Thursday, October 7, 2021

PESUM DEIVAM


 #பேசும்தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN

பிராயச்சித்தம்

கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், மஹா பெரியவா காஞ்சியிலோ, கலவையிலோ இருக்கிறார் என்றால் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும். தெய்வத்தை தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு இருந்தால் யாரவது விட்டு வைப்பார்களா? அப்புறம் இன்னொரு சமயம் என்று தள்ளிப்போடத் தான் முடியுமா?வழக்கம் போல் அன்றும் பெரிய ஹனுமார் வால் க்யூ. காலையிலிருந்தே கூட்டம். எல்லோரும் கையில் தட்டுடன், ஆண்கள் எவரும் சட்டை இல்லாமல் நின்றுகொண்டிருக்க பெண்கள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக்கொண்டு மடிசாருடன் கையில் தட்டுகளோடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒரு வயசான தம்பதிகள் மெதுவாக நத்தை வேகத்தில் முன்னேறி இதோ பெரியவா அருகே வந்துவிட்டதால் அவரை தம்பதிசமேதராக நமஸ்கரித்தார்கள்.

"பெரியவா...நான் ரிடையர் ஆய்ட்டேன்....கொழந்தைகள்...யாரும் எங்களுக்கு இல்லை. அதுனால, நாங்க ரெண்டுபேரும் மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரஹம் பண்ணணும்."

''வாழ்றதுக்கு ஒனக்கு ''பிடிப்பு'' எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"
"ஆமா.."
"எதாவது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"
"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்." சற்று தள்ளி ஓரமாக அவர்களை நிறுத்தி வைத்துவிட்டு மேற்கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் தொடர்ந்தது. வந்தவர்களில் இன்னொரு வயசான தம்பதி. கூடவே அவர்களுடைய பெண். "பெரியவா , இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்.
.."தெய்வம் கையை உயர்த்தி ஆசி தந்தது. பெரியவா கவனம் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த தம்பதி பக்கம் திரும்பியது. ஜாடையாக அருகே கூப்பிட்டார்

."உனக்கு ஏதாவது ஒரு பிடிப்பு" வேணும்...னியே! இதோ....இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வைக்கிறியா! நீதான் கன்யாதானம் பண்ணணும்."

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்.பெரியவா ''
" பிடிப்பு'' கீழே விழுந்து மறுபடியும் வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது......
."ஆமா, பெரியவா, இவள் என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவிரமான மாறுதல்.
"சரி...ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?..
"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும் என் குடும்ப ரஹஸ்யம்?
ரொம்ப கூனிக்குறுகி,
"இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா...நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்..." துக்கத்தால் குரல் அடைத்தது.
"ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ...ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை..''
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி! என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயைப் பிளந்தார்கள்!
உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளைத் தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள். பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணி னார்கள்.இந்த விஷயத்தை இதோடு நிறுத்திவிட்டு நமக்கு நாமே சில கேள்விகள் கேட்டுக் கொள்வோம்?

1. எப்படி மஹா பெரியவாளுக்கு ''பிடிப்பு'' தம்பதிகளுக்கு ஒரு பெண் உயிரோடு காணாமல் போனது தெரியும். அது இறந்து போன மூத்த மனைவியின் குழந்தை என்றும் எப்படி தெரிந்தது?
2. ஏன் அவர்கள் ''எங்களுக்கு குழந்தையே இல்லை'' என்று சொன்னார்கள்?
3.எப்படி அந்த குழந்தை காணாமல் போனபிறகு இவ்வளவு வருஷம் அதைப் பற்றி கவலையே படாமல் சும்மா இருக்க முடிந்தது? உயிரோடு ஒருவர் பெற்ற குழந்தையை மறக்க முடியுமா?
4. இப்படி ஒரு பாதகத்தை பண்ணி விட்டு எப்படி பெரியவா எதிரே வந்து நின்று தரிசனம் பண்ணி, மடத்திலேயே சேவை பண்ணுகிறேன் என்று சொல்ல முடிந்தது?
5. எப்படி அந்த குழந்தையை வளர்த்த ஏழை தம்பதிகள் அதே நாளில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார்கள்?7. எதற்கு பெரியவா அந்த பிடிப்பு ஆசாமி தம்பதி களை ஓரமாக நிற்க வைத்து இந்த பெண்ணோடு ஜோடி சேர்த்து விட்டார்?
8. மஹா பெரியவா தீர்க்க தரிசி என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா?
9 பேசும் தெய்வம் என்று நான் பெயரிட்டு அவரைப் பற்றி விஷயம் சேகரித்து எழுதுவது அற்புதமா இல்லையா? இது நான் எழுதினேன் என்று தம்பப்பட்ட அடிப்பதற்கு இல்லை, யாரோ எங்கோ எப்போதோ எழுதிய விஷயமாக இருந்தாலும் நான் படித்து எனக்கு பிடித்த முறையில் வழங்குவது சரி தானே?
மேலே சொன்ன கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில், தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...