Thursday, January 30, 2020

GITANJALI



கீதாஞ்சலி    J K  SIVAN 
ரவீந்திரநாத் தாகூர் 

                                                         30.   என் எண்ண  எதிரொலி 
       
30.  I came out alone on my way to my tryst. 
But who is this that follows me in the silent dark?
I move aside to avoid his presence but I escape him not.
He makes the dust rise from the earth with his swagger; 
he adds his loud voice to every word that I utter.
He is my own little self, my lord, he knows no shame;
 but I am ashamed to come to thy door in his company.

யாரோ  நம்மை  பின் தொடர்கிறார்கள். நம்மை, நம் பேச்சை, செயல்களை கூர்ந்து கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்தால் எவ்வளவு சங்கடமாக இருக்கும்.  தெரியுமல்லவா?  அதே தான். 



நான் எப்படியோ உன்னை சந்திக்க வேண்டும். அந்த எண்ணத்தோடு தான் நான் தனியே உன்னைத்தேடி வந்தவன். இந்த இருளிலும்   துளியும் சப்தமே போடாமல் யார் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டி
ருப்பது யார். நான் நின்றால்  நிற்பது, நான் திரும்பினால்  தானும்  திரும்புவது,  யார் இப்படி  என்னை தொடர்வது.  சரி யாரோ  வேகமாக போவதற்கு நாம் இடையூறாக இருக்கிறோம் போல் இருக்கிறது. சரி அவ்வளவு அவசரமாக போவதாக இருந்தால் முன்னால் என்னை தாண்டி போகட்டும் என்று ஓரமாக நின்று வழி விட்டேன்.   அவனோ /அவளோ  அதுவும்  நிற்கிறது. 

 எனக்குள் ஒரு ஆர்வம்.  அவன் யார் என்று அறியாமல் விடப் போவதில்லை. அட்டகாசமாக அவன் டப்டப் என்று நடக்கும் அந்த அதிகார டாம்பீக தோரணையில் அவன் கால்களால் புழுதியைக் கிளப்பி விட்டு அல்லவோ செல்கிறான்?  நான் சொல்லும் மிருதுவான வார்த்தைகளை உரக்க  காது செவிடுபட  எதிரொலிக்கிறான் . எதற்கு  உரத்த குரலில்  பிரதிபலிப்பு?

ஓஹோ  நீ  வேறு யாரோ அல்ல. எப்படி என்னில் என் நிழல் மறைந்திருக்கிறதோ அதுபோல் அவன் என்னுள்  உறைபவன் தான் நீ. . என்னில் பாதி.  அவனே  'நான்''   என்கிற போது  அவனுக்கு என்ன  அதில் வெட்கம்  சொல்லிக்கொள்ள?.

''கிருஷ்ணா,  என் தலைவா,  பிரபு,    அவன்  என்  உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு, அவனோடு சேர்ந்து உன்  சந்நிதி   வாசலுக்கு  எப்படி  அவனோடு நான் வருவேன்?  இப்படி நினைக்கும்போது எனக்கு தான்  என்மேலேயே  வெட்கமாக,  கஷ்டமாக இருக்கிறது. மனதில்   எந்த பழங்குப்பையுமில்லாமல், உன் எண்ணம் ஒன்றுடனேயே தான் வரவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...