Thursday, January 23, 2020

SHEERDI BABA




மனிதருக்குள் ஒரு தெய்வம்  J K SIVAN
எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா....
ஒவ்வொருநாளும்  பாபாவின் புகழ்,  அவரது அற்புத சக்தி பற்றிய பேச்சு,  எங்கும் பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தெல்லாமோ  பக்தர்கள் கூட்டம் கூட்டமாக  ஷீர்டிக்கு வர ஆரம்பித் தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.
அஹ்மத் நகரில் பாபாவை பற்றி   முதலில்  கேள்விப்பட்டு  தான்  நானாசாஹேப்  சாந்தோர்கர், கேசவ் சிதம்பர் ஆகியோர் ஷீர்டிக்கு வந்து வாசம் செய்தனர்.  அவர்க ளோடு இன்னும் எத்தனையோ பக்தர்கள்.  பகலெல்லாம்  பக்தர்கள் சூழ  பாபா  வேப்ப மரத்தடியில் காட்சி தருவார். இரவில் அருகே இருந்த பாழடைந்த மசூதிக்கு சென்றுவிடுவார்.
பாபா என்றாலே  அப்போது அவருடைய  ஹூக்கா, நீண்ட அங்கி, தலையில் ஒரு முக்காடு துணி  சடைமுடி போல்  சுருக்கி தலையை சுற்றி இடதுகாது வழியாக இறங்கி பின்புறம் தொங்கும்.  கையில் ஒரு சிறு தடி. இது தான்  அடையாளம்.
அந்த தலை முக்காடு துணி  நீரில் நனைத்து கசக்கி துவைக்கப்படாமல் பல வாரங்கள் அப்படியே  இருக்கும்.  காலில் காலணி  எதுவும் கிடையாது.  கிழிசல் கோணி ஒன்றை மடித்து  ஆசனமாக உபயோகித்தார்.
ஒரு துணியை கிழித்து கோவணமாக அணிந்து  அதன்  மேல்  நீண்ட அங்கி.  குளிருக்கு  கண கண வென்று ஒரு தீ மூண்டு ஜ்வாலை  இருந்து கொண்டே இருக்கும்.  ''துனி''  என்று அதற்கு பெயர்.
அந்த  தீ  இன்றும்  உலகெங்கும் சாய் மந்திர் களில்  இன்றும்  ஒளி வீசிக் கொண்டிருக் கிறது.  நான் மயிலாப்பூர்  போகும்போதெல்லாம்  சாய் பாபா  கோவிலில்  புனித துனியை  வணங்கி ஒரு துளி சாம்பலை நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் திரும்பியதில்லை.
1967  முதல் அந்த  ஆலயத்தின் நேர் எதிரே  டாக்டர்  S   முத்து வைரு  என்ற அருமையான  எங்கள் கம்பெனி டாக்டர் பார்வை நேரம் சாயந்திரம் வைத்திருந்ததால்  அவரைப் பார்க்க  வரும் போதெல்லாம்  பாபா தர்சனம் இலவசம். அப்போதெல்லாம் இவ்வளவு கூட்டம் கிடையாது.
பாபா  துனிக்கு  அருகே தான் இருப்பார்.  தெற்கு நோக்கியவாறு , இடது கையை  அருகே இருந்த  சுவரின் மர  கைப்பிடியில் வைத்தவாறு  அமர்ந்திருப்பார்.   அந்த  எரியும் துனிக்கு  அவர் எரிபொருள்கள் எதுவும் போடுவதில்லை.   துனியை  வணங்கி  மானசீகமாக  அவர்   அர்ப்பணித தவை எவை தெரியுமா?  அகம்பாவம், ஆசைகள், எண்ணங்கள்... எவையும்  அவரை நெருங்காமல்  துனியை
எரிந்தன. அடிக்கடி  அவர்  உதடுகள்  ''அல்லா மாலிக்''  (பகவானே எஜமானன்  நாம் எல்லோரும் அவன் அடிமைகள்) என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.
அந்த பழைய  பாழடைந்த  மசூதியில் இருந்த இடத்தை  ரெண்டு ரெண்டு  பாகங்களாக, கதவில்லாத அறைகளாக   நடுவே  இருந்த ஒரு பழைய ஒரு தடுப்பு சுவர் பிரித்தது.    அவர் இருந்த ஒரு அறையில் தான் அநேக பக்தர்கள் அவரை தரிசித்தது.
1912க்கு பிறகு  கொஞ்சம்  மாறுதல்கள் உண்டாயின. பழைய  சிதிலமான  சமாதியை  ரிப்பேர் செய்து  அதை அடையும் பாதையில் ஒரு நடைமேடை தயாரானது.   ஒரு விஷயம்  உங்களுக்கு தெரியுமா?.   மசூதிக்கு பாபா வருவதற்கு முன் காலில் சலங்கைகள் கட்டிக் கொண்டு ஆனந்தமாக  பாடிக்கொண்டு பாபா வேப்பமரத்தடியில் இருந்த இடத்திலேயே  ஆடுவார்.
பாபாவுக்கு  தீப ஒளி ரொம்ப பிடிக்கும்.   தினமும் அருகில் இருந்த கடைகளுக்கு சென்று  தீப மேற்றுவதற்கு எண்ணெய்  கேட்பார்.  இரவெல்லாம்  மசூதியில்  தீபம் ஒளிரும்.  சிலகாலம் இப்படி கழிந்தது. சில  மார்வாடி கடைக்காரர்கள் ஒன்றுகூடி ஒரு நாள் பேசும்போது  இனிமேல் இந்த  பக்கிரிக்கு  இலவசமாக எண்ணெய்  யாரும் கொடுக்க வேண்டாம்  என்று தீர்மானித்தார்கள்.  இது தெரியாமல்  பாபா  வழக்கம்போல்  அடுத்த நாள்  கடைகளுக்கு சென்று எண்ணெய்  கேட்கும்போது எல்லோரும்  ஏகமனதாக  ''இலவசமாக எண்ணெய் கிடையாது'' என்று கொடுக்க மறுத்துவிட்டார்கள். எல்லோரை
யும் கேட்டுப் பார்த்து ஒருவரும் எண்ணெய் தராததால் சிறிதும் மனம் குன்றாமல் பாபா  பேசாமல் மசூதிக்கு  திரும்பிவிட்டார்.   அவர் மனதில்  எந்த  வருத்தமும் ஏமாற்றமும் இல்லை.  எல்லா அகல்களிலும்  திரியை வழக்கம்போல்  இட்டார். கடைக்காரர்கள்  அவர் என்ன செயகிறார், எப்படி  இன்று விளக்கேற் றுகிறார்  பார்க்கலாம் என்று  ஆவலாக  கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
பாபா  தன்னிடமிருந்த  எண்ணெய்  டப்பாவை  பார்த்தார், தகர டப்பாவில்  அடியில் ஒரு சில  சொட்டுகள் எண்ணெய் தான் இருந்தது.  அத்தனை வில
ங்குகளுக்கும் அது எப்படி போதும்?  சுற்றி முற்றி பார்த்தார்.  ஒரு மூலையில்   ஹுக்கா பிடிக்க  கூஜாவில் நிரப்ப தண்ணீர் வேண்டுமல்லவா?. அதற்கான  நீர்    ஒரு  மண் சட்டியில் வைத்திருந்தது கண்ணில் பட்டது.   நேராக அந்த சட்டியில் இருந்த நீரை எடுத்துக் கொண்டு போய்   எண்ணெய்  டப்பாவை நிரப்பினார்.  அதை அப்படியே குடித்து  அந்த எண்ணெய் டப்பாவில் திரும்ப  துப்பினார்.  அந்த  துப்பிய  நீரை  விளக்குகளில்  எண்ணெய் போல் திரி நனையும்படி  அகல்கள் நிரம்ப  இட்டார். எண்ணெய் டப்பாவில் இருந்த  நீர் புனித எண்ணையாகி   எல்லா விளக்கு களும் ஜெகஜோதியாக எரிந்தன.
கடைக்காரர்கள்  பார்த்து சிலையாயினர்.  தண்ணீர்  தீபம்  இரவெல்லாம் மசூதியில் ஒளிவெள்ளம் பரப்பியது.
காலையில்  கடைக்காரர்கள் எல்லோரும்  இரவில் நடந்த அதிசயத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல்,  ஒட்டு மொத்தமாக  மசூதிக்கு ஓடிவந்தனர்.
''பாபா எங்களை மன்னித்து விடுங்கள்  அறியாமல் பிழை செய்துவிட்டோம்.'' என்று காலில் விழுந்தனர். .இனிமேல்  இப்படி தவறு செய்யாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொண்டார்  பாபா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...