வழியும், சொட்டும், அம்ருதத்தை பெற்று எல்லா நரம்புமண்டலமும் அது பரவி ஆனந்த அம்ருதானுபவம் பக்தன் பெறுவான்.
* 111 * बिसतन्तुतनीयसी - பிஸதந்து தநீயஸீ
-- அம்பாள் இளம், மெல்லிய, தாமரைத்தண்டு போல் மென்மையானவள். அவளது நுண்ணிய வடிவத்தை கூறுவதற்கு இந்த உதாரணத்தை ஹயக்ரீவர் சொல்கிறார். மூலாதார சக்ரத்தில் அவள் சிறு பெண். பிறகு அழகாக உடைஉடுத்து ஆபரணங்கள் சூடி யவளாக மணிபூரகத்தில் உள்ள. அப்புறம் கேட்கவேண்டுமா, காமேஸ்வரனை மூன்றாவது க்ரந்தி நீங்கி மின்னல் கொடியாளாக சிவனை அடைகிறாள். தானே அவனாகிறாள்.
சக்தி பீடம் - 51 சக்திபீடங்களில் ஒன்று. த்ரிபுரசுந்தரி ஆலயம், உதயபூர்.
உதயபூரின் தலைநகர் பெயர் அம்பாள் பெயர். திரிபுரா. 500 வருஷங்களுக்கு முந்தைய ஆலயம். ராஜாக்கள் பரம்பரையாக பராமரித்து வரும் ஆலயம். லக்ஷக்கணக்காக அம்பாள் பக்தர்கள் தரிசிக்கும் ஆலயம்.1501ல் மஹாராஜா தன்யா மாணிக்ய ராஜா கட்டியது. ராஜா விஷ்ணு ஆலயம் கட்ட தான் ஏற்பாடுகள் செய்தான். ஒருநாள் ராஜாவின் கனவில் தேவி பகவதி தோன்றி ''சிட்டகாங் போ. அம்பாள் விக்ரஹம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்'' ராஜாவின் தளபதி சென்று அம்பாளை கொண்டுவருவதற்குள் கோவில் கட்டப்படவில்லை. ஆகவே பிரதிஷ்டை தாமதமாயிற்று. விமரிசையாக அம்பாளை அப்புறம் கோவில் ரெடியானதும் பிரதிஷ்டை செய்தார்கள். இதிலும் ஒரு சூக்ஷ்மம் இருக்கிறது. அம்பாள் சிலை ஒரு இடத்துக்கு வந்ததும் நின்றுவிட்டது. நகர்த்த முடியவில்லை. அந்த இடம் ஒரு சிறு குன்று. மடபாரி என்று பெயர். அந்த இடம் உதயபுரிக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில். அங்கு தான் இந்த அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழும்பியதாம். ஆமை வடிவ கூர்ம பீடம் இந்த குன்று மட பாரி. திரிபுரா என்பதை விட மடபாரி என்றால் தான் எல்லோருக்கும் தெரியும்.

ஆலயத்தை ஒட்டி ஒரு பெரிய குளம். கல்யாணசாகர் என்று பெயர். கோவில் அமைந்த பிறகு 124 வருஷங்களுக்கு அப்புறம் தோண்டப்பட்ட குளம். மாணிக்ய ராஜா காலம் (1625-1660). தெற்கே பார்த்த அம்பாள். கிட்டத்தட்ட 4 - 4 1/2அடி உயர நின்ற திருக்கோலம். தங்கத்தை உரைக்கும் கல் வகையில் உருவான சிலை. வர, அபய ஹஸ்தங்கள். கழுத்தில் 13 மனித தலைகள் கொண்ட மாலை. யோக ஜடாமுடி மகுடம் கொண்ட அம்மன். சக்தி வாய்ந்த கண்கள். சிவனின் விகிரஹம் கீழே சவாசன ரூபத்தில் அமைந்து அதன் மேல் அம்பாள் நிற்கிறாள். பக்தர்கள் இவளைக் காளி என்று தொழுகிறார்கள். சதி தேவியின் வலது காலின் கீழ் பகுதி விழுந்த இடம் இந்த சக்தி பீடம் என்கிறார்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...