Friday, January 17, 2020

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர்   J K   SIVAN
         
             "ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்"

கும்பகோணத்தில்  போய்  உட்கார்ந்துகொண்டு  அங்கிருந்து  நவகிரஹ ஸ்தலங்களை தரிசிப்பது அநேகர் செய்வது. நான் சிதம்பரத்திலிருந்து அதை துவங்கினேன்.  சந்திரனை  தரிசிக்க திங்களூர் செல்கிறோம். அந்த   ஊரில் ஒரு காலத்தில்  ஒரு சிவனடியார்  வாழ்ந்திருந்தார்.  அவர்  பெயர் அப்பூதி அடிகள்.  திருநாவுக்கரசர் காலத்தவர்.     கல்லில் கட்டி   கடலில்  போட்டும்,  சுண்ணாம்புக்  காளவாயில் போட்டும்,     கொடிய  விஷத்தை போட்டியும்   அவரை   அரசன் வதைத்தான்.   எல்லாவற்றிலிருந்தும்   சிவனே ( அவர் வயிற்று வலியை   போக்கி நாவரசன்  என்ற பெயர்    சூட்டி யவன்)  காப்பாற்றினானாமே  என்று   கேள்விப்பட்டு  அப்பர்  எனும் திருநாவுக்கரசரரிடம்   அதீத  பக்தி.   ஆகவே  திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்ன தானம்   செய்தார்.   யாத்ரிகள் தங்க  சத்திரம் ஏற்பாடு செய்தவர் .  திருநாவுக்கரசரை  நேரில் பார்த்ததில்லை.  இந்த பிராமண பக்தர் வீட்டில்  கன்றுக்குட்டி,  எருமை,  வாழைமரம்,    தராசு, பாத்திரம்,    கதவு ஜன்னல்   எல்லாவற்றுக்குமே திருநாவுக்கரசர்  என்று பெயர்.   அவர் பிள்ளைகளுக்கும்    சேர்த்து.

திருநாவுக்கரசர்  ஒருநாள்   திங்களூர்  வருகிறார்.  அங்கே  அன்னதானம் தண்ணீர்  பந்தல்    நடைபெறும் இடத்துக்கு வருகிறார்.   ''அட   இதென்ன, என்  பெயரில் தர்மங்கள்  தானங்கள்   இங்கே  நடக்க்கின்றதே. யார்  இதை   எல்லாம் செயகிறார்கள் ?'' என்று   கேட்கிறார்.

''இங்கே   அப்பூதி  என்ற ஒரு  ப்ராமண சிவனடியார்   திருநாவுக்கரசர் எனும்  ஒரு சிவபக்தர் அடிமையாக தன் னைக்  கருதி , தனது  குரு வின்  பெயரால் தர்மங்கள் செயகிறார்''  என்று  அறிகிறார்.

அப்பர்   அப்பூதி அடிகள்  வீட்டுக்கு  செல்கிறார்.    யாரோ ஒரு பழுத்த சிவனடியார்  வாசலில்  நிற்பதைக்  கண்ட அப்பூதி


 ' ஐயா, உள்ளே வாருங்கள்''    என்று   அழைத்து உபசாரங்கள் செய்கிறார். 

நீங்கள்  தான்  அப்பூதி  எனும்  தர்மவான், தான  சீலரோ?'உங்களைப்பற்றி  இந்த ஊரெல்லாம்  பெருமையாக  பேசுகிறார்களே என்று   உங்களை தரிசிக்க  வந்தேன் ''

''ஐயா   நான் அந்த  தெய்வத்தின் கால் தூசி.  என்    குருநாதர் திருநாவுக்கரசரின்  அடிமை. ''

ஓஹோ,  அதனால் தான்  அந்த  மனிதனின்  பெயரால்  இத்தனை  தர்ம கைங்கர்யமோ?  அழகாக  உங்கள் பெயரால்  செய்திருக்கலாமே.  அவரைப் பார்த்ததுண்டா?''

''இல்லை  ஐயா, அந்த  பாக்யம்   எனக்கு இன்னும்  கிட்டவில்லை. நீங்கள்  ஒரு    சிவனடியாராக   இருக்கிறீர்கள் திருநாவுக்கரசரை  சாதாரண  மனிதனுக்கு சமானமாக  ஒப்பிடுகிறீர்கள்  எனும்போது  எனக்கு  உங்கள்  பேச்சு   காதில்   நாராசமாக விழுகிறது.   பல்லவ  ராஜாவின்  எத்தனை கொடுமைகளிருந்து  அவரை சிவபெருமான்  காப்பாற்றி இருக்கிறார்.   உத்தமமான   தூய சிவனடியார்   அவர்.    அவரைப்பற்றி   அறியாத  தெரியாத  நீங்கள் யார் ?''

''அப்பூதி  அடிகளே, நான்  தான்  அந்த  சர்வேஸ்வரன்  திருவடிகளில்   அடைக்கலம்  கொண்ட  துறவி அப்பா.  என்னப்பன் பரமேஸ்வரன் தான்  என்னை  சூலை நோயிலிரு\ந்து ,  என்  தவறுகளிலிருந்து,  துன்பங்க
ளிலிருந்து  மீட்டு வழி   நடத்துபவன்''

அப்போது  அப்பூதி அடிகளுக்கு  எப்படி இருந்திருக்கும்.?     வீட்டுக்குள் ஓடி  மனைவி குழந்தைகள்  சுற்றம்  மற்றோரோடு  நெடுஞ்சாண்கிடையாக   அப்ப  கால்களில்   விழுந்து ஆசி  பெறுகிறார்கள்.

''  குருநாதா,   இன்று  இந்த  ஏழையின் இல்லத்தில்  நீங்கள்  பிக்ஷை   பெறவேண்டும்.அந்த பாக்யத்தை எனக்கு  அருளவேண்டும். ''    புளகாங்கிதமடைந்த அப்பூதி மன்றாடி கேட்டார். 

''எல்லாம்  என்  இறைவன் சிவனருள். அப்படியே ஆகட்டும்''

 பெரிய பிள்ளையை கூப்பிட்டு  ''அடே திருநாவுக்கரசு,   ஓடிப்போய்  கொல்லையில்  தலை வாழை  இலை  ஒன்று  வெட்டிக் கொண்டுவா  குருநாதர்  போஜனத்துக்கு ''   அப்பூதி அடிகள்  மகன் கத்தியோடு
ஓடினான். மனைவி  சமையல் ரெடி பண்ணிவிட்டாள் .

 அவனது  துரதிர்ஷ்டம்  தோட்டத்தில்  கருநாகம் ஒன்று  அந்த  சிறுவன்  பெரிய  திருநாவுக் கரசுவை    தீண்டிவிட்டது.   மரணத்தருவாயில் அந்த  மகன்  வாழை இலையை  தாயிடம் கொடுத்து விட்டு  வாயில் நுரை தள்ள  இது  யாருக்கும்  தெரியவேண்டாம்  என்று  சொல்லி விட்டு   கீழே சுருண்டு விழுந்து  இறந்தான். தாங்கொணாத  சோகத்தோடு   அந்த தாய், அப்பூதி அடிகளைக் கூப்பிட்டு  அவருக்கும்   இந்த  பேரிடிச் செய்தி  காதில் விழ,   வேறு  வழியின்றி  அவன் உடலை மறைத்து வைத்து விட்டு, முதலில்  குருநாதரின்   போஜனத்தை  நிறைவேற்றி பிறகு  மகனின்  ஈமக்ரியைக்கு  ஏற்பாடு செய்வோம் என்று  முடிவானது.

போஜனத்துக்கு   அமர்ந்திருக்கும்  திருநாவுக்கரசருக்கு விஷயம்   தெரியாமல் துக்கத்தை அடக்கிக் கொண்டு  போஜனம்  சமர்ப்பித்தனர்.

இலையின் எதிரே    அமர்ந்த அப்பர் , ''அப்பூதி,   நீங்கள் எல்லாம்  இங்கே  தெரிகிறீர்கள்,  எங்கே உன் மூத்த  மகனைக் காணோம்.  
அவனையும்   வரச்சொல்.    எல்லோருக்கும் சிவப்ரசாதமாக  விபூதியை  அணிவித்துவிட்டு  அப்புறம்  போஜனம்  ஆரம்பிக்கலாம்.'' என்கிறார்.
  
''அவன்  இப்போது  இங்கே  உதவமாட்டான் குருநாதா ''  என்கிறார் அப்பூதி கண்களில்  நீர்  பெருக நா   தழுதழுத்தது. 

'' ஏன் அப்படி என்ன  விசேஷம் நடந்தது. எங்கே  அவன் ?  உண்மையை சொல்லும்'?

அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார்.

'எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என   கண்மூடி சிவனை   வேண்டுகிறார் திருநாவுக்கரசர். ஒரு  பாடல்   பாடுகிறார்.

    ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
    ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
    ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
    ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

சிவபிரானது உள்ளம்  இருக்கிறதே  அது அவர்  அமர்ந்திருக்கும்  உலகிலேயே  மிக உயரமான  கயிலை மலையை விட உயர்ந்த ஒன்று.    சிவபிரானின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த  ஒரு  சந்திரனை தனது சிரத்தில்  வைத்து  அழகூட்டியவர்  சிவன். தனது கையில் வெண் தலையை ஒப்பற்ற  பிக்ஷா  பலி  பாத்திரமாக   கபாலம் ஒன்றை கையில் ஏந்தியவர்  பரமேஸ்வரன்.  அவரது வாகனமாகிய  ரிஷபம், நந்திகேஸ்வரன், ஈடு  இணையற்ற  ஒருவன்''  


நன்றாக கவனியுங்கள், ''சிவனே  இறந்த   இந்த   பையனுக்கு  உயிரைத் தா''   என்று  அப்பர் கேட்கவில்லை.  சிவனை  மனதார  வேண்டி  மன முருக  போற்றி பாடினார்.   தானாகவே  சிவன்  அந்த பையனுக்கு   நேர்ந்த நிலையை அறிந்து கொண்டு  உயிரை  மீட்டு  தந்தான். .

பிறகு இறந்த,  மூடி மறைக்கப்பட்ட  அந்த  மகன்  பெரிய  திருநாவுக்கரசு உடலில்  அவன்  நெற்றியில்  விபூதி இடுகிறார்.  தூங்கினவன்  போல்  அந்த   பையன் எழுகிறான்.  அப்பரை, பெற்றோர்களை  வணங்குகிறான்''

பிறகு   அப்பர்  அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள்   அவர்களோடு  தங்கிவிட்டு,  பின் திருப்பழனத்திற்குப் போனார்.

தனது  சைவத்தொண்டை தொடர்ந்து மகிழ்ச்சியோடு  செய்துவந்த  அப்பூதி அடிகள் பின்னர்  பரமேஸ்வரன் திருவடிகளை அடைகிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...