Saturday, January 4, 2020

JAYADEVAR ASHTAPATHI



   கண்ணன் வருகிறான்  கண்ணைத் துடைத்துக்  கொள்   -  J K  SIVAN 


ராதையின் மூச்சு கிருஷ்ணன்.  ஆகவே கிருஷ்ணனையும் அவளையும் பிரித்து பார்க்க,  நம்மால் அல்ல, அவளாலேயே முடியாது.  பிரித்தால்  அவளே இருக்க மாட்டாளே !  ராதையின்   கிருஷ்ண ப்ரேமையை  பாடுவதற்கு எத்தனையோ கவிஞர்கள் பிறந்திருந்தாலும்  ஜெயதேவர் அவர்களை நேரில் கண்டவர் போல் இருக்கிறது. அவரது கீத கோவிந்தம், அஷ்டபதி பாடல்கள் என்றும் எங்கும் ஒலிக்கிறதே.

தன்னுடைய தோழியிடம் ராதை  ''கண்ணனை காண்பதெப்போ'' என்று  ஏங்குகிறாள்?

''ராதாவை  மாதவி  என்கிறாள்  தோழி.  மாதவனை சேர்ந்தவள் ,  மாதவனாகவே ஆனவள்  மாதவி.  சரிதானே.   நீ  ஏங்காதே,  இந்த பாழாய்ப்போன தென்றல் என் உயிரை வாட்டுகிறதே. என்று தவிக்காதே. இதோ கிருஷ்ணன் தென்றலிலேயே  தென்றலாகவே  வந்துகொண்டே இருக்கிறான்.  ஏன் அவன் மேல் கோபம் உனக்கு?இதைக் காட்டிலும் உனக்கு சந்தோஷ செய்தி ஒன்று சொல்லமுடியுமா?  இதை கேட்டு  மகிழ்ச்சியில் உடல் பூரிக்கவேண்டாமா உனக்கு? அதை விட்டு  பைத்தியம்  மாதிரி  விம்மி விம்மி  அழுகிறாயே? நமது நண்பிகள் எல்லோரும் சிரிக்க மாட்டார்களா உன்னை பார்த்து?

அதோ பார்  அந்த  கிருஷ்ணனை,  தாமரை இலைகள் மேல் குளு  குளு வென்று  சுகமாக  படுத்துக்
கொண்டிருக்கிறான். பார்த்தாலே  அந்த குளிர்ச்சி நமது கண்ணுக்கும்  கிடைக்கவில்லையா? இதைக்காட்டிலும் சந்தோஷம் உண்டா. ஏன்  துக்கம் உனக்கு?  நான் சொல்வதை கேள். உன்னை நீயே  துன்புறுத்திக் கொள்வதை விடு .

கிருஷ்ணன் வந்தால் உன்னைத்தான் தேடுவான். உன்னோடு பேசத்தான்  வருவான். எழுந்து கண்ணை துடைத்துக் கொள் .


மாதவே ,  மாகுரு  மாணினி  மானமயே 

ஹரிரபி ஸரதி  வஹதி மது பவனே 
கிமபர மதிக சுகம் சகி BHபவனே  -        மாதவே 

தாளப லாதபி   குருமதி ஸரஸம் 
கிமு விபலீ குருஷே குச கலசம்    -   மாதவே 

கிமிதி விஷீதசி  ரோதிஷி  விகலா 
விஹஸதி  யுவதி  சபா  தவ  சகலா -   மாதவே 

ஸ்ரீ ஜெயதேவ  பணித  மதி லலிதம்
சுகயது  ரசிகஜனம்  ஹரி  சரிதம் -  மாதவே 

இந்த ஜெயதேவன் ராதையின் ஏக்கத்தை தோழி தீர்ப்பதை தான் மேலே சொன்னேன். இந்த பாடல் தரும் சுகத்தில் ரசிக பெருமக்கள் திளைக்கட்டும்  -  என்று  இந்த அஷ்டபதி பாடலை  ஜெயதேவர்  முடிக்கிறார்.  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா மிக அழகாக இந்த சிறிய  பாடலை  பூர்விகல்யாணி ராகத்தில் பாடி இருக்கிறார். நானும் முயன்று பார்த்தேன். CLICK THE LINK https://youtu.be/JCycBgHbfhw

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...