Friday, October 15, 2021

sri lalitha sahasranamam

 ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம்   -  நங்கநல்லூர்  J K SIVAN

நாமங்கள்:21 -30

அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகு.  அவள் அழகுக்கு ஒப்புமை  வேறு ஏதாவது இருந்தால் தானே  இது போல  என்று காட்ட முடியும்?  பிரம்மன் என்று சுலபமாக அவளை பற்றி சுருக்கமாக சொல்லிவிடலாம்.  பரம ஆனந்தத்தின் உச்ச கட்டம் தான் ப்ரம்மம், ப்ரம்மானந்தம்.
அழகும் ஆனந்தமும் ஒன்று கூடிய கலவை. அகத்தின் அழகு முகத்தில் என்கிறோமே,  அவள்  முழுதும் பிரம்மத்தில் திளைப்பவள் என்பதால் அவள் முக காந்தி அப்படி ஒளிவீசுகிறது.

உபாசனை ஐந்து வகை.  அபீகமனம்   : அணுகுவது. உபாதானம்:  அர்ப்பணிக்க தயார் நிலை:  லிஜ்யா :  நிவேதனம்,   ஸ்வாத்யாயம்:  தானே அறிவது.  யோகம் : பக்தி தியானம்.
விக்ரஹ ஆராதனையில் ஆரம்பித்து தனக்குள் தானே  பிரம்மமாக உணர்வது வரை முதிர்ச்சி பெறுபவன் யோகி.

இந்த  பதிவில்   ஸ்லோகங்கள்  8 முதல் 10 வரை பார்ப்போம். அதில் வரும் நாமங்கள் பத்து.  அதைத்தான் 21 முதல் 30வது நாமம் வரை அர்த்தம் புரிந்துகொள்ளப்போகிறோம்.

कदम्ब मञ्जरीक्लुप्त कर्णपूर मनोहरा ।
ताटङ्क युगलीभूत तपनोडुप मण्डला ॥ 8 ॥

Kadanba manjari klupta karna-pura mano-hara
Tatanka yugali-bhuta tapa-nodupa mandala – 8

கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா |
தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா || 8

पद्मराग शिलादर्श परिभावि कपोलभूः ।
नवविद्रुम बिम्बश्रीः न्यक्कारि रदनच्छदा ॥ 9 ॥

Padma-raga shila-darsha pari-bhavi kapolabhuh
Nava-vidruma binbashree nyakkari radanachada – 9

பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: |
நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா || 9

शुद्ध विद्याङ्कुराकार द्विजपङ्क्ति द्वयोज्ज्वला ।
कर्पूरवीटि कामोद समाकर्ष द्दिगन्तरा ॥ 10 ॥

Shudha vidyankurakara dvijapankti dvayojvala
Karpura-vitikamoda samakarsha digantara – 10

சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா |
கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா || 10


* 21 *  कदम्बमञ्जरीक्लृप्तकर्णपूरमनोहरा -கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா - லலிதாம்பாளின் செவிகள் எப்படி இருக்குமாம் தெரியுமா. அன்றலர்ந்த அழகு மிகுந்த கதம்ப மலர்கள் போல

* 22 *  ताटङ्कयुगलीभूततपनोडुपमण्डला - தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா ||
 நம்மைப்போல குந்து மணி தங்கத்தில் அவள் தோடு அணிபவள் இல்லை. கண்ணைப்பறிக்கும் ஒளி வீசும் சூரியனும் சந்திரனும் என்னை போட்டுக்கொள் என்று எதிரே வந்து நின்றால் போனால் போகிறது என்று காதில் அணிபவள் .

* 23 * पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ:
பத்ம ராக கல்லை இழைத்து கண்ணாடியாக்கினால் எப்படி வழவழவென்று ஒளி வீசும். அது போல் இருக்கும் கன்னங்களை உடையவள் அம்பாள்.

* 24 * नवविद्रुमबिम्बश्रीन्यक्कारिरदनच्छदा - நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா -
செம்பவழங்களை வரிசையாக ஒழுங்கான அளவில் இணைத்ததுபோல் உருவம் கொண்டது லலிதா தேவியின் இதழ்கள்.

* 25 *  शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला -சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா --
 அவள் பதினாறு அக்ஷரங்களை கொண்ட ஸ்ரீ வித்யா அல்லவா. அவள் பற்கள் அவ்வளவு தூய சாஸ்திரங்களின் சத்ய ஞான வெண்மை கொண்டவை.

* 26 * कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा - கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா --
அவள் இருக்கும் இடத்திற்கு வெகுதூரம் வரை கம்மென்று மணம் வீசுகிறதே அது என்னவா ? வேறு ஒன்றுமில்லை.அவள் மெல்லும் வெற்றிலை தாம்பூலம் அதில் இருந்து வீசும் சுகந்தம்.

* 27 * निजसल्लापमाधुर्यविनिर्भर्त्सितकच्छपी -  நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ -
அம்பாள் குரல் இனிமை தெரியவேண்டுமானால் உங்களுக்கு அவசியம் சரஸ்வதி தேவியின் வீணை ( கச்சபி என்று பெயர் அதற்கு )யிலிருந்து எழும் ஸ்வரங்களின் நாதம் தெரிந்திருக்கவேண்டும்.

* 28 *  मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसा -மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா | -
அழகிய நெளிந்து ஓடும் காட்டாறுகளை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள். மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது. அதே தான் அம்பாளின் புன்னகையின் அழகும்.

* 29 *  अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता -  அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- யோசித்துப்பார்த்தால் எதை ஈடு என்று சொல்ல தெரியவில்லை அவ்வளவு நல்ல  ஒப்பற்ற  அழகு லலிதாம்பாளின் முகவாய்.

* 30 * कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा - காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -
 அம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா? மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான். இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா?

 ஸ்ரீ ஒளஷத லலிதா மஹா திரிபுரசுந்தரி - ஸ்ரீ பீடம். செம்பாக்கம்:

சென்னையிலிருந்து  50 கி.மீ. தூரம் தான்.  சென்னை- திருப்போரூர் -செங்கல்பட்டு மார்கத்தில்  சேசெம்பாக்கம் எனும் சிறு ஊரில்  ஒரு  லலிதா மஹா திரிபுரசுந்தரி நமக்கு தரிசனம் கொடுக்கவென்றே  காத்திருக்கிறாள்.  வட திருவானைக்கா  என்று அறியப்படும்  அருமையான ஆலயம்.  நான் சென்று தரிசித்திருக்கிறேன். 

பழங்காலத்தில் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட விக்ரஹங்கள்  வழிபடப்பட்டன . ஆயிரக்கணக் கான வருஷங்களுக்குப் பிறகு  இந்த  ஸ்ரீ பீடம் பாலா சமஸ்தான ஆலயத்தில் 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  அம்பாள்  திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப் பட்ட  கலவைகளால் எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள் நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார்  ஏழு எட்டு  ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை உருவாகி இருக்கிறாள்.  தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் உருவானவள்.

திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையானவள் . நின்ற கோலம்.  இரு கரத்தில் அங்குச, பாசம்.தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌந்தர்ய ரூபி.

மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலகாப்பு ) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும். மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழம்  நீளமான புடவை அணிகிறாள். தினசரி பாதபூஜை உண்டு.

தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீசக்ரசபை எனப்படுகிறது.  இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்கிறாள்.  ஹரி, ஹரன் வழிபட்ட திரிமூர்த்தி ஸ்வரூபிணி.

ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது. பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே. திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும்.  
கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம்.  தொடர்புக்கு: 9789921151 , 9445359228.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...