Monday, January 27, 2020

SUR SAGARAM






சூர் சாகரம்    J K   SIVAN  

                         வார்த்தை தேடுகிறேன் கிருஷ்ணா ....

கோகுல பாலகன் கண்ணன்  பயல்  விஷமக்கார  குழந்தை.  அவனை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவே  ஆசைப்பட்டார்கள். இன்னும் தவழக்கூட  தெரியவில்லை. கைகால்களை மட்டுமே  அசைத்து மயங்கினான். கால் கட்டை  விரலை உதடுகள் வரை கொண்டுவந்து  கால் கட்டைவிரலை சுவைத்தான். தனது கைவிரல்களோடு விளையாடி அழகு பார்த்துக் கொண்டான். பேசத்தெரியாத பச்சிளம் குழந்தை.
இப்படி ஒரு சின்னஞ்சிசுவை  கொல்ல  மதுரா நகரத்தில்   ராஜா  கம்சனின் அரசவை மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்.

''நான் போகிறேன்''  ''நான் போகிறேன்'' என்று பல  பலம் மிக்க ராக்ஷஸர்கள் அந்த குழந்தையை கொல்ல  முன்வந்தார்கள் .  நான் போகிறேன் காரியத்தை கச்சிதமாக முடித்து வருகிறேன் என்று  ஒரு ராக்ஷஸி குரல் கொடுத்ததால் அனைவரின் கவனமும் அவள் மேல் படர்ந்தது.

''நீ எப்படி அந்த கிருஷ்ணனை கொல்வதாக  திட்டம் வகுத்துள்ளாய்?''  கம்சன் குரல் எழுப்பினான்
''மற்ற ராக்ஷசர்களால் முடியாததை என்னால் சுலபமாக முடிக்க முடியும்'' என்றாள்  அந்த அரக்கி.

''எப்படி சொல்கிறாய் அவ்வளவு நிச்சியாமாக?''

''ஒரு சிறு குழந்தையை  பார்க்க  ஆண்கள் போவதைவிட ஒரு பெண் போனால் சுலபமாக அனுமதி கிடைக்கும். அதுவும் ஒரு தாயாக.  நான் ஒரு அழகிய  கோபியாக  கோகுலத்தில் நுழைவேன். நந்தகோபன் அரண்மனையில் மற்ற பெண்கள் குழந்தையை பார்க்க போகும்போது நானும் அவர்களோடு சேர்வேன். அவனைக் கொஞ்சுவேன். என் மடிமேல் போட்டுக் கொள்வேன். எப்படியாவது நடித்து அவன் தாயின் அன்பை பெற்று அவனுக்கு பாலூட்ட  அனுமதி பெறுவேன். அதில் தான் என் திட்டத்தின் வெற்றி இருக்கிறது?

''எப்படி?

''என் முலைக்காம்புகளில்   கொடிய கருநாக விஷத்தை தடவிக்கொண்டு தான் அவனை மடியில் வைத்து தாலாட்டி சீராட்டி பாலூட்டுவது போல் முயல்வேன். பாவம் அந்த முட்டாள் குழந்தை என்னிடம் பால் குடிக்க விரும்பும்.ஆனால்  என் முலைக்காம்புகள் மேல் தடவப்பட்ட  விஷம் அதன் உயிரை குடித்துவிடும்.
அது தூங்குவதாக சொல்லி குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு அடுத்த கணம் நான் இங்கே இருப்பேன்''   இப்படி  இவர்களால்  காரியத்தை கச்சிதமாக முடிக்க இயலுமா?  ன்று  அரக்கர்கள் பக்கம் கை நீட்டினாள் அந்த  அரக்கி.

'சபாஷ்,   பூதனா  என்று கைதட்டினான்  கம்சன். அவன் முகம் மலர்ந்தது.   உன் திட்டம்  இயற்கையாக இருக்கிறது என்று மெச்சினான் . மற்ற அரக்கர்களும் ஆமாம் என்று ஆமோதித்தனர்.

பூதனை கோகுலம் செல்ல தயாரானாள். தாயாரானாள் . அந்தப் பயலை  சிறுகுழந்தைதானே, சுலபத் தில் அவனுக்கு   விஷ மூட்டி  மீளா தூக்கத்தில்  ஆழ்த்தி கொன்று விடலாம்    கை சொடுக்கும் நேரத்தில் முடியும் ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம்  என்ற  கர்வத்தோடு, அளவற்ற தன்னம்பிக்கையஹோடு  பூதனை கோகுலம் வந்தாள்.   மெதுவாக  நந்தகோபன் வீட்டு வாயிலில் ஒரு அழகிய இளம் பெண்ணாக நின்றாள்.  உள்ளே இருந்து வந்த  யசோதை  வாசலில் தயங்கி நின்ற  ஒரு யாதவ பெண்ணை ''யாரம்மா நீ, என்ன வேண்டும்  உனக்கு?''   என்று கேட்டாள் அன்போடு.

''இங்கே ஒரு குழந்தை இருக்கிறானாமே, கிருஷ்ணன் என்று, அவன்  எல்லோரையும் மயக்கும் அழகன் என்று கேள்விப்பட்டேன். அவனை பார்க்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவல்  அம்மா எனக்கு?  எப்படி கேட்பது என்று தயங்கி வெளியில் நின்றேன்.

''யார் அம்மா நீ?

''அம்மா  நான் யமுனாநதி அக்கரையில் ஒரு கிராம பெண்.  ஒரு யாதவ குடும்பம். இங்கே வந்த போது   எல்லோரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு இங்கே வந்தேன்''
 என்று மிருதுவாக பதில் சொன்னாள்  பூதனை.

''உள்ளே  வா அம்மா''
பூதனை வரவேற்கப்பட்டாள், அவளுக்கு  பழங்கள் பால், பணியாரம் எல்லாம் அளிக்கப்பட்டது. பேசினாள் . நடுவே நடுவே  கண்கள் கண்ணனை தேடின.''

''அம்மா  நான் குழந்தையை பார்க்கலாமா. சீக்கிரம் செல்லவேண்டும்''

'' ஆஹா இதோ இருக்கிறானே என்று  யசோதை ஜாடை காட்ட  ஒரு பணிப்பெண் கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு வந்தாள் ''

கிருஷ்ணன் அழகில் உண்மையாகவே  பூதனை மயங்கினாள். அவளைப்பார்த்ததும்  கண்ணன் பணிப்பெண் மடியிலிருந்து புன்னகையோடு  பூதனையிடம்  தாவினான். பொக்கை  வாயோடு   கண்கள் மலர  வெகுளியாக  சிரித்தான்.  கேவினான்.  சிறு விரல்கள் கொண்ட கைகளை கொட்டினான்.

''ஆஹா  இந்த  மடச் சிறுவன்  வசமாக  என்னிடம் மாட்டிக்கொண்டான்'' என்று  பூதனை உள்ளூர மகிழ்ந்தாள்'  

 மடியில் வைத்து கொஞ்சினாள் பூதனை. அவனும் ஆவலுடன் விளையாடினான்.  சிணுங்கினான் . தூக்கி வைத்துக்கொண்ட  பூதனை,   யசோதையிடம் வாஞ்சையாக  கேட்டாள் .  அம்மா

அம்மா  நானும்  ஒரு  தாய், எனக்கும் என் வீட்டில் ஒரு சிறு குழந்தை, தாய்ப்பால் அருந்தும் இளம் சிசு இருக்கிறது, நான் உடனே  போகவேண்டும், அதற்குமுன் எனக்கு ஒரு விருப்பம், அனுமதிப்பாயா?

''தாராளமாக  நீ  சொல்லலாம் என்ன உன் விருப்பம்?

''என் குழந்தை போலவே  இந்த அழகிய குழந்தைக்கும் நான்  பாலூட்டட்டுமா? அதில் எனக்கு ரொம்ப விருப்பம். அனுமத்திப்பீர்களா?''

ஒரு தாய் மற்றொரு தாயின்  ஆசையை பூர்த்தி செய்ய தயங்குவாளா? சரியம்மா  என்றாள் .
பூதனை எதிர்ப்பார்த்த நேரம் வந்துவிட்டது.  அந்த சிறு பயல் முகத்தை உயிரோடு ஒரு கணம் பார்க்கலாம் என்று நோக்கியபோது அவன் கொள்ளையாக சிரித்தான்.  அந்த சிரிப்புக்கு அர்த்தம் அவளுக்கு தான் புரியவில்லை.

''வா  நீயே  வந்து வகையாக என்னிடம் தனியாக மாட்டிக்கொண்டாயா.  என்னை அணைத்து உன் முலையில் பால்  குடிக்க வை.  அப்போது தான்  நீ  அசையாமல் நான் உன்னை பிடித்து உன் உயிரைக்குடிப்பேன்.  தாயென வந்த  பேயே, எனக்கு  இன்று  பால் தர வந்த உனக்கு நாளைக்கு பால் '' என்று அவள் முலையை பிடித்து  அழுத்தி அவள் உயிரை உறிஞ்சினான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் முலையில் வாய் வைத்தவுடன் நஞ்சு தீண்டி  இறப்பான் என்று எதிர்பார்த்த பூதனை, அவன் அவள்  குலையை திருகி   நெஞ்ஜினிலிருந்து உயிரையே உறிஞ்சி குடித்த போது திணறினாள், ஓ வென்று அலறினாள், அவள்  வேஷம் கலைந்தது. ஒரு அழகிய பெண் இருந்த இடத்தில் இப்போது  மாபெரும் ராக்ஷஸி ஒருவள் உயிரற்று கிடந்தாள்.  குழந்தை கிருஷ்ணன் அவள் மீது படுத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

கடைசியாக அவள் போட்ட மரண ஒலியில்  ஓடிவந்து ஒரு மாபெரும் ராக்ஷஸியின்  மார்பில் படுத்து விளையாடும் குழந்தை கிருஷ்ணனைத்தான் கண்டார்கள்.

யசோதை பாய்ந்து சென்று கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு கதறினாள். ''  கிருஷ்ணா  நானே  உனக்கு துரோகம் செயது விட்டேனே''  என்று அலறினாள்.  அவன் ''கக்''  என்று சிரித்தான்.   பேதையே, நான் தான் அவளை இங்கே வரவழைத்தது. அவளை மயக்கி அவள்  மடியில் படுத்து, அவள் பாலூட்ட காத்திருந்தது.   ஐந்து தலை  ஆதி சேஷன் மேல் படுக்கும் என்னை ஒரு சாதாரண பாம்பு விஷம் என்ன செய்யும்.  ஆனால் வகையாக என்னிடம் சிக்கிய அவள்  உயிரை உறிஞ்சி பிணமாக்கினேன். '' எனக்கு பால் கொடுக்க வந்த செயலுக்காக  என்னுடன்  பாற்கடலுக்கு அவளையும்   அழைத்து செல்வேனே '' என்று அதற்கு அர்த்தம்

மற்றொரு சந்தர்ப்பத்தில்  கிருஷ்ணா  உன்  லீலையை எப்படி  விவரிப்பேன்? முயற்சி செய்கிறேன் சொல்வதற்கு.

சர்வவேதங்களும்  சகலஉபநிஷதங்களும் , மகரிஷிகளும் ஞானிகளும்  உன்னை  முழுமையாக  அறிந்து விவரிக்க திணறுகிறார்களே.  அப்படி இருக்க  படிக்காத  பாமர  ஒரு  சாதாரண  கோபி, யசோதா எனும்  உன்  தாய் ''இனி   நீ  எப்படி  வெளியே சென்று விஷமம் பண்ணுவாய்   என்று  பார்க்கிறேன்'' என்று உன்னை  ஒரு சாதாரண விஷமக்கார  சிறுவனாக எண்ணி  உன் கண்களில் நீர் ததும்ப  உன்னை  ஒரு  சிறு  தாம்பு மணிக்கயிற்றால் வயிற்றில் கட்டிஎப்போது  நீ எப்படிப்பட்ட நடிகன் என்று தெரிந்ததே .  அந்த அதிசயத்தை எப்படி  நான்  உரைப்பேன்,  விவரிப்பேன்.?    கண்ணா நீ  ஒரு  ''பேரதிசயம்''.   இந்த ஒரு
வார்த்தைக்கு மேல்  எனக்கு  வேறு ஒன்றுமே சொல்லத்தெரியவில்லை.  என்ன செய்வேன்?

 பல காலம் கம்சனால் சிறையில் வாடிய உக்கிரசேனனை விடுவித்தாயே.  கம்சனைக் கொன்று மதுராபுரியை மீட்டு, மீண்டும்  அவனை  ராஜாவாக்கினாயே, எப்படி கண்ணா  இப்படி நீ  நீதி பரிபாலனம்  செய்ய  எங்கு கற்றாய் என்று மற்றவர்கள் வேண்டுமானால்  யோசிக்கட்டும் ? பவ்யமாக மரியாதையோடு, வணங்கி, உன் தலையைக்குனிந்து ''உக்கிரசேனரே  நீங்களே மீண்டும் எம் அரசனாக ஆளவேண்டும்'' என்றாயே அதை  எந்த  வார்த்தையால்  விவரிப்பேன்? மேலே  சொன்னதை  மட்டுமே  தானே  திருப்பிதிருப்பி  சொல்ல  முடிகிறது? அது  அந்த   உக்கிரசேனனின்  உணர்ச்சியையோ, உன் கருணையையோ  விவரித்ததாக ஆகுமா?

சரி, அதை எல்லாம் விடுவோம். ஜராசந்தன் பல ராஜாக்களை வென்று அடிமைப்படுத்தி சிறையில் அடைத்து வைத்து  வாட்டின  போது, அவனை   பீமனை  வைத்து கொல்லச் செய்து, அந்த ராஜாக்களை மீட்டாயே அப்போது அவர்கள்  உன்னை வாழ்த்தினதை எத்தனை வார்த்தைகளில், எந்தெந்த வார்த்தைகளில் சொல்வேன். என்னை விடு.   யாரால்  இது முடியும்?

கிருஷ்ணனாக, நீ சொன்னதை, செய்ததை என்னால் வார்த்தைகளில் சொல்ல இயல வில்லை
என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

 ராமனாக  நீ  செய்ததையாவதுசொல்வோம் என்றால், ஒரு  சின்ன  சம்பவத்தைக்  கூட சொல்ல முடிய வில்லையே. உதாரணமாக  தனது ரிஷி  கணவர்  கௌதமர்  இட்ட சாபத்தால்  பல வருஷங்கள் கல்லாக மாறி  வாடிய அஹல்யாவை ஒரு நொடியில் உன் காலடியால் மீண்டும் உயிர்ப் பித்தாயே , அப்போது அவள் கடல் மடையாக கொட்டிய  வார்த்தைகளை  வெறும் அர்த்த மற்ற நாம் அடிக்கடி காரணமில்லாமல் நன்றி உணர்ச்சியே  இல்லாமல் சொல்லும் ''தேங்க்ஸ்'' என்ற  வார்த்தைக்கு  ஈடு கட்டினால்   பொருத்தமாகுமா? சரியா, முறையா 


எப்போதோ  நீ  நாராயணனாக கஜேந்திரனை முதலை வாயிலிருந்து  அவன்  ''ஆதி மூலமே''   என  கூப்பிட்ட கண நேரத்தில் மீட்டாயே அதையாவது விவரிக்கலாமென்றால் அது கூட முடியவில்லையே கிருஷ்ணா.! கஜேந்த்ரனின் உணர்ச்சியை சொல்ல  வார்த்தைகள் உன்னை விட பெரியதாக இருக்கும்
 போல் இருக்கிறதே. நான் எங்கே போவேன்? 

விடாத மழையில்அந்த தொத்தல் குடிசை  காற்றில் பறந்து  விழுந்த போது உடனே  ஒரு கூரை வேய்ந்தாயே, அப்போது அந்த  ஏழை  பக்தர்  நாம தேவர்  வாய் பிளந்து  ''பாண்டுரங்காஆஆஆ'' என்று அடி வயிற்றிலிருந்து  ஒலித்தாரே , அதன் பின் ஒளிந்து கொண்டிருந்த  உணர்ச்சிகளை எந்த வார்த்தைகளால், எப்படி எழுத்தால் விவரிப்பேன் சொல் ? 
மேலே  சொன்னதெல்லாம் நான் எழுப்பும் கேள்விகள்  அல்லவே அல்ல, கண்ணில்லாத சூர்தாஸ் அருமையான ப்ரஜ்பாஸி எனும் பழைய வடமொழியில்  எவ்வளவு அழகாக கேட்கிறார். அது எந்தமொழி வார்த்தைகளாக  இருந்தால் என்ன? மனதில் நிரம்பி வழியும் என் பிரார்த்தனைகளை புரிந்து ஏற்றுக் கொள் கிருஷ்ணா. என் வார்த்தைகள் அதை சொல்ல முடிந்தது அவ்வளவுதான்'' என்கிறார் சூர்தாஸ் இந்த பாடலில்.  அதன்  ஆங்கில மொழி  பெயர்ப்பு யாரோ   செய்தது:

 The voice falters when it sings of the deeds of the Lord who's an ocean of mercy. He gave guileful Putana, who posed as his mother, a mother's reward! He of whom the Vedas and the Upanishads sing as the Unmanifest, let Yashoda bind him with a rope, lamented Ugrasena's grief, and after killing Kansa made him king paying him obeisance, bowing low; Freed the kings held captive by jarAsandha at which the kingly hosts sang his praises; removing Gautama's curse he restored life to stone-turned Ahalya:' all in a moment he rescued Braj's ruler from the sea-monster running to his aid as a cow to her calf," he came hastening to rescue the king of the elephants; he got Namadeva's hut thatched. says Suradasa, O, make Hari hear my prayer  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...