Saturday, January 22, 2022

RAMANUJA

 

விண்ணொளி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

14  ராமானுஜர்  -  ஒரு  அபூர்வ  மனித தெய்வம்

நமது  சென்னைப்   பட்டினத்திலிருந்து   சுமார்   50  கி.மீ   தூரத்தில் ஒரு  ஊர்.  பெயர்  ஸ்ரீ பெரும்பு
வைணவ தூர். இப்போது பிரபலமாக  எல்லோருக்கும் தெரிந்த  பிரசித்தி  பெற்ற  ஸ்ரீ வைஷ்ணவ  க்ஷேத்ரம்.   முன்பெல்லாம்  ஒரு  மணியில் போகமுடியும்.  இப்போது   தெருவில்   ஊர்ந்து போக வேண்டியிருப்பதால்   2-3 மணி   நேரம் ஆகலாம். இந்த  அமைதி சூழ்ந்த  ஊரில்   ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்  ஒரு  தம்பதியர், அசூரி கேசவ  சோமயாஜி -  காந்திமதி என்று பெயர் கொண்டவர்கள்.  ஸ்ரீமன்  நாராயணனுக்கு சேவை செய்வதையே  தனது   பணி  எனக் கொண்டவர் கேசவ சோமயாஜி..  வெகு  காலமாக புத்திர பாக்கியம்  இல்லை என்று  ஒரு குறை மனதில் உறுத்திக்கொண்டே  இருந்தது.  

இப்போதுள்ள பூந்தமல்லியில்  அப்போது  ஒரு   வயதான ஆச்சார்யர் வாழ்ந்து வந்தார்.   திருக்கச்சி நம்பி  என்று  பெயர்.  அவர்  கேசவனைச்  சந்திப்பது  உண்டு. கேசவனின் குறை  அவருக்கும் தெரியும்.   namb

'சுவாமி,  உங்களை அடிக்கடி  தரிசிக்கும் பாக்யம் பெற்றவன் நான்.  நீங்கள்  சாதாரணமானவரா?   காஞ்சி வரதராஜ பெருமாளை தினமும்  கண்டு  வணங்குப வராச்சே.  அவரோடு ஸ்ரீ சமமாக  பேசுபவராச்சே.  என் வெகுநாளைய கவலை உங்களுக்கு தெரியுமே,  எனக்கு புத்ரபாக்யம் பெற   எனக்காக, வரதராஜனிடம் நீங்கள்
வேண்டிக் கொள்வீர்களா?
 
''கேசவா  கவலைப்படாதே,  உன் விருப்பப்படியே  ஆகட்டும்.'   --  நம்பிகள்.
வரதராஜனை அடுத்த முறை சந்தித்த திருக்கச்சி நம்பிகள் அவனிடம் 
''வரதராஜா,  என்  நண்பன்  இந்த  நல்ல  மனிதன்  கேசவா சோமயாஜியின் மனக் குறை  கேட்டாயா?   உன் அருள் அவருக்கு  கிடைக்கச்  செய்வாயா ?'' என்று   வேண்டினார்  நம்பிகள்.

''கேசவனை  திருவல்லிக்கேணிக்குச்  சென்று  பார்த்தசாரதிக்கு  ஒரு  யாகம்  பண்ணச் சொல். புத்திர  பாக்கியம்  கிடைக்கும் '' என்று  வழி   சொன்னார் வரதராஜ பெருமாள்.
 
திருக்கச்சி நம்பிகள்  வரதராஜ  பெருமாளின்  ஆசியையும்  அருள் வாக்கையும்  கேட்டு கேசவாச்சாரியிடம்  கூற, கேசவ  சோமயாஜியும்  காந்திமதியும் '' அப்பனே வரதராஜா   என்ன  புண்யம்  பண்ணியிருக்கிறோம்   நாங்கள்  என்று பரவசம் அடைந்து  உடனே   திருவல்லிக் கேணிக்குப்  பறந்தார்கள். பக்தி ஸ்ரத்தையோடு   ஒரு பார்த்த சாரதி   ப்ரீதி ஹோமம்  பண்ணினார்கள்.  வரதராஜனான பார்த்த சாரதி  மனம் குளிர்ந்தார்.

'உங்கள்  பக்தி  ஸ்ரத்தையை மெச்சினேன்.  ஊருக்குப்  போங்கள்.  விரைவில் உங்கள்  ஆசை  பூர்த்தியாகும்''  என்றார் கனவில்  பார்த்தசாரதியாக வரதராஜன்.
 
கேசவ சோமயாஜி-காந்திமதி  தம்பதிகளின்   பூரண  சந்தோஷத்தை  நான்   எப்படி  என்  சாதாரண அற்ப சக்திக்குட்பட்ட  வார்த்தைகளில்  வர்ணிக்க முடியும்.

இவ்வாறாகத்தானே    1017 வது வருஷம்  ஏப்ரல்   மாதம் 4  அன்று  காந்திமதி ஒரு புத்ரனை  ஈன்றாள்.   குழந்தை   பிறந்தபோதே அவன்   உடலில் சில  தெய்வீக  உன்னத   குறிகள்  தென்பட்டன.  ராமானுஜன் என்று பெயர்   வைத்தார்கள்.

காந்திமதிக்கு  ஒரு  சகோதரர்.  பெரிய  திருமலை நம்பி  என்று.   ஒரு சகோதரி. மஹா தேவி.    அந்த  சகோதரிக்கும்  ஒரு பிள்ளை பிறந்தான்.  அவனை  கோவிந்தன்  என்று  அழைத்தார்கள்.  திருமலை நம்பி  இந்த  இரு  குழந்தைகளுக்கும்  மாமா   ஆனதில் பரம   சந்தோஷம் அடைந்தார்.    ஸ்ரீ  பெரும்புதூருக்கு வேகமாக  நடந்தார்.   அவர்  தான்  முதலில்   ராமானுஜர் உடலில்   ஸ்ரீ  ராமபிரானின் இளையோன்   லக்ஷ்மணன் உடலில்  இருந்த  குறிகள்,   அமானுஷ்யமாக  இருந்ததை எடுத்துச் சொன்னவர்.  ராமனுக்கு  எப்படி  லக்ஷ்மணன்  சேவை செய்தானோ  அது  போல் இவனும்   பெருமாளுக்கு  சேவை  செய்யப் போகிறான்  என்று  அறிந்து தானோ   என்னவோ  அவரே   காந்திமதியின்  குழந்தைக்கு   ராமானுஜன்  என்று  பெயர் சூட்டினவர். ராமானுஜன்  என்றால்  ராமனுக்கு  இளையோன், உடன் பிறந்தவன்,  என்று  பொருள்.  லக்ஷ்மணன்  சாக்ஷாத்  ஆதிசேஷன்  அவதாரம்  அல்லவா? ராமானுஜன் தானே அது  என்று நம்பி   உணர்ந்தார்.  காலம்  சென்றது.  பிள்ளைகள்  வளர்ந்தார்கள்.  கர்ணபூஷணம், சௌளம் , வபனம், வேதாகம  அத்யயனம்,  உபநயனம்  எல்லாமே முறையாக  நடந்தது.  

ராமானுஜன் ஏக  சந்தக்ரஹி -   (காதால் ஒருமுறை  கேட்டதை  ''சட் '' என்று  மனதில் நிறுத்திக்கொள்ளும்  சக்தி). இது  வேதாந்த தேசிகருக்கும்  ஸ்ரீ  ராகவேந்திரருக்கும் கூட இருந்தது.   ராமானுஜனுக்கு அநேக வயதுக்கு மீறிய  நண்பர்கள்.  முக்கால் வாசி அவர்களில்   பலர்  யோகிகள்,  சன்யாசிகள்,  பண்டிதர்கள் இப்படியே தான்.  

முதலில்  ராமனுஜரின் குருவானவர்  யாதவ பிரகாசர்   அவரிடம் தான்  தினமும்   ராமானுஜரும்  அவர்  ஒன்றுவிட்ட சகோதரன்  கோவிந்தனும்  சேர்ந்து கல்வி  கற்றனர்.  

ராமானுஜருக்கு  16  வயதிலேயே திருமணம்  ஆகிவிட்டது.  அவர் மனைவியின் பெயர்  ரக்ஷாம்பாள், தஞ்சமாம்பாள் என்று தமிழில் நிறைய இடத்தில்  போட்டிருக்கிறது. ஆசாரம் மிகுதி குடும்பத்தில் சம்பிரதாயங்கள் அறிந்த வைஷ்ணவ பெண்மணி.

ராமானுஜரின் முதல்  குரு  யாதவ பிரகாசர்  ஒரு  அத்வைதி.   எனவே  உபநிஷத தத்வங்களை  அவரிடம்  கற்றுக் கொள்ளும் போது  ராமானுஜருக்கு  திருப்தி  இல்லை.   பக்தி மார்க்கமாக உபநிஷத வாக்யங்களை அர்த்தம்  காண்பது ஒன்றே  அவருக்கு  ஏற்புடையது.  இதனால்  அடிக்கடி  ஆசானுக்கும் சிஷ்யனுக்கும்  கருத்து  வேற்றுமை உண்டானது.   மனவேற்றுமை   முற்றியது .


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...