Thursday, January 23, 2020

LALITHA SAHASRANAMAM



நண்பர்களே வெகு கால இடைவெளிக்குப்பிறகு இனி விடாமல் தினமும் தொடர்வேன். மன்னிக்கவும். நேரமின்மை தான் முக்கிய காரணம். இது கதையல்ல ''அசால்ட்டாக '' எழுத. நிறைய படிக்கவேண்டும். தப்பு குறிக்கிடக்கூடாது. முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(750-770 ) - J.K. SIVAN महेश्वरी महाकाली महाग्रासा महाशना । अपर्णा चण्डिका चण्डमुण्डासुर -निषूदिनी ॥ १४५॥ Maheswaree Maha kali Maha grasa Mahasana Aparna Chandika Chanda mundasura nishoodhini மஹேஶ்வரீ, மஹாகாளீ, மஹாக்ராஸா, மஹா‌உஶனா | அபர்ணா, சம்டிகா, சம்டமும்டா‌உஸுர னிஷூதினீ || 145 || क्षराक्षरात्मिका सर्व-सर्वलोकेशी विश्वधारिणी ।


त्रिवर्गदात्री सुभगा त्र्यम्बका त्रिगुणात्मिका ॥ १४६॥ Ksharaksharathmika Sarva lokesi Viswa Dharini Thrivarga Dhathri Subhaga Thryambhaga Trigunathmika க்ஷராக்ஷராத்மிகா, ஸர்வலோகேஶீ, விஶ்வதாரிணீ | த்ரிவர்கதாத்ரீ, ஸுபகா, த்ர்யம்பகா, த்ரிகுணாத்மிகா || 146 || स्वर्गापवर्गदा शुद्धा जपापुष्प -निभाकृतिः । ओजोवती द्युतिधरा यज्ञरूपा प्रियव्रता ॥ १४७॥ Swargapavargadha Shuddha Japapushpa nibhakrithi Ojovathi Dhyuthidhara Yagna roopa Priyavrudha ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்ப னிபாக்றுதிஃ | ஓஜோவதீ, த்யுதிதரா, யஜ்ஞரூபா, ப்ரியவ்ரதா || 147 ||
லலிதா ஸஹஸ்ரநாமம் - (750- 7 ) அர்த்தம் *750* மஹேஶ்வரீ महेश्वरी மகேஸ்வரனின் மனைவி மஹேஸ்வரி. முருக வள்ளலின் மனைவி வள்ளி மாதிரி என்று வைத்துக் கொள்வோம். அவள் எவ்வளவு உன்னதமானவள், உயர்ந்த சக்தி கொண்டவள் என்பது இந்த பெயரிலிருந்தே புரிபடும். சக்தி தெய்வம் அல்லவா?

*751* மஹாகாளீ, महा-काली - அவளை மஹதி என்போம். எதெல்லாம் அளவிடமுடியாததோ, மிக ப்ரம்மாண்டமானதோ, அது மஹத். மஹா என்ற வார்த்தையில் உருவாவது. மிக பிரதானமான சக்தி மனிதனில் புத்தி ஒன்றே. புருஷன் ப்ரக்ருதி என்கிற வரிசையில் மூன்றாவது புத்தி. சாங்கிய யோகம் இப்படி சொல்கிறது. சிவன் மஹா காலன் அவனுடைய சக்தியாக உருவானவள் மஹா காளி. பரமேஸ்வரன் நெஞ்சில் இருந்த நஞ்சு தான் காளியாகி உருவானது. உக்கிர கடவுள். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஒளிப்பிழம்பாக தோன்றியவள் என்று தேவி மஹாத்ம்யம் சொல்கிறது. லலிதாம்பா தான் மரணத்தை தனது அதிகாரத்தில் வைத்திருக்கும் மஹா காளி.
*752* மஹாக்ராஸா, महा-ग्रासा - எதையும் விழுங்குபவள். இந்த நாமம் என்ன சொல்கிறது என்றால் அம்பாள் எனும் பிரம்மத்தில் சர்வமும் அடக்கம். கதோபநிஷத் ( 1.ii.25) மனிதரில் சிறந்தவர்கள் ஆத்மாவுக்கு இறை போன்றவர்கள் என்கிறது. மரணம் எல்லோரையும் முடிவுக்கு கொண்டுவருகிறது என்றாலும் அது தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போன்றது ஆத்மாவுக்கு.

*753* மஹாஶனா |महा-शना - சிறந்த உட்கொள்பவள் அம்பாள். பிரபஞ்சத்தை அழிப்பவன். ஆக்கலும் ஆழித்தலும் தொழிலாக கண்ட சக்தி அல்லவா?. மேற்சொன்ன நாமத்தின் பொருள் இதற்கும் பொருந்தும். எல்லாவற்றையும் தன்னுள் கொள்பவள் என்று மீண்டும் வலியுறுத்துகிறது.

*754* அபர்ணா,अपर्णा - பக்தர்களுக்கு பாக்கி ஒன்றும் வைக்காதவள். பூரணமாக தயை புரிபவள். ஆம் . பக்தர்களின் அன்பை, சரணாகதியை பெற்று, அவர்களுக்கு வரங்களை, அருளை வாரி வழங்கும் பொது எந்த பாரபக்ஷமும் இல்லாதவள் ஸ்ரீ லலிதாம்பிகை. குறை ஒன்று இல்லாதவள். பக்தர்களுக்கு குறை வைக்காதவள். ஒரு சிறு கதை சொல்கிறேன். பாஸ்கரராயர் வரிவஸ்யா ரஹஸ்யம் எனும் நூலை எழுதியவர் கையில் காசில்லாதவர். யார் யாரிடமோ கடன் வாங்கி அன்றாடம் ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பூஜைகள் நைவேத்தியம் செய்பவர். கடனை எப்படி திருப்பி கொடுப்பார்? அவருக்கு அம்பாள் பூஜை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதே. வருமானமே இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? அவரை பிடுங்க ஆரம்பித்தார்கள். அவர் எப்படியும் கடனை திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே மேலும் கடன் வாங்கினார். ஒரு நிலையில் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணம் திருப்பி கேட்கவே இல்லை.? ஏன்? அம்பாள் அத்தனை கடனையும் அவர் அறியா மலே, அவருக்காக அடைத்துவிட்டாளே ! கடன் கொடுத்தவர்களிடம் அவர் மனைவி போல் உருவெடுத்து பணத்தோடு சென்று கடன் தீர்த்துவிட்டாள் என்று அறிந்தார்.

துர்கா, பார்வதி என்று பெயர்கொண்ட அம்பாள் அபர்ணா என்ற நாமத்தில் இலைகள் இல்லாத என்ற பொருள்படும் பெயரும் ஏன் கொண்டாள் என்றால், சிவனை அடைய தவம் இருந்த போது அன்ன ஆகாரம் இன்றி ஒரு சிறு இலையும் உட்கொள்ளாமல் ஏகாக்ர தவம் இருந்தவள்.

*755* சண்டிகா चण्डिका (755) . துர்கை. அவள் கோபாக்னியானவள் எனவே நெருங்கமுடியாதவள். துர்கை சரஸ்வதி லட்சுமி மூவரும் ஒன்றானவள். கோபம் தீயவர்களிடம். அவர்களிடம் கருணை இல்லாதவள். தேவி மஹாத்ம்யம் அவள் கோபத்தை விலாவாரியாக சொல்கிறது.
தைத்ரிய உபநிஷத்: (III.viii.1). ''ப்ரம்மத்திடம் காற்றுக்கு பயம் என்பதால் தவறாமல் வீசுகிறது. அப்படியே சூரியனும் தவறாமல் ஒளிவீசுகிறான். அக்னி, இந்திரன், யமன் ஆகியோரும் தத்தம் தொழில்களை விடாமல் தவறாமல் ப்ரம்மத்துக்கு கட்டுப்பட்டு புரிகிரிறார்கள். ஏழு வயது பெண் சண்டிகை எனப்படுவாள்.

*756* சண்ட முண்டாசுர நிஷூதினீ ī चण्ड-मुण्डासुर-निषूदिनी - அம்பாளுக்கு சாமுண்டி என்று ஒரு பெயர் உண்டு எண்டு அறிவோம். மைசூரில் சாமுண்டேஸ்வரி ஆலயம் செல்கிறோம். சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை வதம் செய்து இந்த பெயர் பெற்றாள். மார்கண்டேயபுராணத்தில் (தேவி பாகவதம்) (84.25) சண்டிகா தேவி காளியைப் பார்த்து ''நீ சண்ட முண்டர்களை வதம் செய்ததால் இனி உலகம் உன்னை சாமுண்டி என்று உணரும்'' என்று உரைத்ததாக சொல்கிறது. சாமுண்டி சப்த மாதாக்களில் ஒருவள்.

*757* க்ஷராக்ஷராத்மிகா, क्षराक्षरात्मिका - க்ஷரம் அக்ஷரம் என்றால் வார்த்தை, எழுத்துகள். எழுத்துக்களின் கோர்வை தான் வார்த்தை. அம்பாள் தான் சப்த பிரம்மம். எல்லா சப்தத்துக்கும் காரணம். தேவி உபநிஷதத்தில் (9.6) ஒரு ஸ்லோகம்: மந்த்ராணாம் மத்ருகாதேவி சப்தானாம் ஞான ரூபிணி'' (मन्त्राणां मतृकादेवी शब्दानां ज्ञान रूपिणी) என்று வரும்: மத்ருகா என்றால் முழுமுதல், ஆதாரம்.

*758* ஸர்வலோகேஶீ, सर्व-लोकेशी அகில உலகுக்கும் ஈஸ்வரி அம்பாள். ஆள்பவள். காயத்ரி மந்திரம் ஏழு லோகங்கள், பூர் ,புவ ,சுவர், மஹ ,,ஜன, தப , சத்ய லோகங்கள் ஒரு வ்யாஹ்ருதியால் அறியப்படுபவை. அவளே அம்பாள்.

*759* விஶ்வதாரிணீ | विश्व-धारिणी - பிரபஞ்சத்தை தன்னில் உடையவள். எளிதில் புரிகிறதல்லவா. அவளின்றி ஒரு அணுவும் அசையாது.

*760* த்ரிவர்கதாத்ரீ, त्रि-वर्ग-धात्री த்ரிவர்கா என்பது மூன்று தர்மங்களை தன்னுள் கொண்ட புருஷார்த்தத்தை கொடுப்பவள் என்று பொருள்படும். தர்மம், அர்த்தம் காமம் என்பவை மோக்ஷம் என்பது அடையும் பலன்.

*761* ஸுபகா, सुभगा - ஒரு ஐந்து வயது பெண்ணுக்கு பொதுவாக சுபகா என்று பெயர். பகா என்பது சூர்யன். சாவித்ரி, நல்லதிர்ஷ்டம், வளமை, பெருமை, நலம், எல்லாம் அருள்பவள்.

*762* த்ர்யம்பகா, त्र्यम्बका - அம்பாள் மூன்று கண்ணுடையாள் . சூரிய, சந்திர, அக்னி எனும் முக்கண்ணி. ப்ரம்மா, விஷ்ணு, சிவனின் அன்னை.

*763* த்ரிகுணாத்மிகா त्रिगुणात्मिका - சத்வ, ராஜா, தமோ குணங்களின் மொத்த உருவம் அம்பாள்.

*764* ஸ்வர்காபவர்கதா, स्वर्गापवर्गदा - ஸ்வர்கத்தை முக்தியாக தருபவள். கர்மபலனாக இதை அனுபவிக்க உதவுபவள் . கிருஷ்ணன் இதை தான் கீதையில் (IX.21) “ அப்பா அர்ஜுனா, இப்படி நல்ல கர்மபலனாக ஸ்வர்கத்தில் சுகமாக அனுபவம் பெற்று, கர்மபலன் தீர்ந்தபின்னர், ஜீவன் மீண்டும் பூமியில் பிறக்க நேரிடும்'' என்கிறார்.
*765* ஶுத்தா, शुद्धा - பரிசுத்தமானவள் . அதுவே ஞானம். இது இல்லாமல் முக்தி அடையமுடியாது. கறை இருந்தால் பரிசுத்தமானது. கறை என்பது அஞ்ஞானம். அறியாமை.
*766* ஜபாபுஷ்ப நிபாக்ருதி जपा-पुष्प-निभाकृतिः செவ்வரளி புஷ்பம். சிகப்பாகவும் மஞ்சளாகவும் நிறைய பார்க்கிறோமே. அதில் பூஜை செய்து மகிழ்கிறோம். அவளும் அதேயாகி மகிழ்கிறாள். *767* ஓஜோவதீ, ओजोवती - உடலும் உள்ளமும் பெரும் ஒளி. உடலில் அஷ்டாங்கம் என்று எட்டாக பிரித்து சொல்வோம். இது எட்டாவது. முதுகு தண்டில் உள்ள உயிர்ச்சக்தி. இந்து ஞானேந்திரியங்கள் ஒட்டுமொத்தம். நமது உணவு ஜீரணமானவுடன் முதுகு தண்டில் ஓஜஸாக மாறுகிறதாம். ஆயுவேதம் சப்த தாதுக்கள் என்று ஏழை சொல்லும். ஓஜஸ் எட்டாவது.

*768* த்யுதிதரா,द्युति-धरा - பளபளவென்று கண்ணை பறிப்பவள் .

*769* யஜ்ஞரூபா, यज्ञ-रूपा அம்பாள் யாக யஞங்களின் அதிகாரி. விஷ்ணு . யஜுர் வேதம் அதனால் தான் யக்னோ வை விஷ்ணு Yajño vai Viṣṇuḥ என்கிறது. யஞம் தான் விஷ்ணு. கீதையில் கிருஷ்ணன் (X.25) “யஞங்களில் நான் ஜெப யஞம் '' என்கிறான். யஞங்களில் சைரந்தது ஆத்ம ஞான யஞம்.

*770* ப்ரியவ்ரதா प्रिय-व्रता விரதங்களில் பிரியம் கொண்டவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். மன உறுதியோடு சங்கல்பம் செயது கொண்டு நிறைவேற்றுவது தான் விரதம். இது பகவானை, அம்பாளை திருப்திப்படுத்த. அம்பாள் ப்ரம்மம். சகுணம் நிர்குணம் இரண்டுமானவள். இந்த அகில பிரபஞ்சமும் சிவனும் சக்தியும் கலந்தது. புருஷ சக்தி ஐக்கியம்.

சக்தி பீடம்: மஹூர் ஏகவீரிகா தேவி

ஆதி சங்கரரின் சக்தி பீட ஸ்லோகத்தில் எட்டாவதாக ஏகவீரிகா தேவி ஆலயம். Ekaveerika devi temple is in Mahur , மஹூர் எனும் ஊரில் மஹாராஷ்டிராவில் உள்ளது. நாகபூரிலிருந்து 210 கி.மீ. கின்வத் திலிருந்து 50 கிமீ. நந்தேத் திலிருந்து 126 கி.மீ.

சிவன் சக்தியின் உடலை சுமந்து ருத்ரதாண்டவம் ஆடியபோது அவளது வலது தோள் விழுந்த இடம் என்பார்கள். இங்கே கிட்டத்தட்ட 800 வருஷ ரேணுகா தேவி ஆலயமும் உண்டு என்பதால் அதையே சக்தி பீடம் என்கிறார்கள். அது வேறு இது வேறு. ரேணுகா தேவியின் மூத்தவள் தான் ஏகவீரிகா.

இந்த ஆலயம் மயூர க்ஷேத்ரம், மாத்ரு பட்டணம் எனப்படும். பஞ்சகங்காவில் பென்கங்கா நதிக்கரையில் உள்ளது. வெற்றிலை பாக்கு அரைத்து லேகியமாக பிரசாதம் தரப்படுகிறது. என்ன ஐதீகம் என்று தெரியவில்லை? அம்பாளின் சிரம் பெரிய உருவம். ஆனால் சிறிய கர்பகிரஹம், ஒரு ஹால். அவ்வளவு தான் கோவில்.

மஹூர் எனும் ஊரிலிருந்து அரைமணி நேரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம். ரொம்ப சின்னது. வயல்களுக்கு நடுவே உள்ளது. அம்பாளின் தலை மட்டும் தான் தரிசிக்க முடியும். தமிழ் நாட்டில் நிறைய மாரியம்மன் கோவில்களில் முகம் மட்டும் தான் வழிபாட்டுக்கு அல்லவா? அதேபோல்

பரசுராமனின் ஆயுதம் கோடாலி. அதில் சக்தியாக இருப்பவள் ஏகவீரிகா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...