Wednesday, January 15, 2020

SHEERDI BABA



மனித உருவில் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி சாய் பாபா

நீள அங்கி அணிந்த கதை

நான் ஷீர்டி சென்றிருந்தபோது அங்கே பாபா அமர்ந்திருந்த வேப்ப மரத்தின் இலைகள் கசப்பாக இருக்காது இனிக் கும் ஏற்று கேள்விப்பட்டேன்.
லக்ஷக்கணக்கானவர்கள் பல வருஷங்க ளாக தினமும் வந்து கொண்டிருப் பவர்கள் இலையை ருசிபார்க்க தொடங்கினால் மரம் இருக்குமா? இலைகள் கைக்கு எட்டாதபடி உயரமாக இருந்தன. தப்பித்தன. அம்ருதம் கலந்தது என்பார்கள். ஏனென்றால் ஷீர்டி பாபா அந்த மரத்தடியில் அமர்ந்திருந் ததால் அப்படி ருசி மாற்றம்!

ஷீர்டியில் பாதுகை பிரதிஷ்டை செய்யப்பட்டது அல்லவா? முதல் ஐந்து வருஷங்கள் தீக்ஷித் அவற்றிற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டார். அவரைத் தொடர்ந்து லக்ஷ்மன் கச்சேஸ்வர் ஜகதி என்பவர் பாதுகை பூஜை வழிபாடுகளை கவனித்தார்.

டாக்டர் கோத்தாரே மாசம் ரெண்டு ரூபாய் அந்த பாதுகை கோவில் தீபத்துக்கு பராமரிப்புக்கு அனுப்பினார். பாதுகையை சுற்றி இரும்பு வேலி கம்பிகள் போட உதவினார். ரயில்வே நிலையத்திலிருந்து ஷீர்டிக்கு அந்த வேலிக்கம்பிகள் கொண்டு வருவதற் கான செலவு எவ்வளவு தெரியுமா? ஏழரை ரூபாய். மேலே கூரை போடும் செலவை சாகுன் மேரு நாய்க் ஏற்றுக் கொண்டார்.

ஜகதி தான் பூஜைகளை செய்வார். சாகுன் நைவேத்தியம் சமர்ப்பிப்பது , விளக்கேற்றுவது போன்ற வேலைகளை கவனித்தார்.
நான் ஏற்கனவே பாய் க்ரிஷ்ணாஜி என்ற அக்கல்கோட் மஹாராஜ் துறவியின் சிஷ்யர் தனது குருநாதர் பாதுகையை தரிசிக்க அக்கல்கோட் போக முயற்சித்தபோது '' நீ அங்கே எதற்கு போகிறாய் அருகில் ஷீர்டியில் நான் இருக்கிறேன் என்று அவரை கனவில் ஷீர்டிக்கு அனுப்பினார்'' என்று சொல்லி இருக்கிறேனே. ஞாபகம் இருக்கிறதா? அந்த பாய் கிருஷ்ணாஜி ஷீர்டியில் பாதுகை பிரதிஷ்டை விழாவிற்கு வந்திருந்தார். அங்கிருந்து அக்கல்கோட் போகலாம் என்று உத்தேசம். எதற்கும் பாபாவின் அனுமதி பெறுவோம் என்று எண்ணினார்.

''பாபா இங்கே பாதுகா பிரதிஷ்டை வைபவத்திற்கு வந்திருந்தேன். அப்படியே போகும்போது என் குருநாதர் வசித்த அக்கல்கோட் ஊருக்கு செல்லலாமென உத்தேசம். உங்கள் உத்தரவு வேண்டும் ''
''எதற்கு அவ்வளவு தூரம் போக வேண் டும். அங்கே என்ன இருக்கிறது. அக்கல்கோட் மஹராஜ் வாரிசு தான் இங்கே இருக்கிறதே என்று தன்னை சுட்டிக்காட்டினார். என்னை பார்த்து விட்டாயே. அது போதாதா?''

பாய் கிருஷ்ணாஜி அப்புறம் அக்கல்கோட் போகவே இல்லை. அடிக்கடி ஷீர்டி வருவார். பாபாவை தரிசித்து மகிழ்ந்தார்.

ஷீர்டியில் ஒரு மல்யுத்த பயில்வான் இருந்தான். அவன் பெயர் மொஹிதீன் தம்போலி. அவன் பாபாவோடு ஏதாவது தகராறு பண்ணிக் கொண்டே இருப்பான். ஒருநாள் பாபாவை தன்னுடன் சண்டையிட அழைத்தான். பாபா தோற்றுப்போனார். இதற் கெல்லாம் என்ன காரணம் என்று நம்மால் கூறவோ, நினைத்துப் பார்க்கவோ கூட முடியாது. நடந்த விஷயம் மட்டும் நமக்கு தெரிகிறது. அதிலிருந்து பாபாவிடம் ஒரு வித்யாஸம் தென்பட்டது. அன்றுமுதல் நீளமான அங்கி ஒன்றை அணியத்தொடங்கினார். நீளமான அங்கியின் நடுவே இடுப்பில் ஒரு வஸ்திரத்தை பெல்ட் belt மாதிரி இறுக்கமாக வரிந்து கட்டிக் கொண்டிருப்பார். தலையில் ஒரு துணியை முக்காடு மாதிரி போட்டுக்கொள்ள தொடங்கினார். ஒரு கோணியை கிழித்து அதன் மேல் அமர்வார். அது தான் ஆசனம். இன்னொரு கோணிக்கிழிசல் தான் படுக்கை. இன்னொரு மடித்த கோணி தான் தலையணை. கந்தல் கிழிசல் துணிகளை அணிவார். அடிக்கடி '' ஏழ்மை தான் ராஜபோகம். அது தான் பகவானின் லக்ஷணம். அவன் தீன தயாளு. ஏழைகளின் நண்பன்'' என்பார்.

கங்காகீர் என்று இன்னொரு மல்யுத்த வீரன் ஒருவனும் ஷீர்டிக்கருகே ஒரு கிராமத்தில் வசித்தான் . ஒருநாள் அவன் எங்கோ மல்யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கும் திடீரென்று இது எல்லாவற்றையும் உதறிவிடவேண்டும் என்ற உணர்வு வந்தது. ஒரு நாள் அவனுக்குள் ஒரு தெளிவான தீர்மானம் உருவானது. '' அழியும் இந்த உடல் பலத்தை நம்பாதே. சம்சாரத்திலிருந்து விடுபடு '' என்று அறிவுறுத்தியது. ஆத்ம விசாரத்தில் ஈடுபட ஆரம்பித்தான். புன்டம்பே என்கிற இடத்தில் நதிக்கரையில் ஒரு மடம் உருவாக் கினான். அவனும் அவனது சிஷ்யர் களும் அங்கே தங்கினார்கள்.

ஷீர்டி பாபா குறிப்பாக யாருடனும் நெருங்கி பழகவோ சம்பாஷிக்கவோ மாட்டார். கேட்டதற்கு சில சம யங்கள் சின்னதாக வார்த்தைகளில் பதில் வரும். எப்போதும் பகல் நேரத்தில் அந்த வேப்ப மரத்தடிதான். மாலை நேரத்தில் எப்போதாவது நடந்து போவதுண்டு. நிம் காவ்ன் என்கிற கிராமம் வரை போவார். அங்கே தான் பாலா சாஹேப் தேங்களே வசித்தார். அவரை ரொம்ப பிடிக்கும் பாபாவுக்கு. தேங்களே யின் தம்பி நானாசாஹேப் என்பவருக்கு குழந்தை இல்லை. ஆகவே அவர் மறுமணம் செய்து கொண்டார்.

தம்பி நானாசாஹிபைக் கூப்பிட்டு தேங்களே '' நீ போய் சாய்பாபா வை தரிசித்து விட்டு வா '' என்று அனுப்பினார். அவரும் அவ்வாறே ஷீர்டியில் பாபாவை சந்தித்து தனது குறையை சொன்னார். சீக்கிரம் உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று ஆசி பெற்றவாறே சிறிது காலத்தில் ஒரு பிள்ளை நானா சாஹே புக்கு பிறந்தான். நானா சாஹேப்
சந்தோஷத்தில் ஊர் முழுதும் பாபாவின் புகழ் பரப்பினான். பாபாவின் வாக்கு பலிக்கிறது என்று அறிந்தபின் ஊர் ஜனங்கள் திரண்டு ஷீர்டிக்கு வராமலிருப்பார்களா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...