Tuesday, January 28, 2020

MY WEALTH 2

நான்  பெற்ற  செல்வம்  2                    J K  SIVAN 
                                                                                                                                                                                   சகலகலா வல்லவர்  ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் 

2013ல்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்  நாங்கள் துவங்கு முன்பு எனக்கு   இவரைத் தெரியாது.  கிருஷ்ணனால்  அறியப்பட்டவர்.
மின்னஞ்சலில் என
து கட்டுரைகள் கதைகள் எழுதினேன்.  அம்ருத வர்ஷிணி  என்று  ஒரு குழாம் சிறந்த பல  வல்லுனர்களின்  ஆன்மீக  கட்டுரைகளை,  தெய்வீக  இலக்கிய  சம்பந்த  விஷயங்களை அழகாக தினமும் மின்னஞ்சலில்  அனுப்பிக் கொண்டிருந்தது. எனக்கு  மற்றொரு நண்பர்  இந்த அம்ருத வாஹினி/அம்ருத வர்ஷிணி  மின்னஞ்சல் குழு பற்றி சொல்லி எனது கட்டுரைகளை அதற்கும் அனுப்ப சொன்னார்.  அவ்வாறே செய்தபோது  அந்த குழுவை வெகு சிறப்பாக  இயக்கி வரும் ஸ்ரீ  ஆனந்த்  வாசுதேவன் பழக்கமானார் . அவரது குழுவின் மூலம் எண்ணற்றோர் எனக்கு பரிச்சயமானார்கள். எனது  முதல் புத்தகம் 100 கிருஷ்ணன் கதைகளை தாங்கி வெளிவர முக்கிய காரணம் ஸ்ரீ ஆ. வி.   கம்பீரமான  விவேகானந்த  இளைஞர். வடக்கே குர்காவ்ம் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் அடிக்கடி என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார்.  இன்றும் தொடர்ந்து எனது கட்டுரைகள், கதைகள்  இந்த மேன்மை பொருந்திய உலக பிரசித்த  மின்னஞ்சல் குழுவில் வெளியாகி வருகிறது என்று நினைக்கும்போது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் பெருமை கொள்கிறது.
இவர்  ஒரு  நல்ல   ஆங்கில, தமிழ்  எழுத்தாளர், அறிஞர்,  கவிஞர், தெய்வீக பாடல்கள் இயற்றுபவர் . அவர் இல்லத்தரசியும்  குரல் வளம் கொண்ட நல்ல பாடகி.   இவர் இயற்றிய பாடல்களை பாடி எனக்கு அனுப்பி இருக்கிறார். சென்னை வந்தபோது நேரமிருந்தால்  என்னை நங்கநல்லூரில் சந்திப்பார் . மிக துடிப்பான இந்த இளைஞரின் அம்ருத வர்ஷிணி  மாதமொருமுறை அழகிய  மின் புத்தகமாக  சிறந்த தலைப்புகளில்  பக்தி விஷயத்தை  உலகமுழுதும் பரப்பி வருகிறது.  சுறுசுறுப்பை  இவரிடம் இருந்து கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.  தற்போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே   அதற்கே  நேரம்  போதாமல்  இருந்தும்  எப்படியோ  நடுநடுவே  தனது தெய்வீக பணியையும் தொடர்ந்து செய்துவருகிறார் என்று  அறியும்போது  அவரது அயராத உழைப்புக்கு  தலை வணங்கி  அவர் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
காஞ்சி மஹா பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்ட இந்த இளைஞரின் நட்பு நான் பெற்ற  செல்வம் என்று சொன்னால் மிகையாகாது.   அவர் பணி  சிறக்க ஸ்ரீ கிருஷ்ணன் நிச்சயம்  அருள்வான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...