Friday, October 8, 2021

A BIRTHDAY GIFT FOR ALL

 என் அன்பு நண்பர்களே, 


பிறந்தநாள் பரிசு  ஒன்று. 

நாள்  எவ்வளவு சீக்கிரமும்  வேகமாகவும் ஓடுகிறது என்று அதிசயிக்கும் நேரத்தில் ஒரு நாள் காணாமல் போகிறது.ரெண்டு வருஷம் வீட்டிலேயே  உட்கார்ந்து இருந்து திரும்பி பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இனிமேல்  இப்படி வீட்டிலேயே
 அடைபட்டு கிடப்பது தான் பழக்கமாகி விடும்
போல் இருக்குமோ?  . யாராவது  வாருங்கள் வெளியே எங்காவது போகலாம் என்று  அழைத்தால்  கூட  வேண்டாமே  என்று யோசிக்க வைக்கும் போல இருக்கிறது.  

இன்று  83வயது உனக்கு என்று காலண்டர் சீட்டு கிழிக்கும்போது காட்டியது.  எனக்கு மூன்று பிறந்தநாட்கள். அதில் உலகெங்கும் பரவலாக நிலைத்தது நான் பிறக்காத  பிறந்த நாள்  1.4.1939. ஏதோ அவருடைய ஒரு சௌகர்யத்துக்கு  அரசாங்க கணக்கு துவங்கும் நாளில்  சூளைமேடு கார்பொ ரேஷன்  எலிமெண்டரி  பள்ளிக்கூடத்தில்  முதல் பள்ளிக்கூட வாத்யார்   (அவரே ஆக்டிங் ஹெட் மாஸ்டர் கூட) சுப்ரமணிய அய்யர்,   எனது ஐந்தரையாவது வயதில் ரிக்கார்டில் பதிய வைத்த தேதி.  அதுவே  எல்லா  ஆவணங்களிலும்  என் பிறந்த நாள் அது தான் என்று இன்றுவரை காட்டி  வருகிறது. அதை மாற்ற முயற்சி எடுக்காததால் நிலைத்து விட்டது.

அடுத்தது ரெண்டாவது,  நான் உண்மையில் பிறந்த தமிழ் நக்ஷத்திர தேதி.  சில நாட்களுக்கு முன் சத்தமில்லாமல் வீட்டோடு கொண்டாடப்பட்ட  புரட்டாசி சுக்லபக்ஷம்  மஹம்.  என் மனைவி மறக்காமல் ஒரு பாயசம் வழக்கம் போல் வைத்து எனக்கு ஒரு டம்ளர் கொடுத்த போது தான் எதற்கு என்று யோசித்தவாறு அவளை பார்த்து  ஏன் காப்பியில் இவ்வளவு சர்க்கரை போட்டிருக்கே  என்று கேட்ட போது   '' காப்பிக்கும் பாயசத்துக்கும் வித்யாசமே தெரியாமலேயே  இவ்வளவு வருஷமா?  இன்னிக்கு  நீங்க பொறந்த நாள்'' என்று குற்றச் சாட்டை வைத்தாள்.

எனது  மூன்றாவது பிறந்த நாள் ஆங்கிலத்தில் மேற்கண்ட தினத்துக்கு ஈடான வெள்ளைக்காரன் காலண்டர் நாள். அக்டோபர் 9ம் தேதி. அதைத்தான் இன்று என் உண்மையான பிறந்தநாள் என்று எந்த ஆவணமும் உதவிக்கு இன்றி அதைப்பற்றி எவருக்குமே லக்ஷியமே  இல்லை என்று தெரிந்தும் சொல்கிறேன்.  எனது முகநூலில் இதை தான் இப்போது பிறந்த நாளாக காட்டியிருக்கிறேன். அதற்கு எந்த ஆவணமும் கொடு என்று அவர்கள் கேட்காததால்... 

இந்த அருமையான நாளில் ஒரு சுவையான பாடலைக் கேட்டு பாடினேன். சிந்து பைரவியில் எளிமையான சுலபமான ஒரு பாட்டு ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா  முப்பது  நாற்பது ஆண்டுகளுக்கு  முன்பு  ஒரு தமிழ் படத்தில் பாடியது. 

 
https://youtu.be/rUCmhDHgSdY  
 இந்த பாடல்  ஏன்  எனது பரிசு என்றால்  ''எல்லோரும் நன்றாக வாழ  அருள வேண்டும்  '' என்ற கருத்துள் ளது. ''லோகா ஸமஸ்தா  சுகினோ பவந்து''     தானே நமது ஹிந்து ஸநாதன தர்ம  குறிக்கோள்..  

முகநூல் பார்த்து எனக்கு வாழ்த்து தெரிவித்த/தெரிவிக்கும்  எல்லா   இளையவர்களுக்கும்   கிருஷ்ணன் உங்களை நன்றாக  வாழ வைக்க வேண்டும் என்று வாழ்த்தி,  அதே நேரம்   என்னை  ஆசிர்வதித்த என்னிலும் முதியோர்களுக்கு  எனது  மனமார்ந்த நன்றி  நமஸ்காரங்கள்.    ஜே கே  சிவன் .
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...